(1) இஸ்ரேல் நாட்டின் யூதர்கள் பேசும் எபிரேய மொழி (ஹீப்ரு மொழி), இயேசுநாதர் பேசிய மொழி
(2) ரோமானியர்கள் பேசிய லத்தீன் மொழி.
(3) கிரேக்கர்கள் பேசிய கிரேக்க மொழி
(4) மத்திய ஆசியாவின் ஆரியர்கள் பேசிய சமஸ்கிருத மொழி
(5) சீனர்கள் பேசும் Mandrine எனப்பெறும் சீனமொழி
(6) நம் தாய்மொழியாகிய தமிழ்மொழி
இவற்றுள் நான்கு மொழிகள் தம் தனித்தன்மையை இழந்து பிற மொழிகளில் கலந்து ஒட்டுக்குடித்தனம் நடத்தி உயிர் வாழ்கின்றன. அவற்றை பேசிவந்த இனத்தவர்களும் தங்கள் அறிவு, திறமை, புகழ், பண்பாடு, நாகரீகம் போன்றவற்றை இழந்து ஒட்டுண்ணிகளாய் உயிர் வாழ்கின்றனர்.
லத்தீன் மொழியைப் பேசி வந்த நாடாகிய ரோமானியப் பேரரசுதான் இன்றைய இத்தாலி! மாஃபியா கும்பலின் தலைமையிடமாக மாறி, உலகின் பார்வையில் கேவலப்பட்டு நிற்கும் நாடாக மாறியதற்குக் காரணம் தன் தாய்மொழியாகிய லத்தீனை ஆங்கிலத்துடன் கலந்து உயிர் இழக்கச் செய்ததுதான்.
சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், பிளாட்டோ என உலகம் வியக்கும் அறிஞர்களைப் பெற்றிருந்த கிரேக்கநாடு இன்று இருந்த இடம் தெரியாமல் இருப்பதற்குக் காரணம் தம் தாய்மொழியாகிய கிரேக்க மொழியை ஆங்கிலத்துடன் கலந்து உயிர் இழக்கச் செய்ததுதான்.
தம் அறிவாலும், திறமையாலும், ஒற்றுமையாலும் இன உணர்வாலும் பல நாடுகளின் பொருளாதாரத்தைக் கைப்பற்றி வாழ்ந்த யூதர்கள், ஜெர்மனி நாட்டில் ஆரிய இன வெறியுடன் திகழ்ந்த அடால்ப்ஃ ஹிட்லரிடம் அடிவாங்கி நொந்த பிறகுதான் தமக்கு என தனிநாட்டை உருவாக்க முயன்று வெற்றியும் பெற்றனர். அதுதான் இன்றைய இஸ்ரேல். அந்தக்காலத்து ராக்பெல்லர் முதல் இந்தக் காலத்து பில்கேட்ஸ் வரை உலகக் கோடீசுவரர்கள் அனைவரும் யூதர்கள்தாம். ! மங்காத இன உணர்வாலும், இன ஒற்றுமையினாலும் இழந்த நாட்டை அவர்கள் மீண்டும் பெற்றார்கள். இழந்த மொழியை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியில் மும்முரமாய் உள்ளனர்.
சமஸ்கிருதத்தைப் பொறுத்தவரை தனக்கென தனிநாடு, தனிமக்கள் என எந்தச் சிறப்பும் இன்றி உலகின் சகல மொழிகளிலும் கலந்து ஓர் ஒட்டுண்ணி மொழிஆக உயிர் வாழ்ந்து வருகிறது. அது ஒரு மூலமொழி என்பதால் தன் உயிர்ப்பை இன்னும் இழக்காமல் வாழ்கிறது.
அன்று கண்டமேனிக்கு அழிவில்லாமல் ஆதிகாலம் முதல் அப்படியே வாழ்ந்து, வளரும் மொழிகள் என்றால் அவை இரண்டுதாம். சீன மொழியும், தமிழ் மொழியுமே அவை. இதை அடிக்கடி தமிழர்களுக்கும்,உலகத்திற்கும் நினைவூட்ட வேண்டிதான் உலகத்தமிழ் மாநாடுகள், உலகத்தமிழ் செம்மொழி மாநாடுகள் என நடத்தி வருகின்றனர் அரசியல் தலைவர்கள்.
ஓர் இனத்தின் ஞானம் எனபது அந்த மொழியின் நீண்ட வரலாற்றையும், ஆழத்தையும் பொறுத்தே அமையும். அந்த வகையில் நாம் கொடுத்து வைத்தவர்கள். நம் மொழிக்கென தனி எழுத்து உண்டு. பிற மொழிகளில் இருந்து எழுத்தையோ, சொற்களையோ கடன் வாங்க வேண்டிய தேவையோ அவசியமோ நம் தமிழ் மொழிக்கு கிடையாது.
சகல இலக்கணங்களுடன், ஞானத்துடனும் காலத்தை வெல்லும் திருமறைகளுடனும் திகழும் தங்கம் போன்ற நம் மொழியை எந்த அளவு மதிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தமிழ்மொழியில் நாம் தெளிவுடன் இருந்தால் மட்டுமே திருக்குறள், திருவாசகம், தேவாரம், திருவருட்பா போன்ற திருமறைகளில் உள்ள ஞானத்தை பெற முடியும். எனவே தமிழ் மொழியில் படிப்பது, தமிழ்மொழியைக் கற்பது என்பதும் தமிழைக் காப்பாற்றுவதற்கு அல்ல. நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ளத்தான் என்ற உண்மையை ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஓர் அற்புதமான செம்மொழியை தாய்மொழியாகப் பெற்ற நமக்குத் தனியாக தமிழ்நாடு என்ற ஒரு நாடு இல்லாதது பெரும் குறைதான். போரடிப்பெற முடியாவிட்டால், இஸ்ரேல் நாட்டை யூதர்கள் விலை கொடுத்து வாங்கியதுபோல் நாமும் நன்கு சம்பாதித்து கோடீஸ்வரர்களாக உயர்ந்து, விலை கொடுத்தாவது ஒரு நாட்டை/பெரும் தீவை வாங்க வேண்டும். ஞானம் வந்தால் பணம் தானாக வரும். எனவே அச்சமின்றி உழைப்போம்.
மொழியை இழந்த இனம் தன் ஞானத்தை இழக்கும், நாகரீகத்தை, பண்பாட்டை இழக்கும். ஆகவே நம் தாய்மொழியை நெஞ்சில் வைத்துப் போற்றுவோம்.
நன்றி: ஏபரல் 2010 கவனகர் முழக்கம் மாத இதழ்
http://ww1.4tamilmedia.com/index.php/2009-04-19-22-56-08/2009-04-19-23-05-09/6975-2010-06-22-05-59-01
ReplyDeleteஇதைப் படித்தவுடன் ஏற்பட்ட உணர்வில் பகிர்ந்த இடுகை இது..
வாழ்த்துகள்..
தேசப் பிரிவினையை தூண்டும் இந்த பதிவை வன்மையாக கண்டிக்கிறேன்.
ReplyDeleteஇந்தியா என்ற பரந்த உப கண்டமே எமக்கு போதும்.
இத்தாலி மிக சிறப்பகாதன் இருக்கிறது. கொள்ளை கார நாடு எல்லாம் இல்லை.
இடுகையை முழுமையாக படியுங்கள்,
ReplyDeleteதனியாக ஒரு தீவையாவது வாங்குவோம் என்று தெளிவாக இருக்கிறது.
தனித்தமிழ்நாடு பிரித்துக்கொடு எங்கே சொல்லி இருக்கிறது :))
இத்தாலி குறித்து நான் நடுநிலை வகிக்கிறேன்.
தமிழுக்கென நாடிருந்திருந்தால் பல்லாயிரம் தமிழ்ர் வாழ்விழந்து நிற்க வேண்டிய அவலம் நேர்ந்திருக்காது.
ReplyDeleteஎதிர்காலத்திலாவது மீண்டும் வராமலிருக்க வேண்டும் என்கிற ஆதங்கத்தில் பகிர்ந்த கருத்துதான்.
தனித் தமிழ் நாடு இருந்தால் நன்று. ஐயா......ஆனால் இருந்த ஒரே ஒரு ஈழத்தையும் தமிழனின் ஒற்றுமை இன்மையால் சிங்களத்திடம் பறிகொடுத்து இருக்கின்றோம். தங்களின் கருத்து சிறப்பிக்கபட வேண்டிய ஒன்று .
ReplyDelete//ராம்ஜி_யாஹூ said...
ReplyDeleteதேசப் பிரிவினையை தூண்டும் இந்த பதிவை வன்மையாக கண்டிக்கிறேன்.
//
என்ன கொடுமை சரவணன் இது?
//விலை கொடுத்தாவது ஒரு நாட்டை/பெரும் தீவை வாங்க வேண்டும்//
ReplyDeleteஇது மிகச் சிறந்த, எவருக்கும் இடையூறு இல்லாத ஒன்று. பெரிதும் வரவேற்கிறேன்.
u buy , own any land away from Indian ocean, bay of bengal, arabic sea no issue. but dont try to develop plots within India.
ReplyDelete//ஞானம் வந்தால் பணம் தானாக வரும்// எப்படி?
ReplyDelete//இந்தக் காலத்து பில்கேட்ஸ் வரை உலகக் கோடீசுவரர்கள் அனைவரும் யூதர்கள்தாம்//
ReplyDeleteReally?
//எபிரேய மொழி, இயேசுநாதர் பேசிய மொழி
ReplyDelete//
Aramaic not Hebrew?
//தேசப் பிரிவினையை தூண்டும் இந்த பதிவை வன்மையாக கண்டிக்கிறேன்.
ReplyDelete//
May I ask you why this article tantamounts to dividing the country?
Indian said...
ReplyDelete//எபிரேய மொழி, இயேசுநாதர் பேசிய மொழி
//
Aramaic not Hebrew?
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF
இந்த தகவல் போதுமானதாக இருக்கும் என நினைக்கிறேன்...
ராம்ஜி_யாஹூ said
ReplyDelete\\but dont try to develop plots within India. \\
நாடுகள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் ஓர்உலக ஆட்சி வேண்டும், அனைத்து நாட்டு இராணுவமும் துயர்துடைக்கும் பணியில் மட்டுமே ஈடுபடவேண்டும் என்ற வேதாத்திரிமகானின் கருத்துகளை மனதில் ஏற்று இருக்கிறேன்.
வாட்டிகன் மாதிரி தமிழுக்கு சுயலாப அரசியல் அற்ற ஒரு அமைப்பு வேண்டும் என்ற ஆசைதான்
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே...
//jagadeesh said...
ReplyDelete//ஞானம் வந்தால் பணம் தானாக வரும்// எப்படி?//
மனதை பக்குவப்படுத்தினால் பணம் வரும். அதை தக்க சமயத்தில் இடுகையாக போடுகிறேன்.
அது ஒன்றும் பெரிய விசயமில்லை, நீதி நேர்மை நியாயம், என்ற விசயங்களுக்கு கட்டுப்பட்டு பிறர் நலம் பேண விழைந்தால் தானாக பணம் வரும்.
\\May I ask you why this article tantamounts to dividing the country?\\
ReplyDeleteவித்தியாசம் உள்ளது.
எனக்கு வேண்டியதை இன்னொருவரிடமிருந்து கேட்டு வாங்குவதற்கும், (புரட்சி...)
நானே சம்பாதித்துக்கொள்வதற்கும் உள்ள வித்தியாசம், (திரட்சி...)
என்னுடைய ஜனநாயக கடமையை செய்து உள்ளேன். இது போன்ற ஆழமான விசயங்களை மேம்போக்காக கும்மி அடிக்க விரும்பவில்லை. மீண்டும் ஒரு முறை வருகின்றேன்.
ReplyDelete**
ReplyDeleteIndian said...
//எபிரேய மொழி, இயேசுநாதர் பேசிய மொழி
//
Aramaic not Hebrew?
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF
இந்த தகவல் போதுமானதாக இருக்கும் என நினைக்கிறேன்...
**
அரமேயம் 3000 ஆண்டு பழமையை கொண்ட செமிடிக் மொழி ஆகும். இது வரலாற்றின் பல இராச்சியங்களின் ஆட்சி மொழியாகவும் வழிபாட்டு மொழியாகவும் காணப்பட்டது. தானியே , எஸ்ரா என்ற விவிலிய நூல்களின் மூல மொழியாகும். அறமைக் இயேசுவின் தாய்மொழியாக காருதப்படுகிறது. நவ-அறமைக் மொழி இன்று பல மக்கள் கூட்டங்க்களால் பேசப்படுகிறது. இவர்கள் சிதறிவாழ்கிறார்கள். முக்கியமாக அசிரியர்களால் பேசப்பட்டுகிறது.
:)
எபிரேய மொழி
ReplyDeleteஏறத்தாழ கிபி 2ம் நூற்றாண்டளவில் வழக்கற்று இருந்த எபிரேய மொழி மீண்டும் கிபி 19ம் நூற்றாண்டில் ஹஸ்கலா விழிப்புணர்வு (en:Haskalah) இயக்கம் வழி, மொழியியல் அறிஞர் எலியேசர் பென்-யெஃகுடா (Eliezer Ben-Yehuda) வின் பெரு முயற்சியால் மீண்டும் வழக்குக்கு வந்துள்ளது.
ஈழவாழ்/வாழ்ந்த தமிழர்களிடையே ஒற்றுமை இல்லை... இங்கே தமிழகத்தில்... மத்திய அரசு நிறுவனங்களின் செயற்பாட்டில் நூறில் ஒரு பங்கு கூட மாநில அரசு நிறுவனங்கள் செயற்படுவதில்லை... இந்த லட்சனத்தில் நமக்கு தனிநாடு கிடைத்தால் கருணாநிதி, கலாநிதி, ஜெயலலிதா க்கு அனைத்து சொத்துக்களையும் எழுதி வைத்துவிட்டு, தமிழன் தலையில் துண்டைப் போட வேண்டியதுதான்.... தேர்தல் சத்தியமாக நடக்காது... மக்களாட்சி நிச்சயம் காணாமல் போகும்...
ReplyDelete