காட்சி ஒன்று
தருமி மாதிரி ஏழையான ஒரு தீவிர கடவுள் பக்தன் வறுமையில் வாடிக்கொண்டிருக்கிறான். அளவு கடந்த வறுமை,
வாழ்வில் வளம் பெற எல்லா வழிகளிலும் முயற்சித்தும் இதுவரை எந்த பலனும் இல்லை. எந்நேரமும் இறைவனை நினைந்தபடி இருக்கும் அவன், இறைனிடமே கேட்க முடிவு செய்கிறான்.
ஒரு கோடி ரூபாய் பணம் வேண்டும்,அப்பொழுதான் தான் என் கஷ்டமெல்லாம் தீர்ந்து மகிழ்ச்சியாக வாழமுடியும். இதைப் பெறவேண்டி அன்றைய தினம் எந்த வேலைக்கும் செல்லாது பிரார்த்தனை செய்கிறான். இரவும் பிரார்த்தனை செய்துகொண்டே தூங்கி விடுகிறான். விடியற்காலையில் சப்தம் கேட்டு தூக்கத்திலிருந்து கண்விழித்துப் பார்க்கிறான்.
எதிரே பட்டுத்துணியில் கட்டப்பட்ட ஒரு மூட்டை, என்னவென்று அவிழ்த்துப் பார்க்கிறான் உள்ளே பணம் கட்டுக்கட்டாக, சரியாக ஒரு கோடி ரூபாய், இறைவனின் கருணையை எண்ணி வியந்து, மகிழ்கிறான்.
******************************************************************************************
காட்சி இரண்டு
கடவுள் தன் இருப்பிடம் திரும்பிக்கொண்டிருக்கின்றார், பின்னால் ஒரு பெரிய மூட்டை, எதிரே வந்த எமதர்மன் வணங்கி, என்ன இது என்றும் இல்லாத வழக்கமாய் பெரிய மூட்டையுடன் திரும்பிக் கொண்டிருக்கின்றீர்கள் என்று கேட்டார்,
அதற்கு கடவுள், ”அது வேறொன்றுமில்லை, என் பக்தன் ஒருவனுக்கு கொடுக்க பணம் கொண்டு சென்றேன். அவன் ஒரு கோடி வேண்டும் எனக் கேட்டான். கொடுத்துவிட்டு திரும்பிக் கொண்டு இருக்கிறேன்.
நான் அவனுக்கு கொடுக்க நினைத்து கொண்டு சென்றதோ நூறு கோடி, பக்தன் கேட்டதை கொடுக்க வேண்டியது என் கடமை ஆதலால் வேறு வழியில்லாமல் கேட்ட ஒரு கோடியை கொடுத்துவிட்டு மீதி 99 கோடியை திருப்பிக் கொண்டுவந்துவிட்டேன்” என்றார்,
*****************************************************************************************
முதல் காட்சியில் ஏதேனும் தவறு இருக்கிறதா? எல்லாம் நிறைவாகத்தானே நடந்தது.
ஆனால் இரண்டாவது காட்சியை படித்தவுடன் முதல் காட்சியில் மறைந்த இருந்த தவறு புரிகிறதா?
இதிலிருந்து என்ன தெரிகிறது? செயலுக்கு விளைவாக சரியானதை இறைநியதி நமக்கு வழங்கியே தீரும். நமக்கு வருவதை, நடப்பதை மனதின் சமநிலை மாறாமல், மன விரிவோடு ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும்.
என்ன செய்தோம், என்ன கிடைத்தது எனப் பார்த்து செயலை ஒழுங்கு செய்வோம்,
எதிர்பார்ப்பு இன்றி சரியான முறையில் செயல்களை செய்யப் பழகிக்கொள்ளுங்கள், வரவேண்டியது தானாய் வரும். எதிர்பார்ப்பதைவிட பலமடங்கு அதிகமாய்.நிச்சயம் வரும்.
எதிர்பார்த்தால் நமக்கு வருவதை நாமே தடை செய்துவிடுகிறோம், பல சமயம் ஏமாற்றமும் அடைகிறோம்.
சிந்திப்போம், சந்திப்போம்
டிஸ்கி: நண்பர் ஓம்காரி்ன் இடுகைக்கும் இதற்கும் தொடர்பு உண்டு
கதை அருமை.
ReplyDeleteஇனிமேல் 99 கோடியையும் கொடுத்துவிட்டு போக முயற்சிக்கிறேன் :)
எதிர்பார்ப்பு இன்றி சரியான முறையில் செயல்களை செய்யப் பழகிக்கொள்ளுங்கள், வரவேண்டியது தானாய் வரும். எதிர்பார்ப்பதைவிட பலமடங்கு அதிகமாய்.நிச்சயம் வரும்.
ReplyDelete///
சிந்தனை அருமைங்க!!
எதிர்பார்ப்பு குறையும் போது ஏமாற்றமும் குறையும்.
ReplyDeleteமுற்றிலும் உண்மை..... எனது அனுபவத்தில் உணர்ந்து கொண்ட உண்மை.
ReplyDeleteசிந்தனையத் தூண்டும் பதிவு....
ReplyDeleteஇப் பதிவின் சாராம்சம் முற்றிலும் உண்மையானதே...
"கடமையைச் செய் பலனை எதிர்பாராதே" - கீதை
\\ஸ்வாமி ஓம்கார் said...
ReplyDeleteகதை அருமை.
இனிமேல் 99 கோடியையும் கொடுத்துவிட்டு போக முயற்சிக்கிறேன் :)\\
மனமார்ந்த வாழ்த்துக்கள், நன்றி
thevanmayam said...
ReplyDelete\\எதிர்பார்ப்பு இன்றி சரியான முறையில் செயல்களை செய்யப் பழகிக்கொள்ளுங்கள், வரவேண்டியது தானாய் வரும். எதிர்பார்ப்பதைவிட பலமடங்கு அதிகமாய்.நிச்சயம் வரும்.
///
சிந்தனை அருமைங்க!!\\
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே
\\முனைவர்.இரா.குணசீலன் said...
ReplyDeleteஎதிர்பார்ப்பு குறையும் போது ஏமாற்றமும் குறையும்.\\
முற்றிலும் உண்மை, நன்றி நண்பரே
\\தங்கவேல் மாணிக்கம் said...
ReplyDeleteமுற்றிலும் உண்மை..... எனது அனுபவத்தில் உணர்ந்து கொண்ட உண்மை.\\
வாழ்த்துக்கள் நண்பரே
அடியார் said...
ReplyDelete\\சிந்தனையத் தூண்டும் பதிவு....
இப் பதிவின் சாராம்சம் முற்றிலும் உண்மையானதே...
"கடமையைச் செய் பலனை எதிர்பாராதே" - கீதை\\
அதேதான் நண்பரே, இதை புரிந்துகொண்டால் வாழ்க்கையே இனிமை நிறைந்ததாகிவிடுமே...
"எதிர்பார்ப்பு இன்றி சரியான முறையில் செயல்களை செய்யப் பழகிக்கொள்ளுங்கள், வரவேண்டியது தானாய் வரும். "
ReplyDeleteமிகச் சரியாகச் சொன்னீர்கள்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன் தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி
ReplyDeleteகதையும் நீதியும் நல்லா இருக்கு. ஆனால் கடவுள் நோட்டு அடிக்கிற மெசின் வைத்திருக்கிறார் என்று தெரிந்தால் அரசாங்கம் செல்லுல பிடித்து போட்டுவிடும்.
ReplyDelete:)
உண்மைதான்.., நம் நாட்டில் அரசி்யல்வாதிகளிடம் இல்லாத பணமா?:)
ReplyDelete//எதிர்பார்த்தால் நமக்கு வருவதை நாமே தடை செய்துவிடுகிறோம், பல சமயம் ஏமாற்றமும் அடைகிறோம்.
ReplyDeleteசிந்திப்போம், சந்திப்போம்//
குட்டிக்கதையில் கோடி சிந்தனைகள்.. கதைக்கு கை,கால் உண்டா என்று கேட்பார்கள், விளையாட்டாக.. இந்தக் கதைக்கு அத்தனையையும் சேர்ந்து உயிரும் இருக்கிறது.
சிந்திக்க அனுபவம் தந்தமைக்கு மிக்க நன்றி.
ஆத்மாவத்தேடி., நான் மிகவும் விரும்பி படிக்கும் தொடர்.,
ReplyDeleteமிக ஒற்றுமையான கருத்துகள்,
இது போன்ற கருத்துக்களை தொடர்ந்து சிந்திப்பதன் மூலம்,நாமும் தெளிவு பெறலாம்,
நண்பர்களும் நலம் பெறவேண்டும் என்பதே நமது நோக்கம்.,
தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றியும், மகிழ்ச்சியும் வாழ்த்துக்களுடன்
கதை நல்ல கதை - கருத்து அருமை அருமை
ReplyDeleteபலனி எதிர் பாராதே - கடமையைச் செய் - தகுந்த வெகுமதி நிச்சயம் கிடைக்கும் - ஐயமே இல்லை
நல்வாழ்த்துகள் சிவா
//cheena (சீனா) said...
ReplyDeleteகதை நல்ல கதை - கருத்து அருமை அருமை
பலனை எதிர் பாராதே - கடமையைச் செய் - தகுந்த வெகுமதி நிச்சயம் கிடைக்கும் - ஐயமே இல்லை//
சரியாக சொன்னீர்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி