"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, July 7, 2011

திருக்கைலாய யாத்திரை பகுதி 3

நாங்கள் சீனப்பகுதியில் பயணம் செல்லும்போது, கூடவே லாரியில் எங்கள் பொருள்கள் அனைத்தும் டிராவல்ஸ்காரர்கள் கொடுத்த பெரிய தனிதனிப் பையில் பயணம் செய்தன. அதே லாரியில் 12 நாட்களுக்கான உணவுப் பொருள்கள், சமையல் பொருள்கள் வந்ததால் நியாலம் வந்து சேர்ந்த இரண்டு மணிநேரத்தில் உணவு தயாராகிவிட்டது.




தங்குமிடங்களில் எங்குமே ஓட்டல்  கிடையாது. நல்ல பாத்ரூம் வசதிகளும் மிகக்குறைவே. மேலும் அங்கு நிலவும் தட்பவெப்பநிலை குளிக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தாது.:) ஆக தினசரி ஆச்சாரங்களை எல்லாம் வேறு வழி இல்லாததால் ஒதுக்கி வைத்து விட வேண்டியதுதான்:)

மார்பளவு சுவர், அதற்குள் நமது சாலையோர கழிவுநீர் ஓடும் சாக்கடை சைசில்  அமைக்கப்பட்ட இடத்தில் நமது காலைக்கடன்களை முடிக்க வேண்டும். டாய்லெட் வசதிகள் எதிர்பார்க்க்கூடாது. டிஸ்யூ பேப்பர் உபயோகித்துதான் ஆகவேண்டும். கூடவே ஈர டிஸ்யூ பேப்பர் வாங்கி வைத்துக்கொள்வது அவசியம். தங்குமிடங்களில் நமது டிராவல்ஸ்காரர்கள் ஏற்பாடு செய்கிற அறை எப்படி இருக்கும் என நமக்குத் தெரியாது. சகல வசதிகளுடன் இருக்கலாம். அல்லது ஏதுமின்றி மேலே சொன்னவாறும் இருக்கலாம்:) கண்டிப்பாக குறைந்தபட்சம் ஐந்து பேர் ஒன்றாக தங்க வேண்டி வரும். அறையில் படுக்கை மட்டும்தான் இருக்கும். பாத்ரூம் இருக்காது:)

இந்த நியாலம் கடல்மட்டத்திலிருந்து 3750 மீட்டர் (காட்மண்டு 1300 மீட்டர்)உயரத்தில் அமைந்திருக்கும். இங்கு  இரண்டு இரவுகள், ஒரு பகல் என தங்க வைத்து விடுவார்கள்.காரணம் நமது உடல் அந்த உயரத்திற்கு பழக வேண்டும். புவிஉயர்மட்ட நோய்த் தாக்குதலுக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதற்காகத்தான்.

காட்மண்டுவில் ஏதேனும் பொருள்கள் வாங்குவதாக இருந்தால் அவற்றை இங்கு வாங்கிக்கொள்ளலாம். சீன பணம் ஒரு யுவான் நமது பணமதிப்பிற்கு சுமார் 7.50. இந்த பணபரிமாற்றம் நீங்கள் காட்மண்டுகள் இதெற்கென இருக்கும் பல கடைகளில் மாற்றிக்கொள்ளலாம். சுமார் 3000 யென் வாங்கிக்கொள்ளலாம். நான் இரண்டாயிரம் வாங்கினேன்

மற்ற பொருள்களின் விலை #கையுறை, வாக்கிங் ஸ்டிக் போன்றவை காட்மண்டுவை விட பாதிதான். மேலும் தொலைபேசியும் இருக்கிறது சுமார் 5யுவான் ஒருநிமிடத்திற்கு ஆகும்( ரூபாய் 37)..

நியாலத்தில் இன்னும் தொடர்வோம்
நிகழ்காலத்தில் சிவா

8 comments:

  1. அருமையான பயணத்தில் தொடர்கிறோம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. கைலாயத்தை உங்களுடைய வர்ணனைகளுடன் தரிசிக்கப் போகும் அந்த பதிவிற்காக காத்திருக்கிறேன். நன்றி.

    ReplyDelete
  3. தொடருங்கள் .பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. திருகைலாயம் பற்றியா ? :)) இப்போதுதான் பார்க்கிறேன், இனி தொடர்ந்து பயண கட்டுரை முழுதும் படித்துவிடுகிறேன்.

    எழுத்து நடை படிக்க இன்னும் ஆர்வத்தை கொடுக்கிறது.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. இறையருளால் எங்களுக்கும் மானசரோவர் கயிலாய யாத்திரை செய்துமுடிக்கும் வாய்ப்பு 2009 ஆகஸ்டில் கிடைத்தது. இடுகைகளுக்கு நன்றி.

    ReplyDelete
  6. பசுபதி நாத் கோவிலுக்கு சென்றீர்களா, நேபாளின் நியாபகமாக நீங்கள் வாங்கி வந்தது என்ன,

    ReplyDelete
  7. இராஜராஜேஸ்வரி
    சாகம்பரி
    shanmugavel
    Kousalya
    பாலராஜன்கீதா
    ஸ்பார்க் கார்த்தி

    நண்பர்களின் வரவுக்கும் கருத்துகளுக்கும் நன்றி..

    மிகுந்த மகிழ்ச்சி பாலராஜன் அவர்களே. தட்பவெப்ப நிலை ஆகஸ்ட் மாதம் தான் உகந்தது என்றார்கள் சரியா?

    கார்த்தி பசுபதிநாத் கோவிலுக்குச் சென்றோம். கடைசியாக வரும் படங்களுடன். அங்கு 5தலை விநாயகர் சிலை சிறியது ஒன்று வாங்கி வந்தேன்:)

    ReplyDelete
  8. மிகவும் காலம் கடந்து மறுமொழி அளிப்பதற்கு மன்னிக்கவும். இப்போதுதான் உங்கள் கேள்வியைப் படித்தேன். ஜூலை-ஆகஸ்டு உகந்த மாதங்கள் என்று சொல்கிறார்கள். நாங்கள் 2009 செப்டம்பரில் பௌர்ணமி அன்று மானசரோவர் கயிலாயம் தரிசனம் கிடைக்கப் பெற்றோம்.

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)