திருப்பூரின் போதிய அகலமில்லா சாலைகள்.. அதில் பயணிக்கும் வாகனங்களோ கிடைக்கும் இடைவெளியில் சென்றாக வேண்டும். அப்படிப்பட்ட பரபரப்பான காலைவேளை, இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தேன்.
சாலையின் ஓரத்தில் சட்டென கவனத்தை ஈர்த்தது அந்த ஜோடி, பெண்ணின் கால்கள் பின்னியபடியே நடக்க, அந்த வாலிபனோடு தோளோடு தோள் சேர்த்து நடந்து கொண்டிருந்தாள்.
முதலில் ’காரங்காத்தால பாரு என்ன ஜாலின்னு!’ என்று என் மனம் சொன்னாலும், இல்லை என்னவோ வித்தியாசமாக இருக்கிறதே என அறிவு சுட்டிக்காட்டியது. மெதுவாக வாகனத்தின் வேகத்தைக் குறைத்தேன். அருகில் சென்றவாறே இடப்புறம் திரும்பிப் பார்த்தேன்.
அந்த வாலிபனின் இடதுகைக்குள், இந்த பெண்ணின் வலதுகரம் இருந்தது. அதை மிக அழுத்தமாக இரும்புப்பிடியாக அவன் பிடித்திருந்தான். பிடித்ததோடு மட்டுமில்லாமல் கீழ்நோக்கி அழுத்தியவாறே நடந்தான். அந்தப்பிடியின் வலி தாளாமல் அவளின் கால்கள் பின்னி பின்னி நடை ஓடியது. அப்பெண்ணின் முகம் அந்த நிகழ்வின் தீவிரத்தை உணர்த்தும் விதமாக அழுகை, இயலாமை, சங்கடம் என பலவிதமான உணர்வுகளின் கலவையாக இருந்தது.
திரும்பிப் பார்த்ததில் அவர்கள் வயது ஆணுக்கு 30ம் பெண்ணுக்கு 25ம் இருக்கலாம் எனத் தோன்றியது என்ன பிரச்சினையோ தெரியவில்லை.!
அவள் தன்னிடமிருந்து விடுபட்டு வேறு எங்காவது ஓடிவிடக்கூடாது, அவளை விட்டுவிடவும் கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வு அவன் பிடியில் இருந்தது.
இன்னும் தொடர்ந்தபோது சட்டென அவர்கள் வலதுபுறம் சென்ற பாதையில் திரும்பி நடந்தனர்.
எந்தத் தவறு வேண்டுமானாலும் அந்த பெண்மீது இருந்திருக்கலாம். சொன்னபடி கேட்காமல் வெளியே எங்கேனும் சென்றிருக்கலாம். முறையற்ற தொடர்புகள் இருந்திருக்கலாம் அல்லது தவறு ஏதுமே இல்லாதும் இருந்திருக்கலாம். அவனுக்கு அடங்கிப்போக வேண்டிய சூழ்நிலையை என்னால் உணர முடிந்தது.
அந்தப்பெண் கடுமையான எதிர்ப்பை காட்டி இருக்கலாம். ஆனால் அந்தப்பெண் அடங்கியதுபோல் சென்றது அவள் மீது ஏதேனும் தவறு இருக்கலாம் அல்லது சரி ரோட்டில் எதற்கு அசிங்கமாக நடந்து கொண்டு..தவறே இல்லையெனினும் பொறுத்துப்போவோம் என்ற நிலையாகக்கூட இருக்கலாம்.
எப்படி இருந்தாலும் அந்தப் பெண்ணின் நிலைக்காக என் மனம் பதைபதைத்தது.:(
ஏன் இந்த வாலிபன் இப்படி நடந்துகொள்கிறான்?, பெண்ணை ஆண் தாக்குவது என்பது உடல்ரீதியாக பொருத்தமானது அல்ல. அப்படி அடித்துத்தான் ஆகவேண்டும் என்கிற உணர்ச்சிவயப்பட்ட, தவிர்க்கமுடியாத சூழ்நிலை அமைந்துவிட்டால் அடித்துவிடுதலே சரியாக இருக்குமோ?
அந்தப்பெண்ணிற்கு அதோடு மனத்துயரம் தொடராது அல்லவா? தொடர்ந்து துன்புறுத்துவது என்பதை என்னால் சீரணிக்கமுடியவில்லை.இதுதான்...
அருமையான தகவல் ..
ReplyDeleteஅனுதினம் எங்கும் எப்போதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. கவனிக்கும்பொழுதான் அதன் வலியை உணரமுடிகிறது, அதோடு மனதும் படபடக்கிறது.. என்ன மனிதர்கள் இவர்கள் என்று எண்ணவும் தோன்றுகிறது... திருப்பூரில், அதுவும் வேலைசெய்யும் பெண்களின் நிலை மோசம்தான்.
ReplyDeleteTHIRUPUR MATUM THAN ITHU MATHIRI NATAKUTHUNU UNGALAL SOLA MUDIYUMA?
ReplyDelete//dev_niceguys said...
ReplyDeleteTHIRUPUR MATUM THAN ITHU MATHIRI NATAKUTHUNU UNGALAL SOLA MUDIYUMA?//
திருப்பூரில் மட்டும் இந்த மாதிரி நடக்குதுன்னு நான் சொல்லவில்லை.
திருப்பூரில் மற்ற ஊர்களில் இருப்பதைவிட அதிகமாக இருக்கிறது.
எதுவுமே :)
இந்த இடுகையில் நான் மனித உறவுகளில் உள்ள சிக்கல்களை கவனத்திற்கு கொண்டுவந்தேன் அவ்வளவுதான்.
க.பாலாசி
ReplyDeleteமிகச் சரியாக இடுகையின் செய்தியை உணர்ந்து கருத்து சொல்லி இருக்கிறீர்கள்
நன்றியும் வாழ்த்துகளும்..
புதிய மனிதா said...
ReplyDeleteஅருமையான தகவல் .\\
வருகைக்கு நன்றி நண்பரே
Pls check Tamil Manam Pattai. Sorry not for tamil fonts.
ReplyDelete