"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, September 7, 2010

இனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்

மனதுக்குள் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் எண்ணம் இமயமலை செல்லவேண்டும். இந்த திருப்பூரை சுற்றி, காய்ந்துபோன நிலங்களையும், சாயம் கலந்த ஆற்றையும், பார்த்து பார்த்து சலிப்பும் வருத்தமும் மிஞ்சும் வாழ்க்கையிலிருந்து தற்காலிகமாகவேனும் விடுதலை வேண்டும் என நான் அவ்வப்போது எண்ணத்தை மனதில் போட்டு வைப்பது உண்டு.



வேலை,வேலை என குடும்பத்திற்கு, எனக்கு என போதுமான நேரம் ஒதுக்கமுடியாமல், என் வாழ்க்கை முறையை சரியாக அமைத்துக் கொண்டிருக்கிறேனா என்ற கேள்வி எனக்குள் அடிக்கடி வரும். அதற்கான பதில் இல்லை என்பதே..ஆயத்த ஆடை தயாரித்தலில் அன்றாடம் பார்க்கும், அனுபவிக்கும் வேடிக்கை, விநோதங்களையெல்லாம் விட்டுவிட்டு நிம்மதியாக சுற்றுலாவாக செல்ல வேண்டும். ( அதுக்கு செல்போன இங்கேயே விட்டுவிட்டு போயிருக்கனும். தெரிஞ்சே..)வெறுமனே சுற்றுலாவாக இல்லாமல் ஆன்மீகம் சார்ந்த இடங்களாக இருக்கவேண்டும் என விருப்பம் அதிகம்.

போன வருடமே கோவையைச் சார்ந்த மனுசிபிஅகாடமி திரு.சந்திரசேகரன் (0422-2441136,9944955168,9944955169 )ஏற்பாடு செய்த இமயமலைப்பயணத்தில்(2009) கலந்து கொள்ள முன்பணம் கட்டியும், சில தவிர்க்க முடியாத தொழிற்சூழ்நிலைகளால் போகமுடியவில்லை. சரி இந்த வருடம் ஆகஸ்ட்-2010 ல் கங்கோத்திரி மற்றும் கேதார்நாத் தலங்களை தரிசிப்பதை முக்கிய நோக்கமாக வைத்து பயணம் அமைந்ததால் முன்கூட்டியே பணம்கட்டி பயணத்தை உறுதிசெய்தேன்.

பயணத்தின் அனுபவம் வரும் அக்டோபர்2, 2010ல் பத்ரிநாத் செல்லும் பயணத்திற்கும் (11.09.2010க்குள்)முன்பதிவு செய்துவிடலாம் என்கிற அளவுக்கு நிறைவாக இருந்தது. மொத்தம் 100 பேர் மட்டுமே பயணம் எனத் திட்டமிட்டாலும், பின்னர் அன்புத் தொல்லைகள் காரணமாக 130 பேராக புறப்பட்டோம்.

’என்ன எடுத்தவுடனே ஆள்புடிக்கிற வேலையா என நினைக்காதீங்க, இல்ல கமிசன் வருமான்னும் நினைக்காதீங்க’ இதை ஏன் எழுதறன்னா அப்படி நினைப்பதுதான் மனதின் பொதுவான இயல்பு, முழுக்க முழுக்க விருப்பம் இருக்கு, 10000 ரூபாய் செலவில் பதினான்கு நாட்கள் வேறு எந்தச் செலவும் இன்றி, மொழி குறித்த கவலை இன்றி நமது தமிழ்நாட்டு உணவுவகைகளுடன் நிம்மதியாக செல்லவேண்டும் என விரும்புவர்களுக்கு சரியான தகவல் சென்று சேர வேண்டும் என நினைத்தே இந்த தகவலை பகிர்ந்து கொள்கிறேன்.

பயணத்திற்கு சிலதினங்களுக்குமுன் குளிரையும், மழையையும் தாங்கும் ஜெர்கின், தொப்பி, கையுறை, மற்றும் எளிய எடைகுறைந்த ஆறுசெட் ஆடைகள் என எல்லாவற்றையெல்லாம் வாங்கி பெட்டியில் அடுக்கி தயார் நிலையில் வைத்துக்கொண்டேன். இரயிலில் பயணம் 02.08.2010 காலையில் சென்னை பயணம். அன்றிரவு சென்னையில் அனைவரும் ஒன்றாக இணைந்து டெல்லி பயணம் என திட்டமிடப்பட்டிருந்தது.

முதன்முதலாக வீட்டைவிட்டு, குடும்பத்தைவிட்டு 12 நாள் விலகி பயணம் என்பது சற்றே உள்ளூர என் குடும்பத்தினருக்கு வருத்தத்தைக் கொடுத்தாலும் மகிழ்ச்சியுடன் பயணத்திற்கு தயார் செய்தனர். இரவு உறங்கி காலையில் 4.30 மணி அளவில் எழுந்து குளித்துவிட்டு இரயில்நிலையத்திற்கு 6.15 மணிக்கு சென்று சேர்ந்துவிட்டேன்.

பயணம் தொடரும்...

வாழ்த்துகளுடன்
நிகழ்காலத்தில் சிவா

23 comments:

  1. சிவா .. தொடர் நல்லா துவங்கி இருக்கிறது......வேகம் எடுக்கட்டும்

    ReplyDelete
  2. சிறப்பாக விவரிப்புகள்...

    கலக்குங்கள்...

    ReplyDelete
  3. நல்ல ஆரம்பம் சிவா.

    விரிவா எழுதுங்க. பயணம் செல்ல நினைப்போருக்கு இதெல்லாம் ஒரு வழிகாட்டி.

    அங்கே எதிர்கொள்ளவேண்டிய சவால்கள், அதை எப்படி நிவர்த்தி செஞ்சு பயணத்தைத் தொடந்தோம் என்பதெல்லாம் கவனமாகக் குறிப்பிடணும்.

    நல்வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  4. நன்றி கோவியாரே. முடிந்தவரை வேகத்தைக் கூட்டுகிறேன். கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  5. ஸ்வாமி ஓம்கார் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி கலக்கிவிடுகிறேன்:)

    ReplyDelete
  6. நன்றி துளசிகோபால் அவர்களே பயணக்கட்டுரைகள் என்றால் நிறைய படங்களுடன் எந்த தகவலையும் விடாது எழுதும் கலை தங்களுக்கே உரித்தானது.

    தங்களின் வழிகாட்டுதல்படி பயணத்தைத் தொடர்கிறேன்.

    நன்றிகள் பல தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்...

    ReplyDelete
  7. பயண கட்டுரையா! ஐயோ ஜாலிதான்! இது நமக்கு ரொம்ப பிடிக்கிற விஷயமாச்சே!

    எழுதுங்கள்! பின் தொடர்ந்து வருகிறோம்!!!

    ReplyDelete
  8. //பயண கட்டுரையா! ஐயோ ஜாலிதான்! இது நமக்கு ரொம்ப பிடிக்கிற விஷயமாச்சே!//


    அப்படியா!!!! இங்கே ஒருத்தி பயணம்பற்றி எழுதிக்கிட்டே இருக்கேன். நம்ம பக்கமும் வந்து பாருங்களேன்.

    ReplyDelete
  9. தெளிவாகவும் எளிமையாகவும் எழுதுறீங்க.... பாராட்டுக்கள்!

    ReplyDelete
  10. அக்டோபரில் செல்வதென்றால் நன்கு விசாரித்துவிட்டுப் புறப்படுங்கள். கடுங்குளிரும் பனிப் பொழிவும் மிகுதியாக இருந்தால் அக்டோபர் முதல் வாரத்திலேயே கோவிலை மூடி விடுவார்கள். பின்னர் அடுத்த மே மாதம் தான் திறப்பார்கள்.

    ReplyDelete
  11. என்னது நானு யாரா?
    வாங்க வாங்க :))

    ReplyDelete
  12. //Chitra said...

    தெளிவாகவும் எளிமையாகவும் எழுதுறீங்க.... பாராட்டுக்கள்!//

    நன்றி சகோ. பாரட்டை தக்கவைத்துக் கொள்ள முயற்சி செய்கிறேன்.

    வாழ்த்துகள்

    ReplyDelete
  13. //கலாநேசன் said...

    அக்டோபரில் செல்வதென்றால் நன்கு விசாரித்துவிட்டுப் புறப்படுங்கள். கடுங்குளிரும் பனிப் பொழிவும் மிகுதியாக இருந்தால் அக்டோபர் முதல் வாரத்திலேயே கோவிலை மூடி விடுவார்கள். பின்னர் அடுத்த மே மாதம் தான் திறப்பார்கள்.//

    போனவருடம் சென்ற நண்பர்கள் ஜோசிமத்-உடன் திரும்பி வந்துவிட்டார்களாம். நீங்கள் சொன்னதை கவனத்தில் வைத்து முடிவு செய்கிறேன். நன்றி

    வாழ்த்துகள்

    ReplyDelete
  14. பயணம் இனிமையாகவும் சுவராஸ்யம் மிக்கதாகவும் அமைய வாழ்த்துக்கள். எங்களுக்கும் சேர்த்து நிறைய வரம் வாங்கி வரவும்.

    ReplyDelete
  15. முதல் பயணக்கட்டுரையை இப்போதுதான் தொடங்கி இருக்கிறேன்.

    ஆனால் இரண்டாவது பயணத்தைப் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.

    வரம் வாங்குவது என்பதில் எனக்கென எதும் வாங்கவில்லை அப்படி இருக்கும்போது...:)

    ReplyDelete
  16. கண்ணன் சொன்ன மாதிரி வித்யாசமா ரொம்ப நல்லாவே தொடங்கி இருக்கீங்க,

    ஆமா தகவலுக்கு வரவில்லையே(?)

    ReplyDelete
  17. //ஆமா தகவலுக்கு வரவில்லையே(?)//

    பொறுமையாக வர்றேன். உங்களுக்கு என்னோடு வந்த உணர்வு வரவேண்டும். அதுபோல் எழுத நினைத்துத்தான் இப்படி:))
    நன்றி ஜோதிஜி

    ReplyDelete
  18. எப்பவும் எதுக்கும் யாரையும் கூப்பிட்டிறாதீங்க.

    துறவறம் செல்லும் எண்ணம் ஏதும் இல்லையே???

    பார்த்ததைப் பதிவதற்கு வாழ்த்துக்கள்.....

    பதிவுகளில் மட்டுமாவது கூட வரலாமா???!!!!

    ReplyDelete
  19. மதிப்பிற்குரிய அன்பருக்கு,
    வணக்கம். தங்களின் கேதார்நாத் பயணக் கட்டுரையை படிக்க ஆரம்பித்திருக்கிறேன். சுவாரஸ்யமாக எழுதுகிறீர்கள். கயிலை யாத்திரை அடுத்த ஆண்டு போக திட்டமிட்டிருக்கிறேன். நீங்களும் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும்.

    அன்பு வாழ்த்துக்களுடன்,

    அஷ்வின்ஜி
    பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?
    www.vedantavaibhavam.blogspot.com
    www.frutarians.blogspot.com

    ReplyDelete
  20. nanum kedarnadh poyittuthan vandhen 22 oct to 4 sep 2010 enakku 1 madham mun neengal senrulleergal ungal katturayai paditha podhu enkku palaya ninaivi varudhu meendum poga vendum endru thonuthu

    ReplyDelete
  21. adudha murai sellum podhu enkku theriyapaduthavum
    spark arts 5th street gandhipuram coimbatore12
    cell9865442911

    ReplyDelete
  22. :)) அப்படித்தான் தோன்றும். மீண்டும் செல்ல வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  23. நமசிவாயன், அருள் உங்களுக்கு எப்போதும், துணை இருக்கட்டும். திருச்சிற்றம்பலம்

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)