பலாமரத்தடியில் அமர்ந்து இருக்கும் பிலாவடிக்கருப்பர் என்கிற சதுரகிரி காவல் தெய்வத்தின் கோவிலின் பின்புறம் தைலக்கிணறு இருப்பதாக சித்தர்களின் குறிப்புகள் நமக்கு தெரிவிக்கின்றன.
"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Monday, March 14, 2011
Tuesday, March 1, 2011
சதுரகிரி மலைப் பயணம். பகுதி - 6
மலையேறும்போது சில விசயங்களை தெளிவு செய்து கொள்ளுங்கள். நீங்களும் உங்களைச் சார்ந்தவர்களின் வயது மற்றும் உடல்நலத்திற்கேற்ப பொருத்தமான நடை வேகத்தையும், ஓய்வெடுக்கும் நேரத்தையும் அவ்வப்போது முடிவு செய்து கொள்ளுங்கள். மற்றவர்களோடு எந்தக்காரணம் கொண்டும் போட்டி போட்டு ஏற வேண்டாம். வழியில் கொண்டுபோன உணவை மிகக்குறைவாக உண்ணுவது களைப்பு இல்லாமல் ஏற வசதியாக இருக்கும்.
Thursday, February 17, 2011
சதுரகிரி மலைப் பயணம். பகுதி 5
கோணத்தலவாசல் என்கிற Z வடிவிலான மலைஏற்றத்தைத் தாண்டினோம். அதிலிருந்து இன்னும் மேலேற காரம்பசுத்தடம் என்கிற இடத்தை கால்மணி நேர இடைவெளியில் தாண்டினோம். . இங்கு என்ன விசேசம் என்கிறீர்களா:)
Thursday, February 10, 2011
சதுரகிரி மலைப் பயணம். பகுதி 4
இந்தப்பாறையைத்தாண்டி அடுத்த கால் மணிநேர நடைதூரத்தில் முதல் மலை முடிவுற்று இரண்டாவது மலை ஆரம்பம். இந்த இடத்தை சிறு நீரோடை பாய்ந்து வருகிறது. வெள்ளம் வரும் காலங்களில் இந்த இடத்தை தாண்ட முடியாதாம். காரணம் சற்றுமுன் பின்னாக எப்படிச் சென்றாலும் சமதளமாக அல்லது ஏறவே முடியாத இடமாக இருப்பதே காரணம்.
Tuesday, February 8, 2011
சதுரகிரி மலைப் பயணம். பகுதி 3
ஒருமுறை சதுரகிரிமலை ஏற சாதாரணமாக நமக்கு 5 மணி நேரம் ஆகும். இந்த சுமைதூக்கும் பெண்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை சாதரணமாக ஏறிஇறங்குகின்றனர். சீசன் சமயங்களில் மூன்று முறை கூட ஏறுவார்களாம். முதல் மலை அதிக ஏற்றஇறக்கம் இன்றி சிரமம் இன்றி இருந்தது. இன்னும் செல்லச் செல்ல வழியில் தென்பட்டது குதிரை ஊத்து....கூர்ந்து கவனித்தால் இரண்டு பாறைகளுக்கு இடையே கனமான வேர் ஒன்றை கட்டி வைத்து இருக்கிறார்கள். அதைப் பிடித்துக்கொண்டே போகலாம்...
Monday, January 31, 2011
சதுரகிரி மலைப் பயணம். பகுதி 2
சதுரகிரி பயணத்தை வணிகரீதியாக நடத்தி வரும் நண்பர் ஒருவர் 24 டிசம்பர் அன்று பயண ஏற்பாட்டினை தெரிவித்தார். இரவு 11.30 க்கு திருப்பூரில் இருந்து வேனில் கிளம்பினோம். 14 பேரில் பாதி வயதான பெண்கள், மீதி ஆண்களுமாக கிளம்பினோம். வேன் டிரைவர் அந்த வேனுக்கு புதியவர் ஆதலால் பொறுப்பாக மெதுவாக ஓட்டிச் சென்று, போகும் வழியில் இரவு விருதுநகர் இரயில் நிலையத்தில் சென்னையிலிருந்து வந்த இரண்டு பெண்களையும் பயணத்தில் இணைத்துக்கொண்டு காலை 6 மணி அளவில் திருவில்லிப்புத்தூர் சென்று சேர்ந்தார். முன்னதாக கிருஷ்ணன்கோவில் பிரிவில் நாங்கள் பிரிந்து தாணிப்பாறை போயிருக்கவேண்டும்.
Subscribe to:
Posts (Atom)