"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Saturday, November 14, 2009

வலையுலகில் தேவையான பண்பாடு

வலையுலகம் பல்வேறு துறையைச் சார்ந்த அன்பர்களின் திறன்களை வெளிக்கொண்டுவரும் இடமாக உள்ளது

எந்த வித செலவும் இல்லாமல் எது குறித்தும் உங்கள் அறிவை வளர்த்துக்கொள்ளும் இடமாகவும் இருக்கிறது.

ஆனால் சிலசமயம் நாம் வீதிகளில் நேருக்குநேர் சண்டை கட்டிக்கொள்வதைப்போல் இங்கும் சிலர் கருத்து மோதல்களில் கடுமையாக ஈடுபடுகின்றனர். இவர்களின் நோக்கம் பலரின் பார்வையில் பட்டு அதன்மூலம் பிரபலம் ஆவது என்றே தோன்றுகிறது.

நேரில் சந்தித்து அறியாத பல பதிவர்களும் மானசீகமாக நமக்கு நண்பர்களே, இங்கு நட்பையே முக்கியப்படுத்த வேண்டும்,

ஒருவரின் கருத்தை மறுத்து எதிர் கருத்து கூறும்போது, அவரது மனம் வருந்தாமல் அவரும் ஆர்வத்தோடு நம் கேள்விகளுக்கு பதில் கூறும் வண்ணம் ஆரோக்கியமான வகையில் வார்த்தைகளை பயன்படுத்தும்போது இருவருக்கும் மனமகிழ்ச்சிதான்.

மாறாக வலைத்தளத்திற்கு வந்து தரமற்ற, முகம் சுழிக்க வைக்கும் வார்த்தைகள், என்னோடு மோதிப்பார் என்ற வசனங்களை வீசி நீங்களும் மன உளைச்சல் அடைந்து, நம் நண்பர்களுக்கும் மன உளைச்சலை ஏன் உண்டாக்க வேண்டும்.?

தமிழனின் பல்வேறு சிறப்புக்குணங்களில் இதுவும் ஒன்று:)

வல்லவனுக்கு வல்லவன் வையகத்துள் உண்டு.


இது மனதின் ஆராவாரம், அடக்கமின்மை என்பதை உணருங்கள், எல்லோரும் நல்லவரே, மனதிடம் சிக்கி நட்பை இழ்க்காதீர்கள் என்பதே என் அன்பு வேண்டுகோள்!

நீங்கள் மிகுந்த உணர்ச்சிகரமானவராகவும் சமுதாய மாற்றத்தை விரும்புகிறவராக இருந்தால் நேரடியாக களத்தில் இறங்கி செயல்படுங்கள். பலராலும் கவனிக்கப் படுவீர்கள்.

இதோ கீழே கொடுத்த சுட்டிகளைப் பாருங்கள்.

எதிர்வினையாற்றிய நண்பர் சின்னஞ்சிறுகதைகள் பேசி அவர்களின் இடுகையில் ஏதேனும் தாக்குதல் இருக்கிறதா?

பண்போடு மறுத்திருக்கிறார். அவரை நான் பாரட்டுகிறேன். இப்பண்பு இப்பதிவுலகம் முழுமையும் பரவட்டும்


சிவத்தமிழோன் என்பவர் 'திருக்குறள் ஒரு சைவசமய நூலே' என்பதாக எழுதிய பதிவிற்கான எதிர்வினை



வாழ்த்துக்கள் நண்பர்களே   

16 comments:

  1. "அல்லா வென்பார் சிலபேர்கள் ;
    அரன்அரி யென்பார் சிலபேர்கள் ;
    வல்லான் அவன்பர மண்டலத்தில்
    வாழும் தந்தை யென்பார்கள் ;
    சொல்லால் விளங்கா ' நிர்வாணம்'
    என்றும் சிலபேர் சொல்வார்கள் ;
    எல்லா மிப்படிப் பலபேசும்
    ஏதோ ஒருபொருள் இருக்கிறதே !

    அந்தப் பொருளை நாம் நினைத்தே
    அனைவரும் அன்பாய்க் குலவிடுவோம்.
    எந்தப் படியாய் எவர்அதனை
    எப்படித் தொழுதால் நமக்கென்ன ?
    நிந்தை பிறரைப் பேசாமல்
    நினைவிலும் கெடுதல் செய்யாமல்
    வந்திப் போம்அதை வணங்கிடுவோம் ;
    வாழ்வோம் சுகமாய் வாழ்ந்திடுவோம்"

    நாமக்கல் கவிஞரின் கவிதை வரிகள் இவை!
    நிந்தை பிறரைப் பேசாமல், நினைவிலும் கெடுதல் செய்யாமல் வாழக் கற்றுக்கொடுக்கும் வரிகளும் கூட!

    நல்ல சிந்தனை!

    ReplyDelete
  2. //வலையுலகில் தேவையான பண்பாடு//

    நன்றி & வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நல்ல சிந்தனை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. mika sariyana karuthu.anbare vazhthukkal.

    ReplyDelete
  5. முழுதும் ஆமோதிக்கிறேன்.

    ReplyDelete
  6. அதில் முதல் விமர்சனம் என்னுடைய தான் போலிருக்கு. மதகு திறக்கும் போது முதலில் வருவது சேர்ந்து குப்பைகள், தேவையில்லாத சமாச்சாரங்கள். பிறகு கலங்கி நாற்றமடித்த தண்ணீர். பிறகு தான் பயன்பாட்டுக்குரிய நீர்.

    எல்லாவற்றையும் பார்த்த பிறகு தான் மனித குலத்திற்கே தண்ணீரின் அருமை புரிகின்றது. ஐந்து மாதங்களுக்கு முன் வாத்தியார் சுப்பையா அவர்கள் தன்னுடைய இடுகையில் புதிதாக இடுகையில் நுழைபவர்கள், தலைப்பு இட வேண்டிய அவஸ்யம், முக்கியத்துவம் குறித்து அற்புதமாக எவருமே சொல்லிக்குடுக்காத விசயங்களை எளிமையாக எழுதி இருந்தார்.

    படித்தபிறகு தான் எனக்கு புத்தி தெளிந்தது. தைரியமாக அவர் மூலம் தான் நான் கற்றுக்கொண்டேன் என்பதை பெருமையாக நான் உரைக்கின்றேன்.

    உணர்ந்தவர்கள் உள்ளே தான் வைத்துக்கொண்டு அவர்கள் பணி செய்து கிடப்பதே என்று நல்ல விசயங்களை பகிர்ந்து கொள்வார்கள் என்று நம்புவோம்.

    மாற்றம் என்பது மாறாதது. இல்லாவிட்டால் மனிதன் அல்ல. வெறும் மணி. உயிர் அற்ற.

    எழுத்து மற்றவர்களை சிந்திக்க செய்கிறதோ இல்லையோ தன்னுடைய வாழ்க்கை தவறுகளையாவது உணரச் செய்யும். எழுதுவதில் உண்மை இருந்தால்.

    உணர்ந்தவன் சொல்கிறேன் சிவா.

    ReplyDelete
  7. நன்று, அருமையான பதிவு!!

    ReplyDelete
  8. பக்தா உன் பண்பை மெச்சினேன் :)))

    ReplyDelete
  9. கிருஷ்ணமூர்த்தி

    \\எல்லா மிப்படிப் பலபேசும்
    ஏதோ ஒருபொருள் இருக்கிறதே !

    அந்தப் பொருளை நாம் நினைத்தே
    அனைவரும் அன்பாய்க் குலவிடுவோம்.\\

    நாமக்கல் கவிஞரின் பாடலைக் கேட்டால் போதும்,
    அறிவு விளக்கம் தானாய் வரும்.

    அறிஞரின் கவியை இங்கு குறிப்பிட்டதில் மிகுந்த மகிழ்ச்சி நண்பரே

    ReplyDelete
  10. நன்றி @ Sabarinathan Arthanari
    நன்றி @ சிங்கக்குட்டி
    நன்றி @ பழூர் கார்த்தி
    நன்றி @ kasbaby
    நன்றி @ ஸ்ரீராம்.

    நண்பர்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்..

    ReplyDelete
  11. \\மாற்றம் என்பது மாறாதது. இல்லாவிட்டால் மனிதன் அல்ல. வெறும் மணி. உயிர் அற்ற.

    எழுத்து மற்றவர்களை சிந்திக்க செய்கிறதோ இல்லையோ தன்னுடைய வாழ்க்கை தவறுகளையாவது உணரச் செய்யும். எழுதுவதில் உண்மை இருந்தால்.\\

    கருத்துக்கு நன்றி ஜோதிஜி அவர்களே..

    ReplyDelete
  12. \\ஸ்வாமி ஓம்கார் said...

    பக்தா உன் பண்பை மெச்சினேன் :)))\\

    தாங்கள் என்னை மனிதனாகப் பார்க்கிறீர்கள்

    நான் தங்களை சிவமாகப் பார்க்கிறேன்..:))


    எதுக்கும் உஷாராகவே இருங்க..
    இப்ப வலையுலகில் கடவுள் படுற பாடு, :))??

    அவங்க கண்ணுல நீங்கதான் கடவுள்ன்னு தெரிஞ்சது
    அவ்வளவுதான் :))

    ReplyDelete
  13. நன்றாக எழுதி உள்ளீர்கள். உண்மையான எழுத்து. யூத்
    விகடனில் லிங்க் கண்டு இங்கு வந்தேன்.

    எனது படைப்புகளும் முதல் முறை யூத்
    விகடனில் இந்த வாரம் தான் வந்தது. முடிந்தால் படிக்கவும்

    கவிதை:

    http://youthful.vikatan.com/youth/Nyouth/mohankumar16112009.asp
    கட்டுரை:
    http://youthful.vikatan.com/youth/Nyouth/mohankumar13112009.asp

    ReplyDelete
  14. என்னுடைய இடுகை யூத்விகடனில் வந்த விசயம் தாங்கள் சொல்லித்தான் தெரியும்.,

    தகவலுக்கு நன்றி நண்பரே

    கவிதையைப் படித்தேன்

    கட்டுரையைப் படித்தேன், ஒரு குடும்பம் எப்படி இருக்கும் என்பதை இயல்பாக எழுத்தில் கொண்டு வந்திருக்கிறீர்கள்

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  15. உண்மையை உலகுக்கு உணர்தியுள்ளீர்கள்.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  16. எல்லோரும் ந(வ)ல்லவரே..................

    அருமையான இடுகை. வழிமொழிகின்றேன்.

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)