ரிஷிகேஷில் கங்கையிலும் வெள்ளம், கரையிலும் பக்தர்கள் வெள்ளம் என்றால் மிகையில்லை. பாலத்தில் நடக்கக்கூட இடமில்லாத அளவு கூட்டம். நானும் இன்னும் இரு நண்பர்கள் மட்டும் சிறு குழுவாக இணைந்து கொண்டு அங்கு சுற்றிப்பார்த்தோம்.
என்னுடைய 12 மெகாபிக்ஸல் சோனி சைபர்ஷாட் காமராவில் புகைப்படங்களை எடுத்துக்கொண்டிருந்தேன். எனது நண்பர்கள் சற்று முன்னதாக சென்று கொண்டிருந்தார்கள். அடிக்கடி படம் புடிக்கிறேன் என நின்னுட்டே இருந்தா அவங்க என்ன செய்வார்கள். :)
படம் பிடித்தபடி திரும்பியபோது என் அருகே இந்தியில் ஏதோ சொல்லியப்டியே ஒருவாலிபன் வந்தான். அவன் இந்தியில் கேட்டது கேமரா நல்லா இருக்கே, என்ன விலை? என எனக்குப்புரிந்தது. அவனைப்பார்த்து இயல்பாக விலை சொல்ல எண்ணி தலையைத் தூக்கி பார்த்தேன். அவனுக்கு பின்னர் சற்று தள்ளி மூன்றுபேர் எனனையே உற்றுப்பார்ப்பதை கவனித்து விட்டேன்.
உள்ளே இவர்கள் சரியான நபர்கள் அல்ல, அசந்தால் கேமாரா பறிபோய்விடும் என உடனடியாக (விழிப்புணர்வு!!!) மனதிற்குப்பட்டதால் பதட்டப்படாமல் சிரித்துக்கொண்டே கேமாராவை பேண்ட் பாக்கெட்டில்வைத்துக்கொண்டு நடையின் வேகத்தை கூட்டி நண்பர்களை நோக்கிச் சென்று அவர்களையும் கொஞ்சம நில்லுங்க அப்புறம் போகலாம் என நிறுத்திவிட்டேன். அந்த வாலிபர்களோ என்னை கொஞ்சம் கூட நிமிர்ந்து பார்க்காமல் தாண்டிச் சென்றார்கள். கொஞ்சதூரம் போனபிறகு இறுகிய முகத்துடன் திரும்பிப்பார்த்தனர். அவர்கள் நடந்து சென்றது அத்தனை கூட்டத்திலும் தனியாக சினிமாவில் வரும் அடியாட்கள் போல் தெரிந்தது. ஆக விலை உயர்ந்த பொருள்களை கையில் வைத்துக்கொண்டு மொழிதெரியாத ரிஷிகேஷ் போன்ற இடங்களில் தனியாளாக போவது தவறு, தவறு, தவறு:) துணைக்கு எப்போதும் நண்பர்களை வைத்துக்கொள்ளுங்கள்:)
மீண்டும் ஆட்டோ பிடித்து தங்குமிடம் திரும்பினோம். திருக்கோவிலூர் மடம் தெரியாத ஷேர் ஆட்டோக்காரர்களே கிடையாது. வந்து சேர்ந்த பின் சுவாரசியமான இன்னொரு விசயம் இந்த மடம் எங்கே இருக்கிறது என்றால் கங்கை நதிக்கரையில் ஸ்வாமி தயானந்தா அவர்களின் ஆசிரமம் அருகிலேயே இருக்கிறது.இதை ஒட்டி கங்கை நதி பரந்து அலைகளோடு ஆர்பரித்துக்கொண்டு ஓடிக்கொண்டு இருக்கிறது.
சரி,சரி இங்கு என்ன விசேசம் என்கிறீர்களா? கங்கை நதியை மிக அருகில் பார்க்கலாம். அப்புறம்..
இன்னும் நம்ம எந்திரன் ரஜினிகாந்த் இந்த ஆசிரமத்தில்தான் அவ்வப்போது வந்து தங்கி ஆன்மீக விசயங்களில் ஈடுபடுகிறார்.:)
ஆற்றையும் பாருங்கள் தங்கும் இடங்களையும் பாருங்கள். ரஜினிகாந்த் ஏன் இந்த இடத்தை தேர்ந்தெடுத்தார் என்பது புரிந்துவிடும்.
இதோ நம்மால் முடிந்த 360 டிகிரி கோணத்தில் கங்கையும் ஆசிரமமும்.
இரவு நேரத்தில் அதே இடம் கொஞ்சம் கேமாரா செட்டிங்கில் நீலக்கலர் அதிகமாகிவிட்டது:). ஆற்றின் மீது மேலே பனிபடர்ந்து நிற்கிறது மூன்று, நான்கு அடிக்கு. இது நான் பார்த்திராத ஒன்று..
அடுத்தநாள் காலை அதே திருக்கோவிலூர் மடத்தில் தனியாக ஒருஅறை பதிவு செய்து அதில் எங்கள் அனைவரின் அதிகபட்ச லக்கேஜ்களை வைத்துப்பூட்டிவிட்டு ரிஷிகேசை விட்டு கங்கோத்ரி செல்ல ஆயத்தமானோம்.
பயணம் தொடரும்.....
வாழ்த்துகளுடன்
நிகழ்காலத்தில் சிவா
என்ன தலைவரே எதை எதனுடன் சேர்த்து இருக்கீங்க. ரஜினி திருவண்ணாமலை போக ஆரம்பித்த பிறகு நான் போவதை நிறுத்தத் தொடங்கினேன். அவர் மேல் தவறு இல்லை. அதற்கு பிறகு வந்து இறங்கும் கூட்டம் அப்படிப்பட்டது.
ReplyDeleteஅப்பபுறம் சமயோஜிதமா புகைப்பட கருவியை காப்பாத்திடடிங்க.
எதனோடு எதை வேண்டுமானாலும் சேர்க்கலாம் ஜோதிஜி...
ReplyDeleteரொம்ப யோசனை செய்தால்..:)
ஆசிரம சூழல் எவரையும் அமைதி கொள்ளச் செய்யும்.
அந்த இடம் அனைவரும் பார்க்க வேண்டிய இடம்.
வளைச்சு வளைச்சு படம் புடிச்சிருக்கீங்க. அருமை.
ReplyDeleteகங்கையில் ஓசை இருக்கே... அது ஒன்று போதும்..!
ரிஷிகேசில் பேந்த பேந்த தமிழன் முழித்துக்கொண்டு இருந்தால் ஆட்டோ ட்ரைவர் திருக்கோவிலூர் மடத்திற்கு தான் கொண்டு விடுவார் :)
அருமை நண்பரே! படங்களும், வீடியோக்களும், உங்களின் எழுத்துக்களும், நாங்களே நேரில் சென்று பார்த்த திருப்தியை ஏற்படுத்துகிறது. உங்களோடு பயணம் செய்யும் வாய்ப்பு தந்ததற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்!
ReplyDeleteபயணப்பட இருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு இது!
இல்லாத இறைவன்வனை விட இருக்கும் அழகு மிகவும் அருமை...அதை வீடியோவாக பதிவிட்ட உங்கள் பதிவு அழகு....வாழ்த்துகள்
ReplyDelete//கங்கையில் ஓசை இருக்கே... அது ஒன்று போதும்..!//
ReplyDeleteகங்கையின் ஓசை கண்ணை மூடி உட்கார்ந்தால் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை..:)
நல்லவேளை உங்க விழிப்புணர்வு உங்க பொருளை காப்பாற்றி விட்டது. படங்களும் இடங்களும் மிக அழகாக உள்ளன! நன்றி!
ReplyDeleteபடங்கங்களும் கட்டுரையும் அருமை..!
ReplyDeleteதரமாக உள்ளது வாழ்த்துக்கள்
ReplyDeleteசிவாண்ணா ரைட்டு, கிளப்பிஉட்டுடிங்க... கங்கை ஆற்றுப்படுகையில்தான் இந்த வருட பொங்கல் பொங்கனும்போல....
ReplyDeleteஅன்பின் சிவா,
ReplyDeleteஉங்கள் அனுபவங்களைத் தொடர்ந்து படிக்கிறேன். பூர்வ ஜன்ம புண்ணியம் இருந்தால் தான் இளம் வயதிலேயே புண்ணிய தல யாத்திரைகளை மேற் கொள்ளும் அமைப்பு வாய்க்கும். உங்களுக்கு அது வாய்த்திருக்கிறது. வாழ்த்துக்கள். வணக்கங்கள். நன்றிகள்.
ரமணன்
padangkaL அனைத்தும் அருமை.நானும் போகனும்னு நினைக்கத்தோனூது
ReplyDeleteஅருமை ...
ReplyDeleteநாங்கள் போன போது தயானந்தா ஆசிரமத்தில் தான் தங்கி இருந்தோம்.அருமையான இடம்..
ReplyDelete