அதில் ஒன்றுதான் தேவையான பிரிண்டிங் வரைபடத்தை கணினியில் மேம்படுத்தித் தருதல், அங்கு பணிநிமித்தம் சென்றேன், காலை 10.00 மணி இருக்கும் ,
மூன்று கணினிகள் உள்ள அலுவலகம், தொழிற்சாலையும் அதுதான்:))
எனக்குத்தேவையான டிசைனை மேம்படுத்த சென்றிருந்தேன். கணினியின் பின்புலத்தில் சினிமா பாடல்கள் பாடிக் கொண்டிருந்தது. எல்லா பாடல்களுமே நான் அதிகம் கேள்விப்படாதவை, எல்லாமே புதியவை.
சற்று சத்தமாகவே இருந்தது."என்ன தம்பி, வேலை செய்யும் போது கொஞ்சம் மெதுவாக சத்தம் வைக்கலாம் அல்லவா?" என்றேன்.
சிரித்துக் கொண்டே சத்தம் குறைத்து, பின்னர் வேலையில் ஈடுபட்டார்.
வேலையின் சலிப்பை போக்கிக்கொள்ள பாட்டுக்கேட்பதாக எடுத்துக்கொண்டேன்.
அந்த நபர் பாட்டை ஒழுங்கா கேட்பாரா !!
இல்லை வேலைய ஒழுங்கா செய்வாரா !!
சரி நான் கார் ஓட்டிப்பழகும்போது, பாட்டுக்கேட்டால் எப்படி கார் ஓட்டமுடியும், ரோட்டைப்பார்த்து எப்படி காரோட்டுவது என்று பயிற்றுவிக்கும் நண்பருடன் சண்டைக்கே போய்விட்டேன்.
ஆனால் இப்போது கார் ஓட்டும்போது ஏதேனும் பாட்டோ, உரையோ ஒலித்த வண்ணம் தான் இருக்கிறது.
இதெல்லாம் சரியா, தவறான்னு மனசு யோசிக்குது :)))
நீங்க எப்படி ?
உங்க மனசுல தோணுவதை சொல்லுங்க, அலசிப் பார்ப்போம் :)
எப்பவும் பாட்டு ஆரம்பத்தில் தான் அதில் மனசு இருக்கும்.நேரம் ஆக ஆக மனது வேலையில் மட்டுமே மூழ்கி விடும்.ஆனால்..பாட்டு கேட்பது(ஏதோ சத்தம் போல) பழகிவிடும். ..எனவே ஒன்றும் தவறு இல்லை,குறைந்த சத்ததில் கேட்டால்.....
ReplyDeleteமுதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு.அமுதா கிருஷ்ணா
ReplyDeleteவாழ்த்துக்கள்
அடுத்த கருத்துக்கு காத்திருப்போம் !!
பாட்டு போடுவது என்பது ஏற்றுமதி கம்பெனிகள் எல்லாவற்றிலும் இருக்கும் பழக்கம். நானும் ஒரு கம்பெனியில் வேலை செய்தபோது, பாட்டு மட்டும் ஓடிகிட்டே இருக்கும். வேலை நடந்துகிட்டே இருக்கும். இது முதலில் சற்று கஷ்டமாக இருந்தாலும், போகப் போக பழகிவிடும் விசயம்தான்.
ReplyDeleteபாட்டுக்கேட்டுட்டே வேலை செஞ்சு பாருங்க பாசு
ReplyDeleteஅது ஒரு சுகமாயிருக்கும்...வேலை அலுப்பு தெரியாது
இராகவன் நைஜிரியா said...
ReplyDelete\\பாட்டு போடுவது என்பது ஏற்றுமதி கம்பெனிகள் எல்லாவற்றிலும் இருக்கும் பழக்கம். நானும் ஒரு கம்பெனியில் வேலை செய்தபோது, பாட்டு மட்டும் ஓடிகிட்டே இருக்கும். வேலை நடந்துகிட்டே இருக்கும். இது முதலில் சற்று கஷ்டமாக இருந்தாலும், போகப் போக பழகிவிடும் விசயம்தான்.\\
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு.இராகவன் நைஜிரியா
இது நடைமுறையில் உள்ளதுதான், புரிகிறது இதை நாம் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் ?
இன்னும் கருத்துக்கள் எதிர்பார்க்கிறேன்
நன்றி வாழ்த்துக்கள்
நன்றிய்
\\பிரியமுடன்...வசந்த் said...
ReplyDeleteபாட்டுக்கேட்டுட்டே வேலை செஞ்சு பாருங்க பாசு
அது ஒரு சுகமாயிருக்கும்...வேலை அலுப்பு தெரியாது\\
நானும் அப்படித்தான் நண்பரே
ஆனால் இது என்னவோ தவறு என மனம் சொல்கிறது, காரணத்தை ஆராயத்தான் கருத்துக்களை வரவேற்கிறேன்.
சரியா, தவறா ஏன் ?
நன்றியும் வாழ்த்துக்களும்
//அந்த நபர் பாட்டை ஒழுங்கா கேட்பாரா !!
ReplyDeleteஇல்லை வேலைய ஒழுங்கா செய்வாரா !!//
இங்கே எல்லாம் பாட்டுக் கேட்டுக் கொண்டு வேலை பார்ப்பது நடை முறை, சீனர்கள் அதில் ஆராய்ந்து பார்க்காமல் அனுமதித்திருப்பார்களா ?
அனிச்சை செயலாக உடலுறுப்புகள் பல வேலைகளைச் செய்யும் அதில் ஒன்று தான் பாடல் கேட்பது. அதனால் வேலை தொய்வடையாது.
இது இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல..
ReplyDeleteவயல்லில் வேலை செய்யும் பொழுது என் முப்பாட்டிகள் துவங்கிய பழக்கம்.
எங்கே உடல் மனம் உழைப்பு அதிகரிக்கிறதோ.. உழைப்பு ஒரு கட்டத்தில் உளைச்சல் ஆகிறதோ அங்கே இசை என்ற தெய்வீகம் தேவைப்படுகிறது.
பின்புலத்தில் பாடல் ஓடிக்கொண்டிருந்தால் மனம் எளிமையில் வேலையில் லயம் ஆகும்.
\\கோவி.கண்ணன்
ReplyDeleteஇங்கே எல்லாம் பாட்டுக் கேட்டுக் கொண்டு வேலை பார்ப்பது நடை முறை, சீனர்கள் அதில் ஆராய்ந்து பார்க்காமல் அனுமதித்திருப்பார்களா ?
அனிச்சை செயலாக உடலுறுப்புகள் பல வேலைகளைச் செய்யும் அதில் ஒன்று தான் பாடல் கேட்பது. அதனால் வேலை தொய்வடையாது.\\
பாட்டுக்கேட்டுக்கொண்டே வேலை பார்ப்பது நடைமுறை, அது நம் வாழ்வில் ஏதேனும் தாக்கங்களை ஏற்படுத்துமா என சிந்தித்து பார்க்க விரும்புகிறேன். :)
மத்தவங்களுக்கு தொந்தரவா இல்லாத அளவுக்கு பாட்டு சத்தம் இருந்தால் பிரச்சனை இல்லைதான். ஆனால் எல்லா நேரமும் பாட்டு கேட்டுக்கொண்டே வேலை செய்தால் வேலையில் கருத்தாய் இருக்க முடியாது என்று நினைக்கிறேன்.
ReplyDelete\\ஸ்வாமி ஓம்கார் said...
ReplyDeleteஇது இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல..
வயல்லில் வேலை செய்யும் பொழுது என் முப்பாட்டிகள் துவங்கிய பழக்கம்.
எங்கே உடல் மனம் உழைப்பு அதிகரிக்கிறதோ.. உழைப்பு ஒரு கட்டத்தில் உளைச்சல் ஆகிறதோ அங்கே இசை என்ற தெய்வீகம் தேவைப்படுகிறது.
பின்புலத்தில் பாடல் ஓடிக்கொண்டிருந்தால் மனம் எளிமையில் வேலையில் லயம் ஆகும்.\\
நல்ல கருத்துதான் நண்பரே :))
நான் விரும்புவது இது என் மனதில், உடலில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும்,?
தொடர்ந்து இந்த பாடல் கேட்டுக்கொண்டே வேலை செய்யலாமா, வேண்டமா?
அல்லது என்ன மனநிலையில் நான் பாட்டுக்கேட்டுக்கொண்டு வேலை செய்ய வேண்டும்,
அந்த நுட்பம் என்ன ?
நன்றியும் வாழ்த்துக்களும்
\\சின்ன அம்மிணி said...
ReplyDeleteமத்தவங்களுக்கு தொந்தரவா இல்லாத அளவுக்கு பாட்டு சத்தம் இருந்தால் பிரச்சனை இல்லைதான். ஆனால் எல்லா நேரமும் பாட்டு கேட்டுக்கொண்டே வேலை செய்தால் வேலையில் கருத்தாய் இருக்க முடியாது என்று நினைக்கிறேன்.\\
ஏன் அப்படினு கொஞ்சம் அலசிப்பார்த்து சொல்லுங்களேன்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் திரு.சின்ன அம்மிணி
pattu ketpathu thavaru illai
ReplyDelete\\venkat said...
ReplyDeletepattu ketpathu thavaru illai\\\
பெரும்பான்மையான கருத்து பாட்டு கேட்பதில் தவறில்லை என்றே வருகிறது.
ஆனால் தவறு எனவே என் மனம் கருதுகிறது, சரி என்பதற்கு இன்னும் கொஞ்சம் வலுவான காரணங்களை எதிர்பார்க்கிறேன் நண்பரே
அவரவர் மனநிலையைப் பொருத்து இது அமையக் கூடும். ஆனால் பலரின் மனநிலை சரியெனவே சொல்லும்.
ReplyDeleteபாடல் கேட்டுக்கொண்டே படிப்பது, வேலை செய்வது, வாகனம் ஓட்டுவது என்பது ஸ்வாமிஜி சொன்னது போல முப்பாட்டிகள் தொடங்கி வைத்தது. இசையை வாய் முணுமுணுத்துக் கொண்டும் இருக்கும், இசையை காது கேட்டுக் கொண்டே இருக்கும்.
வேலை செய்யும் போது சொந்த பாட்டுப் பாடிருவோம்!
இலங்கை வானொலி, இலங்கை வானொலி என்று ஒன்று, அது ஒலிக்காத இடமே தமிழ்நாட்டில் அனேகமாக இல்லை என்றிருந்த காலம் ஒன்று இருந்தது. சினிமாப்பாட்டுக்களையே தரம் பிரித்து, காதல் பாட்டுக்கள், தென் கிண்ணம், தத்துவப்பாட்டுக்கள் இப்படி வித விதமான லேபில் ஒட்டி, ஒரே இட்லி மாவில் வித விதமான பலகாரம் சுட்டுத் தமிழ்நாட்டுக்கும் கொடுத்துக் கொண்டிருந்தது.
ReplyDeleteரேடியோவில் பாட்டுக் கேட்டுக் கொண்டு வேலை செய்தவர்கள் உற்சாகமாகத் தான் வேலை செய்து கொண்டிருந்தார்கள்! பாட்டுக் கேட்டுக் கொண்டே வேலை செய்வதில், களைப்பிருக்காது. மன அழுத்தமும், கோபமும், கூட இருக்காது! காதுகள், உள்வாங்கிக் கொள்ளுமே தவிர பிழைப்பைக் கெடுக்காது!
ஆனால்,அதையே டீவீயில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் தான் தங்கள்வேலையை மட்டுமல்ல அடுத்தவர்கள் வேலையையும் சேர்த்துக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!
கண் போன போக்கிலே போனால் தான் கஷ்டம்!
//ஆனால் இப்போது கார் ஓட்டும்போது ஏதேனும் பாட்டோ, உரையோ ஒலித்த வண்ணம் தான் இருக்கிறது.//
ReplyDeleteநீங்களே சொல்லீட்டீங்க
//வெ.இராதாகிருஷ்ணன்
ReplyDeleteமுப்பாட்டிகள் தொடங்கி வைத்தது. இசையை வாய் முணுமுணுத்துக் கொண்டும் இருக்கும், இசையை காது கேட்டுக் கொண்டே இருக்கும். //
அன்றைய காலகட்டம், பணம் சம்பாதிக்க வேலை செய்யும் விதம், அன்றைய பாடல்கள் இவற்றோடு இன்று நிறைய வேறுபாடு வந்துவிட்டது.
அதனாலேயே இது நம்மிடையே எந்தவித பாதிப்பு/உற்சாகத்தை ஏற்படுத்துகிறது என்று அலசுகிறோம் !
நன்றி நண்பரே வருகைக்கும் கருத்துக்கும்
கிருஷ்ணமூர்த்தி...
ReplyDelete\\பாட்டுக் கேட்டுக் கொண்டே வேலை செய்வதில், களைப்பிருக்காது. மன அழுத்தமும், கோபமும், கூட இருக்காது! காதுகள், உள்வாங்கிக் கொள்ளுமே தவிர பிழைப்பைக் கெடுக்காது!\\
கோவை,திருச்சி, இலங்கை என எங்கள் பகுதியில் வானொலி கேட்ட ஞாபகம் உண்டு,
நம் நினைவுகளில் நிறைய பாடல்களை பதிய வைத்ததில் பெரும் பங்கு உண்டு
பிழைப்பை கெடுக்காது அல்லது கெடுக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். இது தவிர மனதின் தன்மையைப் பாதிக்குமா என்பதே என் சிந்தனை
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே
கதிர் - ஈரோடு
ReplyDelete//ஆனால் இப்போது கார் ஓட்டும்போது ஏதேனும் பாட்டோ, உரையோ ஒலித்த வண்ணம் தான் இருக்கிறது.//
நீங்களே சொல்லீட்டீங்க\\
ஆமாங்க மாப்பு,
இப்படியே வண்டிய ஓட்டிரலாமா ?
இதுனால வேற ஏதாவது பாதிப்பு வருமா?
தெளிவு வேணுமில்ல ..அதான் இந்த சிந்தனை.:))
நன்றியும் வாழ்த்துக்களும் :))
even in corporate offices song are being played in mild voice.
ReplyDeleteIt depends upon the employees tastes. if the job is very monotonous, songs/music will give some relief. But if the job requires more concentration than songs may divert the attention.
It varies case to case.
ஒரு நல்ல பதிவு, உண்மையை சொல்லப்போனால் எதாவது ஒரு வேலையை மட்டுமே மனிதன் செய்கிறான், பாட்டு ஓடிக்கொண்டு இருக்கும் அல்லது அவன் வேலை (கார் ஓட்டுவதை செய்கிறான்) இதில் அவன் கவனம் பாட்டில் செல்லும் போது வேலை நிற்கிறது அல்லது விபத்து ஏற்படுகிறது. இது தான் உண்மை.
ReplyDeleteசோதிக்க வேண்டும் என்றால் வலது கையில் இரண்டாவது விரலை ஆட்டிக்கொண்டே ஏதாவது சாப்பிட்டு பாருங்கள் புரியும்.
ராம்ஜி.யாஹூ said...
ReplyDeleteமிகக் குறைந்த ஒலியிலான பாடல்கள் ஒலிப்பதை நானும் எங்கள் பகுதி அலுவலகங்களில் கேட்டிருக்கிறேன்
தொழில் சூழ்நிலைக்கேற்ப இது பொருந்தும். எல்லாத் தொழிலுக்கும் பொருந்தாது.
நமக்குள்ளே என்ன நடக்கும் இதனால் ?
சுவையான விஷயத்தை விவாதத்திற்கு எடுத்துள்ளீரகள். நன்றி.
ReplyDeleteமனம் பாடலை கேட்டுக் கொண்டு இருக்கும் போது உடல் மட்டும் அனிச்சையாக வேலை செய்வது நமது இயந்திரத் தனத்தை தான் அதிகரிக்கும். வேலையில் கவனமில்லாமல் செய்வது தவறுகளுக்கு வழி வகுக்கும். அதில் எந்த வித அழகையும், நேர்த்தியையும் காண முடியாது.
ஆனால் இசையின் மூலம் வேறு சில உபயோகங்கள் உள்ளதாக அறிகிறோம்.
அது எந்த விதமான இசை, அதன் லயிப்பு மனதின் அலை வேகத்தை எவ்வளவு தூரம் நுண்ணிய நிலைக்கு கொண்டு போகும் என்பதை பொறுத்தது.
கேள்விப்பட்டுள்ளேன் - பல்கேரியாவில் ஒரு கல்விக் கூடத்தில் ஒரு ஆராய்ச்சி நடந்தது.
அங்கு மொழிப்பாடம் சொல்லிக் கொடுக்கப் படும் போது ஒரு விஷயம் செய்தார்கள். மாணவர்கள் அனைவரையும் கண்ணை மூடி ஓய்வாக நாற்காலியில் சாய்ந்திருக்க சொன்னார்கள். பின்னணியில் பித்தோவனின் இசையை ஒலிக்க செய்தார்கள். மாணவர்களை பாடத்தை கவனிக்காமல் இசையில் மட்டும் லயித்து மூழ்கி இருக்க சொன்னார்கள்.
ஆராய்ச்சியின் முடிவில் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.
இந்த முறையின் மூலம் வழக்கமாக கற்பதை விட ஐம்பது மடங்கு வேகமாக கற்க முடிந்தது.
காரணம் அந்த இசை அவர்களது மனதை நுண்ணிய நிலைக்கு, தியானத் தன்மைக்கு கொண்டு சென்று கற்கும் பாடம் மனதின் அடி ஆழத்தில் பதிந்தது தான்.
ஆனால் நாம் கேட்கும் 'யம்மாடி...ஆத்தாடி...' பாடல்களில் இதனை எதிர் பார்க்க முடியாது.
பாட்டு கேட்டுகிட்டே வேலை பாக்குறது தப்பு இல்ல, ஆனால் நம்முடைய மனம் பாட்டு கேட்டு கொண்டே வேலை பார்க்கும் போது மனம் அதில் லயித்து விட்டால் செய்யும் வேலையில் தவறு செய்ய அதிகம் வாய்ப்புண்டு ஏன் என்றால் இசை ஒருவனை மயங்க செய்து விடும்.
ReplyDeleteஅது மட்டும் இல்லாமல் நம் எந்த இடத்தில் எந்த சிந்தனையில் எந்த மாதிரியான பாடலை கேட்கிறோம் என்ற நிலைப்பாடு அந்த இடத்திற்கே நம்மை அழைத்து சென்று விடும் இதை நான் பல முறை அனுபவித்து இருக்கிறேன்.அதனால் தவறும் பல நடந்தும் இருக்கிறது.இந்த தவறுகளால், அந்த பாட்டு கேட்கும் ரசனை மறந்து தவறை மறைக்க அல்லது தவறிற்கான தண்டனையாக மனம் நோகும் அளவிற்கு இட்டு சென்று விடும்.
அதனால் நாம் செய்யும் வேலையின் முக்கியம் கருதி சில நேரங்களில் பாடல்கள் கேட்பதை தவிர்த்து விடுவது நல்லது.
கடைய பூட்டனுமா பையன் சண்ட போடுறான் அதுனால இது போதும்னு நினைக்குறேன்.
இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
ReplyDeleteநாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!!
தயவு செய்து
http://www.srilankacampaign.org/form.htm
அல்லது
http://www.srilankacampaign.org/takeaction.htm
என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!
முடிந்தால் உங்கள் நண்பர்களையும் இந்த புணித செயலில் ஈடுபடுத்துங்கள்
சிலர் பாட்டு கேட்டா, வரிகள், அர்த்தங்கள், இசை பற்றிய நுணுக்கங்கள் போன்றவற்றை ரொம்பவும் கவனிப்பார்கள். இம்மாதிரி ஆட்களுக்கு பாட்டு, வேலையை கெடுக்கும் என்று நினைக்கிறேன். இதிலும் கூட, தொடர்ந்து கேட்கும்போது அவ்வாறு நிகழபோவதில்லை. அதாவது கவனித்துக்கொண்டே போகபோவதில்லை.
ReplyDeleteமற்றபடி பாட்டு கேட்டு கொண்டு வேலை செய்தால், சோர்வு, சலிப்பு தெரிவதில்லை. நானும் பாட்டு கேட்டுக்கொண்டு தான் வேலை செய்கிறேன். கவனத்தை சிதறடிக்கும்பட்சத்தில், நிறுத்திவிடுகிறேன்.
நல்ல கருத்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே!
என்னுடய கருத்து உடல் வேலை பளு மிக்க சூழ் நிலையில் (அ) மன இறுக்கம் அதிகமாக உள்ள போது (Stressed) பாட்டு கேட்பது பொருத்தமாக இருக்கும்.
அதே சமயம் சிந்தணை திறன் அதிகம் தேவைப்படும் வேலைகளில் பாட்டு கேட்கும் போது சிந்தணை சிதரடிக்க படுகிறது.
---
சித்தாந்தம் பற்றி எழுத நினைத்திருந்தேன். நேரமின்மையால் எழுத இயலவில்லை.
சித்தர்களின் உயிரினங்கள் பற்றிய Evaluation Theory பற்றி நேரமிருக்கும் போது எழுத கேட்டு கொள்கிறேன்.
\\சிங்கக்குட்டி said...
ReplyDeleteஎதாவது ஒரு வேலையை மட்டுமே மனிதன் செய்கிறான், பாட்டு ஓடிக்கொண்டு இருக்கும் அல்லது அவன் வேலை (கார் ஓட்டுவதை செய்கிறான்) இதில் அவன் கவனம் பாட்டில் செல்லும் போது வேலை நிற்கிறது அல்லது விபத்து ஏற்படுகிறது. இது தான் உண்மை.\\
உண்மைதான் நண்பரே
மனதின் திறன் அதுதான்,
\\ அந்த இசை அவர்களது மனதை நுண்ணிய நிலைக்கு, தியானத் தன்மைக்கு கொண்டு சென்று கற்கும் பாடம் மனதின் அடி ஆழத்தில் பதிந்தது தான்\\
ReplyDeleteஇசை மனதை அமைதி நிலைக்கு எடுத்துச் செல்லும் என்பதில் ஐயமேதுமில்லை, ஆனால் வேலையையும் இசையையும் இணைக்கும்போது மனதில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன, ?
மனதை நாம் எப்படி பழக்குகிறோம் ?
பின்விளைவுகள் என்ன ஏற்படலாம்,
\\கடைய பூட்டனுமா பையன் சண்ட போடுறான் அதுனால இது போதும்னு நினைக்குறேன்.\\
ReplyDeleteபோதும், போதும்
வருகையே மகிழ்ச்சி தருகிறது
உங்க கடையில ஓய்வா இருந்தா மட்டும் நம்ம கடைக்கு வாங்க :)))
இது நேத்து நடந்தது. தொழிற்சாலைக்குள்ள ரவுண்ட்ஸ் போகும்போது செக்யூரிடியிடமிருந்து ஏமாற்றி செல்ஃபோனைக் கொண்டு போய் உள்ளே பாட்டு கேட்டுக் கொண்டிருந்த ஒரு தொழிலாளிடமிருந்து அதைக் கைப்பற்றி வேலை முடிச்சு போறப்ப வாங்கிக்க என்று செக்ஷனுக்கு வந்தேன்.
ReplyDeleteமாலை அதை வாங்க அவன் வரும்போது என் அலைபேசியில் நான் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தேன்!
\\சரவணகுமரன் said...
ReplyDeleteமற்றபடி பாட்டு கேட்டு கொண்டு வேலை செய்தால், சோர்வு, சலிப்பு தெரிவதில்லை. நானும் பாட்டு கேட்டுக்கொண்டு தான் வேலை செய்கிறேன். கவனத்தை சிதறடிக்கும்பட்சத்தில், நிறுத்திவிடுகிறேன்.\\
இந்த பழக்கம் மனதில் வேறு எந்த விதமான மாற்றங்களை ஏற்படுத்தும் ?
Sabarinathan Arthanari said...
ReplyDelete\\என்னுடய கருத்து உடல் வேலை பளு மிக்க சூழ் நிலையில் (அ) மன இறுக்கம் அதிகமாக உள்ள போது (Stressed) பாட்டு கேட்பது பொருத்தமாக இருக்கும்.
அதே சமயம் சிந்தனை திறன் அதிகம் தேவைப்படும் வேலைகளில் பாட்டு கேட்கும் போது சிந்தனை சிதறடிக்க படுகிறது.\\
சரியான கருத்துதான் நண்பரே.,
இந்த பழக்கம் நம்மை எங்கே கொண்டு போய் நிறுத்தும் ?
---
சித்தாந்தம் பற்றி எழுத நினைத்திருந்தேன். நேரமின்மையால் எழுத இயலவில்லை.
சித்தர்களின் உயிரினங்கள் பற்றிய Evaluation Theory பற்றி நேரமிருக்கும் போது எழுத கேட்டு கொள்கிறேன்.
\\பரிசல்காரன் said...
ReplyDeleteஇது நேத்து நடந்தது. தொழிற்சாலைக்குள்ள ரவுண்ட்ஸ் போகும்போது செக்யூரிடியிடமிருந்து ஏமாற்றி செல்ஃபோனைக் கொண்டு போய் உள்ளே பாட்டு கேட்டுக் கொண்டிருந்த ஒரு தொழிலாளிடமிருந்து அதைக் கைப்பற்றி வேலை முடிச்சு போறப்ப வாங்கிக்க என்று செக்ஷனுக்கு வந்தேன்.
மாலை அதை வாங்க அவன் வரும்போது என் அலைபேசியில் நான் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தேன்!\\
:-))))))
முதல் வருகைக்கு நன்றி பரிசல்..:))
நாலு வரியில் நச்சென்று கவிதைபோல், கதைபோல்
முரணைச் சொல்லி விட்டீர்கள்
அதேசமயம், உங்களுக்கு இது பொருந்தாது, முரண் இல்லை எனவும் எடுத்துக்கொள்கிறேன்.
வேலை செய்யறவுங்க பாட்டுக்கேட்டாத்தான் அது தவறு, நீங்க கேட்டா தப்பே இல்ல :)))
ஆடி பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது, என்பார்கள். ஆனால் செய்யும் வேலையைப்பொறுத்து
ReplyDeleteமாறுபடும், சில வேலை மிகவும் கவனமாய்கருத்தை
சிதறவிடாமல் செய்யவேண்டும் அப்போது பாட்டுக்
கேட்பது தவறு.
உடல் உழைப்பு மட்டும் என்றால் பாட்டுக் கேட்கலாம்.
எனக்கு வீட்டு வேலை செய்யும் போது பாட்டு கேட்பது பிடிக்கும்.
சிறு வயதில், படிக்கும் காலத்திலிருந்தே பாட்டுக் கேட்டுக் கொண்டே படிப்பதும்,(முக்கியமாகக் கணிதப் பாடம்) எனக்குப் பழக்கம்.படிப்பதிலும் நன்மையே நடந்தது.
ReplyDeleteஇன்றும் அந்தப் பழக்கம் தொடர்கிறது,சிவா.
எழுதுவது நான் கேட்டுக் கொண்டிருக்கும் இசையின் எக்ஸ்டென்ஷன்தான்.
பாட்டு என்பதை விட இசை என்பதே பொருத்தமாக இருக்கும்.
வார்த்தைகளற்ற இனிய வாத்தியங்களின் இசை உங்கள் காரியங்களை லகுவாக்கி லேசாக்குகிறது என்பதே எனது அனுபவம்.
இசையை நீங்கள் எப்படிக் கேட்கிறீர்கள் என்பதே இதில் மிகவும் முக்கியம்.
தன்னை மறந்து கேட்கும் போது,இசை உங்களை ஒரு மேலான மனநிலக்குக் கொண்டு செல்கிறது.
நீங்கள் நீங்களாகவே இல்லாமல் போவதால் செய்யும் வேலை எளிதாகிறது.
இசையே மனித் மொழிகள் அனைத்துக்கும் தாய்.
தியானத்தின் முதல் அறிமுகம்.
இது எனது அனுபவம்,சிவா.
சொல்ல வாய்ப்பளித்தமைக்கு நன்றி.
திருப்பூர் ஏற்றுமதியில் எத்தனையோ முன்னேற்றங்கள் வந்தாலும் இன்று வரையிலும் இரவு வேலை என்பதை எவராலும் நிறுத்திப் பார்க்க மனம் துணியவில்லை. துணிந்தால் துணியாகத்தான் இருக்கும் போல?
ReplyDeleteஅந்த மாதிரி சமயங்களில் இந்த இசை என்பது மட்டும் இல்லாவிட்டால் இனிமா கொடுத்தவன் முகம் போல் மாறிவிடுவதைப் பார்த்து தான் எனக்கே கண்டு கொள்ளக்கூடாது என்று கதவை மூடிக்கொள்வதுண்டு.
கேட்பவர்களுக்கு சத்தமாகத்தான் வேண்டும் என்ற போது தான் இசை என்பது இனிமை இல்லாமல் போய்விடுகின்றது. நவீன விஞ்ஞானத்தில் மருத்துவ சிகிச்சை எடுத்து ஓய்வு எடுக்க வைக்கும் நோயாளி முதல், இன்று புது அவதாரமாக எடுத்துக்கொண்டுருக்கும் யோகா வரைக்கும் பின்னால் ஒலிக்கும் அத்தனை வருடக்கூடிய இசையும் கேட்கும் மனிதனின் வயதுக்கான வருடத்தையும் அல்லவா கூட்டி விடுகின்றது என்று எடுக்கப்படும் ஆய்வு விபரம் தெரிவிக்கின்றது.
நல்ல பங்களிப்பு.