"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, December 15, 2009

உடன்பாட்டு எண்ணங்கள்

இந்த பிரபஞ்சத்தில் எண்ண அலைகள் எங்கும் நிறைந்துள்ளன. நமது மனதிலிருந்து புறப்படும் எண்ண அலைகளுக்கு ஏற்ப, பிரபஞ்ச மனதிலிருந்து எண்ண அலைகள் நம்மை நோக்கியும் வருகின்றன.

பிரபஞ்சமனதின் மிக முக்கியமான செயல்களுள் ஒன்று  நமது எண்ண அலைகளுக்கு அதிக உணர்வூட்டி, வலுவூட்டி அதை நாம் இவ்வுலகில் நிறைவேற்றக் காரணமாக அமைவதே.

பிரபஞ்ச எண்ண அலைகள் ஒரு கடல் போன்றது. அதிலிருந்து அமுதமும் எடுக்கலாம், ஆலகால விசமும் எடுக்கலாம். நமக்கு எது வேண்டுமோ அதைத் தரும் அட்சயப்பாத்திரம் அது. உடன்பாட்டு (நேர்மறை) எண்ணமுடையார்க்கு அதே அளவு வலுவூட்டி அமுதை அளிக்கும்.  எதிர்மறை எண்ணமுடையவருக்கும் அதே அளவு வலுவை ஊட்டி ஆலகாலத்தை அளிக்கும்.

ஏனெனில் இறையருள் என்பது நமது மனநிலையைப் பொறுத்ததே.  நெல் விதைத்து முள் கொள்வாரில்லை. முள் விதைத்து நெல் கொள்வாருமில்லை.

ஏழை ஏழ்மையைப் பற்றி சிந்திக்க சிந்திக்க ஏழ்மையே பெருகும். நோயாளி நோயைப் பற்றிச் சிந்திக்க சிந்திக்க நோய் தீவீரமாகும். செல்வந்தன் செல்வம் பற்றிச் சிந்திக்க சிந்திக்க செல்வம் சேரும்.

ஏழை செல்வம் வருதல் பற்றி சிந்திக்க வேண்டும், நோயாளி உடல்நலம் பெறுதல் பற்றிச் சிந்திக்க வேண்டும். இருளினின்று ஒளிக்குச் செல்ல வேண்டும். இதுவே உடன்பாட்டுச் சிந்தனை. இத்தகைய நலம் பயக்கும் வார்த்தைகளைப் பேசப்பேச, சிந்திக்க சிந்திக்க சூழல் மாறும். இது நம் வாழ்வை உயர்த்தும்.

நீங்கள் பேசும், சிந்திக்கும், எழுதும் வார்த்தைகளை சிந்தனைக்கு எடுத்துக்கொள்ளுங்கள்.....நண்பரே :))

வாழ்த்துகள்

12 comments:

  1. உங்கள் எழுத்துக்கள் நல்ல செதுக்கப்பட்டுள்ளது .

    ReplyDelete
  2. ஏழை ஏழ்மையைப் பற்றி சிந்திக்க சிந்திக்க ஏழ்மையே பெருகும். நோயாளி நோயைப் பற்றிச் சிந்திக்க சிந்திக்க நோய் தீவீரமாகும். செல்வந்தன் செல்வம் பற்றிச் சிந்திக்க சிந்திக்க செல்வம் சேரும்.

    ஏழை செல்வம் வருதல் பற்றி சிந்திக்க வேண்டும், நோயாளி உடல்நலம் பெறுதல் பற்றிச் சிந்திக்க வேண்டும். இருளினின்று ஒளிக்குச் செல்ல வேண்டும். இதுவே உடன்பாட்டுச் சிந்தனை. இத்தகைய நலம் பயக்கும் வார்த்தைகளைப் பேசப்பேச, சிந்திக்க சிந்திக்க சூழல் மாறும். இது நம் வாழ்வை உயர்த்தும்.




    அருமையான விளக்கம்...

    ReplyDelete
  3. // நெல் விதைத்து முள் கொள்வாரில்லை. முள் விதைத்து நெல் கொள்வாருமில்லை//

    அருமை சிவா

    ReplyDelete
  4. நல்லதையே நினைத்து நரகத்துக்கும் போகலாம் என்று ஒரு ஆங்கில வசனம் கூட உண்டு! விவேகானந்தர் சிகாகோ நகரத்தில் ஆற்றிய உரை ஒன்றில் இருந்து, நீங்கள் பௌதீகம் அல்லது ரசாயனத்தில் தேர்ச்சி பெற வேண்டுமானால், பௌதீகம், ரசாயனம் என்று கத்திக் கொண்டிருப்பதால் மட்டுமே நடவாது, முனைந்து கற்கவேண்டும் என்று சொல்வது போல, எண்ணங்கள் நம்முடைய வாழ்க்கையில் முக்கியமான பங்கை வகிக்கின்றன.

    ஆனால், நீங்கள் சொல்வது போல, ஏழ்மையை பற்றிச் சிந்திப்பதனால்,ஏழ்மையும், செல்வத்தைப் பற்றிச் சிந்திப்பதனால் செல்வமும் உண்டாகிவிடும் என்றல்ல. நீங்கள் சொல்வது கனவு! கனவு அவசியம் தான்! கனவு மெய்ப்படக் காரியமும் அவசியம்! காரியம் கைகூடுவதில் இன்னும் பல அம்சங்கள் இருக்கின்றன. வேதாத்திரி மகரிஷி சொல்வது போல, வறுமை ஏன் ஏற்படுகிறது என்பதை நான் கண்டுகொண்டேன் என்று வெறுமனே சொல்வது அல்ல. காரணம் தெரிந்திருந்தால், காரியம் எளிதாக இருக்குமே! ஏன்நடக்கவில்லை?

    ReplyDelete
  5. பின்னூட்டத்தை பற்றி அதிகம் சிந்தித்தால் அதிக பின்னூட்டம் கிடைக்குமா?

    ReplyDelete
  6. வெற்றிகரமாக இன்று நுழைந்து உங்கள் நல்ல சிந்தனைகளை பெற்றுக்கொண்டேன்.

    ReplyDelete
  7. @ malar
    @ ஈரோடு கதிர்
    @ முனைவர்.இரா.குணசீலன்
    @ ஜோதிஜி

    நன்றி நண்பர்களே தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  8. \\கலையரசன் said...

    பின்னூட்டத்தை பற்றி அதிகம் சிந்தித்தால் அதிக பின்னூட்டம் கிடைக்குமா?\\

    நிச்சயம் உங்களுடைய எண்ணத்தின் அழுத்தத்திற்கேற்ப
    பின்னூட்டங்கள் வரும், நம்பிக்கையோடு இருங்கள்

    ReplyDelete
  9. \\நீங்கள் சொல்வது கனவு! கனவு அவசியம் தான்! கனவு மெய்ப்படக் காரியமும் அவசியம்! காரியம் கைகூடுவதில் இன்னும் பல அம்சங்கள் இருக்கின்றன.\\

    கனவு என பிரித்து பார்ப்பதை விட என் எண்ணமாக, என்னுள் இயல்பாக அது மாறினால் நடப்பதற்குரிய செயல் செய்ய நம்மை இட்டுச் செல்லும். இந்த எண்ணம் மட்டுமே போதும் என நான் சொல்லவில்லை. இது ஒரு ஆரம்பம் :))

    ReplyDelete
  10. கிருஷ்ணமூர்த்தி

    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் நண்பரே

    ReplyDelete
  11. அன்பின் சிவசு

    அருமையான இடுகை - எண்ணம் போல் வாழ்க என வாழ்த்துவார்கள் - நல்ல எண்ணங்களை சிந்திக்க வேண்டும்.

    நெல் விததிது முள் கொள்வாரில்லை
    முள் விதைத்து நெல் கொள்வாரில்லை.

    நன்று நன்று
    நல்வாழ்த்துகள் சிவசு

    ReplyDelete
  12. உடன்பாட்டு சிந்தனை என்பதை விட எதிர்மறை சிந்தனை என சொல்லலாம்.

    மிகவும் சிறப்பாக இருந்தது.

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)