"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Friday, February 27, 2009

எப்படி இப்படி?

பனியன் நிறுவன பேக்கிங் பிரிவில் பணிபுரியும் பெரியவர் வயது ஐம்பதுஇருக்கலாம் . ஆறுமாத அனுபவம் உள்ளவர் பெயர் சண்முகம் .

சகதொழிலாளி சம வயது குமார் எட்டுவருட அனுபவம் உள்ளவரும் உடன் பணிபுரிகிறார் குமார் பலவித நெளிவு சுளிவு எங்களால் கற்று தரப்பட்டு பலவேலைகளுக்கும் பயன்படுத்திக் கொள்வோம்.பேக்கிங் பிரிவில் தலைமைப் பொறுப்பும் அவருக்கே. அதன் பலன்தவறுகள் நடக்காது

சண்முகத்தின் பார்வையில் குமார் சற்று சுகமாக இருந்துகொண்டு வேலை செய்யாமல் தன்னை மட்டும் வேலை வாங்குவதாக பட்டது.
குமார் ஒருநாள் வேலை சம்பந்தமாக குறிப்புகள் கொடுக்க சண்முகம் "போய்யா உன் வேலைய பார்த்துக்கிட்டு" என்று மிகுந்த சப்தமிட்டார்.
நான் உடனே "அய்யா தவறு ஏற்பட்டுவிடக்கூடாது
என்பதற்க்காக சொல்கிறார். ஏன் கேட்டால் என்ன? "என்று,
வினவ அடங்க மறுத்து வேலையை விட்டு விலகுவதாக வெளியேறினார்.

குடும்பம், வருமானம், பொறுப்பு இது பற்றிய எந்த சிந்தனையும் இல்லாமல்
எப்படி இருக்கிறார்கள் இப்படி? இவரைப் போன்றவர்கள் ஒட்டளித்தால்..?
யாரை குற்றம் சொல்வது?

1 comment:

  1. நான் என்ற அகந்தை - ஈகோ - இவை எல்லாம் எல்லோரிடமும் இருக்கும் குறைகள் தான் - பட்டால் தான் தெரியும் - அது வரை இப்படித்தான்

    நல்வாழ்த்துகள் சிவசு

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)