"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, June 25, 2009

கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை

கோட்ஜாக் நகரின் ரப்பிமெண்டல் என்ற அருளாளர் கோயிலுக்குச் சென்றபோது, ஒரு கிராமத்தான் மிக ஆழ்ந்து, கண்ணீர் மல்க, பிரார்த்தனை செய்வதைக் கண்டார். அவன் படிக்காதவன், ஹீப்ரு மொழியை படித்தறியாதவன் என்று அவருக்குத் தெரியும். ஆனாலும் எதைச்சொல்லி இவ்வளவு ஆழ்ந்து பிரார்த்திக்கிறான் என்று அறிய அவர் ஆவல் கொண்டார்.

பிரார்த்தனை நேரம் முடிந்தவுடன் அவனைப் பார்த்துக்கேட்டார். அந்த கிராமத்தான் சொன்னான்:

‘ஐயா, நான் படிப்பறிவுஇல்லாதவன். அதனால் வேதத்தில் உள்ள பிரார்த்தனைகள் ஒன்றும் எனக்குத் தெரியாது. எனவே ‘அ’ விலிருந்து ஆரம்பித்து எல்லா எழுத்துக்களையும் திருப்பித் திருப்பிச் சொல்லி, கடவுளை அவருக்கு உகந்த சரியான பிரார்த்தனைக்குரிய வார்த்தைகளை அதிலிருந்து அமைக்கச் சொல்லி வேண்டுகிறேன். எனது அறியாமைக்காக இரங்கச் சொல்லி பிரார்த்திக்கிறேன்’

ரப்பிமெண்டல் திகைத்தார். அக்கிராமத்தானின் களங்கமற்ற திடநம்பிக்கை அவருக்குக் கண்ணீரை வரவழைத்தது.

‘ஆகா, உன்னுடைய பிரார்த்தனையே, என்னுடைய பிரார்த்தனையை விட மிகச் சிறந்தது. ஏனெனில் இதயத்தின் ஆழத்திலிருந்து, நீ மிகுந்த நம்பிக்கையுடன் இதைச் சொல்கிறாய். ஆண்டவன் எனது பிரார்த்தனையைவிடவும், உன்னுடைய பிரார்த்தனையை நிச்சயம் கேட்பார்’.

(இஸ்ரேல் நாட்டுக்கதை)

*******************************************************************************
நன்றி—ஞானப்புதையல் – முனைவர் எம்.இராமலிங்கன் – பூர்ணா பதிப்பகம்
*******************************************************************************

12 comments:

  1. // ஆண்டவன் எனது பிரார்த்தனையைவிடவும், உன்னுடைய பிரார்த்தனையை நிச்சயம் கேட்பார் //

    இதயம் கனிந்த எந்த செயலும் நல்வழிக்கே.

    ReplyDelete
  2. தவளை பிரார்த்தனை கதை போல.. சரியா?

    ReplyDelete
  3. \\விஷ்ணு. said...

    // ஆண்டவன் எனது பிரார்த்தனையைவிடவும், உன்னுடைய பிரார்த்தனையை நிச்சயம் கேட்பார் //

    இதயம் கனிந்த எந்த செயலும் நல்வழிக்கே.\\

    இதயம் கனிவதுதான் முக்கியம், அதற்கேற்றவாறு நம் வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்வது சிறப்பு.
    நன்றி விஷ்ணு

    ReplyDelete
  4. \\ஸ்வாமி ஓம்கார் said...

    தவளை பிரார்த்தனை கதை போல.. சரியா?\\

    \\ \\

    பிரார்த்தனையை மையப்படுத்தாமல், ’இதயத்தின் ஆழத்திலிருந்து, நீ மிகுந்த நம்பிக்கையுடன்’ என்பதை இக்கட்டுரை முக்கியப்படுத்துவதாக நான் கருதுகிறேன்

    கருத்துக்கும் வருகைக்கும் மகிழ்ச்சி, நண்பர் ஸ்வாமி ஓம்கார் அவர்களே

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. இதைத் தான் ஆத்ம சமர்ப்பணம் என்று சொல்கிறார்கள் போலும். 'என்னையே தந்துவிட்டேன்' என்று எளிமையாக எடுத்துக் கொண்டாலும் சரியே. சரியா?..

    ReplyDelete
  6. \\ஜீவி said...

    இதைத் தான் ஆத்ம சமர்ப்பணம் என்று சொல்கிறார்கள் போலும். 'என்னையே தந்துவிட்டேன்' என்று எளிமையாக எடுத்துக் கொண்டாலும் சரியே. சரியா?..\\

    சரி என வைத்துக் கொள்ளலாம். (பிரார்த்தனை நேரத்தில் மட்டும் ஆத்ம சமர்ப்பணம் எனலாம்)

    ReplyDelete
  7. எங்கும் நிறைந்துள்ள, எல்லாம் வல்ல அருட் பேராற்றலான, கருணை வடிவான இறைவா..!

    நல்ல கருத்துக்களை எழுதுகிறீர்கள். நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. நல்ல கருத்து ஐயா!

    ReplyDelete
  9. \\\முக்கோணம் said...

    எங்கும் நிறைந்துள்ள, எல்லாம் வல்ல அருட் பேராற்றலான, கருணை வடிவான இறைவா..!

    நல்ல கருத்துக்களை எழுதுகிறீர்கள். நல் வாழ்த்துக்கள்.\\


    வாழ்க வளமுடன்., திரு.முக்கோணம்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. \\பழமைபேசி said...

    நல்ல கருத்து ஐயா!\\

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு.பழமைபேசி அவர்களே

    ReplyDelete
  11. நல்ல அறிமுகம். வருக. தேவியர் இல்ல பூங்கொத்து.


    இத்தனை முகங்களா?




    உண்மைதான். மனைவியிடம் பேசும் போது கடைசியில் வந்து முடிவதே முடிக்காத ஷிப்மெண்ட் பற்றி தானே?


    நட்புடன்


    ஜோதிஜி,


    தேவியர் இல்லம். திருப்பூர்.
    http://texlords.wordpress.com

    ReplyDelete
  12. இதயபூர்வமான ,இக்ந்த நம்பிக்கையின் அடிப்படையில் பிரார்த்திப்பது உண்மையில் அதிக பலனைத் தரும்.

    நல்ல சிந்தனை சிவா

    நல்வாழ்த்துகள் சிவா

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)