தோல்வியாளன் எப்போதும் எதிர்மறைச் சிந்தனையாளனாகவே திகழ்கிறான்
எதிர்மறைச் சிந்தனை என்பது அச்சத்தின் காரணமாகப் பிறவியிலிருந்தே இயல்பாய் நம்மிடம் இருக்கும் அவநம்பிக்கைதான்.
நம்மைச் சுற்றி தோல்வி அலைகளான negative waves அடர்த்தியாய்ச் சூழ்ந்து கொண்டால் தொட்டது எதுவும் துலங்காது.
அதேசமயம் நேர்மறைச் சிந்தனை என்பது இயல்பாக நம்மிடையே இருப்பதுஅல்ல. ஊக்கத்துடன் தொடர்ந்து பயிற்சி செய்வதால்தான் வரக்கூடியது.
நம்பிக்கைதான் இந்தசிந்தனையின் அடிப்படை.இந்த சிந்தனை வளர வளர நம்மைச் சுற்றி வெற்றி அலைகள் ‘possitive waves'
அடர்த்தியாய்ச் சூழ்ந்து கொள்வதால் தொட்டது துலங்கும்.
பூக்கள் பூத்திருக்கும் தோட்டத்தில் ‘கும்ம்ம்...’மென்று பூவின் மணம் வரும்,
குப்பையும் சாக்கடையும் நிறைந்திருக்கும் பகுதியிலிருந்து குடலைப்புரட்டும் கெட்ட நாற்றம்தான் வரும்.
குப்பையும் சாக்கடையும் நிறைந்திருக்கும் பகுதியிலிருந்து குடலைப்புரட்டும் கெட்ட நாற்றம்தான் வரும்.
நீங்கள் பூ வாசம் வீசும் நேர்மறைச் சிந்தனையாளாரா? சாக்கடை நாற்றம் மிக்க எதிர்மறைச் சிந்தனையாளாரா? யாராக வேண்டுமானாலும் இருக்க
உங்களுக்கு பூரண சுதந்திரம் உண்டு. முடிவு செய்து செயல்படுங்கள் :))
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி! எப்படி- என்கிற நூலில் இருந்து..
//பூக்கள் பூத்திருக்கும் தோட்டத்தில் ‘கும்ம்ம்...’மென்று பூவின் மணம் வரும், குப்பையும் சாக்கடையும் நிறைந்திருக்கும் பகுதியிலிருந்து
ReplyDeleteகுடலைப்புரட்டும் கெட்ட நாற்றம்தான் வரும்.
//
:) (மென்பொருள்) பூங்காவில் வேலை செய்பவனைவிட சாக்கடையில் வேலை செய்வபவனுக்கு மிகுதியாக ஊதியம் கொடுக்கனுமா இல்லையா ?
அன்பின் சிவசு
ReplyDeleteஅருமையான கருத்து - பூவின் வாசத்தினை அருகில் வைக்க முயலவேண்டும் - சாக்கடை நாற்றத்தினை விராட்டவும் முயல வேண்டும் - முயலுவோம்
பகிர்வினிற்கு நன்றி
நல்வாழ்த்துகள்
தலைப்பின் முதலில் நல்லவண்ணம் என்ற ஒரே ஒரு வார்த்தையைச் சேர்த்துவிட்டால், அதன்படி நடக்கவும் உண்மையாகவே நாட்டம் இருந்தால்,
ReplyDeleteநல்லவிதமான மாற்றமும் வளர்ச்சியும் இன்றே இங்கே இப்பொழுதே கூட சாத்தியம் தான்!
//சிந்தனையை மாற்றுங்கள், சிக்கல்கள் விலகும்
ReplyDelete//
கதவை திற காட்டுவரட்டும் மாதிரி இருக்கே :)
ஜென் கதை மட்டும் மிஸ்ஸிங்.. :)
நல்லக் கருத்துக்கள் நன்றி! நாகூர் ரூமி கூட அடுத்த வினாடி என்ற புத்தகத்தில் இதைப்போல் நிறைய விசயங்கள் சொல்லி இருந்தார்.
ReplyDelete//:) (மென்பொருள்) பூங்காவில் வேலை செய்பவனைவிட சாக்கடையில் வேலை செய்வபவனுக்கு மிகுதியாக ஊதியம் கொடுக்கனுமா இல்லையா //
ReplyDeleteஇது இடுகையை ஒட்டிய சிந்தனை அல்ல..:))
இருந்தாலும்...
கொடுக்கவேண்டும் கோவியாரே
அன்பின் சீனா
ReplyDeleteவரவுக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே
\\கிருஷ்ணமூர்த்தி said...
ReplyDeleteதலைப்பின் முதலில் நல்லவண்ணம் என்ற ஒரே ஒரு வார்த்தையைச் சேர்த்துவிட்டால், அதன்படி நடக்கவும் உண்மையாகவே நாட்டம் இருந்தால்,
நல்லவிதமான மாற்றமும் வளர்ச்சியும் இன்றே இங்கே இப்பொழுதே கூட சாத்தியம் தான்!\\
புரிகிறது :))
மனம் என்பதே எதிர்மறைதான்.,:))))
அதை நேர்மறையாக்குவதே என்கடமை
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே
\\கதவை திற காட்டுவரட்டும் மாதிரி இருக்கே :)\\
ReplyDeleteஅதுவும் கைவசம் இருக்கிறது.,
அவசியப்படும்போது வரும்:)))
நாகூர் ரூமி கூட அடுத்த வினாடி என்கிற புத்தகம் ஏற்கனவே படித்திருக்கிறேன்.
ReplyDeleteதொடர்ந்து இதுபோன்ற புத்தகங்களை படியுங்கள்,
மனதில் மணம் வீசும்
வாழ்த்துக்கள்
good
ReplyDelete\கதவை திற காட்டுவரட்டும் மாதிரி இருக்கே :)\\
ReplyDeleteஅதுவும் கைவசம் இருக்கிறது.,
அவசியப்படும்போது வரும்:)
சிரித்து விட்டேன்
மிக அருமை. எழுதியது நாலு வரி என்றாலும் நன்றாக உள்ளது.
ReplyDelete\\கிளியனூர் இஸ்மத் said...
ReplyDeletegood\\
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இஸ்மத்
உங்களின் இடுகைகளை தொடர்ந்து படித்தே வருகிறேன்
வாழ்த்துக்கள்
ஜோதிஜி, நீங்க சொன்னவுடன் எனக்கும் :))
ReplyDeletePaagarkai வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே