இன்று பெரும்பாலானோர், சில்வர் பாத்திரத்தில் தான் சமைக்கின்றனர். இதில் சமைப்பதால் நன்மை, தீமை ஏதுமில்லை.
வெண்கலப் பாத்திரத்தில் சமைத்த உணவால், உடல் சோர்வு நீங்கும். இதில் சமைத்த உணவுப் பொருட்களுக்கு, "புட் பாய்சன்' ஆகும் வாய்ப்பு குறைவு என்பதால், இன்றும் கோவில்களில் சமைப்பதற்கு வெண்கலப் பாத்திரத்தை பயன்படுத்துகின்றனர்.
"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Saturday, October 8, 2011
Thursday, October 6, 2011
திருக்கைலாய யாத்திரை நிறைவு செய்தல்
திருக்கைலாய யாத்திரை ஆரம்பித்தபோது நாங்கள் நேபாளில் காட்மாண்டு சென்றபின் அன்றய தினமும் அதற்கு அடுத்த நாளும் தங்க வேண்டியதாயிற்று. அப்போது நேபாளத்தில் பசுபதி நாதர் கோயில் சென்று தரிசனம் செய்தோம்.இங்கு புகைப்படம் எடுக்கத் தடை இருப்பதால் எதுவும் எடுக்கவில்லை. இங்கு பசுபதிநாதர் சிவலிங்கத்தில் நான்குமுகங்களோடு காட்சி அளிக்கின்றார். தரிசனம் முடித்த பின் அன்றைய தினம் மதியம் தங்கி இருந்த ஓட்டலில் ஓய்வு. மாலை பயணம் குறித்த விளக்க மீட்டிங்.
Saturday, October 1, 2011
திருக்கைலாய யாத்திரை பகுதி 26
எங்களை அழைத்துச் செல்ல இரண்டு ஜீப்கள் காத்திருந்தன. அனைவரும் அதில் ஏறி மானசரோவர் ஏரியை நோக்கி சென்றோம். அன்றைய தினம் காலையில் மற்ற யாத்திரீகர்கள் அனைவரும் முன்னதாக டார்சன் முகாமிலிருந்து மானசரோவர் சென்றுவிட்டனர்.
Friday, September 30, 2011
திருக்கைலாய யாத்திரை பகுதி 25
திருக்கைலாய யாத்திரையில் பரிக்ரமாவின் மூன்றாவது நாள் காலை 6.30 மணி அளவில் கிளம்பினோம். முன்னதாக பையில் வைத்திருந்த உலர்பழங்களை காலை உணவாக எடுத்துக்கொண்டோம். மற்றபடி புறப்படுவதில் எந்த சிரமமும் இல்லை. கூடவே யாத்திரை நிறைவு அடையும் நாள் வேறு:). நாங்கள் தங்கி இருந்த திராபுக் இடத்திற்கு சற்று முன்னதாக முந்தய நாள் மாலை எடுத்த படம் கீழே
Wednesday, September 28, 2011
திருக்கைலாய யாத்திரை பகுதி 24
கெளரிகுந்த் குளத்தைத் தாண்டி இறங்கி அதன்பின் இரண்டு குன்றுகளைத் தாண்டி வந்தபோது கண்முன்னே விரிந்தது கிட்டத்தட்ட குதிரை லாட வடிவிலான பள்ளத்தாக்கு. சுற்றிலும் மலைகள் ஓங்கி உயர்ந்து நின்றன.
Thursday, September 22, 2011
திருக்கைலாய யாத்திரை பகுதி 23
திருக்கையிலாய யாத்திரைக்கு என நான் கொண்டு சென்ற ஒரே பூசைப்பொருள் நறுமணம் கமழும் ஊதுபத்திகள் மட்டுமே..டோல்மாலாபாஸ் உச்சியை அடைந்தபோது, அங்கே நிறைய காகிதத்தால் ஆன கொடிகள் கட்டி அவைகளை இறைவனின் அடையாளங்களாக கருதி அவற்றிற்கு ஊதுபத்தி காட்டி வழிபடுகின்றனர்.
Subscribe to:
Posts (Atom)