மனம் எதிர்கொள்ளும் எல்லா விசயங்களுக்கும் உடனடியாக எதிர்வினை ஆற்றும். அப்படி எதிர்வினையாற்றுவதே நம்மை அதன் வசத்தில் வைத்திருக்கும் தந்திரம் ஆகும். இதை தெளிவாக உணர்ந்து கொண்டாலே மனம் அடங்க ஆரம்பித்துவிடும்.
மனம் அடங்க அடங்க ’தான்’ என்கிற ஆணவ உணர்வு குறையத்தொடங்கும். நம் மனதை முழுமையாக ஆக்ரமித்து இருப்பது இந்த ஆணவம்தான். இது எல்லாவிசயங்களையும் உள்ளது உள்ளபடி பார்க்க தடையாக இருக்கும். ஆன்மிகம் சம்பந்தமான விசயங்களையும் உள்ளது உள்ளபடி பார்க்க இது தடையாகவே இருக்கும்.
இதை ஏன் இவ்வளவு விலாவாரியாக அலச வேண்டி இருக்கிறது என்றால் ஆன்மீகத்தில் பலகாலம் ஈடுபட்டு வரும் (நான் உட்பட) அன்பர்கள் பலரும் தங்களின் கருத்தே உயர்ந்தது. தாங்கள் பின்பற்றி வரும் முறையே சிறந்தது. மற்றவைகளை முடிந்தால் மட்டம் தட்டுவது எனத் தான் இருக்கிறார்கள். அவர்களே சொல்லிக்கொள்ளும் உயர்ந்த நிலை எதையும் அடைந்ததாக தெரியவில்லை. அல்லது அடைந்தாக அவர்கள் சொல்லிக்கொண்டாலும் நமக்கு அப்படித் தெரிவதில்லை.
தியானம், தவம் என அகநோக்கு பயிற்சிகள் தற்போது பல இருக்கின்றன. அதில் கலந்து கொள்ளும் பலரும் பலவிதமான அனுபவங்களைப் பெறுகிறார்கள். பயிற்சி அற்புதம் என்பவர்களும் இருக்கிறார்கள். இதை விட மோசமான ஒன்றை நான் பார்த்ததில்லை என்பவர்களும் இருக்கிறார்கள். இது ஏன்?
அதைவிட முக்கியம் ஆறுமாதம் கழித்துப்பார்த்தால் இருவருமே தத்தமது இயல்பு வாழ்க்கையில் இருப்பார்கள். அந்த தியான முறையையே மறந்திருப்பார்கள். இப்போ தியான முறைகளில் தவறா? அற்புதம் எனச் சொன்னவர் ஏன் தொடரவில்லை? மோசம் என்று சொன்னவர் மாற்றைத் தேடினாரா? இவைகளெல்லாம் இன்றளவிலும் விடை தெரியாத கேள்விகளாகவே பலருக்கும் இருக்கிறது.
இதை ஒருவரியில் விமர்சனம் செய்வதானால் பில்டிங் ஸ்டிராங்க். பேஸ்மெண்ட் வீக் அவ்வளவுதான். நாம் தெரிந்தோ, தெரியாமலோ ஆன்மீகத்தில் திரிசங்கு நிலையில்தான் இருக்கிறோம். இப்படி இருந்தால் என்ன செய்வது, எப்படி மேம்பாடு அடைவது என்கிற சுய அலசல்தான் இந்தத் தொடர் !
எளிதான உதாரணம்தான். மருத்துவர் கையில் கத்தி இருப்பதற்கும், கொலையாளி கையில் கத்தி இருப்பதற்கும் உள்ள வித்தியாசம்தான். நாம் கொலையாளியா? மருத்துவரா? அல்லது மருத்துவர் என நினைத்துக் கொண்டிருக்கும் கொலையாளியா? கொலையாளி என நினைத்துக் கொண்டிருக்கும் மருத்துவரா? இதைத்தான் திரிசங்கு நிலை என்கிறேன்.
முதலில் தியானம் தவம் ஆகியவைகள் ஏன் நமக்கு சட்டென பிடிபடுவதில்லை என்பதற்கான காரணங்கள் என்ன?
(தொடரும்)
உடனடியாக எதிர்வினையாற்றத் துடுக்கும் மனம்
ReplyDeleteமிகச் சரி
உடனடி எதிவினையாற்றும் குணத்தைகூட
குறைத்துக் கொள்ளப் பழகினால் கூட
கொஞ்சம் நிதானம் பழகும்போல்தான் படுகிறது
நல்ல பயனுள்ள பதிவு
தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்
நான்கு பகுதிகளாக இதுவரை எழுதியதை படித்தேன் சிவா!
ReplyDeleteஎதுவெல்லாம் ஆன்மிகம் என்று பட்டியல் இடுவதை விட, நாம் ஆன்மிகம் என்று இப்போது எதையெல்லாம் புரிந்துகொண்டிருப்பது எல்லாம் ஆன்மீகமே இல்லை என்று தெளிவது முதல் படி! உள்ளொளியாய் ஒன்று நமக்குள்ளே இருப்பதைக் கண்டுபிடிக்கும் வரை, எதை சொன்னாலும் அது சரியாக இருக்குமா என்பதே சந்தேகமே.
சந்தேகம் தெளிவிப்பதற்கு அவரவர் தேடலில் உள்ள ஆர்வம், உண்மையைப் பொறுத்து,ஒரு குருவின் துணை கிடைக்கிறது.
waiting to read ur next post. part 5.
ReplyDeleteஅடங்காத மனதை வழிபாட்டு பாடல்கள் மூலம் ஒன்று சேர்க்க, ஒன்றிணைக்க, உருவத்தை உள் மனத்தில் கொண்டு வர உதவக்கூடிய இந்த வழிபாடு கூச்சுலும் குழப்பமுமாய்.
ReplyDeleteமொத்தத்தில் கட உள் என்பதை தவறாகவே புரிந்து கொண்டவர்கள் இந்த அமைதியை மட்டும் தூர எறிந்து விட்டு எதைத் தேடி எங்கே அலைந்தாலும் எப்படி இந்த ஆன்மீகம் மற்றும் இந்த நல்ல சிந்தனைகள நம்மில் தழைக்கும்?
ஆன்மீகம், தெய்வம், கோவில், வழிபாடு, அமைதி
ReplyDeleteஎதற்காக உருவாக்கப்பட்டதோ ஆனால் அதையெல்லாம் தற்காலத்தில் விட்டு விட்டு நிற்பது ஆன்மீகம்.
ஒரு உருவத்தை மனதில் கொண்டு உன்னை நீ புரிந்து கொள்ள முயற்சித்துக் கொள் என்பதாக உருவாக்கப்பட்ட இந்த தெய்வமும் கூட என்னுடைய தெய்வம் பெரிது உன்னுடைய தெய்வம் பெரிது என்பதாக வந்து நிற்கின்றது.
பாராபட்சம் இல்லாமல் அணைவரும் சமம் என்று சொல்ல வேண்டிய ஒரு இடம் இன்று பணத்தின் அடிப்படையில், அவரவர் பதவியின் அடிப்படையில் கருவறை அருகே வரைக்கும் கூட செல்லலாம் என்பது வரைக்கும் செல்லுமிடமாக கோவில் இருக்கிறது.