"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Friday, December 25, 2009

படித்ததில் பிடித்தது 25/12/09

நண்பர்களே, வலையில் மேய்ந்து கொண்டிருந்த போது கண்ணில் பட்டது...

நீங்களும் பாருங்களும். இதுவும் ஒரு அவசியமான தகவல்தான்.


நன்றி  -  திருத்தம் வலைப்பதிவு

வாழ்த்துகள்

15 comments:

  1. திருத்தம் பொன் சரவணனின் கருத்துக்கள், பலமுறை கேள்விக்குள்ளாகியிருக்கின்றன. சில கூகிள் வலைக்குழுமங்களில் இவரது திருத்தங்கள், திருத்துவதான கருத்து என்று நிறையப் பார்த்திருக்கிறேன்.

    ஒரு சொல்லின் பெயர்க்காரணம், பொருள் அந்த அந்த சமூகத்தில் புழங்கி வரும் பழக்கங்களைப் பொறுத்தது.

    இந்தச் சுட்டியில் காணும் கருத்து, அப்படியே ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவோ, அல்லது இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ற விவாதப் பொருளாகவோ இல்லையே சிவா!

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு நன்றி.

    ReplyDelete
  3. அருமையான பகிர்வுக்கு நன்றி,சிவா.

    ReplyDelete
  4. \\ஒரு சொல்லின் பெயர்க்காரணம், பொருள் அந்த அந்த சமூகத்தில் புழங்கி வரும் பழக்கங்களைப் பொறுத்தது. \\

    ஆனாலும் அந்தச் சொல்லின் மூலம்/முந்தய பயன்பாடு எங்கு இருக்கிறது என இவர் சுட்டிக் காட்டி இருக்கிறார்.

    இது குறித்த தேர்ந்த அறிவு இல்லாததால் இது தவறு என சொல்ல இயலவில்லை. இப்போதைக்கு ஏற்றுக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

    நண்பர்கள் ஏதேனும் மாற்றுகருத்தும், ஆதாரங்களும் இருந்து கொடுத்தால் ஏற்றுக்கொள்ளலாம். தமிழுக்கு நம்மால் ஆன சேவை என மகிழலாம்.

    சூழ்நிலைக்கான விவாதப் பொருள் அல்ல என நினைக்கவில்லை. இந்த வார்த்தை வலையுலகில் பயன்படுத்தக்கூடிய வார்த்தை. உண்மைப்பொருள் என வேறு ஒன்றை குறிப்பதாக, கண்புருவத்தைக் குறிப்பதாக சொல்லும்போது அதை முழுமையாக ஒதுக்க என்னால் இயலவில்லை.

    கலித்தொகை, புறநானூறு, அகநானூறு, நாலடியார், என பல உதாரணங்கள் கொடுத்துள்ளார். அவரின் உழைப்பையேனும் நாம் மதிக்க வேண்டியதாக இருக்கிறது.

    இது தவறெனில் இந்த இடுகைமூலமே வேறு யாரேனும் இதை மறுத்து உரைத்தால் நன்மைதானே.

    இதை விக்கிபீடியாவில் ஏற்றச் சொல்லலாம் என நினைத்தேன். தங்களின் இவரின் முந்தய அனுபவங்களை ஒட்டி சற்று பொறுமை காக்க முடிவு செய்து விட்டேன்

    வாழ்த்துகள் நண்பரே

    ReplyDelete
  5. @ SUREஷ் (பழனியிலிருந்து)
    @ அகநாழிகை
    @ ஷண்முகப்ரியன்

    நன்றி நண்பர்களே, வருகைக்கும் கருத்துக்கும் ::))

    ReplyDelete
  6. உங்கள் வலைப்பூவில் இட்டதற்கு மிக்க நன்றி நண்பரே. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சொன்னதுபோல் என் கருத்துக்களில் பல்ருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒருவரது மறுப்புக்கு தக்க காரணத்தைக் கூறி சான்றுகளுடன் காட்டினால் தானே மறுப்பைக் கூட ஏற்க முடியும். புதிய கருத்துக்களை ஆதாரங்களுடன் காட்டினால் நான் எப்போதுமே ஏற்கத் தயார்.

    எனது வலைப்பூவின் நோக்கமே மக்கள் சொற்களின் மெய்யான பொருள் குறித்து சிந்திக்க வேண்டும். அதன் மூலம் உண்மை என்ன என்ற ஒருநிலைப்பாடு கண்டறியப்பட வேண்டும். தகுந்த ஆதாரங்கள் இன்றி ஒருவரது கருத்தை வெறுமனே மறுத்தால் அதை காழ்ப்புணர்ச்சி என்று சொல்லாமல் வேறென்ன சொல்ல முடியும்?.

    அல்குல் என்ற சொல் மட்டுமல்ல பல சொற்கள் தவறான பொருளில் வழங்கப் பட்டு வருகின்றன. அவற்றை எல்லாம் கண்டிப்பாக வெளியிடுகிறேன். வரும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்குகொண்டு இக் கட்டுரைகளை சமர்ப்பிக்க ஆர்வமாய் உள்ளேன்.

    அன்புடன்,

    ReplyDelete
  7. நல்ல பகிர்வினைத்தான் சுட்டியிருக்கீங்க நண்பரே... அவர் சொன்னதுபோல் எத்தனையோ வார்த்தைகளும் வழக்கில் மாறியிருக்கின்றன. நல்ல இடுகை...

    ReplyDelete
  8. சிறப்பான பகிர்வு பங்களிப்பு. வாழ்த்துகள். இணைத்துள்ளேன். Voted

    ReplyDelete
  9. திரு சரவணன்,

    உங்களுடைய திருத்தங்களையும்,அதைத் தமிழறிந்த பெருமக்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை முன்பே அறிவேன்.

    இப்போது கூட, மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில், இதுபற்றி ஒரு விவாத இழையில் திரு ஹரி கிருஷ்ணன் முன்னமேயே பேசியதை தொட்டுப் பேச வேண்டிவந்ததைக் கொஞ்சம் அலுப்புடன் எழுதியதையும், இன்னொரு இழையிலும் கூட, நீங்கள் புதிதாகக் கொண்டுவந்த திருத்தங்களைச் சுட்டி எழுதியதையும் படித்தேன். கடைசி வார்த்தை தன்னுடையதாகத் தான் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு எழுதுவதைத் தவிர்க்க முடிந்தால்,மிகவும் நல்லது. உங்களை மறுத்துப் பேசுவதாலோ, அல்லது ஆமாம் சாமியாகத் தலையாட்டி வைப்பதாலோ எனக்கென்ன தமிழினத் தலைவர் பட்டத்தையா கொடுக்கப் போகிறீர்கள்!?

    திருத்தங்கள் செய்வது உங்களுக்கு வாடிக்கையாக இருக்கலாம், அதை ஏற்றுக் கொள்வதோ நிராகரிப்பதோ மற்றவர்கள் கையில் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு கொஞ்சம் பதில் எழுதுங்கள்!

    http://groups.google.co.in/group/mintamil/msg/de030d457765dda2?

    இதில் திரு ஹரி கிருஷ்ணன் கொஞ்சம் விரிவாகப் பேசிய பழைய கடிதத்தைப்பார்க்கலாம்.

    ReplyDelete
  10. அன்பு நண்பரே

    இந்தக் கருத்தை அங்கே பின்னூட்டமாக இட்டிருக்கிறேன். மேலும் பல தகவல்களைத் தர இயலும். ஆனாலும் நேரமின்மை கருதியே சுருக்கமாகக் கருத்தைத் தெரிவித்துள்ளேன்.

    அரவிந்த்

    ---

    மன்னிக்கவும். தங்கள் கருத்து தவறானது. ’அல்குல்’ என்பது பெண்ணுறுப்பையும் அது சார்ந்த பகுதிகளையும் பொதுவாகக் குறிக்கும். மேற்தொடை, இடை என்றும் சில இடங்களில் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் எவ்வித ஐயமுமில்லை. மாறாகக் கண் புருவத்தைத் தான் குறிக்கும் என்பது நீங்களாக கற்பிதம் செய்து கொண்டு எழுதியதாகத் தான் உள்ளது. இதை இலக்கியம் படித்தவர்கள் நிச்சயம் ஏற்க மாட்டார்கள்.

    ”புற்று அரவு அல்குல்” இது ஆண்டாளின் கூற்று. இதற்கு என்ன விளக்கம்?

    புற்று அரவிற்கும், கண் புருவத்திற்குகும் என்ன தொடர்பு?

    ”வாம மேகலை இற, வளர்ந்தது அல்குலே” இது கம்பனின் கூற்று இதன் பொருள் யாதோ? கண்ணிமைதான் வளர்ந்ததோ?

    அப்படியானால் மேகலை என்பது இடையில் அணியும் ஆபரணம் இல்லையா, கண்புருவத்தில் அணியும் ஒரு அணிகலனா?

    விளக்குவீராயின் நன்று

    அன்புடன்
    அரவிந்த்

    ReplyDelete
  11. நண்பர் அரவிந்த் , புற்றரவு அல்குல் என்பது நல்லபாம்பின் படப்பொறி போல் திதலை (வண்ணப் புள்ளிகள்) அணிந்த கண்புருவம் என்று பொருள். அல்குல் வளர்த்தல் என்பது திதலை வரிகளின் நீளம் கூட்டுதல். நான் முன்பே சொன்னதுபோல பல தமிழ்ச் சொற்க்ளின் உண்மைப் பொருட்களை மீட்டெடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இச் சொற்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையன்வாக இருப்பதால் கால தாமதம் ஆகிறது. சற்று காத்திருப்பீர்களானால் அனைத்து உண்மைகளையும் ஆதாரங்களுடன் நிறுவுவேன். அன்புடன்,

    ReplyDelete
  12. `...மென்துகில் அல்குல் மேகலை நீங்க...'- சிலப்பதிகாரம்

    `மெல்லிய துகிலை உடுத்த அல்குலிடத்து மேகலை நீங்க' என்பது பொருள்.

    புருவத்தில் பெண்கள் துகில் உடுத்துவார்களா?

    புருவத்தில் இருந்து மேகலை நீங்கியதா?

    - அ. நம்பி

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)