"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, August 25, 2011

திருக்கைலாய யாத்திரை பகுதி 19

காலை 7 மணிக்கு கிளம்பிய நாங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தோம். சுமார் 9.15 மணிக்கு டோல்மாலாபாஸ் அமைந்திருக்கின்ற  மலை அடிவாரத்தை அடைந்தோம். முதல் மூன்று படங்களும் போகும் வழியில் எடுக்கப்பட்டவை, திருக்கைலையை விட்டு சற்று விலகித்தான் இனி பாதை செல்லும். அதன் வழியே யாத்திரை தொடர்ந்தது...





இன்று நடக்க வேண்டிய தூரம் சுமார் 20 கி.மி என்பதால் நான் நடையை சற்று எட்டிபோட்டேன். முதல் நாள் இப்படி நடந்து வந்ததில் சற்று களைப்பு இருந்தாலும் இன்றும் அப்படியே நடந்ததை கண்ட வழிகாட்டி ’க்யான்’ எக்காரணம் கொண்டும் தனக்கு முன்னால் முந்திக்கொண்டு போக வேண்டாம். Go Slowly எனச் சொல்லிக்கொண்டே வந்தார். ஆர்வமிகுதியால் மறுபடியும் அவரை முந்திக்கொண்டு செல்ல மீண்டும் மீண்டும் மெல்லச் செல்லும்படி என்னை பணித்தார். அவரும் வழக்கமான வேகத்தைவிட பாதிவேகத்தில்தான் சென்றார். அதற்கான அப்போது தெரியவில்லை. பின்னர்தான் தெரிந்தது. வேகமான நடையினால் நம் உடலில் உள்ள ஆக்சிஜன் சதவீதம் குறைந்து கொண்டே வரும். டோல்மாலாபாஸ் (மலை உச்சியி)ல் ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கும்போது அதை நம் உடலால் சமாளிக்க முடியாது என்பதே. ஆக நண்பர்க்ள் ஒருவேளை நடந்து சென்றால் இதைக் கவனத்தில் முக்கியமாகக் கொள்ள வேண்டும்:)


டோல்மாலா பாஸ் என்கிற பகுதி அமைந்துள்ள மலையின் அடிவாரத்தில் இருந்து...(கீழே உள்ள படம்)


கீழே உள்ள படத்தில் வலதுபுறத்தில் உள்ள உச்சிப்பகுதியே நாங்கள் கடக்க வேண்டிய பகுதி. யாத்திரீகர்கள் எறும்பு சாரிபோல் ஊர்ந்து சென்று கொண்டிருப்பார்கள்.  படத்தை கிளிக்கினால் பெரிதாகும், பாருங்களேன்.
யாத்திரை தொடரும்
நிகழ்காலத்தில் சிவா

5 comments:

  1. அற்புதமான கைலை நாதன் தரிசனம்... கோடான கோடி நன்றிகள்..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  2. தொடர்ந்த வருகைக்கு மகிழ்ச்சி சங்கர் குருசாமி...:)

    ReplyDelete
  3. தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  4. அந்த மலை ஐயனின் கிழக்கு முக தரிசனம்

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)