"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Saturday, August 31, 2013

பொதிகை மலை பயணத்தொடர் பகுதி - 7

மலையின் உச்சியில் இருக்கிறோம் என்ற உணர்வு ஏற்படாவண்ணம் சுற்றிலும் மழைமேகம் சூழ்ந்திருக்க, அய்யன் திருமேனி அமைந்த இடத்தில் மட்டும் சற்று மழை நின்று, சாரல் மட்டும்  அடித்துக்கொண்டே இருந்தது.

எங்களுக்கு முன்னதாக வந்த கேரள அன்பர்கள், அய்யன் திருமேனியில் இருந்த முந்தய நாளைய மாலைகளை எடுத்து சுத்தப்படுத்திக்கொண்டு இருந்தனர். எங்கள் குழு நண்பர்கள் யாருக்குமே, இந்த விதமாக அய்யன் திருமேனியை அலங்கரிக்க வேண்டியது இருக்கும் என்பதை அறியாததால் ஊதுபத்தி, எண்ணெய் என மிகச்சில பொருள்களையே கொண்டு வந்திருந்தோம்.




அருகில் பாறையில் தேங்கி இருந்த  நீரினை எடுத்து அய்யனின் திருஉருவச் சிலையை நன்கு சுத்தப்படுத்தினர். அதன் பின் அனைவரும் தங்கள் கழுத்தில் இருந்த ருத்திராட்ச மாலைகளை கழற்றி அய்யனிடம் அணிவித்து மானசீகமான ஆசிர்வாதத்தைப் பெற்றுக்கொண்டு பூசையை ஆரம்பித்தனர். அடியேனுடைய ருத்திராட்ச மாலைக்கும் அந்த பாக்கியம் கிடைத்தது.










                                             ருத்திராட்ச மாலைகளுடன் அகத்தியர்







                                           அகத்தியர் திருமேனி பின்புறமிருந்து



எந்த விதமான அபிசேகப் பொருள்களும் கொண்டு வராத நிலையில் எங்கள் மனதில் அது குறையாக இருந்துவிடக்கூடாது என்றே அய்யன் அகத்தியர் திருவுள்ளம் கொண்டிருப்பார் போலும். எங்களுக்காகவே நடக்கிற சிறப்பு அபிசேகப் பூசையாக எதிரே அபிசேகங்கள் நடந்தன.

                                                    திருமஞ்சன அபிசேகம்

                                                           நெய் அபிசேகம்

                                                          திருநீறு அபிசேகம்

அய்யனை நாடிவருவோர் எதுவும் கேட்கவேண்டியவதில்லை. கேட்காமலே தேவையானது கிடைக்கும் என்பதை அனுபவமாக உணர்ந்தோம். எந்தவித எதிர்ப்பார்ப்பும் இன்றி வந்த எங்களுக்கு மனம் நிறந்த அனுபவத்தை / தரிசனத்தை  வழங்கிய அய்யனை நினைத்து நினைத்து மனம் நெகிழ்ந்தோம்.

அடுத்த வந்த வேறு நண்பர்கள் பூசை செய்ய  தொடங்க, மேலும் ம்ழை வலுக்கத் தொடங்கியது.. மனநிறைவோடு இறங்க ஆரம்பித்தோம்.


தொடர்வோம்
நிகழ்காலத்தில் சிவா



3 comments:

  1. அருமையான பல தகவல்களை அளித்துள்ளீர்கள் சிவா.

    மிக்க நன்றி

    ReplyDelete
  2. மன நிறைவான தரிசனம் ..!

    ReplyDelete
  3. உங்கள் பயணத்தில் அய்யனை வணங்கும் பாக்கியம் பெற்றோம். நன்றி.

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)