சாதரண கிராமத்தில் கிடைக்கக்கூடிய பழகிய நாய், பூனை அவற்றின் குட்டிகளை பார்க்க பார்க்க, வளர்த்த வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு செயலில் இறங்கிவிடுவேன்
இப்போது அல்ல, சின்ன வயதில், 12 அல்லது 13 வயது இருக்கும்,
நாய்க்குட்டி வளர்த்தும்போது அதைப் பராமரிப்பது தனிசுகம்,அது உணவுக்காக நம்மை எதிர்பார்ப்பதும் வாலை ஆட்டிக்கொண்டு நம்மோடு உறவாடுவதால் ஏற்படும் மகிழ்ச்சியும் அலாதியானது. அது ஒரு தனி சுகம்.
எனக்கு கிடைக்கிற உணவு, பால் ஆகியவற்றை அதனோடு பகிர்ந்து கொள்வேன், இதற்கிடையில் கிணற்றில் நீந்தப்போகும்போது நாய்குட்டியை உடன் கூட்டிச்சென்று, அதைத் தூக்கி தண்ணீரில் போட்டுவிட்டு, அப்புறம்தான் நான் குதிப்பேன்.
நாம் நீச்சல் பழகும்போது, கத்தாளைமுட்டி, என்கிற கத்தாளையின் காய்ந்த தண்டுப்பகுதி, சுரைப்பொரடை என்கிற காய்ந்த சுரைக்காய் ஆகியனவற்றை முதுகில் கட்டிக்கொண்டு நீச்சல் பழகியது உண்டு,
நாய்க்குட்டியோ எந்த உதவியும் இல்லாமலே இயற்கையாகவே நீந்தும். அது மட்டுமில்லாமல் இரவு திண்ணையில் நான் தூங்கும்போது , அது அருகிலேயே வாசற்படியில் தூங்கும், அதிகாலையில் பார்த்தால் எனது போர்வைக்குள் படுத்துக்கொண்டிருக்கும்,
அதற்கு ஆரம்பத்தில் பெயர் வைத்ததுதான் வேடிக்கை, எந்தப்பெயரும் தோன்றாமல், ஏனோ எனக்கு பிடித்தது எனத் தோன்றிய மணி என்கிற பெயரை வைத்தேன்
என் தந்தை சற்று கண்டிப்பானவர், எனவே அவர் பணிக்கு சென்ற பின்னர்தான் இந்த நாய்க்குட்டியுடன் கொஞ்சல் எல்லாம்
.
அவர் இருந்தால் அமைதியாக இருப்பேன், நாயும்தான்
மணி,மணி,மணி... என்று அழைத்தால் போதும், எங்கிருந்தாலும் ஓடி வந்துவிடும், அப்படி ஒருநாள் அழைத்து உணவிட்டுக் கொண்டிருந்தபோது ஒருநாள் பின்னால் வந்து நின்ற என் தந்தையார் ’திமிரப்பாரு..’ என்றபடியே என் முதுகில் ஒரு சாத்து சாத்தினார்,
காரணம் புரியாமல் விழித்தேன்,
அப்புறம்தான் தெரிந்தது. அவரது வேலை செய்யும் இடத்தில் அவரது சுருக்கமான பெயர் மணி என்பது :))
அன்றிலிருந்து நாயின் பெயர் ’ஏய்’ தான்,
அப்போது ஒரு நாய்க்கு பெயர் வைப்பதில் இத்தனை விசயங்கள் அடங்கி உள்ளதா !!!
இந்த சுதந்திரம்கூட நமக்கு வாய்க்கவில்லையே என அந்த வயதில் வருத்தப்பட்டது உண்டு
என் நண்பரால் எப்போதும் நினைவில் வைத்துக்கொண்டு அன்றாடம் அழைத்து மகிழும் வகையில் அமைந்தது கண்டு உண்மையிலேயே பெருமிதம் கொள்கிறேன்.
நண்பர் ஓம்கார் தினமும் என்னை கவனித்துக்கொண்டும், அழைத்து மகிழ்வதும் நான் பெற்றபேறுதான் :) ஏனோ இன்னும் நெருக்கமாக உணர்கிறேன். மேலதிக விவரங்களுக்கு
இதை சிவனின் திருவிளையாடலுக்கு மேலும் ஒரு சான்றாக எடுத்துக்கொள்கிறேன்.
கண்கள் பனிக்க இதயம் கனக்க சிவா
நாய் பூனைன்னதும் என்னன்னு பார்க்க வந்தேன்.
ReplyDeleteஅன்கண்டிஷனல் லவ் என்பதுக்கு அடையாளம் இதுகள் காட்டும் அன்புதான்.
கண்கள் பனித்தது இதயம் இனித்தது என எங்கேயோ கேட்ட டயலாக் போல இருக்கே :) ...
ReplyDeleteசிவாவுக்கு தனி பதிவு போடதற்கு நன்றிகள்.
சிவாவும் லீலாவும் செய்யும் செயல்களை விவரிக்க வார்த்தையில்லை... தனி வலைதளமே உருவாக்கலாம்... :)
திருவண்ணாமலையில் ஒரு வெளிநாட்டு பெண்மணி அதரவு அற்ற நாய்களுக்கான காப்பகம் வைத்துள்ளார். அதில் குறைந்தது 150 பேர் இருக்கிறார்கள். அனைத்துக்கும் தன் சொந்த செலவில் பராமரிக்கிறார்.
நான் வைத்திருப்பதும் வெளிநாட்டு வகை அல்ல. இந்திய வகை. அதனால் பராமரிப்பதும் பழகுவதும் எளிது.
என் பதிவு உங்களை யோசிக்க வைத்திருக்கிறது என எண்ணும் பொழுது மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த பதிவில் லேபிளில் இடையே கமா போட்டதற்கு நன்றிகள் பல :)
ரொம்ப வருசத்துக்கு முன்னாடி எங்கூட்டு நாய்க்கு மணினுதான் பேர் வச்சிருந்தோம்...
ReplyDeleteஇப்பெல்லாம் இங்கிலிபீசு பேருதான்
//அப்படி ஒருநாள் அழைத்து உணவிட்டுக் கொண்டிருந்தபோது ஒருநாள் பின்னால் வந்து நின்ற என் தந்தையார் ’திமிரப்பாரு..’ என்றபடியே என் முதுகில் ஒரு சாத்து சாத்தினார்,
ReplyDeleteகாரணம் புரியாமல் விழித்தேன்,
அப்புறம்தான் தெரிந்தது. அவரது வேலை செய்யும் இடத்தில் அவரது சுருக்கமான பெயர் மணி என்பது :))//
உங்கள் தந்தையார் உங்களை முதுகில் அறைந்தது நியாயம்தான்; நாய்க்குட்டிக்குப் பெயர் வைப்பதற்கு முன்னர் சற்றுச் சிந்தித்து இருக்கலாமே!
//துளசி கோபால் said...
ReplyDeleteநாய் பூனைன்னதும் என்னன்னு பார்க்க வந்தேன்.
அன்கண்டிஷனல் லவ் என்பதுக்கு அடையாளம் இதுகள் காட்டும் அன்புதான்.//
உண்மைதான் சகோ.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
// ஸ்வாமி ஓம்கார் said...
ReplyDeleteசிவாவுக்கு தனி பதிவு போடதற்கு நன்றிகள்.
என் பதிவு உங்களை யோசிக்க வைத்திருக்கிறது என எண்ணும் பொழுது மகிழ்ச்சி அடைகிறேன்.//
ஆம் திரு.ஸ்வாமி ஓம்கார் அவர்களே
வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களில் சிலவற்றை தூண்டியது. இதில் எனக்கு திரும்பவும் மகிழ்ச்சியே
// இந்த பதிவில் லேபிளில் இடையே கமா போட்டதற்கு நன்றிகள் பல :)//
எல்லாம் சிவனின் செயல் :)))
//கதிர் - ஈரோடு said...
ReplyDeleteரொம்ப வருசத்துக்கு முன்னாடி எங்கூட்டு நாய்க்கு மணினுதான் பேர் வச்சிருந்தோம்...
இப்பெல்லாம் இங்கிலிபீசு பேருதான்//
சரி இனி குழந்தைகள் விருப்பம்தான் நன் விருப்பம் :)))
வாழ்த்துக்கள் கதிர்...
//அ. நம்பி said...
ReplyDeleteஉங்கள் தந்தையார் உங்களை முதுகில் அறைந்தது நியாயம்தான்; நாய்க்குட்டிக்குப் பெயர் வைப்பதற்கு முன்னர் சற்றுச் சிந்தித்து இருக்கலாமே!//
இப்பவே சிந்திக்க வரமாட்டேன் என்கிறது :)))
அந்த வயசுல இந்த அளவுக்கு சிந்திக்கத் தெரியவில்லை என்பதே உண்மை..
வாழ்த்துக்கள் நம்பி அவர்களே
"நன்றிகெட்ட மனிதனை விட நாய்கள் மேலடா" என்ற வார்த்தைதான் நினைவுக்கு வருகிறது. நானும் ஒரு நாய்ப் பிரியன் தான்...........
ReplyDeleteநான் சின்ன பையனா இருந்த போது கூட ஒரு நாய் இருந்தது. அதற்க்கு பெயரும் "மணி" தான்.
ReplyDeleteநான் மணி மணி என்று கூப்பிட்டால் எங்கிருந்தாலும் ஓடி வரும்.
அதன் மேல் ஏறி பலமுறை சவாரி செய்ததாக ஞாபகம்.
அந்த தைரியம் இன்று ஏனோ வரவில்லை. நாயை கண்டாலே பத்தடி தள்ளி தான் இருக்கிறேன்.
\\புலவன் புலிகேசி said...
ReplyDelete"நன்றிகெட்ட மனிதனை விட நாய்கள் மேலடா" என்ற வார்த்தைதான் நினைவுக்கு வருகிறது. நானும் ஒரு நாய்ப் பிரியன் தான்...........\\
உண்மைதான் நண்பரே
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
\\PARTHASARATHI SUBRAMANIAN said...
ReplyDeleteநான் சின்ன பையனா இருந்த போது கூட ஒரு நாய் இருந்தது. அதற்க்கு பெயரும் "மணி" தான்.
நான் மணி மணி என்று கூப்பிட்டால் எங்கிருந்தாலும் ஓடி வரும்.
அதன் மேல் ஏறி பலமுறை சவாரி செய்ததாக ஞாபகம்.
அந்த தைரியம் இன்று ஏனோ வரவில்லை. நாயை கண்டாலே பத்தடி தள்ளி தான் இருக்கிறேன்.\\
கொங்கு மண்டலத்தில் முன்னர் பெரும்பான்மையான நாய்களுக்கு ‘மணி’ என்பதே பெயராக இருக்கும்:))
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே