ஒருநாள் காலையில் ஜீ தொலைக்காட்சியில் ஆன்மீக பேச்சாளர் ஒருவர் முருகனைப் பற்றி சொல்லிக்கொண்டு இருந்தார். எந்நேரமும் கடவுள் சிந்தனை வேண்டும். தனியா உட்கார்ந்து முருகனை நினைக்கமுடியலையா, பரவாயில்லை ரசத்துக்கு புளி கரைக்கும்போது முருகான்னு நினைங்க.. புளி ரசம் பக்தி ரசமா மாறிடும் அப்படின்னார் :)
இப்படித்தான் நமது ஆன்மீகம், பக்தி ரசமாக போய்க்கொண்டு இருக்கிறது, ஆன்மீகம் குறித்து தெளிவு நம்மிடம் இன்னும் தேவை. தேவை.:) நமது வாழ்க்கை நாம் நினைத்தவண்ணம் இல்லாது, எந்தவிதமாகவேனும் நகரும்போது அதை பக்குவமாக எதிர்கொள்ளும் விதத்தை கற்றுக்கொடுப்பது எல்லாம் ஆன்மீகம்தான் :)
இதில் மனதின் பங்கு 100 சதவீதம் இருக்கும். மனம் எப்போது நமக்குத் தோன்றியது.? பிறக்கும்போது இருந்ததா? இல்லை.:) ஆனால் நம்மை வளர்க்கும் விதத்தில் ஒவ்வொரு நாளும் மனதிற்கு தீனி போட்டு, வளர்த்த விதத்தில், வளர்ந்தவிதத்தில் என்னவிதமாக இருந்தோமோ அதுதான் சரி என்று ஆழமாக நம்புகிறோம்.
விளைவு நாம் மட்டும் சரி, எதிர் கருத்துகள், வினைகள் வந்தாலே புறந்தள்ளிவிடும் நம் மனம். இந்த மனதை பக்குபவப்படுத்துவதே ஆன்மீகம். இப்படி பக்குவப்படுவதில் பல நிலைகள் உண்டு.
மனதை பக்குவப்படுத்த எந்தமுறை உதவும் என்றால் முதலில் உலக மக்கள் தொகை 700 கோடி என்றால் அதே 700 கோடிவிதமான மனங்கள் இருக்கின்றன. ஒன்றோடு ஒன்று 700 கோடிவிதமாக முரண்படும். இன்னும் சரியாகச் சொன்னால் ஒருவரோடு மட்டுமே 700 கோடிவிதமாய் முரண்படும். :)இப்படி இருக்கையில் இன்னாருக்கு இந்த முறையில் மனதை பக்குவப்படுத்துவது என வரையறைப்படுத்த முடியாது. நமக்கு நெருக்கமான எதோ ஒரு முறையை முடிந்தவரை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.
700 கோடியில் ஒருவரான் நாம் எப்படி ஒருவரோடு ஒருவர் முழுமையாக உடன்பட்டு வாழமுடியும். ஏதோ சில விசயங்களில் சிலரோடு உடன்பட்டாலே மகிழ்ச்சி அடைந்து அவர்களை நண்பன், மனைவி, அப்பா என்று ஏதாவது அடையாளப்படுத்துகிறோம். இதில் தவறு ஏதும் இல்லை :)
ஆனால் வாழ்க்கையில் என்ன நடக்குது ? சண்டை சச்சரவின் பங்குதான் அதிகம் :) இவற்றைத் தவிர்ப்பது எப்படி ? சண்டைக்கு காரணமானவர்களை மாற்றுவது எப்படி? இப்படிச் சிந்தித்துப் பார்த்தால், நடைமுறையில் மாற்றங்களை நம்மிடத்தில் இருந்து தொடங்குவது மட்டும்தான் சாத்தியம் என புரிந்துகொள்வது கடினமாகவே இருக்கிறது.
இல்லை. நான் சரியாகத்தான் இருக்கிறேன். சமுதாயம் சரியில்லை. ஆட்சி,நிர்வாகம் சரியில்லை என்று இவற்றையெல்லாம் மாற்ற வேண்டும் என்று விரும்பினால் அதுவும் சரிதான். மாற்றுவேன் என கிளம்புவது எந்த அளவில் பயனளிக்கும்? சொற்பமாகத்தான்.
அதாவது மது அருந்துபவரிடம் தீவிரமாக அதன் கடுமைகளை, பாதிப்புகளை எடுத்துச்சொல்லி திருத்த கங்கணம் கட்டிக்கொண்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அவரும் உங்கள் பேச்சைக் கேட்டு திருந்திவிட்டார். :)
உங்களுக்கு தன்னம்பிக்கை பெருகிவிட்டது. இன்னொருவரை அடையாளம் கண்டு அவரிடம் இதேவிதமாக எடுத்துச்சொல்கிறீர். அடுத்தநாள் இரண்டாம் நபரோ இன்னும் அதிகமாக மது அருந்திவிட்டு வந்து உங்களை துவைத்து தொங்கவிட்டுவிடுகிறார். இது ஏன்?
உங்களின் வார்த்தைகளில் பலன் இருக்குமானால் இவரும் திருந்தி இருக்க வேண்டுமே? சமுதாயத்தை திருத்துவது சாத்தியம் என்றால் நல்லது நடந்திருக்க வேண்டுமே ? ஆக எவர் ஒருவரும் நம் பேச்சை, அறிவுரையைக் கேட்டுத் திருந்துவதில்லை. அவர்களுக்குள் நேர்வழிக்கு வரவேண்டும் என்ற ஆவல், எண்ணம் அடிமனதில் மறைந்து தூங்கிக்கொண்டு இருக்கும். அதை நாம் சற்று ஊதிவிட்டிருப்போம். செயலுக்கு வந்திருக்கும். இதில் நமக்கென்ன முக்கியத்துவம்?
எதிராளிக்கு விருப்பம் இல்லாத பட்சத்தில் எதையும் நாம் திணிக்க முடியாது. நமக்கு பிறர் புத்தி சொன்னால் பொதுவாகவே பிடிக்காது. ஆனால் அதை சரி என நம் மனம் உணருமானால், அல்லது அப்படி மாற நம் மனம் விரும்பி இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்கிறோம்.நம்மிடம் மாற்றம் நிகழ்கிறது. இதே விதமாகத்தான் தனிமனிதனோ சமூகமோ மாற்றம் அடையவேண்டுமெனில் நம் ஒவ்வொருவரிடத்திலும் மாற்றம் வந்தால்தான் சாத்தியம்.
மனதை அறிந்து கொள்வது மட்டுமே மாற்றங்களுக்கான சரியான பாதையாக இருக்க முடியும். அதை ஓரளவிற்கேனும் நம் விருப்பப்படி இயக்கி நிம்மதியாக வாழ முடியும்.. மனதை அறிந்து கொள்வது எப்படி? நிம்மதியாக வாழ்வது எப்படி?
- தொடர்ந்து சிந்திப்போம்.
நிகழ்காலத்தில் சிவா

நல்லதொரு சிந்தனைப் பகிர்வு...
ReplyDeleteதொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி… (TM 2)
//உலகின் மக்கள் தொகை 700 கோடி என்றால், 700 கோடி மனங்கள் இருக்கின்றன//
ReplyDeleteஇது நிகழ் காலத்தில்.
இறந்த காலத்தையும் இனி வருங்காலத்தையும் இணைத்துக் கணக்கிட்டால்............
கோடிகோடி....கோடானுகோடி....கோடியோ....[கணிப்பு முற்றுப் பெறவில்லை!]
ஒன்று மற்றொன்று போல் இல்லாத இந்த அதிசயத்தின் முன்னால் நம் அறிவெல்லாம் வெறும் தூசு!!!
‘அகம்பாவம்’ அழித்து, அடக்கத்துடன் வாழ்வதற்கு இம்மாதிரி சிந்தனை நிச்சயம் உதவும்.
நன்றி சிவா.
முற்றப்பெறா எண்ணிக்கையில் மனங்களின் எண்ணிக்கை இருக்கும். சரியாகச் சொன்னீர்கள் முனைவர் ஐயா..
Deleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)
ஆன்மீகம் என்பது இப்போது வியாபாரத்தின் ஒரு வகை, தன்னை உணர்ந்தவர்களுக்கு, எதையும் விலகி வைத்து பார்த்துக் கொள்ள கற்றுக் கொள்பவர்களுக்கும் எந்நாளும் இனிய நாளே,
ReplyDeleteநல்ல சிந்தனை.
ReplyDeleteநல்ல பகிர்வு.
ReplyDeleteGood write ups. looks like you are back in writing.
ReplyDelete\\ஏன் வலைப்பதிவு ஆரம்பிப்பதில் என்ன தயக்கம். தொழில்நுட்ப ஏதேனும் தேவையா?\\
ReplyDeleteஆமாம் நண்பரே, எப்படி என்று தெரியாமல் தான் எழுதாமல் உள்ளே, தங்களால் எனக்கு எளிதாகப் புரியும்படி விளக்க முடியுமா?
jayadevdas2007@gmail.com
அருமையாக சொல்லியுள்ளீர்கள். மனங்கள் கோடிகள் இருந்தாலும் காந்தி மாதிரி ஒருத்தர் வந்து முப்பது கோடி இந்தியர்களை ஒன்று திரட்டி ஒரு காரணத்துக்காக போராட வைத்தார் அல்லவா? அவரது பேச்சாற்றலால் ஏற்ப்பட்ட மன மாற்றம் தானே? மக்கள் மனதை மாற்றும் ஷக்தி சில personality களுக்கு இருக்கிறது, சிலருக்கு இருப்பதில்லை. விந்தைதான்!!
ReplyDeleteஅந்த பர்சனாலிட்டியை ஓரளவிற்கேனும் நாமும் பெறவேண்டும் என்கிற ஆர்வம்தான் இந்த கருத்து பகிர்வு.
Deleteபொருளாதார ரீதியாக மனங்களை இணைப்பது சாத்தியம்.,அருள் வழியில் அது சாத்தியமில்லை. ஒவ்வொருவரும் தன்னை உணர்வது மட்டுமே தீர்வு.
வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி ஜெயதேவ் தாஸ் அவர்களே :)
உங்கள் பணி தொடரட்டும்
ReplyDelete|| மனதை அறிந்து கொள்வது மட்டுமே மாற்றங்களுக்கான சரியான பாதையாக இருக்க முடியும். அதை ஓரளவிற்கேனும் நம் விருப்பப்படி இயக்கி நிம்மதியாக வாழ முடியும்.. மனதை அறிந்து கொள்வது எப்படி? நிம்மதியாக வாழ்வது எப்படி? ||
ReplyDeleteநாம் நமது எண்ணங்களால்நான் வாழ்கிறோம்..மனத்தை அறிபவன், தன்னை அறியலாம்..
நல்ல பதிவு.
Very good article. You can also write something about concentration of MIND in meditation.
ReplyDeleteஇந்த இடுகைக்கூட தியானத்திற்காக மனதை தயார்படுத்துவது அல்லது தியானத்தில் எண்ணங்கள் மோதும்போது செய்யவேண்டியது என்பதாகத்தான் அமைந்திருப்பதாக எண்ணுகிறேன் முருகானந்தம்.
Deleteமூச்சு ஒன்றுதான் எளிய டெக்னிக். தியானத்தில் ஈடுபட.. மற்றபடி மனம் சார்ந்த எல்லா டெக்னிக்குகளையும் மனம் தாண்டிவிடும். ஆழமான புரிதல் வேண்டியே இந்த சிந்தனை..
நன்றி வரவுக்கும் கருத்துக்கும் நண்பரே