"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, March 22, 2011

சதுரகிரி கோரக்கர் குகை - நிறைவுப்பகுதி

பெரிய மகாலிங்கத்தை தரிசித்துவிட்டு கீழிறங்கி வந்தவுடன் கஞ்சி மடத்தில் உணவருந்திவிட்டு சற்றே ஓய்வெடுத்தோம். பின் சற்று மேல் புறம் அமைந்துள்ள சந்தனமகாலிங்கம் சந்நதியை சென்று அடைந்தோம்.


அங்கே ஆகாயகங்கை என்னும் அருவியின் அடியில் அமைந்துள்ள சந்தனமகாலிங்கரைச் தரிசித்தோம். இந்த இடத்தில் இடதுபுறம் சட்டநாதரின் குகை அமைந்துள்ளது. இதோ சந்நதி...




இந்த அறையில்தான் உள்ளே சட்டநாதரின் குகை இருக்கிறது. பூசாரிகளின் அனுமதி பெற்று  உள்ளே செல்லலாம். இந்த அறையின் வலதுபுறம் பதிணென் சித்தர்கள் திருவுருக்கள் அமைந்துள்ளது. அவர்களையும் வணங்கி திரும்பத் தொடங்கினோம்.

அங்கே கடைகளில் கிடைக்கும் இயற்கைச் சாம்பிராணிகளை வாங்கிக் கொண்டு இறங்கினோம். திரும்பி அடிவாரம் நோக்கி வரும் வழியில்   போகும்போது பார்க்காமல் விட்ட கோரக்கர் குகையை அடைந்தோம்.

இப்படி பாறையில் எழுதி இருக்கும். இந்த இடத்தைப்பார்த்து இடதுபுறமாக கீழிறங்க வேண்டும். முதன் முறை செல்பவர்களுக்காக இந்தத் தகவல்.
கோரக்கர் குகை முன்புறம் அர்ஜீனா நதி அமைதியாக ஓடும் அழகு, கோடை என்பதால் நீர் குறைவு..

இங்கு ஏறிய அல்லது இறங்கிய களைப்பு தீர குளிக்கலாம். பின் கோரக்கநாதரை வணங்கி திரும்பலாம். இந்த விதமாக எங்கள் பயணம் இனிதே நிறைவடைந்தது. சதுரகிரி மலை மொத்தத்தில் ஒருமுறை சென்றால் பலமுறை நம்மை வரச்சொல்லி ஈர்க்கும் என்பது என் அனுபவம்.

முதல் முறை சென்றபோது காலை 10 மணிக்கு ஏற ஆரம்பித்து 3.30 மணிக்கு சென்று சேர்ந்து மடங்களில் இரவு தங்கி அடுத்த நாள் இறங்கினோம். இரண்டு பகல் ஓர் இரவு. இப்படியும் திட்டமிடலாம். அல்லது

இரண்டாவது தடவை காலை 6.30க்கு ஏற ஆரம்பித்து 9.15க்கு சென்று பின் தவசிப்பாறை சென்று 1.30க்கு சதுரகிரி திரும்பி பின் மீண்டும் 2.30க்கு இறங்க ஆரம்பித்து 6.00 மணியளவில் தாணிப்பாறை அடிவாரம் திரும்பினோம்  ஒரு பகல் மட்டுமே..இப்படியும் திட்டமிடலாம்:)

உங்கள் பயணத்திற்கான எனது வாழ்த்துக்ளுடன் இந்தத் தொடரை நிறைவு செய்கிறேன்.

என்றும்
நிகழ்காலத்தில் சிவா


6 comments:

  1. தொடர் முழுவதும் படித்தேன். நன்றி.

    ReplyDelete
  2. உங்களின் பத்து பதிவுகளைப் படித்ததே சதுரகிரி போய் வந்த மாதிரி இருந்தது.

    நன்றி சிவாண்ணே!

    ReplyDelete
  3. தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல விருட்சம் நண்பரே..

    @ ☼ வெயிலான்.. மகிழ்ச்சி தல, முதலில் சுருக்கமா 5 இடுகையில் முடிக்க திட்டமிட்டிருந்தேன். உங்களைப் போன்றவர்களின் ஊக்கத்தினால் மட்டுமே இந்தத் தொடர் நல்லவிதமாக அமைந்தது.

    ReplyDelete
  4. சதுரகிரி இனிய பயணம் கண்டு களித்தோம்.மிக்க நன்றி.

    ReplyDelete
  5. படங்கள் எங்களையும் சதுரகிரி அழைத்துச் சென்ற புனித உணர்வைத் தருகின்றன.

    ReplyDelete
  6. உங்கள் பதிவுகள் அருமையாக உள்ளது. மிக்க நன்றி. வாழ்த்துக்கள்

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)