நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். மெளனம் மனதினுள் இருந்தால் வார்த்தைகள் அன்பானவையாக மாறியே தீரும். ஏனெனில் பிரியமற்ற வார்த்தைகள் உயிர் குடிக்கும் அம்புகள் என்பதை நாமறிவோம்.
நம்மால் சொல்லப்படுகிற வார்த்தைகள் முதலில் நம் நெஞ்சில் பதிகின்றன. திரும்பத் திரும்பச் சிந்தித்தலும் மனக்காட்சியும் தானாக நடக்கின்றன. இந்த நம்பிக்கையான, உடன்பாடான எண்ணங்கள் பொருளோ, அருளோ இருப்பதைப் பெருக்கும். நெஞ்சில் காக்கப்பெறாத எந்த எண்ணமும் வெளி உலகில் நிறைவேறாது.
வலையுலகத்தை இதற்கான களமாகக் கூட கொள்ளலாம். நம் எழுத்து எப்படி இருக்கிறது, அது நம் வாழ்வில் எந்த மாற்றத்தை கொண்டு வருகிறது என்பதை கூர்ந்து கவனியுங்கள்.
எவரையும் காயப்படுத்தாத எழுத்து சாத்தியமா என்பதையும் யோசிப்போம். கருத்துப் பகிர்வில் மாறுபாடு வரும்போது அதை எதிர்கொள்ளும் பாங்கு எப்படி என்பதை கவனிப்போம்.
வானம் வசப்படுவதன் ஆரம்பம் வார்த்தைகளில்; வளர்வது ஆழ்மனதில்; முற்றுப்பெறுவது உழைப்பில்.கனவுகள் கைகூடுவதும் உழைப்பால்தான், சோர்வின்றி உழைப்போர் ஊழையும் உட்பக்கம் காண்பர்.
படைப்பாக்கம் இல்லாத நாக்கு (எழுத்தும்) நம்மையும், பிறரையும் அழிவுக்கு ஆளாக்கும். அது கரிநாக்கு:))
நம்பிக்கையான உடன்பாடான வாழ்வு வாழவேண்டும் என்ற எண்ணமில்லாத நெஞ்சே, நம்மை வறுமையிலே ஆழ்த்தும். ஆகவே எண்ணத்தை மாற்றுங்கள். வாழ்வே மாறும். இதுதான் முயற்சி என்பது...
மனம் பெரும்பாலும் எதிர்மறையாக இருப்பதே அதன் இயல்பு.,இதுவே விதியும் கூட..
சரி. தலைப்பிற்கு வருவோம் :))
வில்லின் நாணில் பூட்டக்கூடிய அம்பை வைக்கும் இடமே அம்பறாத்தூணி
அதேபோல் நமது நாக்குதான் அந்த அம்புறாத்தூணி, அதில் இருப்பதே சொல்அம்புகள்...
அதிலிருந்து சொல்லம்பை எய்தால், அது எதற்காக எய்யப்பட்டதோ அது நிறைவேறியே தீரும்..
மலரைச் சொரிவதும் வார்த்தைகள்தான், மனிதனை வீழ்த்துவதும் வார்த்தைகள்தான்.
சரியான வார்த்தை என்பது ஒரு மகத்தான சக்தி. எப்பொழுதெல்லாம் இத்தகைய ஆழ்ந்த கருத்துடைய சரியான வார்த்தை நமக்குக்கிடைக்கிறதோ, அப்போது சரீரம், மற்றும் ஆன்மீக சம்பந்தமான விளைவுகள் உடனே ஏற்படும்.
வார்த்தைகளை தேர்ந்தெடுத்து எண்ணுவோம், பேசுவோம், எழுதுவோம்,
வாழ்த்துகள்
ஆழ்மனதிலிருந்து வரும் வார்த்தைகள்.. நல்லாருக்கு...
ReplyDelete///மலரைச் சொரிவதும் வார்த்தைகள்தான், மனிதனை வீழ்த்துவதும் வார்த்தைகள்தான்.///
ReplyDelete//சரியான வார்த்தை என்பது ஒரு மகத்தான சக்தி. எப்பொழுதெல்லாம் இத்தகைய ஆழ்ந்த கருத்துடைய சரியான வார்த்தை நமக்குக்கிடைக்கிறதோ, அப்போது சரீரம், மற்றும் ஆன்மீக சம்பந்தமான விளைவுகள் உடனே ஏற்படும்.///
இதை எல்லோரும் உணர்ந்தால் உலகில் பிரச்சனைகளுக்கே இடம் இருக்காது...
நல்ல வளமான சிந்தனை..
அறிவே தெய்வம் என்பது உண்மை தான்...
//மலரைச் சொரிவதும் வார்த்தைகள்தான், மனிதனை வீழ்த்துவதும் வார்த்தைகள்தான்//
ReplyDeleteஎல்லாம் தெரிஞ்சாலும், அவசியமான அந்தச் சமயங்களில் நாவடக்கம் என்பது கொஞ்சம் என்ன ரொம்பவே சிரமமாகிவிடுகிறது.
சரியான வார்த்தை என்பது ஒரு மகத்தான சக்தி. எப்பொழுதெல்லாம் இத்தகைய ஆழ்ந்த கருத்துடைய சரியான வார்த்தை நமக்குக்கிடைக்கிறதோ, அப்போது சரீரம், மற்றும் ஆன்மீக சம்பந்தமான விளைவுகள் உடனே ஏற்படும்.
ReplyDelete..........தெளிவாக விஷயத்தை, அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்.
மிக அருமையாக உள்ளது.
ReplyDeleteநல்லாயிருக்கு பாஸ்.
ReplyDelete