தமிழ் மொழியை வடிவமைத்ததால் தமிழ்க் கடவுள் என்ற சிறப்பு உண்டு.
வயதாகும் நிலையை அதாவது Aging Process -ஐ நிறுத்தி, என்றும் குமரனாக, அழகனாக நீண்டகாலம் ஏறத்தாழ 4000 ஆண்டுகள் பூத உடலுடன் வாழ்ந்து காட்டிய மகான் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
’சரம்’ என்றால் மூச்சு. ’சரத்தை வயப்படுத்தினால் காலத்தை வெல்லலாம்; காலனையும் வெல்லலாம்; கடவுளையும் காணலாம்’ என்பது இவரது தத்துவம். சரத்தை வணப்படுத்திக் காட்டியதால் ‘சரவணன்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு.
மனிதன் இறுதியில் சவமாகக் கூடாது; சிவமாக வேண்டும். கற்பூரம் கரைவது போல் தன்னை வேறொரு பரிமாணத்திற்கு மாற்றிக்கொண்டு பிரபஞ்சம் எங்கும் வியாபிக்க வேண்டும் என்பது நிறைவான செய்தி. அதை அவரே நிரூபித்துக் காட்டியதால், ‘பெம்மான் முருகன் பிறவான்;இறவான்...’ என்று அருணகிரி நாதரால் பாடப் பெற்றார்.
அகத்தியர், போகர், அவ்வையார், அருணகிரிநாதர், நக்கீரர், வள்ளலார உள்ளிட்ட பல மகான்கள் இவரிடம் நிறைவுத் தீட்சை பெற்று மரணமிலாப் பெருவாழ்வு எய்திய மகான்கள். உலகில் முருகனை அறியாத தமிழர்கள், முருகனை வணங்காத தமிழர்கள் எந்த நாட்டிலும் இல்லை.
முருகக் கடவுள் இல்லாத ஒரு நபரல்ல, மனிதனாக இருந்தவர் மகானாக மாறி இருக்கிறார்.
///மனிதன் இறுதியில் சவமாகக் கூடாது; சிவமாக வேண்டும்///
ReplyDeleteசரவணனைப் பற்றிய அழகான பதிவு.நன்றிகள் பல
ஷண்முகப்ரியன் என்ற பெயரை வைத்துக் கொண்டு இந்த முருகன் பதிவின் உணர்வுகளை ரசிக்கா விட்டால் வேலவன் என்னை ஏளனம் செய்ய மாட்டான?
ReplyDeleteமுருக தர்சனத்தில் முதல் படியை ஏற்றியதற்கு மகிழ்ச்சி,சிவா.
என்ன ஆச்சு? இதுவரை நல்லாத்தானே போய்க் கொண்டிருந்தது! எதுக்கு இப்படி திடீர் சோமர்சால்ட் அடிக்கிற வேலையெல்லாம்?
ReplyDeleteசித்தர் மரபைப் பேச வேண்டுமானால் அதன் ட்ராக் வேறு! எதை வைத்து முருகன் ஒன்பதாயிரம் ஆண்டுக்கு முன்னால் வாழ்ந்த மனிதர், அப்புறம் தலைமைச் சித்தர் என்று வேறு, என்ன சொல்ல வருகிறீர்கள் சிவா?
//சித்தர் மரபைப் பேச வேண்டுமானால் அதன் ட்ராக் வேறு! எதை வைத்து முருகன் ஒன்பதாயிரம் ஆண்டுக்கு முன்னால் வாழ்ந்த மனிதர், அப்புறம் தலைமைச் சித்தர் என்று வேறு, என்ன சொல்ல வருகிறீர்கள் சிவா?//
ReplyDeleteஉடன்படுகிறேன்.
மத்ததெல்லாம் சரி, உங்களுக்கு தமிழ்நாட்டில் இருக்கும் முருகன் படம் கிடைக்கலியா, ஏதோ நம்மால முடிஞ்சது :)
ReplyDelete//கிருஷ்ணமூர்த்தி said...
ReplyDeleteஎன்ன ஆச்சு? இதுவரை நல்லாத்தானே போய்க் கொண்டிருந்தது! எதுக்கு இப்படி திடீர் சோமர்சால்ட் அடிக்கிற வேலையெல்லாம்?
சித்தர் மரபைப் பேச வேண்டுமானால் அதன் ட்ராக் வேறு! எதை வைத்து முருகன் ஒன்பதாயிரம் ஆண்டுக்கு முன்னால் வாழ்ந்த மனிதர், அப்புறம் தலைமைச் சித்தர் என்று வேறு, என்ன சொல்ல வருகிறீர்கள் சிவா?
//
கிருஷ்ணமூர்த்தி ஐயாவின் கேள்விகளை நானும் ரிப்பீட்டுகிறேன்
எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க...
ReplyDeleteஹிந்தியில் கோழிக்கு முருகா என்று பெயர். இந்த சித்தர் கையில் சேவல் வைத்திருந்ததால் முருகா என அழைக்கப்படார். எனக்கு தெரிஞ்ச ஒரு பாயிண்டை சொல்லிட்டேன்.. :)
//அகத்தியர், போகர், அவ்வையார், அருணகிரிநாதர், நக்கீரர், வள்ளலார உள்ளிட்ட பல மகான்கள் இவரிடம் நிறைவுத் தீட்சை பெற்று//
சுவாமி மலையில் சிவனுக்கு தீட்சை தந்தார். சிவன் இமாலயத்தில் வாழ்ந்த ஒரு சித்தர்.
-பொழப்பில்லா பொன்னுச்சாமி
\\hayyram said...
ReplyDelete///மனிதன் இறுதியில் சவமாகக் கூடாது; சிவமாக வேண்டும்///
சரவணனைப் பற்றிய அழகான பதிவு.நன்றிகள் பல\\
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே
\\ஷண்முகப்ரியன் said...
ReplyDeleteஷண்முகப்ரியன் என்ற பெயரை வைத்துக் கொண்டு இந்த முருகன் பதிவின் உணர்வுகளை ரசிக்கா விட்டால் வேலவன் என்னை ஏளனம் செய்ய மாட்டான?
முருக தர்சனத்தில் முதல் படியை ஏற்றியதற்கு மகிழ்ச்சி,சிவா.\\
அன்புச் சகோதரரே, அடியேனும் சிவசுப்பிரமணியன் என்று பெயர் வைத்திருப்பதனால் ஒருவேளை இந்த பாசம் என நினைக்கிறேன்...
நன்றியும் வாழ்த்துக்களும்
\\கிருஷ்ணமூர்த்தி said...
ReplyDeleteஎன்ன ஆச்சு? இதுவரை நல்லாத்தானே போய்க் கொண்டிருந்தது! எதுக்கு இப்படி திடீர் சோமர்சால்ட் அடிக்கிற வேலையெல்லாம்?
சித்தர் மரபைப் பேச வேண்டுமானால் அதன் ட்ராக் வேறு! \\
சித்தர் வழிமுறை பிடித்திருக்கிறது, அதில் முருகனை அவர்கள் தமிழ்திருமுறைகளில் மறைபொருளாய் சொல்லி இருப்பதாகவும், அவர் மனிதராக இருந்து வாழ்ந்து உடலை மறையச் செய்தவர் என்றும் நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது கிடைத்த தகவல்.
மனிதனால் ஒரு சாதனை நிகழ்த்த சான்றாக முருகரை இங்கே குறிப்பிட்டேனே தவிர நமக்கு அப்பாற்பட்ட கடவுளாக நான் குறிப்பிடவில்லை
இதை உறுதிப்படுத்தவோ, ஆதாரம் கேட்கவோ முதலில் என்னை தகுதிப் படுத்திக்கொள்ள முயலுகிறேன்.
எல்லா டிராக்கும் எனக்கு ஒன்றாகவே தெரியுது, அதில் உள்ள இணைப்புகளை தெரிந்து கொள்ளவே ஆசைப்படுகிறேன்.
நன்றி
கோவியாருக்கும், அ.நம்பிக்கும் மேற்கண்ட பதிலே :))
ReplyDeleteநன்றிகள்
\\ சின்ன அம்மிணி said...
ReplyDeleteமத்ததெல்லாம் சரி, உங்களுக்கு தமிழ்நாட்டில் இருக்கும் முருகன் படம் கிடைக்கலியா, ஏதோ நம்மால முடிஞ்சது :)\\
தமிழன் வாழும் இடத்தில் உள்ளவர்தானே.
அந்த படம் எனக்குப் பிடித்திருந்தது:))
\\எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க...
ReplyDeleteஹிந்தியில் கோழிக்கு முருகா என்று பெயர். இந்த சித்தர் கையில் சேவல் வைத்திருந்ததால் முருகா என அழைக்கப்படார். எனக்கு தெரிஞ்ச ஒரு பாயிண்டை சொல்லிட்டேன்.. :)
சுவாமி மலையில் சிவனுக்கு தீட்சை தந்தார். சிவன் இமாலயத்தில் வாழ்ந்த ஒரு சித்தர்.
-பொழப்பில்லா பொன்னுச்சாமி\\
தங்களது கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன் :))
சிவா,
ReplyDeleteமுருகக் கடவுள் தலைமைச் சித்தர் என்பது உண்மைதான். அவர் சித்தர்களுக்கு எல்லாம் சித்தர் என்பதில் ஐயமில்லை. ஆனால்...
//ஏறத்தாழ 9000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மகான் ஆகக் கருதப்படுபவர் முருகக் கடவுள்//
இது சரியல்ல. நீங்கள் முருகன் என்ற பெயரில் வாழ்ந்த ஒரு மன்னனுடன் கடவுள் முருகனையும் இணைக்கிறீர்கள்.
முருகன் வழிபாடு பற்றிய ஒரு முனைவர் பட்ட ஆய்வேட்டை சில வருடங்களுக்கு முன்னால் படித்தேன். அதில் முருகன் என்ற பெயரில் சங்க காலத்தில் ஒரு மன்னன் வாழ்ந்ததாக சில குறிப்புகள் காணப்பட்டன.
ஆனால் கடவுளுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை.
அதுபோல சங்க இலக்கியத்தில் ‘வேலன் வெறியாட்டு’ என்று ஒரு நிகழ்வு உண்டு. அதற்கும் முருகனுக்கும் சம்பந்தமில்லை.
//வயதாகும் நிலையை அதாவது Aging Process -ஐ நிறுத்தி, என்றும் குமரனாக, அழகனாக நீண்டகாலம் ஏறத்தாழ 4000 ஆண்டுகள் பூத உடலுடன் வாழ்ந்து காட்டிய மகான் என்ற பெருமையும் இவருக்கு உண்டு//
இதற்கும் ஆதாரம் இல்லை. காலம் கடந்து நிற்பதால் தான் அவர்கள் ’கடவுள்கள்’
//முருகக் கடவுள் இல்லாத ஒரு நபரல்ல, மனிதனாக இருந்தவர் மகானாக மாறி இருக்கிறார்//
மனிதனாக இருந்து வாழ்ந்து மகானாக சித்தராக மாறியவர் பலர். ஆனால் முக்கண்ணனின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றியதால் தான் முருகன்
’பெம்மான் முருகன் பிறவான்;இறவான்...’ ஆகிறான்.
குறிஞ்சி நிலக் கடவுள் முருகன் வேறு. ஒரு காலத்தில் அதே குறிஞ்சி நிலத்தில், அதே பெயரில் வாழ்ந்த வேட்டைக்கார மன்னன் வேறு.
அன்புடன்
ரமணன்
http://ramanans.wordpress.com/
//ramanans said...
ReplyDeleteசிவா,
முருகக் கடவுள் தலைமைச் சித்தர் என்பது உண்மைதான். அவர் சித்தர்களுக்கு எல்லாம் சித்தர் என்பதில் ஐயமில்லை. ஆனால்.//
நண்பரே, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அடியேனுக்கு இது குறித்த விவரங்கள் எதுவும் தெரியாது. ஆனாலும் முருகன் என்ற மன்னன் பற்றிய செய்தியும் எனக்குப் புதிது ஆனாலும் பயனுள்ளது.
என் நண்பரின் கருத்து எனக்கு புதிது ஆனதால் அதை பதிவேற்றம் செய்தேன். பதிலாக எனக்கு கூடுதல் விவரங்கள் கிடைத்துள்ளன.
இதை விவாதம் என்ற முறையில் அலசாமல் எனக்கு எப்போது மேலும் தகவல் கிடைக்கவேண்டுமோ அதுவரை பொறுமையாக இருக்கிறேன்
வாழ்த்துக்கள்...
திரு சிவா,
ReplyDeleteநீங்கள் ஏதோ ஒரு பத்திரிகையில் வந்த செய்தியை இங்கே போட்டீர்கள் என நினைத்து விளையாடினேன்.
இது உங்கள் கருத்தாக இருந்தால் முருகன் யார் என எனக்கு தெரிந்த விளக்கத்தை கூற விரும்புகிறேன்.
ஆனால் இணைய வெளியில் கூறமுடியாது. நேரில் சந்திக்கும் நாள் வந்தால் முயலுகிறேன்.
அதற்கு ஷரவணன் துணை நிற்க ஸுப்ரமண்யன் வழிசெய்யட்டும்.
இவ்வளவு பூடகம் எதற்கு என்று தான் எனக்குப் புரியவில்லை!
ReplyDeleteசித்தர் மரபு பன்முகத்தன்மை கொண்டது. தன்னுள்ளேயே கடவுள் தன்மையைக்காணும் அத்வைதமும் பேசும். மரணமில்லாப்பெருவாழ்வு சாத்தியமே என்று காயகல்பம் உள்ளிட்டு ஹட யோகத்தையும் தொட்டுச் செல்லும். Matter என்று சிவத்தையும் அதனுள் விளங்கும் energy ஐ சக்தி என்றும் பிரித்து நவசக்திநாயகர்கள் எனப் பதினெண் சித்தர்களையுமே இருவிதமாகச் சுட்டும்.
நிறைய விஷயங்களைக் குறியீடாக, சங்கேதமாக மட்டுமே சொல்லி வந்ததில், சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றால் விபரீதமாகத் தான் பொருள் வரும்.
இங்கே மகான்களைக் கூட ஓய்ஜோ பலகையில் [ஆவிகளோடு பேசும் முறை] வரவழைத்துப் பேசிக் கொண்டிருப்பதாகப் பீலா விடும் நபர்களையுமே நான் கண்டதுண்டு.
ஆன்மீகத்தைப் புரிந்துகொள்வதற்கு, முதல் படி போலிகளிடம் ஏமாறாமல் இருப்பது தான்!
\\திரு சிவா,
ReplyDeleteநீங்கள் ஏதோ ஒரு பத்திரிகையில் வந்த செய்தியை இங்கே போட்டீர்கள் என நினைத்து விளையாடினேன்.
இது உங்கள் கருத்தாக இருந்தால் முருகன் யார் என எனக்கு தெரிந்த விளக்கத்தை கூற விரும்புகிறேன்.
ஆனால் இணைய வெளியில் கூறமுடியாது. நேரில் சந்திக்கும் நாள் வந்தால் முயலுகிறேன்.
அதற்கு ஷரவணன் துணை நிற்க ஸுப்ரமண்யன் வழிசெய்யட்டும்.\\
முருகனைப் பற்றி எனக்கு எந்த கருத்தும் இல்லை, பத்திரிக்கையில் வந்த செய்திதான் :))
எந்த கருத்தும் இல்லாத எனக்கு இது ஓரளவு உடன்பாடாக இருந்தது, ஏற்றுக்கொண்டு அதற்கு சாதகமான வேறு ஆதாரங்கள் கிடக்குமா என காத்திருக்கிறேன்.
இதோ அழைப்பு வந்து விட்டது,ஏற்றுக்கொள்கிறேன்,
விரைவில் நேரில் வருகிறேன்...
\\கிருஷ்ணமூர்த்தி said...
ReplyDeleteஇவ்வளவு பூடகம் எதற்கு என்று தான் எனக்குப் புரியவில்லை!\\
சித்தர் பாடல்களில் ஏன் இத்தனை பூடகம் என எடுத்துக்கொள்ளட்டுமா?
அவசியம் கருதியே வைத்திருப்பதாக நான் நினைக்கிறேன்.
பிறவிப்பிணி அறுக்கும் வித்தையில் பலபடி நிலைகளைத் தாண்டி வரும்போது எல்லோராலும், எல்லாவற்றையும் எதிர்கொள்ளமுடியாது.
தகுதியானர் தாண்டி வந்து அடைந்து கொள்ளட்டும், மற்றவர்கள் எவ்வித சிரமமும் அடைய வேண்டாம் என்று அன்போடு பூடகமாக சொன்னதாக நினைக்கிறேன்
\\கிருஷ்ணமூர்த்தி said...
ReplyDeleteஇங்கே மகான்களைக் கூட ஓய்ஜோ பலகையில் [ஆவிகளோடு பேசும் முறை] வரவழைத்துப் பேசிக் கொண்டிருப்பதாகப் பீலா விடும் நபர்களையுமே நான் கண்டதுண்டு.
ஆன்மீகத்தைப் புரிந்துகொள்வதற்கு, முதல் படி போலிகளிடம் ஏமாறாமல் இருப்பது தான்!\\
ஆவிகளோடு பேசும்முறையில் எனக்கு ஆர்வம் இல்லை
போலிகளிடம் ஏமாறமல் இருக்கவே இந்த கலந்துரையாடல், நண்பர்களுடன் இவ்வாறு கலந்து கொள்ளும்போது கொஞ்சமாவது தெளிவு கிடைக்கும் அல்லவா :)
பூடகமாக என்று சொன்னது சித்தர்கள் பாடலை அல்ல,என்னுடைய முந்தய பின்னூட்டத்தில் தெளிவாகவே, சங்கேதமாகச் சொல்லியிருப்பதைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றால் விபரீதமான பொருள் தான் வரும் என்பதைச் சொல்லி இருக்கிறேன்.
ReplyDeleteதவிர, இணையக் கலந்துரையாடல்களில் போலியைக் கண்டறிவதற்கான வழிகளும், வாய்ப்புக்களும் இல்லை.
குறிப்பிட்டே சொல்கிறேன், சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் ஓய்ஜோ பலகையில் வந்து பக்தர்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று கோவையில் ஒருவர் கடை விரித்திருக்கிறார்.
நடிகர் எஸ் வீ சேகர் உபயத்தில், எங்கும் எதிலும் பிரம்மத்தைத் தவிர வேனொன்றியுமே காணாது பிரம்மத்தோடு ஒன்றின சுகப் பிரம்மம் நாடி ஜோதிடம் வழியாக வந்து பதில் சொல்கிறாராம்!
இன்னொருத்தர் காகபுஜண்டரின் ரெப்ரசெண்டேடிவாக இங்கே ஜோசியம் பார்த்துக் கொண்டிருக்கிறார். எல்லா இடங்களிலும் கற்பூரம் அனைத்து சத்தியம் செய்யாத குறையாக செர்டிபிகேட் கொடுக்கிறார்கள்!
அரைகுறையாக எதையாவது உளறிக்கொண்டு இனான்யா மொழியில் பேசிக் கொண்டிருந்த யாகவா முனிவரைப் போல, அனான்யா மொழிகளில் பேசுகிறவர்களை விட்டு விடுங்கள்!
உண்மை தானே உரிய நேரத்தில் வெளிப்படும், இது மட்டுமே நான் சொல்ல வருவது!
கிருஷ்ணமூர்த்தி said...
ReplyDeleteஅனான்யா மொழிகளில் பேசுகிறவர்களை விட்டு விடுங்கள்!
உண்மை தானே உரிய நேரத்தில் வெளிப்படும்,\\
புரிகிறது நண்பரே..
இதோ தங்களின் பதிலில் சில தவிர்க்க வேண்டியவர்களை அடையாளம் காட்டியதற்கு நன்றிகள் பல.,
நானும் இதைப்படிக்கும் பலருக்கும் இது சென்று சேரும்.
என் இடுகையில் சொல்லிய கருத்தை பொதுவில் வைத்தேன். இன்னும் இது குறித்த உடன்பாடு/எதிர்மறைக் கருத்துகள் கிடைக்கும்போது பகிர்ந்து கொள்வேன்...
வாழ்த்துக்கள்
FOR YOUR REF:
ReplyDeletehttp://www.visvacomplex.com/Rishi_Agasthya_Vinayaka.html
NEW NAME FOR GOD:-"archetypes" IS MEANING FULL
http://www.pillaicenter.com/archetypes/home.pc/
//சித்தர் மரபு பன்முகத்தன்மை கொண்டது. தன்னுள்ளேயே கடவுள் தன்மையைக்காணும் அத்வைதமும் பேசும். மரணமில்லாப்பெருவாழ்வு சாத்தியமே என்று காயகல்பம் உள்ளிட்டு ஹட யோகத்தையும் தொட்டுச் செல்லும். Matter என்று சிவத்தையும் அதனுள் விளங்கும் energy ஐ சக்தி என்றும் பிரித்து நவசக்திநாயகர்கள் எனப் பதினெண் சித்தர்களையுமே இருவிதமாகச் சுட்டும்.//
ReplyDeletethis is true as i had read books of hanumaddasan who had shared his experiences about agasthiar in dailythanthi
மனிதனாக இருந்தவர் மகானாக மாறி இருக்கிறார்.!முற்றிலும் தவறு! முருக கடவுளை பற்றி இப்படியெல்லம் ஒரு பதிவு வரும் என்பது கற்பனை செய்ய முடியாத ஒன்று . இந்த சாபக்கேடு எல்லம் இந்து மதத்தில்தான் செய்ய முடியும் !
ReplyDelete