"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, October 20, 2011

நானும் அப்பாடக்கர்தான்...தமிழ்மணம்

இது பற்றி பேசவே கூடாது. தமிழ் வலையுலகமே கொந்தளித்துக்கொண்டு இருக்கும்போது, அந்த உணர்ச்சிகரமான சூழ்நிலையில் எனது கருத்துகள் எரிகிற தீயில் எண்ணையாக பார்க்கப்பட்டு,  இன்னும் தூண்டுதலாக அமைந்துவிடுமோ என நினைத்து முடிந்தவரை  பகிர்வதை தவிர்த்தே எழுதியும் டிராப்டில் போட்டுவிட்டேன்.;)

இன்றுதான் டெர்ரரின் தெளிவான விளக்கப்பதிவினை படித்தேன். இப்போதுதான் தற்போதய சூழ்நிலையை மிகச் சரியாக கணித்து தூண்டுபவர்களை அடையாளம் கண்டு எச்சரிக்கையுடன் செயல்படுகின்றனர். இதனை பாராட்டுகிறேன்.

சரி எழுதி வெச்சது வீணாப்போகலாமா:))))).,பஞ்சாயத்து, தூண்டுதல் எதுவுமின்றி அவர்களின் சிந்தனையை ஒட்டி அமைந்த எனது கருத்துகள் இதோ.,

தமிழ்மணம் பிரச்சினையின் ஆரம்பப்புள்ளி டெர்ரர் கும்மி பதிவில் தமிழ்மணத்தை கிண்டல் செய்ததுதான். அது நகைச்சுவையாக எழுதி இருப்பதாக சொல்லி இருந்தாலும், தமிழ்மணம் பெயரிலி ஆட்சேபணையை தெரிவிக்க, அவர் நிர்வாகம் சார்பாக சொல்லி இருந்தால் என்ன? தனிப்பட்ட முறையில் சொன்னால் என்ன? சொல்வதில் உள்ள நியாயத்தை உணர்ந்து மிக எளிதான புரிதலுடன் ”தாராளமாக இந்த இடுகையை தூக்கி/திருத்தி விடுகிறோம்” என்று செயல்பட்டிருந்தால் அதுவே புரிதல் அதுவே பெருந்தன்மை.,

இந்த பிரச்சினையில் எவர் பக்கமும் சாராது ஒருவேளை அவர்கள் இடத்தில் நான் இருந்தால் என்ன செய்திருப்பேன்/ செய்திருக்கலாம் என்கிற சிறு எண்ண ஓட்டமே இது.,

பெயரிலியிடம்,டெர்ரர் கும்மி, தமிழ்மணத்திலிருந்து ஆட்சேபணை லெட்டர் கொடுங்க., குறிப்பிட்ட வார்த்தைகளை நீக்குகிறோம் என்று கேட்டது அரசு அலுவலகங்களில் நடப்பது போன்ற ’நீயா, நானா’ என்ற கெளரவப் பிரச்சினைதானே ஒழிய வேறு ஒன்றுமே இல்லை:). திரட்டியா, நானா என்கிற ஈகோவைத் தவிர வேறொன்றுமில்லை.

தமிழ்மணம் திரட்டி தனி ஒருவருக்கு சொந்தமானதாக இருக்க வாய்ப்பில்லை. சிலரேனும் நிர்வாகியாக இருப்பார்கள். பெயரிலி தன்னை நிர்வாகத்திற்காக நான் உரையாடுகிறேன் என்றதும் சற்றே பொறுமை காத்து தமிழ்மணத்திடம் உங்கள் நிர்வாகிகளில் ஒருவர் இப்படி பேசுகிறாரே இதற்கு என்ன அர்த்தம் என்று புகார் அனுப்பி விளக்கம் கேட்டிருந்தால் அதன் மதிப்பே தனி., நிச்சயம் பெயரிலி உட்பட்ட நிர்வாகிகள் டெர்ரர் கும்மியிடம் தகுந்த முறையில் வருத்தம் தெரிவித்திருப்பார்கள் என நான் நினைக்கிறேன்.

அப்படி தமிழ்மணம் தெரிவிக்கவில்லையெனில் அதன் பின் யூகங்கள் ஏதுமின்றி, சொந்த சான்றுகளுடன் தமிழ்மணத்தின் நிலைப்பாட்டை எளிதில் விளக்கிவிட்டு வேறு வேலையைப் பார்க்கப் போயிருக்கலாம்.:)
அப்போது நான் உட்பட அனைத்து பதிவர்களும் நிச்சயம் டெர்ரர் பக்கமே.:)
இதன் தொடர்ச்சியாக, மற்ற சில நண்பர்கள் தமிழ்மணத்தையும் பெயரிலியையும் கும்மும் வரை கும்மிவிட்டு அதன்பின்னரும் மன்னிப்பு கேள் என்றால் தமிழ்மணத்தின் மற்ற நிர்வாகிகளும் மனிதர்கள்தானே.?

இதுதான் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்  ஒளிந்திருக்கும், ஊறி இருக்கும், எனக்குள்ளும் இருக்கும் அகந்தை, ஆணவம்..

இந்த நிகழ்வை மீண்டும் அசை போடக்காரணம் இனி நம் வாழ்வில் நிகழும் ஒரு தனிப்பட்ட நிகழ்வில் நமது பங்களிப்பு என்ன? என்பதே என் கேள்வி., கொஞ்சம் பொறுத்து, நிதானித்து ஒரு பிரச்சினையை நேருக்கு நேர் கையாள நம்மால் முடியாதா? அந்த திறமை நிச்சயம் நம்மிடம் உண்டு. ஆனால் விருப்பம்தான் இல்லை:)))

பொதுவாக இணையம் பயன்படுத்துவர்கள் யாருமே கல்வியறிவில் குறைந்தவர்கள் கிடையாது. ஆனால் நாம் கற்ற கல்வி, காசு சம்பாதிக்க உதவுகிறதே தவிர, வாழ்க்கையில் மனிதர்களோடு கலந்து பழக, உறவுகளோடு சுமுகமாக இருக்க உதவுவதில்லை என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

வார்த்தைக்கு வார்த்தை நூல் பிடித்துப்பார்த்து, உரசிப்பார்த்தால் முடிவே ஏற்படாது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தமிழ்மணம் திரட்டி தானியங்கி., அவர்கள்  மெயிலை மட்டுமே கவனிக்க முடியும்.அதுவே சாத்தியம் என்று பலமுறை சொன்ன பின்னும், எந்த தகவலாயினும் நாம் சொன்னால் மட்டுமே அவர்களுக்குத் தெரியும் என அவர்கள் தெளிவாகச் சொன்ன பின்னரும், அவர்களோடு நேரடி செய்தித் தொடர்பில் இயங்காமல் தெருவில் நின்று கத்துவது போல சில நண்பர்கள் இயங்கிக்கொண்டு இருப்பது வருத்தமாகவே இருக்கிறது:(

தமிழ்மணம் திரட்டியை புறக்கணிக்க வேண்டும் என்றால் எதற்கு என்பதே எனக்கு இன்னும் புரியவில்லை. முஸ்லீம் அன்பர்கள்( இந்த இடத்தில் தமிழ்மணத்தை புறக்கணித்த நண்பர்கள் எனக்கொள்க) பெயரிலி சொன்னால் அதற்கு அவரிடம் விளக்கம் கேட்டார்களா என்றால் இல்லை. அவர்களாகவே முடிவு செய்து கொண்டு, தீர்ப்பு சொல்லி ஆயிற்று, மன்னிப்பு கேள் என்று.,

இதற்கிடையில்பெயரிலியும் அவரது சொந்த தளத்தில் நான் அந்த பொருளில் சொல்லவே இல்லை. அது எங்கள் வட்டார வழக்கு எனச் சொல்லி விட்டார்.
ஒரு வாதத்திற்காக இதை அவர் மாற்றிப் பேசுகிறார் என வைத்துக் கொண்டால்கூட பயந்துதானே மாற்றிப்பேசிகிறார். பயந்தவரை ஓட ஓட விரட்டுவதுதான் வீரமா?..இது ஒரு வாதத்திற்காகத்தான்., என்னைப் பொறுத்தவரை அவரது விளக்கம் முழுக்க ஏற்புடையதே.,

இன்னும்கூட முஸ்லீம் நண்பர்களிடம்  கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருப்பதாக நினைப்பேன்.  ரமலான் மாதத்தில் அவர்கள் மாதம் முழுவதும் நோன்பு இருப்பது, தினசரி 5 வேளை நேரந்தவறாத தொழுகை என அவர்கள் கடைபிடிப்பது, இந்த நல்லகுணங்கள் மட்டும்தான் என் கண்ணுக்கு தெரிகிறது., இது எதோ அவர்களை நைஸ் பண்ணுவதற்காக அல்ல:))

மன்னிப்பு என்ற வார்த்தையை  எப்படி பயன்படுத்துவது என்ற குழப்பம் நம்மிடையே இருக்கிறது. உங்கள் தேவை என்ன சம்பிரதாய மன்னிப்பா., வெறும் வார்த்தைகளில் திருப்தியடையும் கூட்டமா நீங்கள்? இப்படி எழுதக்கூட எனக்கு வருத்தமாக இருக்கிறது. மன்னிப்பு என்பது ஒருவரது தவறை அவரே உணரச்செய்தல் அல்லது அவர் உணர்ந்துவிட்டதாக நாம் நினைக்கும் நிலைதான்., அப்படி உணரச்செய்தால் அவர் இனி வருங்காலத்தில் அது போன்ற எந்தத் தவறான செயலையும் செய்யமாட்டார் அல்லவா?. இது நல்லதுதானே? வேறு என்னதான் எதிர்பார்க்கிறீர்கள்?,


சம்பிரதாய மன்னிப்பு, நிர்பந்தத்தால் கேட்க வேண்டி வந்தால், கேட்பவர்  தக்க காலம் வரும்வரை மனதில் பழியோடு காத்திருக்க வாய்ப்பு உண்டு என்பது நமக்குத் தெரியாதா? நாம் மட்டுமே பெரியவன் நினைப்பது மகா தவறு. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. அந்த வலியதே இறை. அந்த இறை  இதுபோன்ற சூழ்நிலைகளில் எனக்கு பொருத்தமானவற்றை எனக்கென  நிகழ்த்தும் என்று பொறுமையோடு இருப்பதுதான் சரி. இது என் புரிதல்.

தவறு செய்தவனை மன்னிப்பது என்பதே என்னைப் பொறுத்தவரை  மறைமுக தண்டனைதான்., அதுமட்டுமல்ல., தவறு செய்தவனை என்ன செய்யவேண்டும் என இறைக்கு தெரியாதா., , தீர்ப்பு கொடுக்கிற வேலையை, நாம் ஏன் தலையில் சுமந்து திரியவேண்டும்.

இந்த இடுகைகூட என் மனதில் இருந்த ஆதங்கத்தை இறக்கிவைக்கும் முயற்சியே தவிர வேறு ஒன்றும் இல்லை., மதத்தால் பெயரால், ஜாதியின் பெயரால், மொழியின் பெயரால், அரசியலின் பெயரால், அடித்துக்கொண்டு பிரிந்து கிடக்கிறோமே தவிர மனிதனோடு மனிதன் நட்புறவாக இருப்பது என்பதை சிந்திக்கவே நாம் மறுக்கிறோம். இதில் இருக்கிற இடைவெளிகளில் தான் ஜாதி, மத, மொழி, அரசியல் தலைவர்கள் ஊடுருவி நம்மை ஒன்று சேரவேவிடாமல் தூண்டிவிட்டு, பராமரித்து, அவர்கள் மட்டுமே பலன் அடைந்து வருகிறார்கள் .என்ற உண்மையை நாம் இனிமேலும் உணராமலேதான் இருக்கவேண்டுமா.,?

நான் இணையத்துக்கு புதிதாக வந்தபோது தமிழில் இத்தனை பதிவர்கள் இருக்கிறார்கள் என்ற விசயத்தையே திரட்டிகளின் மூலமே அறிந்தேன். வியப்புற்றேன்.அதிலும் தமிழ் மணம் திரட்டியே நான் பல பதிவர்களின் பதிவுகளை அறிந்து கொள்ள உதவியாக இருந்தது. அதன் முகப்பிலே பலரின் புதிய இடுகைகள் வலதுபுறம் பின்னூட்டத்தின் வாயிலாக வரும் வேறு இடுகைகள், இடதுபுறம் சூடான, அதிக ஓட்டுகள் வாங்கிய இடுகைகள் என நிறைய இடுகைகளை, சிரமேமே இல்லாது நான் படித்து பயன் அடைந்திருக்கிறேன் :)

தமிழ்மணம் நான் வளர்ந்த வீடுகளில் ஒன்று., ,   இதனை சில நண்பர்கள் சாடும்போது  நான் மெளனமாகவே இருப்பது நன்றி என்ற வார்த்தையை நான் மறந்ததாக அர்த்தம் ஆகிவிடும் என்பதால் என் கருத்துகளை இங்கே பகிர்ந்து இருக்கிறேன். திரட்டிகளை  திட்டுவதை இனியேனும் தவிர்ப்போம் .பிடிக்கவில்லையெனில்முறையாக விலகுவதும் ஏற்புடையதே...அதை தற்போது டெர்ரர் நண்பர்கள் செய்திருக்கிறார்கள். இதை வரவேற்கிறேன். பின்னாட்களில் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு புரிதலோடு இணைந்தாலும் அதையும் வரவேற்கிறேன். மாற்றமே நிரந்தரம்:))

மற்றபடி எவர்மீதும் குற்றம் சுமத்தும் மனநிலை எனக்கு இல்லை. இதை கடந்து போகவும். நாம் அனைவரும் இதுபோன்ற அசாதாரண சூழ்நிலைகளை மறந்திட காலமே மருந்திடும் என்ற நம்பிக்கையோடு நிறைவு செய்கிறேன்.

இந்த கட்டுரையின் உள்ளடக்கத்தில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஒருவேளை வார்த்தைகளை கோர்த்த விதத்தில் எனக்குத் தெரியாமல் யாரேனும் மனம் புண்பட வாய்ப்பிருந்தால் அவர்களிடம் மனப்பூர்வமான மன்னிப்பைக் கோருகிறேன். நான் உங்களோடு அன்பை பகிர்ந்து கொள்ளவே ஆசைப்படுகிறேன்:)


நிகழ்காலத்தில் சிவா

6 comments:

  1. திரு சிவா அவர்களே, இது காலப்போக்கில் மாறிவிடும். இவ்வாறு இந்த பெயரிலி பிரச்சினை பண்ணுவது இது முதல்முறை இல்லை. இதற்கு முன்பும் சில தடவை இவ்வாறு ஆகி உள்ளது. இப்படிப்பட்டவரை கண்டிப்பதில் தவறில்லை எனவே எனக்கு படுகிறது. நிறுவனம் நடவடிக்கை எடுக்க தயங்கும் நிலையில் பதிவர்கள் சாலையில் சத்தம் போடுவதுபோல் எழுதுவதிலும் தவறில்லை என்றே எண்ணுகிறேன். இது அவர்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் ஒரு முயற்சியே. மற்றபடி இதை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ள தேவையில்லை என்பதே எனது கருத்து...

    இதுவும் கடந்துபோம்.

    பகிர்வுக்கு நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  2. //முஸ்லீம் அன்பர்கள்( இந்த இடத்தில் தமிழ்மணத்தை புறக்கணித்த நண்பர்கள் எனக்கொள்க) பெயரிலி சொன்னால் அதற்கு அவரிடம் விளக்கம் கேட்டார்களா என்றால் இல்லை//

    இல்லைங்க. தமிழ்மணத்துக்கு மெயில் அனுப்பிக் கேட்டாங்க. அந்த மெயிலுக்கும் பெயரிலிதான், மற்ற நிர்வாகிகளுக்கு ஃபார்வேர்ட் செய்றேன்னு பதில் அனுப்பிருந்தார். ஆனா பதில் எதுவும் வரலை. அதனால்தான் பதிவுகள் எழுதினர் என்று நினைக்கிறேன்.

    இதுகுறித்து ஆஷிக் அஹமத் அவரது பதிவில் எழுதியிருப்பது:
    ____________________
    இதுக் குறித்து விளக்கம் அளிக்குமாறு தனி மெயில் ஒன்றை தமிழ்மண நிர்வாகத்திற்கு அனுப்பினோம். அந்த மெயில் சென்றடைந்ததும் இரமணிதரன் அவர்களைத் தான்.

    அந்த மெயிலிற்கு பதிலளித்த ரமணிதரன், தனி நபரின் கருத்தை தமிழ்மணத்தின் கருத்தாக கருதி தமிழ்மணத்திற்கு மெயில் அனுப்ப வேண்டுமா என்றும், எனினும் இதனை தமிழ்மணத்தின் மற்ற நிர்வாகிகளின் கவனத்திற்கு அனுப்புவதாகவும் கூறினார். அதுமட்டுமல்லாமல், அந்த கருத்தை நீங்கள் உங்களை கேலி செய்வதாக ஏன் நினைக்கின்றீர்கள் என்றும் கூறியிருந்தார்
    _______________________

    இப்போது விரிவாகச் சொல்லும் விளக்கத்தை, அவர் (பெயரிலி) அப்போதே எடுத்துச் சொல்லியிருந்தால், இவை தடுக்கப்பட்டிருக்கலாம்.

    மற்றபடி உங்கள் கருத்துகளில் பெரும்பாலானவற்றுடன் உடன்படுகிறேன்.

    ReplyDelete
  3. நான் இந்த மாசம் தான் பதிவு போட ஆரம்பிச்சுருக்கேன் . என்னோட பதிவை கூட திரட்டுவதில்லை . என்ன காரணமோ , தெரியவில்லை

    ReplyDelete
  4. நண்பா நல்ல இடுகை. நன்றி.
    ஆனால், இதில் ஒரு குறையுண்டு.,

    \\இதற்கிடையில்பெயரிலியும் அவரது சொந்த தளத்தில் நான் அந்த பொருளில் சொல்லவே இல்லை. அது எங்கள் வட்டார வழக்கு எனச் சொல்லி விட்டார்.//

    முதலில் தமிழ்மண பிளாக்கில் வந்த 'சேர்த்தலும் விலக்களும்' பதிவு ஒன்றில் அவர் 'தமிழ்மணம் மேலே சாந்தியும் சமாதானமும் நிலவ வேண்டாம்' என்றார். (இதை அவர்தான் சொன்னார் என்று பலர் கருத்துக்களை படித்தால் புரிய முடியும்)

    அப்புறம், டெர்ரர் கும்மியில் சாந்தி சமாதானம் என்பதை அப்படி பெண்களாக சித்தரித்து இவர்கள் உங்களுடன் கூடி........ என்று நக்கல் செய்யும் போது \\பதிவுத்தோஷம்// என்றார்.

    அவர் தன் வலைப்பதிவில் சொல்வது உண்மை என்றால், 'எங்க ஊர் வழக்கதோஷம்' என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும்?

    \\இதை அவர் மாற்றிப் பேசுகிறார்//==நிச்சயமாக,

    \\வாதத்திற்காக//==அல்ல.

    \\என்னைப் பொறுத்தவரை அவரது விளக்கம் முழுக்க ஏற்புடையதே.,//==தவறு நண்பா.

    ஒருவர் மாற்றிப்பெசுவதை ஏற்றுக்கொண்டால் 'எது உண்மை' என்பது தெரியாமல் போய் விடுமே?

    \\மன்னிப்பு என்ற வார்த்தையை எப்படி பயன்படுத்துவது என்ற குழப்பம் நம்மிடையே இருக்கிறது.//==உங்கள் பதிவிலேயே இது மிக மிக அருமையான பகுதி. நன்றி.

    இப்போது வரை மற்ற நிர்வாகிகள் மூவருமே பெயரிலி செய்தது சரி என்று சொல்லவே இல்லை. ஓரிருவர் ஒருவாராக 'தவறு' என்றும் சொல்லியுள்ளனர். ஆனால், தவறு என்று அறிந்தும் பெயரிலி சார்பாக யாரும் தனிப்பட்ட அளவில் கூட மன்னிப்பெல்லாம் கேட்கவில்லை.

    பெயரிலியை பொறுத்த வரை (உங்கள் சுட்டி மூலம் படித்த்தறிந்தது அவரின் தளத்திற்கு சென்று) சக நிர்வாகிகளிடம் தர்மசங்கடத்துக்கும், தன் ஆணாதிக்க சிந்தனைக்கு அதை சுட்டிக்காட்டிய இரு பெண்களிடமும் அப்புறம் தவறான அறிமுகத்துக்கு ஒரு பதிவரிடமும் மறுமொழிகளில் மன்னிப்புக்கேட்டு இருக்கிறார். அவை பதிவில் சொல்லப்படவில்லை.

    இதில் எனது கருத்து யாதெனில்,

    இந்த அளவுக்கு பலரிடம் இருந்து எதிர்பதிவு வந்த பிறகு அவரின் எழுத்து தோரனைக்கும் அதற்கு முந்திய பதிவில் அவரின் மெயிலில் (அங்கே மறுமொழிகளின் ஊடே அவற்றை பிரசுரித்துள்ளார்) உள்ள எழுத்து தோரனைக்கும் நிரம்ப வித்தியாசம் உள்ளன. இவைதான் இந்த எதிர்ப்பு பதிவுகள் சாதித்தவை.

    \\தவறுணர்ந்து மன்னிப்பு கேட்கவேண்டும்//==என்ற இசுலாமிய பதிவர்கள் கோரிக்கை, 'தவறுதான்' என்று சம்பத்தப்பட்டவரையும் நிர்வாகிகளையும் உணரவாவது வைத்ததே! இந்த நோக்கமாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது.

    காரணம், இப்படி மன்னிப்பு கோரி பதிவு போட்டவர்கள் மூன்றாவது தமிழ்மண நிர்வாகியின் விளக்கத்துக்கு பின்னர் மனம் மாறியது போல தெரிகிறது.

    தற்போது பெயரிலியின் மறுமொழிகளை படித்தோர் மனதுகள் ஓரளவு இறங்கி வரலாம். அல்லது மாறலாம். தற்போது மன்னிப்பு கோஷத்தை சற்று நிறுத்தி அரேபிய தடையை எதிர்ப்பதில் அவர்கள் ஆர்வம் காட்டுவது கவனிக்கத்தக்கது. பெயரிலி கூட இதை பாராட்டி நன்றி சொல்லி இருக்கார்.

    நீங்கள் சொன்னபடி, இனியும் இந்த இசுலாமிய பதிவர்கள் 'மன்னிப்பு' என்று முரண்டு பிடித்தால்,

    அவர்கள் \\தேவை என்ன சம்பிரதாய மன்னிப்பா., வெறும் வார்த்தைகளில் திருப்தியடையும் கூட்டமா//==என்றுதான் எனக்கும் கேட்க தோன்றுகிறது.

    அவர்களின் எதிர்கால் தமிழ்மண பங்களிப்பை வைத்து இதை மேலும் உணரலாம்.

    மிக நல்ல ஒரு விமர்சனத்தை படித்த திருப்தி நண்பா. நன்றி.

    ReplyDelete
  5. நட்புகளுக்கு நன்றிகள்பல.,

    தற்போது ஒரு சில நண்பர்கள் தமிழ்மணத்தை எதிர்த்து இடுகையிட்டது பழைய விசயம்.,

    யாரோ சவூதியில் தமிழ் மணத்தை தடை செய்யும் வேண்டுகோள் வைத்துவிட்டதால் அதை எதிர்த்து அன்பிளாக் செய்ய முஸ்லீம் அன்பர்கள் பலர் 25 கையெழுத்து வேண்டுமாம் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இன்று முடிவு தெரியும். நிச்சயம் வென்றிருப்பார்கள்.தீயாய் வேலை செய்தார்கள்.,

    இது மிகவும் மகிழ்ச்சிக்குரியதும்,பாராட்டுதலுக்குரியதும் ஆகும்;)))

    https://mail.google.com/mail/?ui=2&view=bsp&ver=ohhl4rw8mbn4

    ReplyDelete
  6. உங்கள் பதிவைப் படித்தபின் தான் விஷயமே தெரிந்து கொண்டேன்!
    இதில் மதம் எங்கிருந்து வந்தது என்பது இன்னும் புரியவில்லை. பிரச்சினை தீர்ந்திருந்தால் சரிதான்.

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)