"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, February 10, 2011

சதுரகிரி மலைப் பயணம். பகுதி 4

இந்தப்பாறையைத்தாண்டி அடுத்த கால் மணிநேர நடைதூரத்தில் முதல் மலை முடிவுற்று இரண்டாவது மலை ஆரம்பம். இந்த இடத்தை சிறு நீரோடை பாய்ந்து வருகிறது.  வெள்ளம் வரும் காலங்களில் இந்த இடத்தை தாண்ட முடியாதாம். காரணம் சற்றுமுன் பின்னாக எப்படிச் சென்றாலும் சமதளமாக அல்லது ஏறவே முடியாத இடமாக இருப்பதே காரணம்.

நாம் செல்லுகின்ற இடத்தில் ஒரு பெரிய பாறையில் கனமான சங்கிலி ஒன்றைக் கட்டிவைத்திருக்கிறார்கள். அதைப்பிடித்துக்கொண்டு ஏறுவது வழுக்காமல் செல்லவும், சற்று அதிகமாக தண்ணீர் வந்தாலும்  தாண்டிச் செல்லமுடியும்.
 இந்தப்பாறை சற்று நெட்டுக்குத்தலாக மேலேறும். இதிலும் படி வெட்டி வைத்திருக்கிறார்கள். அதன் தூரத்துப்பார்வை கீழே..
கூடவே அந்தப்பாறைமீது மேலேறிச் சென்ற பின் அங்கிருந்த எடுத்த படம் கீழ்நோக்கிய பார்வையில்.....

 சதுரகிரி மலைப்பாதையில் இனி மலைமீது நாம் சென்று சேரும் வரை இடதுபுறமாக  மலைகளின் இடைவெளிகளில் ஓடிவரும் நீரோட்டம் நம் கண்களில் காட்சியளித்துக் கொண்டேதான் இருக்கிறது. அதாவது மலைப்பாதை பெரும்பாலும்  அருவியின் பாதையை ஒட்டியே அமைந்திருக்கிறது.
இந்த அருவியின் இடதுபுறம் அமைந்துள்ள மலை நல்ல உயரம். அதோடு பார்வைக்கு ஒரே பாறையால் ஆன மிகப்பெரிய நந்திபோல படுத்துக்கிடக்கிறது.:)



 இந்த மலையைத்தாண்டி, அதாவது கிளம்பியதிலிருந்து சுமார் ஒண்ணேமுக்கால் மணிநேரம் கடந்து அடைந்தது இரட்டைலிங்கம் கோவில். இங்கே வந்தடைந்தால் சுமார் பாதிதூரம் வந்து விட்டதாக வைத்துக் கொள்ளலாம்:))


இங்கே சற்று ஓய்வெடுத்தோம், மற்ற அன்பர்கள் வந்து சேரும்வரை..

பயணம் தொடரும்.
நிகழ்காலத்தில் சிவா

2 comments:

  1. இப்பதான் இந்த கட்டுரையின் 1 டூ 4 படிக்கிறேன்.. இதுவரையில் சென்றதில்லை... போகணும்...

    ReplyDelete
  2. அருமை. சதுரகிரி படங்களை நிறைய இணைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)