"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Wednesday, March 24, 2010

வார்த்தைகளின் தன்மைகள்


ஒருவன் பொருள் அறிந்து கூறினாலும், பொருள் அறியாமல் கூறினாலும், எந்த வார்த்தை எதைச் சுட்டுகிறதோ, அது நடந்தே தீரும்.


எப்படி என்றால் தீ சுடுவதைப் போலவும், மலர்கள் நறுமணத்தைத் தருவது போலவும், வார்த்தைகளும் சுடும். மணமும் வீசும்.

நல்ல வார்த்தைகள் சொல்லப்படும்போது உணர்ச்சியுடன் சொல்லப்படுதல் வேண்டும், அப்போதுதான் அது மிக வேகமாக எய்யப்பட்ட அம்புபோல இலக்கைத் தாக்கும். சொன்னதைச் செய்யும்.

வார்த்தைகள் என்பது விதைகள் போல, அதிலிருநது விளைவது எண்ணங்கள் எனும் மொட்டுகள்,  செயல்களே கனிகள்.


அன்பான வார்த்தைகள் தன்னம்பிக்கையைக் கொடுக்கலாம்.
எழுச்சியான வார்த்தைகள் வெற்றியைத் தரலாம்.
ஊக்கமான வார்த்தைகள் சோகத்தை விரட்டலாம்.
கருணையான வார்த்தைகள் அருட்சூழலைப் பெருக்கலாம்
தன்னம்பிக்கையான வார்த்தைகள் மனச்சோர்வை விரட்டலாம்
நன்றியான வார்த்தைகள் உதவிகளை ஈர்க்கலாம்
நகைச்சுவை வார்த்தைகள் இறுக்கத்தைத் தவிர்க்கலாம்
பணிவான வார்த்தைகள் மரியாதையைக் கூட்டலாம்
பொறுமையான வார்த்தைகள் கோபத்தை விரட்டலாம்
வாழ்த்துகிற வார்த்தைகள் வெறுப்பை விரட்டலாம்.


பேசும் மனிதர்கள், கேட்கும் நப்ர்கள்....இடம்....காலம்....வார்த்தைகளின் அழுத்தம்,...தொனி.. பொருள்...சூழல்...நமது உணர்வுகள் ஆகியவற்றைப் பொறுத்து வார்த்தைகளின் வடிவங்களும், பொருள்களும் மாறலாம்.


வார்த்தைகள் நம் கட்டுப்பாட்டில் இருந்தால் வாழ்வில் வெற்றிகரமான இனிமை நிலவும் சந்தேகமில்லை.

இனி பேசும்முன்னர் முடிந்தால் ஒருவிநாடியேனும் தாமதித்து, அதன் பொருளுணர்ந்து உரையுங்கள்.

வாழ்த்துகள்

13 comments:

  1. உண்மைதான், வார்த்தைகள் மிக வலிமையானது, யோசித்து பேச வேண்டும்.

    ReplyDelete
  2. பெயரெல்லாம் மாற்றி இருக்கிங்க......சொல்லவே இல்லை!

    ReplyDelete
  3. \\சைவகொத்துப்பரோட்டா said...

    உண்மைதான், வார்த்தைகள் மிக வலிமையானது, யோசித்து பேச வேண்டும்.\\

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  4. \\கோவி.கண்ணன் said...

    பெயரெல்லாம் மாற்றி இருக்கிங்க......சொல்லவே இல்லை!\\

    நியூமரலாஜிதான்...அவ்வ்வ்....

    ReplyDelete
  5. //தோழி said...

    உண்மை தான்...//

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள் சகோ.,

    ReplyDelete
  6. வார்த்தைகள் நம் கட்டுப்பாட்டில் இருந்தால் வாழ்வில் வெற்றிகரமான இனிமை நிலவும் சந்தேகமில்லை.


    ...........உண்மை. வார்த்தை அணுசக்தி போல. ஆக்கவும் பயன் படுத்தலாம் - அழிக்கவும் பயன் படுத்தலாம்.

    ReplyDelete
  7. சரியாகச் சொன்னீர்கள் நண்பரே.

    ReplyDelete
  8. நகைச்சுவை வார்த்தைகள் இறுக்கத்தைத் தவிர்க்கலாம்
    பணிவான வார்த்தைகள் மரியாதையைக் கூட்டலாம்
    பொறுமையான வார்த்தைகள் கோபத்தை விரட்டலாம்
    வாழ்த்துகிற வார்த்தைகள் வெறுப்பை விரட்டலாம்.


    நூற்றுக்கு நூறு உண்மை நண்பரே.

    ReplyDelete
  9. நான் எழுதிய ஒரு கவிதை ஞாபகத்துக்கு வந்து போனது, அருமையான பதிவு சிவா அண்ணா.

    ReplyDelete
  10. இதைத்தான் யாகாவராயினும் நாகாக்க என்றார் வள்ளுவர்..

    ReplyDelete
  11. வாழ்க வளமுடன்... :-)

    ReplyDelete
  12. ''''இனி பேசும்முன்னர் முடிந்தால் ஒருவிநாடியேனும் தாமதித்து, அதன் பொருளுணர்ந்து உரையுங்கள்.'''

    நல்ல பதிவு...

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)