இன்று மாலை சின்ன மகளுக்கு விரல் நகங்களை வெட்டி சீர்திருத்தும் பணி ., தங்களின் மேலே ஏறி ஆட்டம் போடும்போது கீறி விடுகிறாள் என பெரிய மகளும் வீட்டுக்காரி(மனைவி)யும் என்னிடம் புகார் தெரிவிக்க, சரி என அந்த வேலையில் இறங்கிவிட்டேன்.
ஒருவழியாக ஆட்டம் போட்ட சின்னவளை சமாதானப்படுத்தி கைநகங்களை வெட்டி ஒழுங்குபடுத்திவிட்டேன், கால் நகங்களை வெட்ட ஆரம்பித்தேன், வீட்டுக்காரி எனக்குப் பின்னால் நின்று நான் நெகம் வெட்டும் அளகை(*&$%#@) பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தாள்.
சின்னவளின் கால் விரல் அமைப்பு என் காலைப்போலவே இருக்கும், எந்த மாற்றமும் இருக்காது, அளவு மட்டும்தான் சிறியதாக இருக்கும்.
”தேனுங்கோ.. யாரவது வந்து இவளை உங்க மக இல்லைன்னா இந்த ஜீனு டெசுடு, இதென்ன....டிஎனேஎ (DNA) டெசுடு எதுவும் எடுக்க வேண்டாம், செலவே பன்ன வாண்டாம்..காலு பெருவிரல காமிச்சா போதும், ஒத்துக்கிட்டு ஓடியே போயிருவாங்கோ.. என்றாள்
மனைவி பொது அறிவை வெளிப்படுத்திய திறன் கண்டு பிரமித்து நின்றேன்
கிணறு வெட்ட பூதம் கிளம்பின மாதிரியா...!?
ReplyDeleteபொதுஅறிவு வெளிப்பட்டது நல்ல விஷயம்தான்.
நகம் வெட்ட பூதம் கிளம்பிய கதை :)))
ReplyDeletevelji வருகைக்கு நன்றி
இந்தப் படத்தில் இருப்பதுதான் உங்கள் சின்ன மகளா,சிவா?
ReplyDelete\\ஷண்முகப்ரியன் said...
ReplyDeleteஇந்தப் படத்தில் இருப்பதுதான் உங்கள் சின்ன மகளா,சிவா?\\
ஆம் சகோ. சின்னவளேதான் ஒன்றரை வருடம் முன் எடுத்த படம் :))
//காலு பெருவிரல காமிச்சா போதும், ஒத்துக்கிட்டு ஓடியே போயிருவாங்கோ//
ReplyDeleteநல்ல சிந்தனை.
நல்லா இருக்கு...
ReplyDeleteயாரு அந்த் மொட்டை பாஸா? முழி கூட உங்கள மாதிரியே தான் இருக்கு.
ReplyDelete//சிங்கக்குட்டி said...
ReplyDelete//காலு பெருவிரல காமிச்சா போதும், ஒத்துக்கிட்டு ஓடியே போயிருவாங்கோ//
நல்ல சிந்தனை.//
இந்த சூழலில் என் மனைவிக்கு ஏற்பட்ட சிந்தனை உண்மையிலேயே எனக்கு வியப்பாகத்தான் இருந்தது.,
கொங்கு மண்ணின் மகத்துவம்:))
\\புலவன் புலிகேசி said...
ReplyDeleteநல்லா இருக்கு\\
நகைச்சுவை, யதார்த்தம் எல்லாமே கலந்து இருக்கு :))
\\Blogger ☼ வெயிலான் said...
ReplyDeleteயாரு அந்த் மொட்டை பாஸா? முழி கூட உங்கள மாதிரியே தான் இருக்கு.\\
ஆமாம் தல :))
அப்பனுக்கு மகள் தப்பாமல் பிறந்திருக்கிறாள் என இதைத் தான் சொன்னார்களோ???
ReplyDelete//புலவன் புலிகேசி said...
ReplyDeleteஅப்பனுக்கு மகள் தப்பாமல் பிறந்திருக்கிறாள் என இதைத் தான் சொன்னார்களோ???//
ஆமாம் உருவ அமைப்பில், குணத்தில் அப்படி ஒரு வித்தியாசம் இல்லாத அமைப்பு :))
ஆனால் பாருங்கள் இது என் உருவ அமைப்பு, குணம் போன்றவை வித்தின்மூலமாக சுருக்கப்பட்டு, அப்படியே விரித்து பின்னர் காட்டுகிறதே அந்த ஆற்றலை எண்ணி வியக்கின்றேன்.. மதிக்கின்றேன்
முடிவில் இயல்பாக கேலி கலந்து வந்த வரியில் நம்மையும் அறியாமல் சிரித்து விடுவது எழுத்துக்குக் கிடைத்த வெற்றி
ReplyDelete