இரவு உடன் வந்த சில பெண் யாத்திரீகர்களுக்கு மயக்கம், தலைசுற்றல் அதிகமாகவே இருந்தது. அவரளுக்கு டயாமாக்ஸ் மாத்திரை வழங்கப்பட்டது. இது நீண்ட பயணம் மற்றும் இடையில் சுமார் 80 கிமீ பாதை மண்ரோடுதான். அருகில் உள்ள புதிய டோங்பா என்கிற ஊரில் எல்லா வசதிகளும் உண்டு. சூரிய சக்தியால் அந்த ஊரே இயங்குகின்றது :)
அடுத்தநாள் ஜீன் 11 நேராக மானசரோவர் நோக்கி பயணம் தொடங்கினோம். 335 கிமீ பயணம், இருபுறமும் மலைகள், நடுவே அகண்ட சமவெளி பரப்பு என இயற்கை அமைத்த பாதையில் வியந்து கொண்டே சென்றோம். இங்கு விவசாயம் என்பதே கிடையாது. இருக்கிற சிறு புற்கள் ஆடுகளும், யாக்குகளும் மட்டுமே மேயும்.
திடீர் மணல் குன்றுகள் இவை உருவான விதம் எப்படி என ஊகிக்கவே முடியாது:) |
நீண்ட பாதை சலிப்பே இல்லாத பயணத்திற்கு உத்தரவாதம் |
திபெத்திய அக்காவும் தம்பியும்...
மனோசரோவர் ஏரிக்கரை வந்தடைந்தோம். அதன் கரையின் வலதுபுறத்தில் அடர்த்தியான பனிபடர்ந்த மலைகளின் காட்சி நம்மை உற்சாகம் கொள்ள வைக்கும்.புத்தம் புது உலகத்தில் நுழைந்த உணர்வு மனதையும் உடலையும் கவ்விக்கொள்ள ஆனந்தமான சூழ்நிலை அங்கே நிலவியதை உணர்ந்தோம்.
பிரமாதம். இத்தனை நாள் தவற விட்டிருக்கிறேனே?!
ReplyDeleteகைலாயப் பயணம் மேற்கொள்ளும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறேன். உங்கள் பதிவில் வந்திறங்கியது தற்செயலா புலனுக்கப்பாற்பட்ட திட்டமா? ஆ!
புகைப்படங்கள் மிக அருமை. படங்கள் ஒரு பதிவை சுவாரசியமாக்கும் என்பதற்கு உங்கள் பதிவுகள் ஒரு உதாரணம்.
ReplyDeleteவாங்க அப்பாத்துரை நீங்கள் வந்தது தற்செயல் அல்ல:)
ReplyDeleteபுலனுக்கு அப்பாற்பட்ட நியதிதான் காரணம்:)
எப்படி இன்று காலைதான் தமிழ்மணத்தில் நசிகேத வெண்பாவினைப் பார்த்து என்னுடைய தினசரி படிக்கும் பட்டியலில் இணைத்தேன். 9 மாதமாக எழுதும் உங்களை நான் எப்படி பார்க்காமல் விட்டேன் என எண்ணினேன்.
வந்துவிட்டது உங்கள் பின்னூட்டம்.,
சேம்பிளட்...:))))
வருகைக்கு நன்றி நண்பரே
சரியாகச் சொன்னீர்கள் சிவானந்தம்.
ReplyDeleteபார்த்த இடங்களை எப்படிச் சொன்னாலும் கேட்பவருக்கு அப்படியே படம் பிடித்து காட்ட முடியாது.,
ஆகவே படங்கள் அதிகம் வெளியிடுவதே எனது விருப்பமும்.,
ஊக்கத்திற்கு நன்றி..
படங்களும் அனுபவமும் அருமை.
ReplyDeleteசூப்பர் சார், அனா உங்ககிட்ட ஒரு கேட்ட பழக்கம் சொல்லாமலேயே போய்ட்டு வந்துடுவீங்க, வந்த பிறகு இடுகையிலே சொல்லும் போதுதான் தெரியும் அட நம்மாளு போய்ட்டு வந்துட்டாருன்னு,
ReplyDeleteமிக மிக அழகான ஆழமான மானசரோவர் ஏரி. கூகுள் மேப் மூலம் நீங்கள் சொல்லும் வழித்தடத்தை பின்பற்றுகிறேன். மானசரோவர் அருகிலேயே ராட்சஸ்தல் என்கிற ஏரியும் இருக்கிறதே. இரண்டிற்கும் இடையே திருக்கைலாய மலையின் பனிபடர்ந்த தோற்றத்தை பார்க்க முடிகிறது. நன்றி.
ReplyDeleteஅருமையான யாத்திரைப் பதிவு... தொடருங்கள்... காத்திருக்கிறோம்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி...
http://anubhudhi.blogspot.com/
kutகுட்
ReplyDeleteஅருமையாக அக்கறையுடனும், இனி மேல் செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் பயன்படும் விதத்தில் எழுதுகின்ரீர்கள். வாழ்த்துக்கள். சிவசக்தி அருள் பூரணமாக சித்திக்க பிரார்த்திக்கின்றேன்.
ReplyDeleteஓம் நமசிவாய
http://kailashi.blogspot.com