"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, February 2, 2010

மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ள.. பகுதி ஒன்று

கடந்த காலத்தில் நமது வாழ்வில் நிகழ்ந்த துயரமான சம்பவங்களை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து வருந்துவது மனத்திலிருந்து எடுத்தெறிய வேண்டிய தொல்லைகளில் முதன்மையானது.

நம் ஒவ்வொருவருக்கும் எதாவது ஒருவகையில் நம் மனதிற்கோ, உடலுக்கோ துன்பம் தரும் நிகழ்வுகள் நடந்திருக்கும்.. நம்மை காத்து வளர்த்த தாய்,தந்தை, நெருங்கிய உறவினர் மறைந்திருக்கலாம்.

தொழில் சூழ்நிலைகளினால், பல்வேறு காரணங்களினால் நஷ்டம் ஏற்பட்டு இருக்கலாம். மிகவும் நம்பியவர்களால் ஏமாற்றப்பட்டு இருக்கலாம்,

பிறர் நம்மை புரிந்து கொள்ளாமல் அவமதித்திருக்கலாம்,

இந்த விசயங்கள் எல்லாம் நமக்கு ஒரு படிப்பினையாக, ஒரு அனுபவமாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் அந்த அளவில் ஆராய்வதோடு, உணர்ந்து கொள்வதோடு, யோசித்து முடிவெடுப்பதோடு நிறைவு செய்து கொள்ள வேண்டும்.

மாறாக நினைத்து நினைத்து வருந்துவது, கவலைப்படுவது என்பது நமது மனம் நிகழ்காலத்தில் இயங்குவதை தடுத்து இறந்தகாலத்தில் சஞ்சரிக்கும் நிலையையே ஏற்படுத்தும்.

விளைவு இனிமேல் நடக்க வேண்டிய செயலில் நம் கவனம் சிதறும். நமது செயல்வேகம் குறையும். உறவுகளில் சிக்கல்கள் நம்மால் வரலாம். பலன் இதிலும் இன்னும் நட்டம், இழப்பு, இந்த நிலை நமக்கு தேவையா? என சிந்திப்போம். 

மீண்டும் மீண்டும் அதை நினைத்து வருந்துவதால் நேரம் வீணாவதோடு மனம் இன்னும் பல்வீனமடைகிறது. அது அதிகமாகிறபோது அது உடல் நோயாக மாறிவிட வாய்ப்புகள் அதிகம்.


ஏனெனில் நடந்து முடிந்த ஒரு செயலை யாராலும் மாற்ற முடியாது. என்ன வருத்தப்பட்டாலும் நடந்தது நடந்ததுதான். போனது போனதுதான். அதிலிருந்து வெளியே வந்தால் ஒழிய அடுத்த கட்டத்திற்கு நம்மால் முன்னேற முடியாது



இதற்கு மனதை வேறு பல நல்ல வழிகளில் திருப்பலாம். எந்த வழி என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்..

அருள்கூர்ந்து, நடந்து முடிந்த துன்ப அனுபவங்களை மனதிலிருந்து அகற்றுங்கள். இதுவே பலவழிகளிலும் நாம் முன்னேற வழி.

வாழ்த்துகள்

13 comments:

  1. அருமையான பதிவு. நிகழ்காலத்தில்...

    நீங்க சொல்றது புரியுது. ஆனா இந்தப்பாழாப்போன மனசு கேக்காமாட்டேங்குதே.

    நாமாத்தான் மாறணும். மாறுவோம்.

    ReplyDelete
  2. \\கண்ணகி said...

    அருமையான பதிவு. நிகழ்காலத்தில்...

    நீங்க சொல்றது புரியுது. ஆனா இந்தப்பாழாப்போன மனசு கேக்காமாட்டேங்குதே.

    நாமாத்தான் மாறணும். மாறுவோம்.\\

    நண்பரே சில சமயம் மனதில் என்ன நடக்கிறது என புரிந்து கொள்ள இயலாமல் தவிப்போம்.

    இப்போது காரணத்தை அந்த மனமும் தெரிந்து கொண்டது. அது தகுந்த சமயத்தில் நம்மை விழித்துக்கொள்ளச் செய்யும்

    இந்த செய்தி மனதில் ஒரு ஓரத்தில் பதிவானால் போதும் :))

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  3. ம்ம்... என்னதான் சொன்னாலும் மனசை மாத்தறது அவ்வளவு எளிதில்லையே, நல்லதொரு அருமையான பதிவு.

    ReplyDelete
  4. பயனுள்ள இடுகை

    ReplyDelete
  5. //கடந்த காலத்தில் நமது வாழ்வில் நிகழ்ந்த துயரமான சம்பவங்களை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து வருந்துவது மனத்திலிருந்து எடுத்தெறிய வேண்டிய தொல்லைகளில் முதன்மையானது.//

    நிஜமான விடயம்..நல்ல பகிர்வு

    ReplyDelete
  6. மனதை எப்போதும் உற்சாகமாக வைத்திருக்கவே முடியாது.ஏன்எனில் உற்சாகமும் தற்காலிக மனம்தான்,சிவா!

    ReplyDelete
  7. உற்சாகம் என்பது உற்சாக பானம் மூலமாக மாறியுள்ளது. கடந்த கால பதிவுகளில் இருந்து விடுபட ஆன்மீகம், தன்முனைப்பு நூல்கள், ஆறுதல்கள் என்று எத்தனை தூரம் உள்வாங்கினாலும் அந்த சோகத்தை உள்வாங்கி சோகமாக எடுத்துக்கொள்ளாமல் சுகமாக மாற்றி ஆராயும் மனப்பாங்குக்கு எடுத்துக்கொள்ளும் சூழ்நிலையை ஒருவன் எடுத்துக்கொண்டாலே பணம் இல்லாத குணம் போகாத வாழ்க்கை அமைந்து விடும். நல்ல சிந்தனைகள் சிவா.

    ReplyDelete
  8. நல்ல பதிவு தொடருங்கள் நண்பா

    ReplyDelete
  9. \\Sangkavi said...

    அருமையான பதிவு....\\


    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  10. \\V.Radhakrishnan said...

    ம்ம்... என்னதான் சொன்னாலும் மனசை மாத்தறது அவ்வளவு எளிதில்லையே, நல்லதொரு அருமையான பதிவு.\\

    :)) மனசை மாத்துவது எளிதுதான். அந்த வேலையை அதே மனதைக் கொண்டுதான் செய்ய வேண்டும்.

    தொடர் முயற்சியும் விழிப்பும் இருந்தால் ம்னம் நிச்சயம் நம் கட்டுப்பாட்டில் வரும்.

    வருகைக்கு நன்றியும் வாழ்த்துகளும் நண்பரே

    ReplyDelete
  11. @ anrasitha

    @ புலவன் புலிகேசி

    @ ஆ.ஞானசேகரன்

    நண்பர்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  12. \\ஷண்முகப்ரியன் said...

    மனதை எப்போதும் உற்சாகமாக வைத்திருக்கவே முடியாது.ஏன்எனில் உற்சாகமும் தற்காலிக மனம்தான்,சிவா!\\

    எப்போதும் துன்பகரமாகவே வைத்துக் கொள்ள வேண்டாம் என வலியுறுத்துகிறேன்.

    எல்லாமே மனதின் விளையாட்டுதான்.
    மனமற்ற நிலை தவிர்த்து வேறு எந்த நிலையும் மனதிற்கு தற்காலிகம்தான்.

    தங்களின் கருத்துக்கு மகிழ்கிறேன் சகோ.

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)