இது ஏன் நிகழ்கிறது?
ஆணோ பெண்ணோ தாம்பத்யத்தில் நிறைவு பெறாமல் இருக்கும்போது, வேறு ஒருவர் தூண்டில் போட்டால் சிக்கி விடுகிறார்கள்., அல்லது இவர்களே வலை வீசி பிடித்து விடுகின்றனர். :))
இது தவறா சரியா என்ற ஆராய்ச்சிக்குள் நான் போகவில்லை.,
சமுதாய அமைப்பில் இது தவறு என்றாலும் அவர்களைப் பொறுத்தவரை இது சரியே!
சரி தன் வாழ்க்கைத்துணையிடம் இல்லாதது பிறரிடம் என்ன அதிகமாக இருக்கிறது? எனக்குத் தேவையானதை இங்கேயே கேட்டுப் பெற்றுக்கொள்ளவேண்டியதுதானே,
“எனக்கு என் மகிழ்ச்சிதான் முக்கியம், அதற்கு ஒரேவிதமான தாம்பத்ய நிலைகள் சலித்துப்போய்விட்டது. வித்தியாசம் வித்தியாசமாக இருக்க வேண்டும். என் துணை ஒத்துக்கொள்ளவில்லை, அதனால வேறுபக்கம் போய்விட்டேன், அங்க எனக்கு திருப்தியா இருக்கு.”
”அட அறிவு அதிகமா போனவனே, உன்னோட சொகத்த பார்த்தியே, உன்னோட துணையின் சுகத்த, திருப்திய என்னிக்காவது நினைச்சுப் பார்த்திருக்கியா, அவங்கள திருப்தின்னு மனசில இருந்து சொல்ற மாதிரி நீ செயல்பட்டு இருக்கியா? அவங்க திருப்தியா இருந்தா நிச்சயமா உன்னோட தேவைய நிறைவு செய்வாங்க, எப்படி வேணுமோ அப்படி:))
உன்னோட வேல முடிஞ்ச உடனே ஒதுங்கிட்டீன்னா அவங்களுக்கு ஏமாற்றம்தான், ரிசல்ட் என்ன,?
உடல்வேகம் தாங்க கூடிய அளவில இருந்தா உங்கோட மட்டும்தான் தாம்பத்யம், உடல்வேகம் எல்லைமீறி அளவுக்குஅதிகமா இருந்தா வேலிதாண்டிருவாங்க..
உடல்தாங்கினாலும் மனம்நிச்சயம் தாங்காது, அது எப்படி வெளியாகும் தெரியுமா, எரிச்சல், சண்டை, கெளரவம் பார்க்கிறது அப்படி வெளிப்படும். அதுக்கும், தாம்பத்யத்திற்கும் சம்பந்தமில்லை அப்படின்னு நினைக்காத,
தாம்பத்யத்துல இரண்டுபேருக்கும் முழுநிறைவு வந்துச்சுன்னா கண்டிப்பா இருவருக்குள்ளும் ஒரு அந்நியோன்யம் வந்து விடும், வேறு எந்த
பிரச்சினையா இருந்தாலும் உக்காந்து பேச மனசு வரும், தீர்வு கிடைக்கும்.வேறு எதுவும் உள்ள வந்து சண்டைய உருவாக்க முடியாது.
அது இல்லைன்னா சாதரணபிரச்சினை கூட சண்டைக்குரியதா மாறிவிடும். மூணாவது மனுசன் உள்ள வந்தால் அதோகதிதான்..
இனிமே உங்க தேவையத் தீர்த்துக்குங்க, கூடவே துணையிடம் நிறைவா இருந்ததா அப்படீன்னு கேட்டுக்குங்க, அப்பதான் அடுத்தமுறை சரியாச்’செய்ய’முடியும்.
நான் என் துணையின் உடலும்,மனமும் நிறைவாயிற்றா என சூழ்நிலையைப் பொறுத்து அடுத்தநாள் காலையிலாவது கண்டிப்பாக கேட்கிறேன்.
இந்த பழக்கம் என் துணைக்கும் ஒட்டிக்கொண்டு எனக்கு போதுமா என்கிறாள்.
அன்பு மட்டுமல்ல, காமமும் பகிரப்பகிர இருவருக்கும் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். மனம் நிறைவடைந்தால் அங்கு ஏது பிரச்சினை,!!
டிஸ்கி:இது ஒரு சதவீதமேனும் உங்களுக்கு உடன்பாடாக இருக்கும் என நம்புகிறேன். இந்த கருத்து நண்பர்களிடம் வரும் என எதிர்பார்த்து இந்த இடுகையை வெளியிட்டேன். நான் வெளியிட்ட விதம், நடை சரியில்லை போல இருக்கிறது. வாழ்த்துமழையில் நனைந்து விட்டேன்:))
உயிர் 18+ மற்றும் சித்தூர் முருகேசன் பதிவுகளைப் படிச்சிட்டு ஒரு மார்க்கமாக கிளம்பி இருக்கிங்க.
ReplyDeleteமனசின் பின்னால் போகும் போது சிலசமயம் இப்படியும் ஆகிவிடுகிறது..
ReplyDeleteசித்தூர் முருகேசன் ஒரு ஜாலி டைப், கமலஹாசன் மாதிரி,
எப்ப எந்த வேசம் எடுப்பார்ன்னே தெரியாது,
உயிர்18 சிலசமயங்களில் நல்ல பதிவுகளையும் வெளியிடுகின்றனர்,
பின்னூட்டமிட்டதற்கு வாழ்த்துக்கள். என் கருத்து தவறு என யாராவது பதிவிட்டால் என் பார்வையை மாற்றிக்கொள்ள வசதி ஆக இருக்கும்.
அதுவரை
காமம் என்பது வாழ்வில் முக்கியமல்ல,
அதே சமயம் மறைமுகமாக மிக முக்கியமானது என்ற என் நிலைப்பாடில் மாற்றமில்லை :))))
அன்பின் சிவசு
ReplyDeleteஇவ்விடுகையில் புரிதல் உணர்வு வேண்டும் என்பதே அடிப்படை ஆதாரம். அது எல்லோரும் அறிந்ததே ! கள்ளத்தொடர்புக்கு அடிப்படைக் காரணம் உடலுறவில் திருப்தி இல்லாதது தான் என்ற கருத்து ஏற்கத்தக்கதல்ல - இதுவும் பல காரணங்களில் ஒன்று - அவ்வளவு தான். மன வேற்றுமையும் ஒரு காரணம் - இதுமாதிரி பல காரணங்கள் இருக்கலாம்
சிவசு இது என்னவோ வேண்டாத ஆராய்ச்சி எனத் தோன்றுகிறது - உரிமை எடுத்துக் கொள்கிறேனா - கருத்துச் சொல்வதற்கு.
சிந்திக்கவும் சிவசு
நல்வாழ்த்துகள்
அன்பின் சீனா
ReplyDeleteஇடுகையின் ஆதாரத்தை புரிந்து கொண்டமைக்கு முதற்கண் நன்றி.,
என் பணிச் சூழலில் காணப்பட்ட சில தவறான தொடர்புகள், அதன் காரணம் குறித்து எழுதப்பட்டதே இந்த இடுகை.
பல காரணங்களில் இது முக்கியமானது என்பதே நான் சொன்ன கருத்து
இது சம்பந்தமான ஆராய்ச்சியை இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.
என்மீது உங்களுக்கு இல்லாத உரிமையா!
சகோதரனைப்போல உணர்கிறேன்
நன்றி சீனா அவர்களே..
உங்களின் கேள்வியிலும் ஆர்வத்திலும் தவறில்லை. நம் சமூகம், காமம் பற்றிய வெளிப்படையான பேச்சுகளுக்கு தயாராக இல்லை.
ReplyDeleteகாமம் விலக்கப்பட்டால் சமூகம் சிதறிப்போகிற அளவுக்கு மென்மையோடு இருந்தாலும் அதை ஒத்துக்கொள்வதில் பெரிதும் கெளரவம் பாராட்டுகிறது.
உங்களின் கேள்வி எல்லோரின் மனத்திலும் இருந்தாலும் போலி நாகரிகம் கருதி அனைவரும் அதை தவிர்ப்பதே உண்மை . உங்களின் கேள்விக்கான பதில்கள் அனைவர்க்கும் கிடைக்கும் இடம் கண்டிப்பாக உண்டு. எண்ணற்ற வலைத்தளங்கள் அத்தகைய பசிக்கு தீனி போடுகின்றன.
மற்றும், உங்களின் கேள்விகளோடு ஒப்பிடுகையில், உங்களின் பதில்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை. அவை பெரிய அளவில் பயனுற அமையவில்லை.
மீண்டும் நேரம் கிடைக்கும் பொழுது , எஞ்சிய எண்ணங்களை சொல்கிறேன்.
\\உங்களின் கேள்விகளோடு ஒப்பிடுகையில், உங்களின் பதில்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை. அவை பெரிய அளவில் பயனுற அமையவில்லை.\\
ReplyDeleteபலவித கருத்துக்கள் உள்ளன. ஆனால் வரவேற்பு இல்லாததால் நான் சொல்லவில்லை
என் இடுகை பலராலும் புறக்கணிக்கப்பட்ட காரணத்தை ’நச்’ என சொல்லியதற்கு நன்றிகள் பல,..
வாழ்த்துக்கள்
அன்பின் சிவசு
ReplyDeleteவாழ்த்துக்கள் என்பது தவறான பயன்பாடு என நம் நண்பர் பழமை ஒரு இடுகையில் கூறியதாக நினவு.
வாழ்த்துகள் என்பதே சரியான பயன்பாடு
மாற்றிக்கொள்ளலாமே
நல்வாழ்த்துகள்
cheena (சீனா) said...
ReplyDeleteஅன்பின் சிவசு
வாழ்த்துக்கள் என்பது தவறான பயன்பாடு என \\நம் நண்பர் பழமை ஒரு இடுகையில் கூறியதாக நினவு.
வாழ்த்துகள் என்பதே சரியான பயன்பாடு
மாற்றிக்கொள்ளலாமே
நல்வாழ்த்துகள்\\
நம் பங்காளி சொன்னா யோசிக்க வேண்டியதே இல்லை, மாற்றி விடுகிறேன்.
வாழ்த்துகள் அன்பின் சீனா
நண்பர்கள் கவனத்திற்கு
ReplyDeleteHOME Tamil SEO Submit
Video Search Top Blogs Trends Blog Video Images India News
நல்ல பதவு தான் ஆனா .......படிக்கக் நல்ல இல்ல ...ஒரு சில இடங்கள் .....
ReplyDeleteஆனால் இந்த மாதிரி பதிவுகளும் கட்டாயம் வரணும் ..
நீங்க யாருன்னு எனக்கு தெர்யுமா ? நான் யாருன்னு உங்களுக்கு தெர்யுமா?
ஆமா! இந்த மொட்டைக்கு முடியே முளைகாதோ ?
ரெம்ப சரியாக சொன்னீர்கள் உணவு பரிமாறிய தாய் என்ன ராஜா சாப்பாடு நல்லா
ReplyDeleteஇருந்துதா என கேட்பது போலதான்.. இதுவும் ஒரு பசிதானே !!! பரஸ்பரம் திருப்தியா
என கேட்பது மிக மிக நல்லது இன்றைய தலைமுறைக்கு இது அவசியம் தேவையான ஒரு டிப்ஸ்.... நல்லது ...
"பறவை மற்றும் விலங்குகளுக்கு இருபத்து நாலு மணிநேரமும் இரையை தேடுவதில் ஆர்வம். மனிதனுக்கு இருபத்து நாலு மணிநேரமும் கலவி தேடுவதில் ஆர்வம்" - இதை ஓஷோ புத்தகத்தில் படித்துள்ளேன்.
ReplyDeleteஉலகத்தின் எல்லா நாட்டு மனிதனிடமும் உள்ள ஒரு (கெட்ட?) பண்பு கள்ள கலவி. ரிஷிகளிடமும் காமம் தொடர்பான ரகசியம் உண்டு. தமிழ் நாட்டில் இருப்பதை இல்லை என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றி கொண்டுள்ளோம். மேற்கத்தியர்கள் "பலருடன் கலவி" என்பதை மூச்சு விடிவது போல் மனதில் எடுத்துக்கொண்டு விட்டனர்.தமிழகத்துக்கு கலவி பற்றி முழுமையான புரிதல் வந்தால் இந்த "கள்ள தொடர்பு" தொடர்பான பிரச்சனைகள் குறையும்.
malar வருகைக்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி..
ReplyDelete\\நீங்க யாருன்னு எனக்கு தெர்யுமா ? நான் யாருன்னு உங்களுக்கு தெர்யுமா?\\
தெரியாது, நான் தூயநட்பு என்ற வகையில் இந்த வலையுலகம் நம்மை பதிவின் மூலம் அறிமுகப்படுத்தி விட்டது..
சின்னவள், மொட்டை அடித்தவுடன் எடுத்த போட்டோ :))
\\hamaragana said...
ReplyDeleteரெம்ப சரியாக சொன்னீர்கள் உணவு பரிமாறிய தாய் என்ன ராஜா சாப்பாடு நல்லா
இருந்துதா என கேட்பது போலதான்.. இதுவும் ஒரு பசிதானே !!! பரஸ்பரம் திருப்தியா
என கேட்பது மிக மிக நல்லது இன்றைய தலைமுறைக்கு இது அவசியம் தேவையான ஒரு டிப்ஸ்.... நல்லது ...\\
என் கருத்தை ஒத்த தங்களைப் போன்றவர்களின் வார்த்தைகள் புதிய உற்சாகத்தை எனக்குள் ஊட்டுகிறது..
மகிழ்ச்சி அடைகிறேன்
வாழ்த்துகள் நண்பரே..
\\Paagarkai said...
ReplyDelete"பறவை மற்றும் விலங்குகளுக்கு இருபத்து நாலு மணிநேரமும் இரையை தேடுவதில் ஆர்வம். மனிதனுக்கு இருபத்து நாலு மணிநேரமும் கலவி தேடுவதில் ஆர்வம்" - இதை ஓஷோ புத்தகத்தில் படித்துள்ளேன்.
தமிழ் நாட்டில் இருப்பதை இல்லை என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றி கொண்டுள்ளோம். மேற்கத்தியர்கள் "பலருடன் கலவி" என்பதை மூச்சு விடிவது போல் சாதரணமாக மனதில் எடுத்துக்கொண்டு விட்டனர்.தமிழகத்துக்கு கலவி பற்றி முழுமையான புரிதல் வந்தால் இந்த "கள்ள தொடர்பு" தொடர்பான பிரச்சனைகள் குறையும்.\\
இதே கருத்தைத்தான் நண்பர் கோவியாருடன் உரையாடியில் பகிர்ந்து கொண்டேன்.
நம்மைச் சுற்றியாவது இக்கருத்தை பகிர்வோம் எனவே இடுகையாக குறிப்பிட்டேன்.
முதலில் வந்த கருத்துகளை விட பின்னால் வந்த அனைத்து கருத்துகளும் எனக்கு உற்சாகத்தை அளிக்கிறது..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே
வாழ்த்துகள்
உங்க கருத்தை படிச்சுட்டு சொல்றேன்
ReplyDeleteபோன ஜன்மத்துல நாம என்ன அண்ணன் தம்பியா தெரியலியே. சூப்பர்ணா !