"மத்திய தணிக்கைக் குழு அறிக்கையில், அரசு நிதியை, தவறான வழிகளில் செலவழித்து விட்டோம் எனக் குறிப்பிடப்படவில்லை' என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:மத்திய தணிக்கைக் குழு அளித்த அறிக்கையில், தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட, 121 கோடி ரூபாய், தமிழக அரசின் இலவச திட்டங்களுக்காக செலவழிக்கப்பட்டுள்ளது என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.
தவறான வழிகளில் செலவழித்து விட்டோம் என்று கூறவில்லை. இந்த செலவழிப்பு முரண்பாடானதோ, தவறானதோ அல்ல.
அரசு நிதியை தவறான வழியில் செலவழிக்கவில்லை, தணிக்கை குழு அறிக்கை குறித்து முதல்வர் தகவல்
இனி வருங்காலத்தில் இதோ போல் எல்லா நிதிகளும் செலவழிக்கப்படும் என்பதற்கான திமிர்த்தனமான பதில், எதிர்பார்த்ததுதான்.
மக்களை பிச்சைக்காரனாகவே, இலவசங்களை கொடுத்து, பதவி, பணம், புகழ் தன் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே பெற வேண்டும் என்கிற தெளிவான நோக்கத்துடன் இருக்கும் தானைத்தலைவர் கலைஞர் வாழ்க
தமிழன் என்ற பெருமையே நம்மை வாழ வைத்துவிடும் என வாய்சவாடல் இட்டுக்கொண்டு தமிழ்நாட்டிற்கு தொலைநோக்கோடு அடிப்படைவசதிகளான மின்சாரம், விவசாயத்திற்கும், குடிநீருக்கும் ஆதாரமாக ஏதேனும் புதிய அணை கட்டுதல், போன்றவை பற்றி சிந்திப்பது கூட இல்லை,
அண்டை மாநிலங்கள் போட்டி போட்டுக்கொண்டு அணை கட்டுவதைப் பார்த்தால் சற்றே பொறாமையாக இருந்தாலும் நமது நிலையை எண்ணி உள்ளூர வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை.
டிஸ்கி; இது முந்தய பதிவின் தொடர்ச்சி
அன்பின் சிவசு
ReplyDeleteஆதங்கம் புரிகிறது
நல்வாழ்த்துகள் சிவசு
கவலைப்படாதீர்கள் மாற்றங்கள் உண்டு???
ReplyDeleteவார்த்தை விளையாட்டு :(
ReplyDeleteஅதான இப்ப என்ன ஆகிப் போச்சுங்கிறீங்க....!
ReplyDeleteகொடுமைங்க, நானும் இது பற்றி எழுத நினைத்திருக்கிறேன்
ReplyDelete