"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, November 15, 2011

ஏற்றுக்கொள்வதா..? ஒத்துக்கொள்வதா....?

நாம்  எந்த ஒரு விசயமாக இருந்தாலும் ஓரளவிற்கு அதைப்பற்றி அறிந்தே வைத்திருக்கிறோம். அது அரசியலாகட்டும். ஆன்மீகம் ஆகட்டும். தொழில் சார்ந்த நடவடிக்கைகள் ஆகட்டும், உறவுகள் ஆகட்டும். நமக்கென ஒரு கருத்து நிச்சயம் இருக்கத்தான் செய்கிறது.

நம் கருத்துடன் ஒத்துபோகிறவர்கள் நமக்கு நண்பர்கள். நம் கருத்தை (முழுமையாக) எதிர்ப்பவர்களோடு நமக்கு ஒட்டுதல் வருவதில்லை என்பது யதார்த்தம். அதையை மீறி நட்பு எனில் அந்த கருத்து இருவருக்குமே அவ்வளவு முக்கியமானதில்லை  என்பதே உண்மை.

சரி ஏன் நம்மோடு மற்றவர்கள் ஒத்துவருவதில்லை. இதற்கு என்ன செய்யலாம். அவர்களை சரிப்படுத்தவா அல்லது அவர்களுக்கு ஏற்ப நாம் மாறலாமா என்றால் நம்மிடம் மாற்றம என்பது மட்டுமே சாத்தியம்:)

 முதலில் நண்பர் சொல்வதை உள்வாங்க வேண்டும். அவர் கருத்தினை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்றுக்கொள்வது என்றால் சரி என ஒத்துக்கொள்வது அல்ல.  அவருடைய மன்நிலையை புரிந்து கொள்வதுதான். அப்போதுதான் நமது முன்முடிவுகளின் அடிப்படையில் உடனடியான எதிர்வினை புரிவதை தவிர்ப்போம்.

அதோடு  நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.  முக்கியமாக சட்டென கோபம் வராது, அப்போதுதான் எனது கருத்தை எப்படிச் சொல்ல வேண்டுமோ அப்படி, உங்களை காயப்படுத்தாது இதமாக என்னால் சொல்ல முடியும்.

மேலும் உங்களின் கருத்தை ஏற்றுக்கொண்டால்தான் அதை நான் ஒத்துக்கொள்வதா இல்லை மறுத்துப்பேசுவதா என முடிவு செய்ய இயலும். எனக்கு சாதிமீது பற்று அதிகம், கடவுள் மீது பற்று அதிகம், இப்படிப்பட்ட விசயங்களில் மற்றவர்கள் தாக்கிப்பேசினால், நான் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும் என்கிறீர்களா?


 நமக்கு உள்ளது போன்ற உரிமை அவருக்கும் இருக்கிறது. நம் கருத்து மறுக்கப்பட்டதை முதலில் ஏற்றுக்கொள்ளுங்கள். அதன்பின் அவர் சொன்னது சரியாக இருந்தால் ஒத்துக்கொள்ளூங்கள் அல்லது மறுத்து வலுவான வாதங்களை வையுங்கள். பந்து உங்கள் கையில்..

பதிவுலக சர்ச்சைகளில் மட்டுமல்ல வாழ்க்கையில் சண்டை சச்சரவில்லாமல் வாழ இது ஒரு வழி:)  பதிவுலக சர்ச்சைகளிலும் கூட,......:)

வாழ்த்துகளுடன்
நிகழ்காலத்தில் சிவா

11 comments:

  1. சண்டை போடாமல் இருக்க சொல்கிறீர்கள்.. ஆனால் சுவாராசியம் போய்விடுமே??? இப்போது பெரும்பாலான சண்டைகள் சுவாராசியத்துக்காகவே நடப்பதுபோல தோன்றுகிறது.

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  2. சுவாரசியத்திற்காக சண்டைபோட்டால் அது ஆரோக்கியமான கிண்டலும் கேலியும் நிறைந்திருக்கும்:)

    ஆனால் நீயா, நானா என்கிற மோதல்தன்மையும், இவனுக்கெல்லாம் என்ன தெரியும் என்கிற அலட்சிய ம்னோபாவமும் சண்டையையே மீதம் வைக்கிறது.,

    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் பல திரு.சங்கர் குருசாமி அவர்களே :)

    ReplyDelete
  3. பதிவு நன்றாக இருந்தது . ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல் என்ற கலை அனைவருக்கும் வந்துவிடுவதில்லை என்பதே உண்மை

    ReplyDelete
  4. //நமக்கு உள்ளது போன்ற உரிமை அவருக்கும் இருக்கிறது. நம் கருத்து மறுக்கப்பட்டதை முதலில் ஏற்றுக்கொள்ளுங்கள். அதன்பின் அவர் சொன்னது சரியாக இருந்தால் ஒத்துக்கொள்ளூங்கள்//
    நல்ல கருத்து. வாழ்க்கையில் கடைபிடிக்க முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  5. // நமக்கு உள்ளது போன்ற உரிமை அவருக்கும் இருக்கிறது. நம் கருத்து மறுக்கப்பட்டதை முதலில் ஏற்றுக்கொள்ளுங்கள். அதன்பின் அவர் சொன்னது சரியாக இருந்தால் ஒத்துக்கொள்ளூங்கள் அல்லது மறுத்து வலுவான வாதங்களை வையுங்கள். பந்து உங்கள் கையில்..//

    ஒவ்வொருவரும் அறிய வேண்டியது.நன்று.

    ReplyDelete
  6. non-judgmental பார்வையைப் பெறுவது சிரமம். 'அவரவர் உரிமை' என்றீர்களே, அதை மனதில் தக்கவைத்திருக்கும் உத்தியை யாராவது சொல்லிக்கொடுத்தால் நன்றாக இருக்கும் :)

    ReplyDelete
  7. @ அப்பாதுரை
    //non-judgmental பார்வையைப் பெறுவது சிரமம்//

    இதுவே ஒரு pre-judgement தான் :) இந்த மனநிலையில் இருந்து விடுபட வேண்டும்.

    மனதை தக்க வைக்க வெளியிலிருந்து எந்த வழியும் இல்லை. செய்ய வேண்டியதெல்லாம் உள்நோக்குதல் மட்டுமே.. அதற்கு துணை செய்வது சுவாசம் மட்டுமே..

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  8. @ சூர்யா பிரகாஷ்
    @ வெண்புரவி
    @ சண்முகவேல்

    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பர்களே :)

    ReplyDelete
  9. இன்றைய வலை உலகில் உள்ள
    அனைவரும் கருத்தில் கொள்ள
    வேண்டிய நல்ல பதிவு இது!
    பாராட்டுக்கள்!
    என் வலைவழி வருக!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  10. ////நம் கருத்துடன் ஒத்துபோகிறவர்கள் நமக்கு நண்பர்கள். நம் கருத்தை (முழுமையாக) எதிர்ப்பவர்களோடு நமக்கு ஒட்டுதல் வருவதில்லை என்பது யதார்த்தம். /////

    மிகவும் ஆழமான பதிவு ஒன்று நன்றி சகோ...

    ஆனால் என்னிடம் சின்ன விதிவிலக்கு சகோ... என்னிடம் கருத்து முரண்பாடுள்ள ஏராளம் நபர்கள் நண்பர்களாக உள்ளார்கள்..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    இந்திய சினிமாக்காரரிடம் சிக்கித் தவிக்கும் ஈழத் தமிழர் உணர்வுகள்

    ReplyDelete
  11. வாழ்க்கையில் சண்டை சச்சரவில்லாமல் வாழ இது ஒரு வழி:)


    நல்லதொரு வழிமுறை சொன்னீர்கள் நண்பா.

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)