\\ஒரு பொருள் இருந்தால் அதனை உருவாக்கியவன் கட்டாயமாக இருக்க வேண்டும் என்பது விஞ்ஞான நியதி. காரணம்-காரணன். நான்கு M இருந்தே ஆக வேண்டும். அதாவது Man,Machine,Method,Materials.\\
அதே சமயம் இறைநிலை என்பது பொருள் அல்ல,அதற்கு இந்த சூத்திரம் உதவாது.
சுலபமா யோசித்தால்கூட நாம் ஓட்டுகிற வாகனம், கீழே பூமி தாங்கி இருப்பதால்தான் பாதையில் ஓடுகிறது. ஒரு அடி உயரமா சக்கரம் நிலத்தில் படாமல் இருந்தால் ஓடாது, வெறும் சக்கரம்தான் சுற்றும், வாகனம் நகராது.
சரி பூமியின் எடையும், பருமனும் எவ்வளவு?
இதை எது தாங்கிக் கொண்டிருக்கிறது ?
பூமிக்கு கீழ் எந்த ரோடு சூரியனைச் சுற்றி வர போடப்பட்டிருக்கிறது ?
பூமி அதில் உருண்டு கொண்டு இருக்கிறதா ?
பூமி தன்னைத்தானே சுற்றும் வேகம் மற்றும் சூரியனைச் சுற்றி வரும் வேகத்திற்கு காரணம் என்ன?
பதிலே கேள்விக்குரியதாக அமையும் அறிவியலில்.
சூன்யத்திற்கு காரணம் வேண்டியதில்லை, ஏனெனில் சூன்யமே காரணம், சூனியமே காரியமாகவும் மலர்கிறது, சூனியம் என்பது அனைத்துக்கும் மூலம், அதனுள் அனைத்தும் அடக்கம்.
இனி இதோ வேதாத்திரி மகானின் கருத்துக்கள்
“சுத்தவெளி சுத்தவெளியாகவே இருந்திருக்கலாம் அல்லவா?
அது ஏன் இயக்கம் பெற்று, பரிணாமம் பெற்று வளர்ந்தது? அதன் இரகசியம் என்ன?
மகானின் பதில்
”படுத்திருக்கிறீர்கள், நல்ல ஓய்வு, அப்படியே படுத்திருக்க வேண்டியதுதானே...? ஏன் எழுந்திருக்கிறீர்கள்? உங்களுக்குள் மிகும் உடல்ஆற்றல் வேகம் தானகவே எழுந்திருக்கச் செய்கிறது.
சுத்தவெளி தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றல்தன்மை கொண்டது. அது எப்போதுமே தானாகவே விரிந்து கொண்டே இருக்குக்கூடியது. அதனால் அதிலிருந்து மற்றவை தோன்றித்தான் ஆகும், தோன்றிக்கொண்டேதான் இருக்கும்.”
சுத்தவெளி தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றல்தன்மை கொண்டது. அது எப்போதுமே தானாகவே விரிந்து கொண்டே இருக்குக்கூடியது. அதனால் அதிலிருந்து மற்றவை தோன்றித்தான் ஆகும், தோன்றிக்கொண்டேதான் இருக்கும்.”
எனக்கு மகானின் இக்கருத்து, முழுமையாக, சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெளிவானதாக இருக்கிறது. சுத்தவெளி என்ற இறைவெளி இதையே இறை என மதிக்கிறோம்.
இந்த கருத்தை நான் இடுகையாக்க தூண்டுதலாய் இருந்த நண்பர் ரவி ஆதித்யாவுக்கு எனது நன்றிகள், வாழ்த்துக்கள்
அனானிக்கு
ReplyDeleteஇவ்வளவு தேவைங்களா சக்தி
பதிவுக்கு வாழ்த்துக்கள்.நன்றாக உள்ளது.
ReplyDelete”வெட்ட வெளிதன்னை மெய்யென்று இருப்போர்க்குப் பட்டயம் ஏதுக்கடி?-குதம்பாய்!
//சூனியம் என்பது அனைத்துக்கும் மூலம், அதனுள் அனைத்தும் அடக்கம்.//
ReplyDeleteஉண்மை உண்மை, நல்ல பதிவுக்கு நன்றி.
வெட்ட வெளிதன்னை மெய்யென்று இருப்போர்க்குப்
ReplyDeleteபட்டயம் ஏதுக்கடி - குதம்பாய்
பட்டயம் ஏதுக்கடி ?
மெய்ப்பொருள் கண்டு விளங்கும்மெய்ஞ் ஞானிக்குக்
கற்பங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
கற்பங்கள் ஏதுக்கடி ?
எவ்வளவு ஞானம் பாருங்கள் குதம்பையாருக்கு,
அவ்வளுவும் மெய்ஞானம்.
முன்னாலேயே நண்பர் சொல்லிட்டாரு இருந்தாலும் இன்னொரு வாட்டி நான் சொல்லிக்கிறேன்.
தான் உணர்ந்ததை தன்னிலேயே ஐக்கிய படித்திடாமல் அனைவரும் உணரும் படி பதிவெழுதும் அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் நன்றி.
தன்னை தானே சூழ்ந்தழுத்தும் ஆற்றல்..
ReplyDeleteவாழ்க வளமுடன்,
ReplyDeleteஇருப்புநிலை, சூன்யம், ஒன்றுமில்லாதது என்று பலரும் எண்ணுகின்றனர் இது தவறானது. இருப்புநிலை எல்லாவற்றையும் தன்னுள் பெற்றுள்ளது.வேதாத்திரி மகரிஷி.
நல்ல கேள்வி , நல்ல விளக்கம்,.நல்ல பதிவு.
வாழ்க வளமுடன்.
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
ReplyDeleteதமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்
வெளி,பொருள் இரண்டும் எப்போதும் தனித் த்னியே இருக்க முடியாது,ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்கும என்பதே ஐன்ஸ்டீனின் மிகப் பெரிய பங்களிப்பு.
ReplyDeleteஅவற்றைத் தனித் த்னியாக எண்ணிப் பார்ப்பதே நமது மனதின் குறுகிய கற்பனை.
எல்லாவற்றையும் இரண்டாகப் பிளவு படுத்திப் பார்த்தே பழகி விட்டோம்.
Preliminary ஆராய்ச்சிக்கு அது o.k.ஆனால் final conclusion க்கு அது சரியல்ல.
இரண்டல்ல என்று இதைதான் ஓயாமல் ஓதுகிறது வேதம்.
வாய்ப்புக்கு,நன்றி சிவா.
//கதிர் - ஈரோடு said...
ReplyDeleteஅனானிக்கு
இவ்வளவு தேவைங்களா சக்தி//
அனானிக்கு இவ்வளவு சக்தியையும் உள்ளடக்கிய ஆற்றல் உண்டு.
ஆலமரம் எவ்வளவு பெரியது, ஆனால் அதன் விதை கடுகுபோல்தான் இருக்கும். அந்த விதைக்குள் ஆலமரம் அடங்கி இருப்பதைப்போல் அனானி ஆகிய சுத்தவெளிக்குள் எல்லாம் அடக்கம் நண்பர் கதிர் அவர்களே
நன்றி
\\கே.ரவிஷங்கர் said...
ReplyDeleteபதிவுக்கு வாழ்த்துக்கள்.நன்றாக உள்ளது.
”வெட்ட வெளிதன்னை மெய்யென்று இருப்போர்க்குப் பட்டயம் ஏதுக்கடி?-குதம்பாய்!\\
உங்களால்தான் இந்த இடுகையே
அதற்கு வாழ்த்துக்கள்
@ சிங்கக்குட்டி
ReplyDelete@ Kesavan
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல
@ \\mix said...
புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்// ஏற்கனவே இணைக்க முயற்சித்தேன், இப்போது திரும்பவும் முயற்சிக்கிறேன்
\\ஆகாயமனிதன்.. said...
ReplyDeleteதன்னை தானே சூழ்ந்தழுத்தும் ஆற்றல்\\
\\கோமதி அரசு said...
வாழ்க வளமுடன்,
இருப்புநிலை, சூன்யம், ஒன்றுமில்லாதது என்று பலரும் எண்ணுகின்றனர் இது தவறானது. இருப்புநிலை எல்லாவற்றையும் தன்னுள் பெற்றுள்ளது.வேதாத்திரி மகரிஷி.
நல்ல கேள்வி , நல்ல விளக்கம்,.நல்ல பதிவு.
வாழ்க வளமுடன்.\\
இருவருக்கும் வாழ்த்துக்களுடன் நன்றிகள்.
முதல் வருகைக்கும் சேர்த்து :))
\\ஷண்முகப்ரியன் said...
ReplyDeleteவெளி,பொருள் இரண்டும் எப்போதும் தனித் த்னியே இருக்க முடியாது,ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்கும என்பதே ஐன்ஸ்டீனின் மிகப் பெரிய பங்களிப்பு.\\
வெளி வேறு, பொருள் வேறு அல்ல, எப்போது ?
எப்போதுமே. ஆனால் வெளி முப்பரிமாணங்களுக்கு உட்பட்டதாக இருக்கும்போது நாம் பொருளாக உணர்கிறோம். அதனால் நாம்தான் புலன்களால் பிரித்து பார்க்கிறோம்.
உண்மையில் வெளியின் வெவ்வேறு திணிவு நிலை வேறுபாடுகளே பஞ்சபூதங்களும், அவற்றால் ஆன எல்லாமும்.
உடன்பாடான கருத்தே வேதாத்திரியம்
\\அவற்றைத் தனித் த்னியாக எண்ணிப் பார்ப்பதே நமது மனதின் குறுகிய கற்பனை.
எல்லாவற்றையும் இரண்டாகப் பிளவு படுத்திப் பார்த்தே பழகி விட்டோம்.\\
கற்பனை அல்ல, அவ்வளவுதான் நம் உடல்திறன்
\\இரண்டல்ல என்று இதைதான் ஓயாமல் ஓதுகிறது வேதம்.\\
நிச்சயம் ஒன்றுதான். அறிவியலைத் துணைக்கு அழைத்தால் எந்தவகையிலும் நம் புலன்களின் எல்லைக்கு உட்பட்டே விவரம் அறியும், வெளியை அப்படி அறியமுடியாது ஆகையால் வெளி, பொருள் என அறிவியலுக்காக வேறுபடுத்தி பார்க்கவேண்டியதாயிற்று. அன்புச் சகோதரரே :))
அருட் தந்தையின் அருளுரையை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே..வாழ்க வளமுடன்!!
ReplyDeleteகாலையில் யோசித்துக்கொண்டுருந்தது மாலையில் ஒரு பதிவில் பார்க்க முடியுமா? உள் மன வீச்சு என்பது எத்தனை பெரிது. நான் யோசித்தது விஞ்ஞானம் என்பது விளங்க முடியா ஞானம். காரணம் ஒரு கண்டு பிடிப்போடு அது முடிந்து விடுவதில்லை. துப்பாக்கி ஒரு ஞானக் கண்டுபிடிப்பு என்றால் இன்று வரையில் எத்தனை மாறுதல்கள். இன்னும் எத்தனை மாறுதல்கள் வரப்போகின்றது?
ReplyDeleteமெய்ஞானம். ஒரே ஞானம் தான். ஆனால் சரியான முறையில் பெற்று இருக்க வேண்டும். ஒரு முறை பெற்று விட்டால் மொத்த வாழ்க்கையும் சிறப்பு. பெற்றதில் பிரச்சனை என்றால் மொத்த சமூகத்திற்கும் பிரச்சனை.
சாமியார். போலிச் சாமியார்.
மந்திரவாதி. மனிதனை மட்டும் நேசிக்கும் பிரதிவாதி.
எத்தனை கோள்ககளை விஞ்ஞானம் போய் அடைந்தாலும் கோளாறு உள்ள மனித மனத்தை என்று வெல்ல எந்த ஞானத்தால் வெல்ல முடியும்?
ஞானிகளும் ரிஷிகளும் இன்று கேலியாக பார்ப்பவர்கள் அவர்களின் வாழ்க்கை கேள்வியாக மாறும் போது?
ஆனால் உணர்ந்தாலும் உரத்துச் சொல்வதில்லை.
அதனால் தான் மரபு வழிக் கோளாறு இங்கு எல்லாமே?
சரியா? தவறா?
சுத்தவெளிக்கும், மனிதருக்கும் தொடர்பு படுத்தி எழுதும்போதே சுத்தவெளி சுத்தவெளியாகவே இல்லை எனப் புலப்படுகிறது.
ReplyDeleteஅனானி எனப்படுவது இருக்கும் ஒருவர் இல்லாதது போலத் தோற்றம் தருவதாகும்.
இப்படி பதிவுலகில் வார்த்தை அலங்காரத்துக்காக எழுதப்படும் விசயங்கள் அதிகமே.
இறைவனைப் பற்றி எத்தனை முறை எடுத்துரைத்தாலும் சந்தேகம் உடைய கண்களுக்கு ஒரு பதில் ஒருபோதும் கிடைக்கப்போவதில்லை, அல்லது பதிலே இல்லை என நினைவு மாறப் போவதுமில்லை எனலாம்.
இதற்கான தொடர்பு பதிவையும் படித்திருந்தேன். மிக்க நன்றி.
\\முக்கோணம் said...
ReplyDeleteஅருட் தந்தையின் அருளுரையை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே..வாழ்க வளமுடன்!!\\
தானாக சூழ்நிலை கனிந்துவிட்டது நண்பரே
வாழ்த்துக்கள்
\\மெய்ஞானம். ஒரே ஞானம் தான். ஆனால் சரியான முறையில் பெற்று இருக்க வேண்டும். ஒரு முறை பெற்று விட்டால் மொத்த வாழ்க்கையும் சிறப்பு. பெற்றதில் பிரச்சனை என்றால் மொத்த சமூகத்திற்கும் பிரச்சனை.\\
ReplyDeleteஉணரவேண்டும், திருந்த வேண்டும் என்ற உணர்வு இல்லாதவனால் தான் பிரச்சினை.
நம்மைப் போன்றோரால் எந்த பிரச்சினையும் இல்லை, நாம் மாறிக்கொள்ளலாம்
\\மனித மனத்தை என்று வெல்ல எந்த ஞானத்தால் வெல்ல முடியும்?\\
மெய்ஞானம்தான் வேறென்ன, மனதைப்பற்றி அதுதானே சொல்கிறது :))
\\அதனால் தான் மரபு வழிக் கோளாறு இங்கு எல்லாமே?\\
ஆம், உணராதவனுக்கே மட்டுமே இது பொருந்தும்
\\தொடங்கியதிலே சென்று முடியும் என்கிற நிலை இருப்பதால் எது தொடக்கம், எது முடிவு, இதெல்லாம் ஏன் என்பது அறிய இயலாதது\\
ReplyDelete\\காலம் இல்லாத போதிலே எல்லாம் தொடங்கியது என்பதை காலம் இருக்கும் போது கணக்கிட்டால் சரிவராது என்பதை அறிவோம்.\\
பின்னூட்டத்தில தங்களின் கருத்துகள் என்னை கவர்ந்தன
||சுத்தவெளிக்கும், மனிதருக்கும் தொடர்பு படுத்தி எழுதும்போதே சுத்தவெளி சுத்தவெளியாகவே இல்லை எனப் புலப்படுகிறது||
தாங்கள் என் நண்பர், உங்கள் குழந்தைகளுக்கு தந்தை, தம்பிக்கு அண்ணன், பலவிதமாக நாங்கள் உங்களைப் பார்ப்பதால் தாங்கள் இராதாகிருஷ்ணன் இல்லையா !!
எப்போதும் தாங்கள் தாங்கள்தான், சுத்தவெளி சுத்தவெளிதான், அதன் திணிவுநிலைதான், பொருள், உயிரினம் எல்லாம்
நன்றி நண்பரே, ஆழமாக என்னோடு உரையாடியதற்கு..
This comment has been removed by the author.
ReplyDelete