அப்படிப்பட்ட சூழ்நிலையில் சின்னவள் வந்து "அப்பா தோசையப் பிச்சுப் போட்டுக்கொடுங்க" என்று அழைக்க
"அம்மாகிட்ட போயேன்,"
"ஏன் உன்னால பிச்சுப் போட்ட்டுக்கொடுக்க முடியாதா?"
"இல்ல, சுவாரசியமா படிச்சிட்டு இருந்தேன், அதனாலதான்ன்..."
"இந்த வேலை எல்லாம் இங்க நடக்காது, பொத்திக்கிட்டு என்ன செய்யனுமோ அதைச் செய், இந்த பம்மாத்தெல்லாம் இங்க வேகாது...."
"சரிங்ங்ங்..."
சட்டென சின்னவளின் தட்டில் இருந்த தோசையை பிய்த்து போட்டேன், மகளின் முகத்தில் உருவான புன்முறுவல் மனதிற்கு சந்தோசமாக இருந்தது.
என் மகளுக்கு ஒரு இனிய நிகழ்வை கொடுத்த நிறைவு ஏற்பட்டது.
மேற்கண்ட உரையாடல் எனக்கும் யாருக்கும் இடையே நடந்திருக்கும், சரியாக ஊகித்தால் உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளலாம்.
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
'அம்மாகிட்ட போயேன்' என்று சொல்லலாம் என மனதுள் எண்ணம் எழுந்துவிட்டது, வாய்வரை வந்து சொல்லாக மாறவேண்டியதுதான் பாக்கி...
உள்ளிருந்தே ஒரு குரல் என்மனதை கேள்வி கேட்க ஆரம்பித்தது, முடிவு என் மனம் வாலைச் சுருட்டிக்கொண்டு அதன் சொன்னபடி கேட்டது, விளைவு நீங்கள் அறிந்ததே ,
இது அனைத்தும் நடந்தது விநாடிக்கும் மிகக்குறைவான நேரத்தில்தான்.
இதுபோல உங்களாலும் மனதை கட்டுப்படுத்த முடியும், மனம் கட்டுப்படும்.
பல்வேறு செயல்களின் ஊடேயும் இப்படி மனதைக் கேள்வி கேட்டுப்பாருங்கள்,
விளைவுகளை பின்னூட்டமிடுங்கள், சாதக பாதகங்களை அலசுவோம்.
சிந்திப்பதுடன் செயல்படுவோம்
வாழ்த்துக்கள்,
நல்ல மனசாட்சி சார் உங்களுக்கு.,,,
ReplyDeleteதினந்தோறும் நடந்து இங்கும் கொண்டுருப்பது தான்.
ReplyDeleteஇதைப் போல் ஒவ்வொரு கணமும் ஒவ்வொருவரும் யோசித்தால் அனைவரும் சிவா ஆகி விட முடியும்.அதுவா இயற்கையின் ஆணை,சிவா?
ReplyDeleteதோசை நல்லா இருக்கு... தொட்டுக்க ஒன்னும் இல்லையா ? :)
ReplyDeletesuper sir,ஏதாவது சொல்லுங்க, என்னைச் செதுக்க உதவும்... itha nanga ungakite sollanum daily ethavathu sollunga sir...
ReplyDeleteதோசை சூப்பர் !
ReplyDeleteபிட்டு திங்க தோணுது :)
நல்ல இடுகை
ReplyDeleteமுயற்சிக்கிறேன் சிவா
\\அமுதா கிருஷ்ணா said...
ReplyDeleteநல்ல மனசாட்சி சார் உங்களுக்கு.,,\\
மனசை ஆட்சி செய்யக்கூடிய விசயம், என்னைவிட தங்களிடம் அதிகம் இருக்கிறது, முயற்சித்துப் பாருங்கள்,
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.
கட்டுப்படும் மனத்தால் தான் பிறரையும் கட்டுவிக்க முடியும்.
ReplyDeleteஅந்த சூட்சுமம் அதற்குத்தான் தெரியும்.
சாதக பாதகங்களை அலசத் தெரிந்தவர்க்கு, அதை அடுத்து அடுத்து என்ன செய்வது என்று மிகச் சுலபமாக புரிபட்டு போய்விடும். இறுதியில் எதிர் கொள்கிறவரையும் தடுத்தாட்கொள்ளூம் சக்தி படைத்தது இந்த அன்பு.
//உள்ளிருந்தே ஒரு குரல் என்மனதை கேள்வி கேட்க ஆரம்பித்தது, முடிவு என் மனம் வாலைச் சுருட்டிக்கொண்டு அதன் சொன்னபடி கேட்டது,//
ReplyDeleteஅஃது அறிவின் குரல். அறிவு காட்டும் வழியில்தான் உள்ளம் செல்லவேண்டும். உள்ளம் சொல்லும் வழியில் அறிவைச் செலுத்தக்கூடாது.
இடுகையைப் படிச்சு முடிச்சப்பின், பின்னூட்டம் போடப் போனேன். உடனே என் மனசாட்சி, டேய் முதலில் தமிழ் மணம், தமிழிஷில் ஓட்டுப் போட்டுவிட்டு பின்னூட்டம் போடுன்னு சொல்லிச்சு. அதன்படியே முதலில் ஓட்டுப் போட்டுவிட்டு, பின்னூட்டம் போட வந்துட்டேங்க...
ReplyDeleteநான் செஞ்சது சரிதானுங்களே.. !!!
சூப்பரு. முயற்சி பண்ணலாமே.
ReplyDelete\\ஜோதிஜி. தேவியர் இல்லம். said...
ReplyDeleteதினந்தோறும் நடந்து இங்கும் கொண்டுருப்பது தான்.\\
எது !!!!
தோசை பிச்சுப் போடறதா ???
மனசை மிரட்டிப் பணிய வைக்கிறதா ??
வாழ்த்துக்கள் ஜோதிஜி...
\\ஷண்முகப்ரியன் said...
ReplyDeleteஇதைப் போல் ஒவ்வொரு கணமும் ஒவ்வொருவரும் யோசித்தால் அனைவரும் நிகழ்காலத்தில் ஆகி விட முடியும்.அதுவா இயற்கையின் ஆணை,சிவா?\\
ஆமாம், சகோதரரே
நிகழ்காலத்தில் இருப்பதால் மனதின் ஆற்றல்கூடி பல்வேறு தெளிவுகள் கிடைக்கும், பிரச்சினைகள் குறைந்துவிடும் என்பதே என் அனுபவம் !!
பொருள் ஈட்டிக் காப்பதில், இது நன்கு உபயோகப்படுகிறது, நிகழ்காலத்தில் இருக்க, பொருள் சம்பாதிக்கும் முயற்சி சவாலாக இருக்கிறது.
\\ஸ்வாமி ஓம்கார் said...
ReplyDeleteதோசை நல்லா இருக்கு... தொட்டுக்க ஒன்னும் இல்லையா ? :)\\
தேன் தான் என்னோட காம்பினேசன் :))
சாப்பிட்டுப்பார்த்துட்டு சொல்லுங்க !!!
\\manju said...
ReplyDeletesuper sir,ஏதாவது சொல்லுங்க, என்னைச் செதுக்க உதவும்... itha nanga ungakite sollanum daily ethavathu sollunga sir...\\
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மஞ்சு
முடிந்தவரை முயற்சித்து ஏதாவது கிறுக்கி விடுகிறேன் :)))
சாட்சி சொன்னது ரொம்பச் சரி.
ReplyDeleteஎதை எதை எந்த நேரத்தில் செய்யணுமோ அதை அதை அந்த நேரத்தில் செஞ்சுரணுமுன்னு.....
சொல்லி இருக்கு!
//இதுபோல உங்களாலும் மனதை கட்டுப்படுத்த முடியும், மனம் கட்டுப்படும்.//
ReplyDeleteநல்லா இருக்கு.
\\ஆயில்யன் said...
ReplyDeleteதோசை சூப்பர் !
பிட்டு திங்க தோணுது :)
September 23, 2009 10:18 PM \\
:)) இன்னும் சாப்பிடலயா 10.18 pm ஆச்சு !!
\\கதிர் - ஈரோடு said...
ReplyDeleteநல்ல இடுகை
முயற்சிக்கிறேன் சிவா\\
நன்றி கதிர், மகிழ்ச்சி அடைகிறேன்,
வாழ்த்துக்கள்
Nice posting!
ReplyDeleteI think, the point to be noted here is the awareness of the moment. Once we are aware of the moment, there is no question of controlling the mind, I believe. The mind will do what is required for the moment. Here actually no control is acting on the mind and it is freedom!
The question is, how many of us can be aware of the moment? - in our current way of life. We are either living in the past or future - meaning, our mind is always preocupied with either the past or future. There is no space in our mind for the moment. When there is no space in our mind for the moment, I feel, there is no scope for such activity of intelligence as you indicated in your posting! Hence, the key point is that we have to learn to live in the moment!
Thanks
@ ஜீவி
ReplyDelete@ அ. நம்பி
@ இராகவன் நைஜிரியா
இடுகையை படித்தவுடன், படித்ததை செயல்படுத்தி அனைவருக்கும் வழிகாட்டிவிட்டீர்கள், இதுதான் தங்கள் அனுபவம்,
@ மணிகண்டன்
நன்பர்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல...
@ துளசி கோபால்
ReplyDelete@ சின்ன அம்மிணி
@ Change - the key point is that we have to learn to live in the moment!
மிகச் சரியாக புரிந்து கொண்டு, அதை அழகுறச் சொல்லிவிட்டீர்கள் அதற்கு நன்றியும் வாழ்த்துக்களும் நண்பரே
//அம்மாகிட்ட போயேன்//
ReplyDeleteதிட்டுனத படிச்சதும், நான் கூட உங்க அம்மான்னு நினைச்சேன்...:-))
//அம்மாகிட்ட போயேன்//
ReplyDeleteதிட்டுனத படிச்சதும், நான் கூட உங்க அம்மான்னு நினைச்சேன்...:-))
:)) என் மனைவிக்கும், குழந்தைக்கும் பொருந்துமே :))