திருப்பூரில் வசிப்பவர்களில் பெரும்பான்மையோர் தொழில்ரீதியாக எந்நேரமும் ஓடிக்கொண்டே இருப்பதால் பலசமயங்களிலும் நீறுபூத்த நெருப்புப்போல்தான் தன் குடும்பத்தினரின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தமுடிகிறது. இப்படித்தான் நான் நினைத்துக்கொண்டு இருந்தேன்.
ஆனால் நம் குடும்பத்தினரின் அன்பைப் பெறுவதிலும், அதை நான் உணரக்கூடிய சந்தர்ப்பத்தையும் நிறைய இழந்திருக்கிறேன் என்பதை அந்தப் பேப்பர் உணர்த்தியது. அது பேப்பர் அல்ல. கடிதம்:)
இதைத் திறந்து படித்தவுடன் நான் அடைந்த நெகிழ்வை, உணர்வை வார்த்தைகளில் விவரிக்கமுடியாது.என் மகளின் அன்பை பூரணமாக நான் உணர்ந்து கொள்ள இந்தப் பயணம் ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது, இந்தப் பயணத்தின் மனநிறைவை நான் அப்போதே அடைந்தேன்.
எந்த நிகழ்வும் தகுந்த காரணமின்றி நிகழ்வதில்லை. இந்தப் பயணம் எனக்கு வாய்த்ததே இந்த அன்பை உணரத்தானோ...
எப்போதும் அருகில் நம் கைகளின் அருகில் உள்ள எதன் அருமையும் அதை விட்டு விலகிய பின்போ அல்லது இழந்தபின்போ தான் அறிந்து கொள்கிறோம் என்பது ஒரு கசப்பான் உண்மை...
ReplyDeleteபாராட்டுக்கள்....
அதுசரி, நான் பார்க்கும் அனைத்து தளங்களிலும் பின்னூட்டமிட உங்களால் மட்டும் எப்படி முடிகிறது என வியக்கிறேன்....
குழந்தையின் அக்கறையும், ப்ரியமும் யாருக்கு வரும். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇதைத் திறந்து படித்தவுடன் நான் அடைந்த நெகிழ்வை, உணர்வை வார்த்தைகளில் விவரிக்கமுடியாது.என் மகளின் அன்பை பூரணமாக நான் உணர்ந்து கொள்ள இந்தப் பயணம் ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது, இந்தப் பயணத்தின் மனநிறைவை நான் அப்போதே அடைந்தேன்.
ReplyDelete....So sweet! மனதை நெகிழ வைத்தது.... இந்த அன்பு கிடைப்பது ஒரு ஆசிர்வாதம்.
//எந்த நிகழ்வும் தகுந்த காரணமின்றி நிகழ்வதில்லை. இந்தப் பயணம் எனக்கு வாய்த்ததே இந்த அன்பை உணரத்தானோ...//
ReplyDeleteஅப்படி தான் இருக்கும் என்று நம்புகின்றேன். தூரம் செல்லும் போது நமக்கு அன்பானவர்களின் அருமை புரிகிறது
கடவுள் இமயமலையில் இல்லை, உங்கள் இல்லத்தில் தான் இருக்கிறார் என புரிந்துகொள்ள சில ஆயிரங்களும் பயணமும் தேவைப்படுகிறது. :))
ReplyDeleteஸ்வாமி ஓம்கார்ஜி சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்டு!!!
ReplyDelete//திரு.வானவன் யோகி
ReplyDeleteஅதுசரி, நான் பார்க்கும் அனைத்து தளங்களிலும் பின்னூட்டமிட உங்களால் மட்டும் எப்படி முடிகிறது என வியக்கிறேன்....//
நான் படிப்பதில் கால்வாசி அளவிலேதான் பின்னூட்டமிடுகிறேன்.
நான் புரிந்து கொண்டது நாம் இருவரும் ஓரே இரசனையுடன் இடுகைகளைத் தேடிப்பிடித்து படிக்கிறோம். அதுதான் இப்படித் தோன்றுகிறது:)
மகிழ்ச்சி
தமிழ் உதயம்
ReplyDeleteChitra
என்னது நானு யாரா?
இதுபோல் அன்பை உணரும் வாய்ப்பு நம் அனைவருக்கும் அடிக்கடி வாய்க்கட்டும்...
//கடவுள் இமயமலையில் இல்லை, உங்கள் இல்லத்தில் தான் இருக்கிறார் என புரிந்துகொள்ள சில ஆயிரங்களும் பயணமும் தேவைப்படுகிறது. :))//
ReplyDeleteஉண்மைதான். எள்ளளவும் சந்தேகமில்லை:))
நன்றி துளசியம்மா...
அன்புப் பயணம் வாழ்த்துகள்.
ReplyDeleteஅன்புக்கு நிகரேது :-)
ReplyDelete//இதைத் திறந்து படித்தவுடன் நான் அடைந்த நெகிழ்வை, உணர்வை வார்த்தைகளில் விவரிக்கமுடியாது.என் மகளின் அன்பை பூரணமாக நான் உணர்ந்து கொள்ள இந்தப் பயணம் ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது, இந்தப் பயணத்தின் மனநிறைவை நான் அப்போதே அடைந்தேன்.//
ReplyDeleteபடிக்கும் போதே மகிழ்ச்சியாக இருக்கிறது, பெற்றோரான உங்களுக்கு எப்படி இருக்கும் என்பது புரிந்து கொள்ள முடிகிறது.
வாழ்த்துகள்
நீங்கள் தேடிச் சென்ற அனைத்தும் உங்களிடத்திலே, வீட்டிலேயே இருந்திருக்கிறது சிவாண்ணே!
ReplyDeleteஅந்த விலை மதிக்க முடியாத பொக்கிஷங்களைப் பத்திரப்படுத்துங்கள்.
இதுக்குத்தான்னே பொண்ணுவேனும்கிறது :-))
ReplyDeleteஎனகுத்தெரிஞ்சு எப்படா அப்பா ரண்டுநாள் வெளியூர்போவார் ஜாலியா இருக்கலாம்னுதான் நான்லாம் நெனச்சேன்
ReplyDeleteஆனா அக்காமட்டும் சீக்கிரம் வாங்கன்னு சொல்லி அனுப்புவா :-))