"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, July 12, 2010

வயிறு காலியாவது பற்றி..... (உடல்நலம்)

பலபேர் மலத்தைப் பற்றி நினைக்கவும், பேசவும் கூட கூச்சப்படுகிறார்கள். வெளிக்கு எப்படி போகுதுன்னு கேட்டால், ”ஓ! அதெல்லாம் நார்மல், தாரளமாப் போய்விடுவேன். காலையில் எழுந்தவுடன் போய்விடுவேன். முதல் வேலையே இதுதான் “ என்பர். உண்மை வேறாக இருக்கும்.



அதைப்பற்றி கொஞ்சம் அலசும் முயற்சிதான் இது..

1.அதிகாலை எழுந்தவுடன் சில நிமிடங்களுக்குள் மலம் கழிய வேண்டும். அது ஓரிரு நிமிட வேலையாக முடிந்து விட வேண்டும். பெரும் முயற்சி இருக்கக் கூடாது :)

2.மலம் உடலிலிருந்து ஒரே கயிற்றுத்திரிபோல் கழன்று வந்துவிடவேண்டும். வெளியே தள்ளுவதற்கு அதிக முயற்சியோ, அழுத்தமோ இருக்கக் கூடாது. ஒரு பெரிய குழாயிலிருந்து சிறிய துண்டுக்குழாய் கழன்று வருவது போல வரவேண்டும்.

3.மலத்தின் மேல் சளிபோன்ற ஒரு படலம் இருக்கவேண்டும். மாட்டுச் சாணத்தின் மேல் இவ்வித சளிப்படலத்தைக் காணலாம்.

4.மலத்தில் துர்நாற்றம் இருக்கக்கூடாது

5.மலம் கழிந்தவுடன் வயிறு காலியான உணர்வு இருக்க வேண்டும். சோம்பலில்லாமல் சுறுசுறுப்பாக வேலை செய்யத் தகுதியாகவும் இருக்க வேண்டும்.

6.மலம் கழித்தபின் சிறிது நேரம் கழித்து மீண்டும் அது வருமாறு, உள்ளே தங்கி இருக்கக் கூடாது.

7.பசைபோல் மலம்கழிக்கும் இடத்தில் ஒட்டக்கூடாது. முன்போ பின்போ வயிற்றை வலிக்கக்கூடாது, எரிச்சல் அரிப்பு இருக்கக்கூடாது.

இப்படி இருந்தாத்தான் அது நார்மல், இல்லைன்னா அதுக்குப் பெயர்தான் மலச்சிக்கல், சரி இதை எப்படி சரி செய்வது?, சரி செய்யவேண்டியது அவசியமா?  அடுத்த இடுகையில் பார்ப்போம்.

நன்றி: இனிமை தந்து இன்னல் நீக்கும் இனிமா, மணிமேகலை பிரசுரம் நூல்

3 comments:

  1. நல்ல பயனுள்ள விஷயம்! இதைக் கூட சஸ்பென்ஸ் தொடர் மாதிரி எழுத ஆரம்பித்தால் அது கூட சிக்கலாகிவிடும்!

    உணவே மருந்து என்ற தலைப்பில் திரு துரைசாமி என்பவர் எழுதி 1957 இல் சென்னை பாரி நிலையம் வெளியிட்ட புத்தகம்,கசப்பு உள்ளிட்ட ஆறு சுவைகளைப் பற்றி, அவை என்னென்ன விதத்தில் உடல் நலத்தைப் பேணுகின்றன என்ற புத்தகமாக, முதலில் வாங்கித் தொலைத்து, மறுபடி சென்னை பிளாட்பாரக் கடையில் தேடிப் பிடித்து வாங்கி, இப்போது அதுவும் எங்கே என்று தேட வேண்டும்!

    மலச்சிக்கலுக்கு எனிமா மட்டுமே தீர்வல்ல!

    அந்தப் புத்தகத்தில், கடுக்காயை ஊறவைத்து போட்டுக் கடலையோடு சட்னியாக அரைத்து, சோற்றுடன் கலந்து உண்ண எப்படி மலச் சிக்கல் நீங்கும் என்ற குறிப்பு இதைப் படித்ததும் வந்தது.

    ReplyDelete
  2. உடனடி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு,கிருஷ்ணமூர்த்தி அவர்களே..

    இடுகை நீளமாக வந்துவிடும் என்பதால் இரண்டாக பிரித்தேன்.

    இனிமா கொடுப்பது என்பது மலச்சிக்கலுக்கு தீர்வுதான்..பல அனுபவஸ்தர்கள் கருத்து இது,

    ஆனால் மேலே போடும் உணவு வகைகளில் மாற்றம் வேண்டும் என்பது மறுக்க முடியாத அவசியமான கருத்தே..

    கடுக்காய், கடலைச் சட்னி என்பதெல்லாம் நம் கையில் இல்லை..எல்லோருக்கும் சாத்தியமானதல்ல..

    சாத்தியமான முயற்சி, நான் கடந்த ஒன்றைரை வருடங்களாக உபயோகித்து, அனுபவத்தை வைத்துதான் இதை எழுதுகிறேன்.

    இன்னும் கேள்விகள் வரவேற்கிறேன்..

    ReplyDelete
  3. நல்ல பயனுள்ள தகவல். நன்றி.

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)