"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, January 19, 2010

விலகி ஒன்றிணைவோம்

அன்புடன் கதிருக்கு

இது ஒரு மாற்றுப்பார்வை :)))

வலைத்தளம் நம்மைக் கட்டிப்போட்டது உண்மைதான். அதை உணர்ந்து நாம் வெளியே வராமல் இருக்கும்போதுதான், இந்த போதையில் நாம் மயங்கி இருக்கிறோம் என உணராதபோதுதான் நம் எழுத்துகள் திசை மாறுகின்றன.  மனிதம், நட்பு  மறக்கப்பட்டு, நானே பெரியவன் என்கிற அகந்தை, ஆணவம் என்ற உணர்வு மேலோங்கி விடுகிறது. விளைவுதான் தரமில்லாத எழுத்துகள் ஒருசில பதிவர்களிடமிருந்தும், படைப்பாளிகளிடமிருந்தும் :))

எதன் பொருட்டு எழுதுகிறோம் என்பது அனைவருமே சுயபரிசீலனை செய்துதான் எழுதுகின்றனர். அவர்களுக்கு சரி எனப்பட்டதைதான் எழுதுகின்றனர். சிலசமயங்களில் எழுத்து ஒருவிதமாகவும், செயல் ஒரு விதமாகவும் இருக்கும். அது அவர்கள் வலைபோதையில் இருக்கின்றனர் என்பதை காட்டும். அல்லது அவர்கள் குணமே அதுவாக இருக்கும். அதை அடையாளம் காணுவது நம் பொறுப்பு.

குடிபோதையில் இருப்பதுபோல் தான் இதுவும்,:)) 

சமுதாயத்தில் பார்க்கும் மக்கள்தானே வலைத்தளத்திலும், வேறு கிரகத்தில் இருந்து வந்துவிட்டார்களா என்ன!!  வலையுலகில் நட்பு ஒன்றே பிரதானமாக இருப்போம். அதில் ஒருவேளை கர்வம் கொண்ட படைப்பாளிகளிடமிருந்து அவசியமானால் விலகிக்கூட இருக்கலாம். இன்னும் சரியாகச் சொன்னால் நம்மைவிட சகல விதத்திலும் அவர்களை சாமர்த்தியசாலிகளாகவே பார்க்கிறேன்.

உங்களாலும் என்னாலும் நீதி, நேர்மை, உண்மை, அன்பு என்ற விசயங்களை தாண்ட முடியாது. ஆனால் அவர்களுக்கு இந்த துணிவு இருக்கிறது.
அவர்களை திருத்துவது நிச்சயம் வாசகர்களால் முடியாது. அவர்களாகவே உணர்ந்து திருந்தினால்தான் உண்டு. அதற்கு நமது எதிர்வினையாக, மாற்றுக்கருத்துகளைச் நேரடியாக இடுகையின்மூலம் சொல்லாம். ஒருவேளை அவர்களை இக்கருத்து சென்றடைந்து திருந்த வாய்ப்பு உண்டு.

ஒருவரது நோக்கத்தை ஒட்டியே செயல்பாடு உண்டு. எனவே செயலைத் திருத்தமுடியாது. எனக்கு இரண்டுகண்ணும் போனாலும் பரவாயில்லை, அவனுக்கு ஒரு கண்ணாவது போகவேண்டும் என நினைப்பவரும் உண்டு, மண்ணுக்கு போகிற ஒருவரது கண்களை இருவருக்கு வாழ்வில் ஒளிகூட்ட பாடுபடுவோரும் உண்டு. இதுதான் உலகம். இது பதிவுலகிலும் உண்டு.

இந்த குறுகிய நோக்கம் கொண்ட படைப்பாளிகளை விட்டு விலகுவதும், அவர்களை பொருட்படுத்தாமல் இருப்பதுமே நாம் அமைதியாக இருக்க வழி.
அவர்கள் செயலுக்கு அவர்கள் தகுந்த விளைவினை நிச்சயம் அனுபவிப்பர். அதற்கு நாம் கருவியாக இருக்க வேண்டியதில்லை.

சுக்கு நூறாக உடைப்பது நம் வேலை அல்ல. மாறாக ஒதுங்கி ஒத்த எண்ண்ம் கொண்டவர்களோடு ஒன்று சேர்ந்து வலையுலகம் என்பது என்ன, வலையுலகம் என்பது ஒரு ஆக்கபூர்வமான அமைப்பு என்று மாற்ற என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யலாம். சண்டை சச்சரவு என்ற கதைக்கு உதவாத பொழுதுபோக்க மட்டும் வலைப்பதிவு என்ற நிலையை மாற்ற முயற்சிப்போம்.

//* சக படைப்பாளிகளை தெருவில் சண்டையிடும் விலங்குகளெனவும், அவர்களின் படைப்புகளைக் குப்பைகளெனவும் சொல்ல வைக்கிறது.

* சக படைப்பாளியின் படைப்பினை கிழித்தெறியச் செய்கிறது, சாலையில் செல்லும் ஒரு பெண்ணைக் குறித்தான மனவக்கிரத்தை அப்பட்டமாக எழுதத் தூண்டுகிறது.

* சக எழுத்தாளனின் உடல்கூறுகள், உடலில் இயற்கையில் அமைந்த குறைபாடுகளைக் குறித்து குரூரமாகப் பேசவைக்கிறது.//

இதெல்லாம் தன் இருப்பை பதிவு செய்யும் தந்திரம்.
எப்படியாவது அனைவரின் கவனத்தை ஈர்க்கும் மலிவான யுக்தி, இதை புரிந்து கொண்டால் போதும்
.

அவர்கள் நிம்மதியாக எதை வேண்டுமானாலும் கிழிக்கட்டும், பேசட்டும், நாம் கவனிக்கவில்லை என்பது உறுதியானால் தானாக அடங்கிவிடும்.அவர்கள் அகந்தை.

ஒன்றிணைவோம், சாதிப்போம்.

மாப்பு இது உங்கள் இடுகைக்கு மாற்றுக்கருத்துதான். எதிர்வினை அல்ல :)))))

11 comments:

  1. இந்த குறுகிய நோக்கம் கொண்ட படைப்பாளிகளை விட்டு விலகுவதும், அவர்களை பொருட்படுத்தாமல் இருப்பதுமே நாம் அமைதியாக இருக்க வழி/// வழி மொழிகிறேன்.

    அவர்கள் செயலுக்கு அவர்கள் தகுந்த விளைவினை நிச்சயம் அனுபவிப்பர். /////////// இது கூட தேவையில்லை. அவர்கள் அனுபவிக்க வேண்டும் என்பதும் மனதின் வன்முறை தான்.

    ஒன்றிணைவோம், சாதிப்போம்.Fully agreed.

    ReplyDelete
  2. //நாம் கவனிக்கவில்லை என்பது உறுதியானால் தானாக அடங்கிவிடும்.அவர்கள் அகந்தை.//

    மிகச் சரி...

    தங்கள் மாற்றுக் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்

    நன்றி

    ReplyDelete
  3. butterfly Surya
    \\இது கூட தேவையில்லை. அவர்கள் அனுபவிக்க வேண்டும் என்பதும் மனதின் வன்முறை தான். \\

    மிக்க நன்றி சூர்யா. தங்களின் கருத்து மிக உன்னதமானது. இந்த மனோநிலை வாய்த்தால்...

    ReplyDelete
  4. "இது ஒரு மாற்றுப்பார்வை" என்று சொல்ல கூடாது, இது(நம் குறைகளை நாமே சரி செய்ய)இப்போது அவசியம் தேவையான ஒரு பார்வை.

    அத்தனை வரிகளும் அருமை, சூப்பர்.

    இதை பற்றி நான் உண்மையான ஒரு பின்னூட்டம் போடவேண்டும் என்றால் அதுவே ஒரு பாராட்டு இடுகை அளவு வந்து விடும்.

    இது போல இன்னும் நிறைய சிந்திக்க மற்றும் எழுத உங்களுக்கு என் வாழ்த்துக்கள் :-)

    "ஒன்றிணைவோம், சாதிப்போம்."

    ReplyDelete
  5. நாம் கவனிக்கவில்லை என்பது உறுதியானால் தானாக அடங்கிவிடும்.அவர்கள் அகந்தை
    ///

    மிக சரியாக சொன்னீர்கள்

    ReplyDelete
  6. //உங்களாலும் என்னாலும் நீதி, நேர்மை, உண்மை, அன்பு என்ற விசயங்களை தாண்ட முடியாது. ஆனால் அவர்களுக்கு இந்த துணிவு இருக்கிறது.//

    இதுதாண்ணே வாழ்கையில முக்கியம். நம்ம இதுக்கு பெருமைப்படணும்.

    //ஒன்றிணைவோம், சாதிப்போம்.//

    நானும் சேர்ந்துக்கிறேன்.

    ReplyDelete
  7. வாழ்த்துகள் சிவா. கதிர் நீங்கள் இரண்டு துருவமாய் ஒரே விசயத்தை தங்கள் பார்வையில் பார்த்து இருப்பது சிறப்பு. உண்மைகளை உரத்துப் பேசிய உங்கள் துணிச்சல் பாராட்டுக்குரியது.

    ReplyDelete
  8. சரியாதான் இருக்கு

    ReplyDelete
  9. அசத்துறீங்க பங்காளி!

    ReplyDelete
  10. அட்டகாசமான கருத்துகள்.

    ReplyDelete
  11. @ ஈரோடு கதிர்
    @ சிங்கக்குட்டி
    @ பிரியமுடன் பிரபு
    @ ரோஸ்விக்
    @ ஜோதிஜி
    @ ஆ.ஞானசேகரன்
    @ பழமைபேசி
    @ வெ.இராதாகிருஷ்ணன்

    நண்பர்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மனமார்ந்த நன்றி

    வாழ்த்துகள்

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)