எல்லா அரசியல் கட்சிகளுமே சம்பாதிக்க மட்டுமே ஆட்சிக்கு வரத்துடிக்கிறார்களே தவிர மக்களுக்கு சேவை ஆற்ற அல்ல என்பதை நன்கு நாம் தெரிந்து வைத்திருந்தாலும் எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என அடையாளம் காண வேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம்.
இவர்களுக்கு ஒத்து ஊதி தானும் சம்பாதித்து வளமாக இருக்கும் அரசு அதிகாரிகள் கூட்டம் இவர்களுக்கு அடிக்கும் ஜால்ரா சத்தம் காது கொடுத்து கேட்கமுடிவதில்லை.
இவர்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய மனிதர்கள் மட்டுமே எந்த ஆட்சி வந்தாலும் ஏற்றுக்கொண்ட கடமையை சரிவர, எந்த எதிர்ப்பு வந்தாலும் சமாளித்து இன்னும் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
இதில் குறிப்பிடத்தக்கவர் கலெக்டர் சகாயம் அவர்கள். இவரைப்பற்றி மாப்பு ஈரோடு கதிர் மற்றும் பெருமாள் முருகன் எழுதியதை சற்றே வாசித்து விட்டு வந்துவிடுங்கள்.
ஈரோடு கதிர்
பெருமாள்முருகன் 1
பெருமாள்முருகன் 2
பெருமாள்முருகன் 3
திரு சகாயம் அவர்கள் தனது பணியை எந்த பாராபட்சமின்றி செய்யக்கூடியவர் என்பது மேல்கண்ட இணைப்புகளை படித்தாலே எளிதில் விளங்கும்.
மதுரை கலெக்டராக இருந்த காமராஜ் ஈரோடு மாவட்ட கலெக்டராக தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்டார். திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்த சகாயம் தற்போது மதுரை கலெக்டராக நியமனம் செய்யப்பட்டார்.
இதையடுத்து சகாயம் மார்ச் 22 ந்தேதி காலை 11:30 மணியளவில் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார். இவரது நடுநிலையான நடவடிக்கைகள் தவறு செய்பவர்களுக்கு இடையூறாக அமைந்திருக்கிறது.
ஆளுங்கட்சியின் கட்டளைக்கு கீழ்படியாததால் இன்று வழக்கை சந்திக்க வேண்டிய சோதனை:(
இதை மறுத்து திரு.சகாயம் அவர்கள் வெளியிட்ட அறிக்கை இது..
இந்த திமுகவின் நடவடிக்கைக்கு என் எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்வது எனது கடமை என நினைக்கிறேன். திரு சகாயம் அவர்களுக்கு இச்சமயத்தில் ஆதரவு குரல் கொடுப்பது அவசியம் எனவும் கருதுகிறேன்.
ஈரோடு கதிர் அவர்களின் இடுகை
உங்கள் கருத்துகளை தெரிவியுங்களேன்

இந்த மாதிரி நேர்மையாக பணி செய்வதற்கு அசாத்திய மனவலிமையும் இடர்ப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் தேவை. மிகச் சிலரே அவ்வாறு செய்யக்கூடியவர்கள்.
ReplyDeleteபேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்றார் பாரதி!
ReplyDeleteதிரு.சகாயம் மாதிரி ஒன்றிரண்டு நேர்மையானவகளைக் கூட சகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு இங்கே ஊழல் அரசியல் முற்றிப்போயிருக்கிறது. திரு சகாயம் தவறாக எதையும் சொல்லவில்லை, மாவட்டத்தின் தேர்தல் அதிகாரி என்ற முறையில், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வாசகங்களைத்தான் சொல்லியிருக்கிறார். தமிழகத்தில் திருமங்கலம் இடைத்தேர்தலில் தான், அ"னா பார்முலா என்று அழைக்கப்படும், வாக்காளர்களுக்குப் பெரும் தொகை அளிக்கப்பட்டதும், அராஜகமான முறையில் எதிர்க்கட்சி பூத் ஏஜெண்டுகளை மிரட்டி, வாக்குச் சாவடிகளைத் தங்கள் கண்ட்ரோலில் வைத்துக் கொண்டதும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரங்கேறியதும் நடந்தது.
சென்ற தேர்தல் அனுபவங்களைக் கொண்டுதான், தேர்தல் ஆணையம் வாக்காளர்களை விளைபோகவேண்டாம், வாக்குகளை அளிக்கத் தவற வேண்டாம் என்ற வகையில் பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலையும் வந்தது. அதிகாரிகளைத் தங்கள் கைப்பாவைகளாக வைத்துக் கொண்டு செயல்பட்டவிதம் தான் லத்திகா சரண் முதல் பல அதிகாரிகளையும் கட்டாய விடுப்பில் போக வைத்தது.
தேர்தல் ஆணையம், T N சேஷன் காலத்தில் இருந்தமாதிரிக் கிடுக்கிப்பிடி போட வழியில்லாமல் வேண்டுமென்றே பலவீனமாக வைக்கப்பட்டிருக்கும் நிலையில் கூட, இங்கே மாநில தேர்தல் ஆணையம் கொஞ்சம் உருப்படியாக செயல்படுகிற மாதிரித் தெரிவது ஜனங்களுக்கு எந்த அதிருப்தியையும் உண்டு பண்ணவில்லை.
ஆட்சி, அதிகார பலம், எல்லாம் அவர்கள் கையில் இருந்தும் கூட, தேர்தல் ஆணையம் அதிமுகவுக்கு சாதகமாக செயல்படுகிறது என்று புலம்புகிற அளவுக்கு ஆனா பரிதாபத்தைப் பாருங்கள்!
காங்கிரஸ்-திமுக கூட்டணி தோற்கடிக்கப்படவேண்டியதே! அதே நேரம்,விசி, பாமக, தேதிமுக, சாதிக்கு நாலு சங்கமாக முளைத்துக் காளான்களாக ஒட்டிக் கொண்டிருக்கும் அத்தனையும் முளையிலேயே கிள்ளி எறியப்படவேண்டியவை என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்!
அழகிரி தொலைக்காட்சியில் சொல்லும் போது கூட மாற்றம் வேண்டும் என்று சொல்கிறார் என்று சொல்லிவிட்டு... சிறு இடைவெளிக்குப் பிறகு தமிழகத்தில் மாற்றம் என்று சொல்வார்..
ReplyDeleteபோறபோக்கைப் பார்த்தா மாற்றம் என்கிற வார்த்தைகூட திமுக-வுக்கு ஆகாத கெட்ட வார்த்தை போல!!!!
தேர்தல் ஆணையம் சரியான நபரை சரியான இடத்தில்தான் நியமித்திருக்கிறது... அது இவர்களின் புலம்பலில் வெட்டவெளிச்சமாகிறது!!!!
அரசியல்வாதிகள் கலந்து ஆலோசனை நடத்தினால், "எவ்வளவு பணம் செலவழித்தாவது நாம் ஜெயிக்கவேண்டும் என சொல்வர்,,,நான் கேக்கிறேன் மக்கள் என்ன ஆடு மாடுகளா.... வாங்கிவிடுவதர்க்கு...மக்கள் அப்படி பணத்துக்கு ஆசைப்பட்டு ஒட்டுப்போடுவாதால் தானே அவங்களுக்கு இத்தனை தைரியம்.. சில மக்கள் தங்கள் சமூகத்திற்கு நன்மை கிடைக்குமானால் எவ்வளவு பெரிய ஊழல் கட்சியானாலும் சேர்ந்து விடுவர். சோம்பேறிகளுக்கும், சுயனலவாதிகளுக்குமே இந்த ஆட்சி.. தனிமனித ஒழுக்கம் வரவில்லை என்றால்,,இப்படி இலவசங்களுக்கு மயங்கி,, நாட்டையே சீரழிக்கும் நிலைக்கு கொண்டுவந்து விடுவர்... மக்களுக்கு புத்தி சொல்லற மாறி ஒரு பதிவு போடுங்க சார்...
ReplyDeleteசார்,, தி மு க ஊழல் செய்கிறது என அனைவருக்கும் தெரியும்,,,இருந்தும் அவர்களுக்கு ஓட்டுப் போடுகிறார்களே... எதனால்?. கேட்டால் அரசியில்ல இதெல்லாம் சகஜமுனு சொல்லுவர்,, இதே எங்கே கொண்டுப் போயி முடியும்...
ReplyDeleteதிமுகவில் உள்ள தலைவர்கள் பெரும்பாலான தலைவர்கள் (கருணாநிதி நிச்சியமாக) இம்மாதிரியான கீழ்த்தரமான அரசியலுக்கு அடித்தளம் இட்டதில் பெரும்பங்கு உண்டு. அழகிரி அவன் அப்பன போலவே... பொறுக்கித்தனமான அரசியலை நேர்மையான அதிகாரிகளிடம் ஏவிவிட்டு ஜனநாயகத்தை படுகுழிக்குள் தள்ளுகிறார்.. வாக்காளன் ஆட்சியாளர்களைவிட பெரிய நபர்... நான் விரும்புகிறேன் இந்த ஆட்சி அவசியம் ஒழிந்தே தீரவேண்டும்.
ReplyDeleteஎன்னாச்சு சிவா? ஆச்சரியமா இருக்கு.
ReplyDeleteஉங்க வார்த்தை சுபம் போல?
அழகிரிக்கு கொடுக்கப்பட்ட காவல்துறை பந்தோபஸ்து கூட இன்று விலக்கப்பட்டுள்ளது.
ஆடும் வரை எல்லோரும் ஆடட்டும். அதுவரை பொறுத்திருப்போம்.எவ்வளவுகாலத்திற்குத் தான் மக்களை ஏமாற்ற முடியும் என்பதையும் பார்ப்போம். இது போன்ற அரசியல்வாதிகளின் அக்கிரமங்களும் அநியாயங்களும் ஒரு நாள் முடிவிற்கு வரும். நிச்சயம் மாற்றம் வரும். இன்றைய குஜராத் போல், பீகார் போல தமிழகமும் மாறும். அப்போது ”இது”களெல்லாம் இருக்காது. அதுவரை காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.
ReplyDeleteஅன்பு நண்பருக்கு என் பாசமுள்ள தம்பி ஏப்ரல் 1 அன்று இறந்து விட்டான்
ReplyDeleteஅதனால் தங்களுக்கு போன் செய்ய முடியவில்லை மன்னிக்கவும் பிறகு தொடர்பு கொள்ளகிறேன்
இப்படிக்கு
பாசமுள்ள தம்பி
( நானும் உங்கள் தம்பி என்று நினைக்கிறேன் )
கார்த்திகேயன்
9865442911
கோவை
மன வலிமை மிக்க சகாயம் போன்றர்களின் சகாயம் நம் நாட்டிற்குத் தேவை.
ReplyDelete