"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Wednesday, December 2, 2009

வெற்றி மனப்பான்மையும், தோல்வி மனப்பான்மையும்

A winner is always a part of Answer. A loser is always a part of the problem

சோப்பு தயாரிப்பு நிறுவனத்தில் இயந்திரமயமாக்கப்பட்ட பேக்கிங் பிரிவில் தவிர்க்கவே முடியாமல் ஒரு சில காலி உறைகளும் பேக்கிங் ஆகி நிறுவனத்திற்கு தலைவலியைத் தந்து கொண்டிருந்தது. அலுவலகத்தில் பலகட்ட/பலமட்ட ஆலோசனைகள் பயன் தரவில்லை.

அப்போது ஒரு தொழிலாளி ”இதற்கு எதுக்கு இவ்வளவு சிரமப்படுறீங்க, ஒரு ஃபேன் வாங்கி நிக்க வச்சா போதும், காலி உறை வெளியே விழுந்து விடும்” என்றார்.. இவர் ஒரு வெற்றியாளர். part of answer

A winner always has different Programmmes, A loser always has so many excuses

வெற்றியாளன் எந்த கடினமான பொறுப்பைக் கொடுத்தாலும், அதை எளிதாக நிறைவேற்ற பல வழிகளை சிந்தித்தபடி இருப்பான். தோல்வியாளனோ ஒருவேளை பொறுப்பு நிறைவேறாவிட்டால் அதற்கான காரணம் என்ன? என சொல்லி தப்பிக்கலாம் என சிந்திப்பான்.

A winner says"Let me do it for you". A loser says,"That is my not job"

வெற்றியாளன் எந்தப் பணியைக்கொடுத்தாலும் “ உங்களுக்காக இதைக்கூட செய்யமாட்டேனா? என உற்சாகமாக ஏற்றுக்கொள்வார் தோல்வியாளரோ "இது என் வேலை அல்ல, இதற்கு வேறு ஆளைப் பார்" என தப்பிக்கவே முயல்வான்.

A winner sees an answer in every problem; A loser sees a problem in every answer

வெற்றியாளன் ஒவ்வொரு சிக்கல்களிலிருந்தும் ஒரு தீர்வைக் கண்டு பிடிப்பான். தோல்வியாளனோ ஒவ்வொரு தீர்வுக்குள்ளும் புதிய சிக்கல் ஒன்றைக் கண்டுபிடித்தபடியே இருப்பான்.


A winner ever says,"It may difficult but it is possible". A loser ever says,"It may be possible but it is too difficult"

வெற்றியாளன் "இது கடினமான பணியாக இருந்தாலும் எப்படியும் வெற்றி பெறலாம்" என்பான். தோல்வியாளன் "வெற்றிபெறலாம்தான். ஆனால் இத்தனை பிரச்சினைகள் உள்ளன. இதனால் எப்படி வெற்றி பெற முடியும்?” என்பான்.

உங்களிடம் உள்ள சிந்தனைப் போக்கு எத்தகையது என பாருங்கள். அது வெற்றியைத்தருவதா தோல்வியைத்தருவதா என பிரித்து ஆராயுங்கள்
உங்களுக்கு வெற்றி என்பது சாதரணமாகி விடும்.

என்ன செய்வீர்களா :))

15 comments:

  1. //என்ன செய்வீர்களா :)) //

    வெற்றியாளானாய் இருக்க ஆசைப்படுவேன்...

    நல்லாயிருக்கு நண்பா

    ReplyDelete
  2. அருமையான இடுகை...

    வார்த்தை விளையாட்டிலேயே, வெற்றியாளனையும், தோல்வியாளரையும் இனங்கண்டு கொள்ள உதவுவது சிறப்பு.

    ReplyDelete
  3. நற்சிந்தனை தூண்டும் வரிகள். பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  4. மிக அருமையான தொகுப்பு சிவா..

    நன்றி

    ReplyDelete
  5. இந்த சோப்பு மேட்டரு எங்கயோ படிச்ச மாத்திரி இருக்கே!!

    சரி ! அத விடுங்க

    /// இது கடினமான பணியாக இருந்தாலும் எப்படியும் வெற்றி பெறலாம் ///

    இத சொன்னாக்க தெரியுமா? தெரியாதா? ஒற்றை வார்த்தையில் அடுத்த கேள்வியை தொடுக்கிறார்கள். ஆதலால் இப்போதெல்லாம் நேரத்தை விரயம் பான வேண்டாம் என்று தெரியாது என்று உரைத்துவிட்டு சும்மா இருக்கறதே மேல்.

    ReplyDelete
  6. ம்ம்ம்...ஆராய்ந்தாச்சு!

    ReplyDelete
  7. அன்பின் சிவசு

    அருமை - நாம் அனைவருமெ வெற்றியாளனாக முயல்வோம்

    நல்வாழ்த்துகல் சிவசு

    ReplyDelete
  8. @ஆ.ஞானசேகரன்
    @ அப்பாவி முரு
    @ ரோஸ்விக்
    @ ஈரோடு கதிர்
    @ கேசவன் .கு
    @ அன்புடன் அருணா
    @ cheena (சீனா)

    நண்பர்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி
    வாழ்த்துகள்

    ReplyDelete
  9. ரொம்ப நல்ல கருத்துள்ள பகிர்வு.

    நன்றி :-)

    ReplyDelete
  10. 100 ஆவது பதிவைப் போட்டுவிட்டு இப்படி கம்முன்னு இருந்தல் என்ன பொருள் ?
    :)

    வாழ்த்துகள் சிவசு !

    ReplyDelete
  11. very nice. i have created new blog. more free resources links there. if have time just check and convert it to tamil. http://simplygetit.blogspot.com

    ReplyDelete
  12. சிங்கக்குட்டி...நன்றி நண்பரே

    henry J - thank you

    ReplyDelete
  13. \\கோவி.கண்ணன் said...

    100 ஆவது பதிவைப் போட்டுவிட்டு இப்படி கம்முன்னு இருந்தல் என்ன பொருள் ?
    :)

    வாழ்த்துகள் சிவசு !\\

    நன்றிகள் கோவியாரே..

    பதிவுலகில் என்னை அடிக்கடி ஊக்கப்படுத்தியவர்களில் முதன்மையான தாங்களே எனது நூறாவது இடுகையை, நான் குறிப்பிடாமலேயே கண்டுபிடித்து வாழ்த்திய இந்த பண்பு தங்களிடம் எனக்கு பிடித்தமானது.

    பிளாக்கர் டாஸ்போர்டில் 99 இடுகை என வந்தது. பதிவில் 100 இடுகை என வந்தால் விட்டுவிட்டேன்.:))

    ReplyDelete
  14. உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்வதை விட கோவி கண்ணன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை இங்கு எழுதி வைக்கின்றேன். சிங்கப்பூரில் இருந்தாலே சிந்தனைகள் கூட சிங்கம் போலத்தான் இருக்குமோ?

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)