"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, November 10, 2009

மனிதன் ஏன் மாமிசம் சாப்பிடக் கூடாது?

மனிதன் அசைவம் சாப்பிடலாமா கூடாதா இது இன்னும் தீர்வு இல்லாத கேள்வி, இது தவறு என நான் நினைக்கிறேன்.

ஒரே ஒரு கருத்துதான் நான் சொல்ல விரும்புவது

மனிதனுக்கும் மிருகத்திற்கும் உள்ள வித்தியாசம் ஆறாவது அறிவு

அதென்ன ஆறாவது அறிவு?

தோல், கண், காது, மூக்கு, வாய் என்ற புலன்கள் மூலமான ஐந்து உணர்வு, அறிவு பிற உயிரினங்களுக்கும், மனிதனுக்கும் பொது,

ஆறாவது அறிவு, என்பது சிந்தனை, மனம்

சிந்தனை மலர்ந்து அதன் விளைவு

1)பிற உயிர்களின் இன்பதுன்ப உணர்வுகளை உணரும் ஆற்றல், (எனக்கு வலிப்பதுபோல் அவனுக்கும் வலிக்கும்)

2)உடலின் கருவிகளுக்கு சூழ்நிலைக்கேற்ப உதவ உபகருவிகள் செய்து பயன்படுத்துதல், (காலுக்கு உதவியாக வாகனங்கள்,)

3)செயற்கையாக இயற்கையானவற்றை அருவி,ஏரி,தீவு போன்று உருவாக்கும் ஆற்றல்

4)குகைகளைப்போல் அல்லாது விருப்பப்படி வாழும்வகையில் வீடுகளை உருவாக்கி அதில் வாழும் ஆற்றல்

5)உணவுக்கு தேவையானவற்றை உணவுதானிய, தாவர வகைகளை இயற்கை நமக்கு வழங்குவதை விட பலமடங்கு விவசாயம் செய்து பெருக்கும்
ஆற்றல்.

இத்தனையும் நமக்குஇருக்கிறது ஆறாவது அறிவாக

புலி வீடும் கட்டாது, விவசாயம் பண்ணாது, புலி உயிரினம் தோன்றிய காலம்தொட்டு பிற உயிரினங்களை கொன்றுதான் சாப்பிடும்,
நமக்கு வலிப்பதுபோல் அதற்கும் வலிக்கும் என சிந்திக்க தெரியாது. அதனால் அது செய்வது சரியே

ஒரு நெல்லை பல நெல்லாக்கும் வித்தை தெரிந்த நாமும் புலி செய்வதையே செய்தால் மனிதன் அல்ல, ........@#$$$%^& .தெய்வம் என்றுதான் சொல்ல வேண்டும்

துருவப் பிரதேசத்தில், பாலைவனத்தில் இருப்பவன் என்ன செய்ய? என்றால் அவனுக்கு முடிந்தால் நீங்கள் உணவுப்பொருள்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
அல்லது அவன் சாப்பிட்டுவிட்டு போகிறான், உணவுப்பயிர்கள் விளையும் இடத்தில் இருக்கும் நீங்கள் ஊர்வன, பறப்பன இவற்றில் கப்பல், விமானம் மீதி
அனைத்தையும் ஏன் சாப்பிட வேண்டும்?

குர்-ஆன் தந்த நபிப் பெருமான் குர்-ஆன் தரும்முன் மாமிசம் உண்டாலும், அறிவு ஞானம் பெற்று குர்-ஆன் ஐ தந்தபின் அசைவம் முற்றிலுமாக துறந்து வாழ்ந்தார்.

இந்தத் தகவலை முஸ்லீம் நண்பர்கள் உறுதிப் படுத்தினால் நல்லது. மகான்களின் வாழ்க்கையைப் பின்பற்றினாலே போதும்.

அவர் விதிவிலக்காக சொன்னது நம் செளகரியத்தை முன்னிட்டு அத்தியாவசியமாகி விட்டது.

மனிதன் மனதிற்கும், நாக்குக்கும் அடிமை, இதுதான் உண்மைகாரணமே தவிர பிற உயிரை மதிக்க வேண்டும் என நினைத்தாலே நமது உணவுப் பழக்க வழக்கம் மாறிவிடும். மதங்களும், சாதியும் இந்த விசயத்தில் சப்பைக்கட்டுகளே :))

சந்திப்போம், சிந்திப்போம்

30 comments:

  1. //குர்-ஆன் தந்த நபிப் பெருமான் குர்-ஆன் தரும்முன் மாமிசம் உண்டாலும், அறிவு ஞானம் பெற்று குர்-ஆன் ஐ தந்தபின் அசைவம் முற்றிலுமாக துறந்து வாழ்ந்தார்.
    //

    கேள்விப்பட்டது இல்லை.

    ReplyDelete
  2. <<<
    ஆறாவது அறிவாக
    >>>

    ஆறாவது அறிவு என்பது, நாம் வாழ எதையிம் செய்வதற்கு உரியதுதான். சும்மா அத சாப்பிடுவதில் இதை சாப்பிடிவதில் மாறுவதல்ல....

    <<<
    ஒரு நெல்லை பல நெல்லாக்கும் வித்தை தெரிந்த நாமும் புலி செய்வதையே செய்தால் மனிதன் அல்ல, ........@#$$$%^& .தெய்வம் என்றுதான் சொல்ல வேண்டும்
    >>>
    இத எங்க போய் சொல்ல???

    <<<
    குர்-ஆன் தந்த நபிப் பெருமான் குர்-ஆன் தரும்முன் மாமிசம் உண்டாலும், அறிவு ஞானம் பெற்று குர்-ஆன் ஐ தந்தபின் அசைவம் முற்றிலுமாக துறந்து வாழ்ந்தார்.
    >>>
    நபி(ஸ்ல்) அவர்கள் எப்பவும் மாமிசம் சாப்பிடுவர்களாகவே வாழ்ந்தார்கள். அவர்கள் அதை ஒரு உணவாகவே பார்த்தார்கள், இங்குதான் மதத்தோடு இனைக்கிறார்கள்.

    ReplyDelete
  3. உயிர்க் கொலை,பிற உயிர்களிடத்தில் கருணை என்ற காரணத்தினால் சைவத்தைச் சார்தல் என்பது தர்க்க ரீதியாக நிரூபிக்க முடியாது,சிவா.

    பிற உயிர்களைக் கொல்லாமல் வாழவே முடியாது.

    உங்கள் மனதின் செம்மைக்கு வேண்டுமானால் சைவத்தை சிபாரிசு பண்ணலாம்.
    புத்தர் கூட தனது இறுதிக் காலத்தில் வேடன் ஒருவன் கொடுத்த இறைச்சியைச் சாப்பிட்டிருக்கிறார்.

    ReplyDelete
  4. /// பிற உயிரை மதிக்க வேண்டும் என நினைத்தாலே நமது உணவுப் பழக்க வழக்கம் மாறிவிடும் ///

    என் கருணையாலே நான் இந்த நிலையை அடைந்தேன். என்ற வள்ளலார் கூற்று படி நீங்கள் சொல்வதை நான் ஆமோதிக்கிறேன்.

    ReplyDelete
  5. உணவுப் பழக்கத்தில் மனிதர்கள் ஒருமை காண்பது அரிது.

    மரக்கறி உணவு உண்பவர்களும் ஊனுணவு உண்பவர்களும் என்றும் இருப்பர்.

    உணவுப் பழக்கத்தைச் சமயங்களோடு சேர்த்துப் பார்க்கத் தேவையில்லை.

    ReplyDelete
  6. கோவி.கண்ணன் said.

    \\கேள்விப்பட்டது இல்லை.\\

    நெருங்கிய நண்பர்களிடம் கேட்டுப்பாருங்கள்
    எனக்கு நம்பிக்கை இருக்கிறது..

    ReplyDelete
  7. \\நபி(ஸ்ல்) அவர்கள் எப்பவும் மாமிசம் சாப்பிடுவர்களாகவே வாழ்ந்தார்கள். அவர்கள் அதை ஒரு உணவாகவே பார்த்தார்கள், இங்குதான் மதத்தோடு இனைக்கிறார்கள்.\\

    அவர் விதிவிலக்காக சொன்னது நம் செளகரியத்தை முன்னிட்டு அத்தியாவசியமாகி விட்டது.

    மீண்டும் ஒருமுறை சரிபார்த்து எனக்கு ஆதரங்களை தனி மடலில் தெரிவிக்க முடியுமா நண்பரே

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ..:: Mãstän ::..

    ReplyDelete
  8. \\பிற உயிர்களைக் கொல்லாமல் வாழவே முடியாது.\\

    விரும்பி உண்வுக்காக கொலை செய்ய வேண்டாம் என்பதே வேண்டுகோள் சகோதரரே (முடிந்தவரை)

    இதில் சைவம், வைணவம், எந்த மதமும் நான் இணைக்கவே இல்லை,

    \\புத்தர் கூட தனது இறுதிக் காலத்தில் வேடன் ஒருவன் கொடுத்த இறைச்சியைச் சாப்பிட்டிருக்கிறார்.\\

    சகோதரரே, நான் கூட ஒருவேளை உணவே இல்லாத இடத்தில் சிக்கி மாமிசம்தான் ஒரே வழி என்றால் சாப்பிட்டுவிடுவேன். :)) ஆனால் இப்போது ஏன் சாப்பிடவேண்டும். அவசியம் என்ன?

    வேடன் கொடுத்த சூழல், அதைச் சாப்பிட்ட புத்தபிரானின் செயலில் ஏதேனும் உள்ளார்ந்த செய்தி இருக்கும், எனக்கு தெரியவில்லை...

    ReplyDelete
  9. நல்ல சிந்தனைகள் நண்பரே...

    ReplyDelete
  10. தாவரங்களுக்கும் உயிர் இருக்கே.. அதற்கும் தங்களின் பதிலை சேர்த்தால் நல்லா இருக்கும் (அறத பழைய கேள்வியா இருந்தாலும்)

    ReplyDelete
  11. Sabarinathan Arthanari

    கேசவன் .கு

    நண்பர்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  12. \\அ. நம்பி

    உணவுப் பழக்கத்தில் மனிதர்கள் ஒருமை காண்பது அரிது.\\

    இந்த தகவல் தெரிந்தவர்கள் இனி என்ன செய்யப் போகிறார்கள் என்பதே என் ஆவல் :))

    தனி மனிதன் அனைவரின் தொகுப்பே சமுதாயம்

    சமுதாயம் மேன்மையுற தனிமனிதன் திருந்தினால் போதும்,

    நம்மிடையே இது மலர்ந்தால் போதும், தானாக மலரும்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நம்பி அவர்களே

    ReplyDelete
  13. \\பிரசன்ன குமார் said...

    தாவரங்களுக்கும் உயிர் இருக்கே.. அதற்கும் தங்களின் பதிலை சேர்த்தால் நல்லா இருக்கும் (அறத பழைய கேள்வியா இருந்தாலும்)\\

    நன்றாக கேளுங்கள், தெரிந்ததைச் சொல்கிறேன்.

    தாவரங்கள் புவியோடு நிலையாக இருப்பவை,

    அது தனது துன்பத்தை வெளிக்காட்ட புலன்கள் இல்லாததால் நாம் உணர முடிவதில்லை,

    அதுவும் துன்பப்படும், ஆனால் அத் துன்பம் மின்சாரம் நிலத்தில் earthing செய்வது போல் நிலம் அதை சமப்படுத்தி விடும்.

    அதனாலேயே அது உயிர்ப்போடு மீண்டும் வளர்கிறது.

    நாமோ, அல்லது வேறு உயிரினமோ உறுப்புகளை இழந்தால் மீண்டும் வளர்கிறதா ??

    ஆனால் தாவரம் வளரும், புவி இதன் துன்பங்களைச் சமப்படுத்திவிடுகிறது. ஆகவே நிலத்தில் விளைவதை உணவாக எடுப்பதில் எந்த தவறுமில்லை.

    இது வேதாத்திரி மகானின் வார்த்தைகள்..

    வாழ்த்துக்கள் நண்பரே,

    முக்கியமான கேள்வி கேட்டமைக்கு நன்றிகள் பல

    ReplyDelete
  14. \\முனைவர்.இரா.குணசீலன் said...

    நல்ல சிந்தனைகள் நண்பரே...\\

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் அவர்களே..

    ReplyDelete
  15. குர்-ஆன் தந்த நபிப் பெருமான் குர்-ஆன் தரும்முன் மாமிசம் உண்டாலும், அறிவு ஞானம் பெற்று குர்-ஆன் ஐ தந்தபின் அசைவம் முற்றிலுமாக துறந்து வாழ்ந்தார்.
    //

    1.முற்றிலும் தவறான தகவல்.!!!

    2.ஆமா இதை ஏன் இஸ்லாத்துடன் மட்டும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்..?

    3.தண்ணீர் மற்றும் தயிரில் உள்ள பாக்டீரியா குறித்து..?

    ReplyDelete
  16. மின்னுது மின்னல் said...

    \\1.முற்றிலும் தவறான தகவல்.!!!\\

    இதற்குரிய ஆதாரத்தை எனக்கு தனிமடலிட்டு உதவமுடியுமா ?

    எனக்கு தகவல் தந்தவர் முஸ்லிம் மதத்தைச்
    சாராதவர், எனவே அவரிடம் ஆதாரம் எதுவும் கேட்கவில்லை

    \\ஆமா இதை ஏன் இஸ்லாத்துடன் மட்டும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்..?\\

    இஸ்லாத்தின் அசைவ உணவு எடுத்துக் கொள்ளாதவர்களே இல்லை என நினைக்கிறேன், ஆனால் நபிப்பெருமான் குர்-ஆன் தந்தபின் யோகவாழ்வு போல் அசைவமின்றி வாழ்ந்தார் என்பது அதன் முக்கியத்துவத்தை அவர் நமக்கு உணர்த்தி இருக்கிறார் என்று நான் நினைத்ததால் இங்கு அவரைக் குறிப்பிட்டேன்.

    இந்துகளில் சைவம் சாதாரணம், அதனால் இங்கிருந்து உதாரணம் காட்டினால் அதில் ஒன்றும் வியப்பு இல்லை அதானலேயே நபிப்பெருமானார் மீது மதிப்பு கொண்டே இங்கு குறிப்பிட்டேன்.

    //தண்ணீர் மற்றும் தயிரில் உள்ள பாக்டீரியா குறித்து..?//

    கண்ணுக்கு தெரியும் உணவுக்காக உயிர்க்கொலை என்பதை முதலில் நிறுத்துவோம், பிறகு கண்ணுக்கு தெரியாதவற்றை பற்றி ஆராய்வோம் :))

    ReplyDelete
  17. குர்-ஆன் தந்த நபிப் பெருமான் குர்-ஆன் தரும்முன் மாமிசம் உண்டாலும், அறிவு ஞானம் பெற்று குர்-ஆன் ஐ தந்தபின் அசைவம் முற்றிலுமாக துறந்து வாழ்ந்தார்.
    //

    உயிர்க் கொலை,பிற உயிர்களிடத்தில் கருணை என்ற காரணத்தினால் சைவத்தைச் சார்தல் என்பது தர்க்க ரீதியாக நிரூபிக்க முடியாது,சிவா.

    பிற உயிர்களைக் கொல்லாமல் வாழவே முடியாது.

    உங்கள் மனதின் செம்மைக்கு வேண்டுமானால் சைவத்தை சிபாரிசு பண்ணலாம்.
    புத்தர் கூட தனது இறுதிக் காலத்தில் வேடன் ஒருவன் கொடுத்த இறைச்சியைச் சாப்பிட்டிருக்கிறார்

    ரெண்டுமே உண்மை, கோவி கண்ணன் சொன்னது போல் இது புதிது எனக்கு.

    ஒரே ஒரு முறை காரைக்குடி பக்கம் போயிட்டு வாங்க. திங்காதவன் செத்தவனுக்கு சமம் 60 வயதில் கூட அம்மா அல்லாடிக்கிட்டு நான் போகும் போது என்னை திட்டிக்கிட்டு திகட்டாமல் தின்னுகிட்டு இருக்காங்க.

    தொடர்வதா விடுவதா மறுப்பதா வாழ்வதா

    குழந்தைகள் 6 வருடமாக காட்டாமல் இருந்தாலும் காட்சி முழுக்க இது தான் உணவு போல் உருவகப்படுத்தி உரையாடல் மூலம் தெரிவிப்பது ஏன்.

    மூன்று தலைமுறை பழக்கம் உள்ளே இருக்குமோ? திடீர் என்று விட்டாலும் பொங்கி வந்து விடுமோ?

    ReplyDelete
  18. http://www.a1realism.com/tamilbukhari/chapter70.htm

    இங்கு 5385 யில் குறிப்பிடபட்டதை நண்பர் தவறாக விளங்கிவிட்டார் என்று நினைக்கிறேன்.

    நபி(ஸல்) அவர்கள் ஒரு நாட்டின் அரசர் தொடர்ச்சியாக மூன்று வேலை ஒரு நாளும் உணவு உண்டதில்லை அவ்வளவு வறுமை..!!

    (அரசாங்க பணத்தில் ஒரு பேரீச்சை பழம் சாப்பிட அவர் சொந்தங்களுக்கு கூட அனுமதி இல்லை )

    மேலும் 5407 யை படித்து பார்த்தால் மாமிசம் சாப்பிட்டது தங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்

    நன்றி

    ReplyDelete
  19. \\மூன்று தலைமுறை பழக்கம் உள்ளே இருக்குமோ? திடீர் என்று விட்டாலும் பொங்கி வந்து விடுமோ?\\

    ஜோதிஜி.. அதற்கு முந்தய தலைமுறை சைவமா :))

    மனிதன் அடிப்படையில் மிருகங்களைப்போல் அசைவம்தான்:))

    தன்னை உணர்ந்தபின் பிற உயிர்களை நேசிக்கவும், அதன் வாழும் உரிமையில் குறுக்கிட நமக்குத் தகுதி இல்லை எனவும் உணர்ந்தபோது மலர்ந்தது அன்பு:))

    ReplyDelete
  20. \\மின்னுது மின்னல் said..\\

    தங்களின் இணைப்பினை படித்தேன், தங்களின் கூற்று சரியே, நண்பரிடம் உறுதி அவரது தகவலின் நம்பகத்தன்மையை உறுதி செய்து கொள்கிறேன்.,

    இணைப்பு கொடுத்தமைக்கு மீண்டும் ஒரு முறை நன்றிகள்,

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  21. உங்களுக்கு ஒரு விஷயம் இருக்கிறது. பதிவுக்கு வரவும்.

    ReplyDelete
  22. உங்கள் பதிவை டவுட் தனபால் என்பவரிடம் காட்டினேன் :) அவர் சில டவுட்களை கேட்டார். முடிந்தால் பதில் சொல்லுங்களேன்...


    1) மிருகங்களுக்கு மனம், சிந்தனை என்பது இல்லை என்பது உங்களுக்கு எப்படி தெரியும்? அவை ஆறாவது அறிவின்றி இருப்பதாக கூற காரணம் என்ன?

    2) சைவம், அசைவம் ஒருவரின் தன்மையை நிர்ணயிப்பதாக கொண்டால் விவேகானந்தர் அசைவம் சப்பிடுபவர், ஹிட்லர் சைவர். இவர்களில் யார் நல்லவர்?

    3) சன்யாசிகள் பிச்சை எடுத்து உண்ண வேண்டும் என்கிறது சனாதன தர்மம். அப்படி பிச்சைஎடுக்கும் பொழுது எவறேனும் மாமிசம் பிச்சையாக போட்டாலும், சமைக்கப்படாத பச்சைமாமிசமாக இருந்தாலும் சன்யாசி உண்ண வேண்டும் என்கிறது சாஸ்திரம். சன்யாசிக்கு நெருப்பு மூட்டி சமைக்க தடை உள்ளது..! (புத்தர் உண்ட காரணமும் இதுதான்).

    3) //குர்-ஆன் தந்த நபிப் பெருமான் குர்-ஆன் தரும்முன் மாமிசம் உண்டாலும், அறிவு ஞானம் பெற்று குர்-ஆன் ஐ தந்தபின் அசைவம் முற்றிலுமாக துறந்து வாழ்ந்தார்.
    //

    உங்கள் நோக்கம் (ஸல்)நபிகள் உண்டாரா என தெரிந்து கொள்ளுவது தான் என்றால்... நான் ஸல்-என வெளியேறுகிறேன் :)எனக்கு இதற்கும் சம்பந்தம் இல்லை...

    ReplyDelete
  23. \\1) மிருகங்களுக்கு மனம், சிந்தனை என்பது இல்லை என்பது உங்களுக்கு எப்படி தெரியும்?\\

    அதன் நடவடிக்கைகளை வைத்து ஒரு அனுமானம்தான், பிற உயிரினங்களின் வாழும் முறை இன்றுவரை மாறவே இல்லை,

    \\\அவை ஆறாவது அறிவின்றி இருப்பதாக கூற காரணம் என்ன?\\

    மனிதன் நிறைய மாற்றங்களை சிந்தனை மூலம் அடைந்திருக்கிறான், அதன் விளைவுகள் நல்லதா கெட்டதா என நான் பார்க்கவில்லை :))
    உயிர் வாழ்வதற்கான மனம் எல்லா உயிருக்கும் பொது. பிற உயிர் படும் துன்பம் அல்லது இன்பம் இப்படி இருக்கும் என சிந்திக்கும் ஆற்றல் மனிதனுக்கு மட்டுமே உள்ளதாக
    நான் நினைக்கிறேன்,



    \\2) சைவம், அசைவம் ஒருவரின் தன்மையை நிர்ணயிப்பதாக கொண்டால் விவேகானந்தர் அசைவம் சப்பிடுபவர், ஹிட்லர் சைவர். இவர்களில் யார் நல்லவர்?\\

    இருவரின் இறுதிக்காலத்தை மட்டும் பாருங்கள் :)) உலகத்திற்கு விவேகானந்தர் நல்லவர், ஹிட்லர் தன்னளவில் நல்லவர் :))


    3) சன்யாசிகள் பிச்சை எடுத்து உண்ண வேண்டும் என்கிறது சனாதன தர்மம். அப்படி பிச்சைஎடுக்கும் பொழுது எவறேனும் மாமிசம் பிச்சையாக போட்டாலும்,
    சமைக்கப்படாத பச்சைமாமிசமாக இருந்தாலும் சன்யாசி உண்ண வேண்டும் என்கிறது சாஸ்திரம். சன்யாசிக்கு நெருப்பு மூட்டி சமைக்க தடை உள்ளது..!
    (புத்தர் உண்ட காரணமும் இதுதான்).

    எனக்கு சாஸ்திரம் தெரியாது:)), பிச்சை எடுத்து உண்பது மனதின், உடலின் நான், எனது எனும் முனைப்பினை அடியோடு களைய பயிற்சியாகவே நினைக்கிறேன்.
    மனம் என்பது இருந்தால்தான் இது மாமிசம், இது சைவ உணவு, என்று பிரித்து ருசித்துக் கொண்டிருக்கும்:)) சமைக்கத் தடையும் அதனால்தான்:))
    அது அடியோடு அடங்கிப்போனால் மாமிசமும் ஒன்றுதான், சைவ உணவும் ஒன்றுதான். இங்கு அவர்கள் விரும்பி உண்பதில்லை, புத்தர் அந்த நிலையில்
    இதை ஏற்றுக்கொண்டார் என நான் நினைக்கிறேன்.

    டவுட் தனபாலும் அந்த நிலைக்கு வந்தால் எல்லாமும் சரிதான் :))

    \\3) //குர்-ஆன் தந்த நபிப் பெருமான் குர்-ஆன் தரும்முன் மாமிசம் உண்டாலும், அறிவு ஞானம் பெற்று குர்-ஆன் ஐ தந்தபின் அசைவம் முற்றிலுமாக துறந்து வாழ்ந்தார்.
    //

    உங்கள் நோக்கம் (ஸல்)நபிகள் உண்டாரா என தெரிந்து கொள்ளுவது தான் என்றால்... நான் ஸல்-என வெளியேறுகிறேன் :)எனக்கு இதற்கும் சம்பந்தம் இல்லை.\\

    உங்கள் முதுகின் மீது எனக்கு அக்கறை இருக்கிறது,;))

    எனக்கு இருந்த சந்தேகத்தை நிவர்த்திக்க குறிப்பிட்டதுதான், அசைவ உணவு குறித்த சிறிய விழிப்புணர்வு அவ்வளாவுதான். நமக்கு எல்லா மதமும், ஒன்றே, உயர்வானதுதான்


    என்னுடைய கருத்துகளில் ஏதேனும் இடைவெளிகள் இருந்தால் தாங்கள் என் பதிவின் தொடர்ச்சியாக இடுகை ஒன்று போட்டுவிடுங்கள்,

    என் கருத்து முழுமையாகும் :))

    ReplyDelete
  24. குர்-ஆன் தந்த நபிப் பெருமான் குர்-ஆன் தரும்முன் மாமிசம் உண்டாலும், அறிவு ஞானம் பெற்று குர்-ஆன் ஐ தந்தபின் அசைவம் முற்றிலுமாக துறந்து வாழ்ந்தார்
    நன்பரே! இப்படி அதரமற்ற செய்திகளை தொகுத்து அது அறவது அறிவோடு ஒப்பிடு செய்து, அதயும் சிந்திக்க பார்க்க சொல்லவது ,உஙகளது அறியமை என்னும் உஙகள் சிந்தனையின் இருளைதான் காட்டுகிறது. அறிவு என்பது மனிதனுக்கு மனிதன் வேறுபட்டு இருப்பதல் தான் இன்று மனிதால் பல வகையான கண்டு புடிப்புகள் கடந்து கொண்டு இருகிறது, மனிதனை விட கால் நடை களை அதிக வள்ர்ச்ஷியில் உள்ளது. மனிதர்கள் நடமாடக்கூடிய இடங்களில் அள்வுக்கு அதிகமா கால் நடைகள் நடந்து சென்றால் அதிகமான விபதுகளும் அதிகமான தொல்லைகளும் எற்படும் ,

    முகம்மது நபி அவர்கள் அப்படி அசைவ உணவை வெருத்து இருந்தாலோ,தடை செய்ய்து இருந்தலோ, அதை இஸ்லாமியர்கள் ஹராமாக ஒதுக்கி இருப்பார்கள்.
    மற்ப்பேச்சிக்கே இடம் கொடுக்க மாட்டார்கள்.
    உங்களது அறாவது அறிவை வள்ர்துக்கொண்டு பதிவுகளை எழுதும் முன்பு படித்தவர்களிடமும், அதைபற்றி தெரிந்தவர்களிடமும் ,அறிந்துக்கொண்டு எழுதுவது நல்லது நன்பரே!

    ReplyDelete
  25. \\இந்தத் தகவலை முஸ்லீம் நண்பர்கள் உறுதிப் படுத்தினால் நல்லது. மகான்களின் வாழ்க்கையைப் பின்பற்றினாலே போதும்.\\

    இதை இடுகையிலேயே குறிப்பிட்டு இருக்கிறேன். மேலும் நண்பர் மின்னுது மின்னல் எனக்கு மிகப் பக்குவமாக விளக்கி இருக்கிறார். அவருக்கு மீண்டும் ஒரு முறை நன்றிகள்.

    உங்கள் அணுகுமுறை வருத்தத்தையே தருகிறது.

    \\உஙகளது அறியமை என்னும் உஙகள் சிந்தனையின் இருளைதான் காட்டுகிறது\\

    மதிப்பீட்டுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்...

    ReplyDelete
  26. //2) சைவம், அசைவம் ஒருவரின் தன்மையை நிர்ணயிப்பதாக கொண்டால் விவேகானந்தர் அசைவம் சப்பிடுபவர், ஹிட்லர் சைவர். இவர்களில் யார் நல்லவர்?
    //

    இட்லர் சைவம் என்று பலர் சொல்லுகிறார்கள், ஐரோப்பாவில் சைவம் என்றால் ரெட் மீட் எனப்படும்(சிவப்பு) இறைச்சியை தவிர்ப்பது மட்டும் தான், கடலுணவு, முட்டை எல்லாம் அவங்களுக்கு சைவம்.
    :)

    ReplyDelete
  27. //இட்லர் சைவம் என்று பலர் சொல்லுகிறார்கள், ஐரோப்பாவில் சைவம் என்றால் ரெட் மீட் எனப்படும்(சிவப்பு) இறைச்சியை தவிர்ப்பது மட்டும் தான், கடலுணவு, முட்டை எல்லாம் அவங்களுக்கு சைவம்.//

    அவர் சாதாரண சைவம் அல்ல. ஹிட்லர் கையாண்ட முறையில் நிறைய சைவர்கள் ஜெர்மனியில் எனக்கு தெரியும்.

    அவர்கள் மிருகத்திடம் இருந்து எந்த உணவையும் பெற மாட்டார்கள்.

    உதாரணமாக சீஸ், பால், முட்டை, தேன் இவையெல்லாம் அவர்களுக்கு அசைவம்.

    தாவர உணவு மட்டுமே உண்பார்கள்.

    நான் அவர்களை சந்தித்து நான் சைவம் என கூற அவர்கள் இதை என்னிடம் கூறி என் ஆணவத்தை தகர்த்தார்கள்.

    ReplyDelete
  28. ஸ்வாமி இட்லர் சைவம் உணவு உண்ணுபவர் என்கிறது ஒரு கட்டுக்கதை என்கிறது இந்த இணையப்பக்கம்.

    http://www.jewishveg.com/schwartz/revHitler.html

    ReplyDelete
  29. food habit is not a easily change one; little content of Non-veg foods have lot of calories and other nutrients and it is an essential for children; there is no such alternative in veg foods; If total family changed to veg. then only it is an easy to prepare in home in practical. These are some notable reasons for the hereditary non-veg families continued their food habits.

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)