"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, August 16, 2011

திருக்கைலாய யாத்திரை பகுதி 16

நடந்து வந்ததின் களைப்பு அனைவரிடத்திலும் ஆக்ரமித்து இருக்க, கிடைத்த படுக்கைகளில் அனைவரும் ஓய்வெடுத்தனர். வழக்கமான உரையாடல்கள் எதுவும் இல்லை:). விட்டால்போதும் என்கிற மனநிலை பலருக்கும்:)). அப்போது வழிகாட்டி வந்து அனைவரும் தயவு செய்து ஒரு மணி நேரம் உறங்க வேண்டாம். படுப்பதைவிட அமர்ந்து கொண்டால் நலம். உணவு தயாராகிக்கொண்டு இருக்கிறது என்றார்.

உயர் மட்ட நோய்க்குறி தாக்குதலுக்கு ஆளாகிவிட வாய்ப்புகள் இருப்பதால் இந்த எச்சரிக்கை என்றார். படுத்து ஒரு வேளை உறங்கிவிட்டால் உடலின் மாறுதல்களை உணர்ந்து எச்சரிக்கையாக வாய்ப்பு இல்லாமலே போய்விடும் என்றார்.

நான் மலை ஏறும்போதே நீர்புகா (ரெயின் கோட் பேண்ட்,ஜெர்கின்)ஆடைகளை அணிந்திருந்தேன். அதனால் வியர்க்கவும் செய்தது. அதே சமயம் குளிர் காற்றில் பாதிக்கப்படாமலும் வந்து சேர்ந்தேன்.

சில நண்பர்கள் உப்புசம், நடக்கும்போது வியர்வை என ஜீன்ஸ் பேண்ட்களை அணிந்து வந்திருந்தனர். அவர்களுக்கு அதிகம் வியர்க்கவில்லை. ஆனால் குளிர் காற்றினால், அதன் ஈரப்பதத்தினால் அவர்களின் பேண்ட் ஏறத்தாழ நனைந்துவிட்டிருந்தது. அறைக்கு வந்தவுடன் அதில் ஒரு நண்பருக்கு கால் தொடை தசைகளில் (குறக்களி?)இழுத்துப்பிடித்துக்கொண்டது. காரணம் ஈர ஜீன்ஸ் பேண்ட்தான்..

வலி தாங்கமுடியவில்லை என்பதை அவரது முக,உடல் அசைவுகளில் இருந்து கண்டு கொண்ட நான் உடனே அவரது பேண்டை கழட்டிவிட்டு, தைலம் போட்டு அழுந்த, வேகமாக அரக்கித் தேய்த்துவிட்டேன். சற்று சூடேற இயல்பு நிலைக்கு வந்தார். ஆக நனைந்த உடைகளோடு இருப்பதைத் தவிருங்கள்.

இரவு உணவு தயாரிக்கப்பட்டு கொண்டு இருந்தது. அடுத்த நாளைய நடவடிக்கைகளைப் பற்றி அமைப்பாளர்களுடன் ’வழிகாட்டி’ ஆலோசனை நடத்தினார். அதாவது நாளை பரிக்ரமா (கோரா)வை தொடரலாமா அல்லது திரும்பலாமா.? தொடரலாம் என்றால் முதலில் நாளைய இயற்கைச்சூழ்நிலை எப்படி இருக்கும். மேலே செல்லும் வழியில் பனி எந்த அளவிற்கு இருக்கும்? ஒரு வேளை இரவு மழை பெய்து, இன்னும் பனி அதிகமாகிவிட்டால் என்ன செய்வது? என மேற்கொண்டு யாத்திரையைத் தொடர்வதில் உள்ள இடர்பாடுகளை ஆலோசித்துக்கொண்டு இருந்தனர். அத்தோடு யாத்திரை தொடர்வதற்கு யார் யார்க்கு உடல் தகுதி இருக்கிறது என்பது குறித்தும் ஆலோசனை நடந்தது.

மலை அடிவாரத் தங்குமிடமான டார்சனில் நாங்கள் ஏற்கனவே மூன்று நாள் பரிக்ராமா கண்டிப்பாக போகவேண்டும் என வற்புறுத்தி இருந்ததால் எங்களை மனதில் வைத்தே இந்த முடிவினை வழிகாட்டியும், அமைப்பாளர்களும் மறுபரிசீலனை செய்தனர்.



எனக்கு உண்மையில் முதலில் மூன்று நாள் செல்ல வேண்டும் என்று இருந்த ஆர்வம் சமனாகி, திரும்பிப்போவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. தொடர்ந்தாலும் சம்மதமே என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன்:))., அதனால் பரிக்ரமாவைத் தொடரச்சொல்லி அமைப்பாளர்களிடம் கேட்பதில்லை என்பதில் உறுதி ஆக இருந்தேன்.

யாத்திரை தொடரும்
நிகழ்காலத்தில் சிவா


3 comments:

  1. 16 க்பாகமும் படித்தேன் , அருமையாக இருந்தாது , பெண்கள் அங்கு செல்ல அனுமதிப்பதுண்டா, தொடர்ந்து எழுதுங்கள்,,,,,,,,,,,

    ReplyDelete
  2. பெண்கள் நிச்சயம் போகலாம். எந்த வித தடையும் இல்லை. உங்களின் உடல் ஒத்துழைப்பு இருந்தால் போதும்:)

    மகிழ்ச்சி சகோ. வருகைக்கும் கருத்துக்கும்...

    ReplyDelete
  3. புகைப்படங்கள் அருமையாக உள்ளது, உங்கள் அனுபவங்களை படிக்கும் பொது மிகவும் த்ரில்லிங்காக உள்ளது,
    ! ஸ்பார்க் கார்த்தி !

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)