வாழ்க்கையில் வெற்றி பெற எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள், பல வித அவமானம் தாங்குதல் பற்றி அவர் எழுதும் பாங்கு எனக்குப் பிடிக்கும்.
படித்துப் பாருங்களேன்..ரஜினிகாந்த் அவர்கள் வாழ்வில் உச்சாணியில் இருந்தபோதும், அவரது மனநிலையை அப்படியே இங்கே கொடுத்திருக்கிறார்
“எவர் உயர்ந்தாலும், உன்னதமான நிலைக்கு வந்தாலும் அவரைத் தூற்ற, அந்த நிலையிலிருந்து அவரைச் சாய்க்க, உலகத்தின் ஒரு பகுதி கடுமையாய் முயலும், அதுவும் மிகச் சாதாரணமாய் இருந்தவர் முன்னேறினால் அவருக்கு எதிரிகள் உடனே உருவாகி விடுவார்கள்.
தனக்கு யோக்கியதை இருந்தும் உயர்வு கிடைக்கவில்லை. யோக்கியதை இல்லாத இவனுக்குக் கிடைத்து விட்டது என்று சிலர் பொறாமைப்படுவார்கள். இவ்வளவு உயரத்துக்கு இவர் வந்துடுவார்னு அன்னிக்கே தெரிஞ்சிருந்தா இன்னும் க்ளோசா ஒட்டிட்டிருந்திருப்பேனே. தெரியாத போயிடுத்து. இப்ப ஓட்ட ட்ரை பண்ணுவோம். ஒட்டவிடலைன்னா தொந்தரவு பண்ணுவோம். எனக்கு தெரியும்டா உன்னைப் பத்தி, என்கிட்ட டீ வாங்கி குடிச்சவந்தான் என்று சொல்லி எரிச்சல் மூட்டுவோம் என்று வேறு சிலர் முயல்வார்கள்.
கண்டக்டரா, கன்னடமா, தமிழ், இங்கிலீஷ், ஃப்ரெஞ்ச் எதுவும் தெரியாதா. டான்ஸ் வராதா...நாவல் படிக்கிற பழக்கம் இல்லையா. ஸ்கேட்டிங், ரைஃபிள் ஷுட்டிங். ஒண்ணும் தெரியாதா. பின்ன எப்படி இவ்வளவு உயரத்துல. ஏதோ குருட்டு அதிர்ஷ்டமா. நமக்குத் தெரிஞ்சதெல்லாம் அவுத்துவிட்டு உனக்கு என்ன தெரியலை பார்னு குழப்பி வுட்டுரலாம். இப்படியும் சிலர் முயல்வார்கள்.
இவர்கள் எல்லோரையும் அமைதியாய் அதிகம் எதிர்ப்பு காட்டாது சமாளித்தாக வேண்டும். அளவுக்கு மீறிய பொறுமை வேண்டும். பொறுமையே சிறிதும் இல்லாத நான் வன்முறையாய், வலுக்கட்டாயமாய் மெளனத்தை-அமைதியை வரவழைத்துக் கொள்கிறேன். சில சமயம் சிதறடித்து விடுகிறேன். நான் பெரிய தத்துவவாதியில்லை, நான் அதிகம் புத்தகம் படித்ததில்லை. ஆனால் இரவில் மனம் நொந்து புரண்டு படுக்கிறபோது எனக்கு நடந்த வேதனைகளின் வேர் எது என்று யோசிக்கிறபோது வாழ்க்கை மொத்தமும் பிடிபட்டுப் போவது போல் இருக்கிறது.
மனிதர்கள் ஆரம்பத்தில் இப்படித் தான் வேதனைப்படுத்துவார்கள். தாங்கிக் கொள் என்று தெளிவாய் தெரிகிறது. எதிர்த்தால் சரிவு நிச்சயம். அதனால் பிறர் ஹிம்சையைத் தாங்கி அமைதியாய் நமது அடுத்த வேலையைச் செய்ய.. இன்னும் உயர்வு வரும். மனிதர்கள் தாக்கவே முடியாத உயர்வுக்குப் போய்விட வேண்டும். அதற்கு வேறு எதிலும் கவனம் சிதறாது உழைக்கவேண்டும்.”
நன்றி; பாலகுமாரன் பேசுகிறார். வலைத்தளம்
வாழ்த்துகள்
அங்கே இருந்து சுட்டுப் போட்டதெல்லாம் சரி! யாரைச் சுட்டீங்க, ஏன் சுட்டீங்க, என்ன நெனப்பில சுட்டீங்கன்னெல்லாம் விலாவாரியாக் கூட வேண்டாம், கொஞ்சம் விவரமாவதுகொடுத்திருக்கலாமே!
ReplyDeleteசேர்த்து விட்டேன். நண்பரே
ReplyDeleteகனிவுடன் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி
வாழ்த்துகள்
''''“எவர் உயர்ந்தாலும், உன்னதமான நிலைக்கு வந்தாலும் அவரைத் தூற்ற, அந்த நிலையிலிருந்து அவரைச் சாய்க்க, உலகத்தின் ஒரு பகுதி கடுமையாய் முயலும், அதுவும் மிகச் சாதாரணமாய் இருந்தவர் முன்னேறினால் அவருக்கு எதிரிகள் உடனே உருவாகி விடுவார்கள்.'''''
ReplyDeleteமுற்றிலும் உண்மை
வேறு எதிலும் கவனம் சிதறாது உழைக்கவேண்டும்
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி நண்பா
ReplyDeleteஅருமை
ReplyDeleteபடித்ததில் பிடித்த்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா
ReplyDeleteநல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
மனிதர்கள் ஆரம்பத்தில் இப்படித் தான் வேதனைப்படுத்துவார்கள். தாங்கிக் கொள் என்று தெளிவாய் தெரிகிறது. எதிர்த்தால் சரிவு நிச்சயம். அதனால் பிறர் ஹிம்சையைத் தாங்கி அமைதியாய் நமது அடுத்த வேலையைச் செய்ய.. இன்னும் உயர்வு வரும். மனிதர்கள் தாக்கவே முடியாத உயர்வுக்குப் போய்விட வேண்டும். அதற்கு வேறு எதிலும் கவனம் சிதறாது உழைக்கவேண்டும்//
ReplyDeleteநினைவில் இருத்த வேண்டிய விஷயம்,பகிர்வுக்கு நன்றி நிகழ்காலத்தில்...
கலக தலைவர்கள், தலைவிகள் ஆகியோர் இவ்வாறு நினைத்து தான் முன்னேரினார்களோ ?
ReplyDeleteசும்மா தமாசு!