"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Wednesday, September 7, 2011

திருக்கைலாய யாத்திரை பகுதி 20

டோலமா லா பாஸ் அமைந்துள்ள மலையில் ஏறத் துவங்கினோம்.பார்வைக்கு சீக்கிரம் சென்றுவிடக்கூடிய தொலைவாகத்தான் தெரிந்தது. மணியைப் பார்த்தால் காலை 9.15. அதிகாலையில் இருந்து நடந்து கொண்டு இருந்ததால்
காலை உணவுக்கு வயிறு ஏங்க ஆரம்பித்தது. ஆனால் முதலிலேயே உணவு கிடைக்காது என்ற சொல்லப்பட்டு இருந்ததால், வயிற்றை சமாதானப்படுத்திக்கொண்டே  நடக்க ஆரம்பித்தோம்.

சற்று உயரமாக ஏறவேண்டி இருந்ததால் மனம் ஆர்வமாக மேலே ஏறத்துடித்தாலும் கால்கள் முன்னெடுத்துவைக்கும் வேகம் குறைந்துவிட்டது. இருந்தாலும் அதிகம் பேசாமல் ஏறிக்கொண்டே இருந்தோம். நடந்து சென்ற வேறு குழுவைச் சார்ந்தவர்களில் சிலர் எங்களை தாண்டி சென்றனர். அவர்கள் பலர் திபெத்தியர்கள். இன்னும் சிலர் வெளிநாட்டவர் முடிந்தவரை தம்பதியர்(?) ஆகவும் சென்றனர். குதிரைகளும் யாத்திரிகர்களுடன் எங்களைத் தாண்டி சென்றனர்.குதிரை ஏற்றம் எளிதானதே., குதிரையின் அசைவுக்கு தகுந்தவாறு விறைப்பாக இல்லாமல் தளார்வாக இருந்து நாமும் ஒத்துழைத்தால் குதிரை பயணம் எளிதானதே:). எங்களின் கண்முன்னே ஒரு குதிரை சற்று மிரள அதன் மீது அமர்ந்திருந்த யாத்திரிகர் ஒருவர் கீழே விழுந்தார். விழுந்த சப்தம் கேட்டு நான் அதிர்ச்சியானேன். நல்லவேளையாக பெரிய அடி ஏதும் படவில்லை.

எங்களின் வழிகாட்டியிடம் அடிவாரமான டார்சானில் தங்கியிருந்தபோது பரிக்ரமாவிற்கு குதிரை ஏற்பாடு செய்யச் சொன்னோம். அதற்கு அவர் ”திருக்கைலாய மலை சாட்சாத் இறையேதான். அதன் அருளை,ஆற்றலை பெற வேண்டுமானால் நீங்கள் உடல்வருத்தி யாத்திரை மேற்கொள்ளுங்கள். குதிரையில் சென்றால் கஷ்டப்படும் குதிரைக்கு மட்டுமே இறையருள் கிட்டும். உங்களுக்கு கிட்டாது எப்படி வசதி?” என சிரித்துக்கொண்டே கேட்டார்.

சிரமப்படாமல் குதிரையில் செல்லலாம் என எண்ணியிருந்த என்னைப்போன்ற சிலரும் இதைக்கேட்டவுடன் எந்த ஆராய்ச்சியும் பண்ணாமல் அந்த எண்ணத்தையும் கைவிட்டுவிட்டோம். :))



பயணம் என்னைப்பொறுத்தவரை கடினமாக மாறிக்கொண்டு இருந்தது. தொடர்ந்து நடந்து வந்தது போய், கொஞ்ச தூரம் நடப்பது, பின்னர் அமர்ந்து ஓய்வெடுப்பது என யாத்திரையின் வேகம் குறைந்துவிட்டது. நேரம் கடக்க கடக்க , நடக்கும் நேரம் குறைவாகவும், உட்கார்ந்து உட்கார்ந்து ஓய்வெடுக்கும் நேரம் அதிகமாகவும் மாறிவிட்டது. ஒருவழியாய் சுமார் 10 மணி அளவில் வழிகாட்டி தன்னுடன் கொண்டுவந்திருந்த ஒருஆப்பிளையும், பெட்டியில் அட்டைக்கப்பட்ட் ஆப்பிள் ஜூஸ் கொடுத்தார். அதைச் சாப்பிட்டவுடன் சற்று தெம்பு வந்தது. மீண்டும் தொடர்ந்து நடக்க ஆயத்தமானோம்.

முதல் பாதி கற்களாக இருந்தாலும் மேலே ஏறஏற பனிபடர்ந்து இருந்த காட்சி



யாத்திரை தொடரும்
நிகழ்காலத்தில் சிவா

6 comments:

  1. கைலையில் நாங்களே பரிக்கிரமா செய்வதுபோல உள்ளது...

    பகிர்வுக்கு நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  2. அருமையான பதிவு.
    அருமையான படத்தொகுப்பு.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. எனக்கு கடவுள் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்தாலும், இது போன்ற பயணங்களை நான் விரும்பவதுண்டு. இது ஒருவிதமான மன அமைதியையும் உற்சாகத்தையும் தரும். அந்த வகையில் உங்கள் பயணத்தை நானும் ரசிக்கிறேன்.

    ReplyDelete
  4. நல்ல விளக்கங்களுடன் யாத்திரை தொடர்கிறது.நன்றி

    ReplyDelete
  5. கொஞ்சம் தாமதம். வேலைப்பளுவோ?

    ReplyDelete
  6. @ Sankar Gurusamy தொடர்வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்:)

    @ Rathnavel மனப்பூர்வமான வாழ்த்தினை ஏற்றுக்கொள்கிறேன் ஐயா !

    @ சிவானந்தம் தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..கடவுள் நம்பிக்கை குறைவது ஒன்றும் த்வறல்ல. பக்தி மார்க்கத்தில் இருந்து ஞானமார்க்கத்திற்கு செல்ல வேண்டிய தருணம் இது.,

    இந்த கைலாயத் தொடரை முழுமையாக படித்துவந்தால் தெரியும். இந்தத் தொடரில் என் அனுபவங்களைத்தான் எழுதி வருகிறேனே தவிர பக்தி சார்ந்த கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்க மாட்டேன்.

    பக்தி என்பது ஆரம்பகட்ட நிலை., ஞானம் என்பது அடுத்த கட்டம்..

    @ சாகம்பரி கருத்துகளுக்கு நன்றி

    @ DrPKandaswamyPhD சரியாக கண்டுபிடித்துவிட்டீர்கள்:) ஆமாம் வேலை அழுத்தம் அதிகம், வரும் நாட்களில் விரைவாக வெளியிட முயற்சிக்கிறேன்.

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)