மன இறுக்கம் (TENSION) இல்லாமல் வாழ வழி என்ன?
உலகில் நல்ல மணமுள்ள பொருள்களும் உண்டு; கெட்ட நாற்றமடிக்கும், அழுகிய பொருள்களும் உண்டு.
அதுபோல் மனதினுள் வரும், ஏற்படும் எண்ணங்களுள் ஊக்கமும் இன்பமும் தரும் எண்ணங்களும் உண்டு. AFFECTIONATE THOUGHTS. பலவீனமும் துன்பமும் தரும் எண்ணங்களும் உண்டு INFECTIONATE THOUGHTS.
வீட்டினுள் செத்த எலி நாற்றமடிக்கிறது என்றால், அதை நாலுபேரிடம் காட்டிப் புலம்புவதாலோ, நினைத்து நினைத்து வருத்தப்படுவதாலோ, அதன்மீது வாசமுள்ள ‘செண்ட்’ அடிப்பதாலோ நாற்றம் போகாது; சிக்கல் போகாது. எலியை தூக்கிப் போட்டு விட்டு, இடத்தைக் கழுவிவிட்டால் தானாக நாற்றம் போய்விடும். இதுதான் சரியான வழி.
அதுபோல் மனத்துள் வரும் ஒவ்வாத எண்ணங்களை ALERGIC THOUGHTS இனங்கண்டு, எதுவாய் இருந்தாலும் இரக்கமின்றி, தயக்கமின்றி எடுத்து வெளியே எறியுங்கள். இறுக்கம் குறையும்; தானாக மன அமைதி வாய்க்கும்.
நன்றி. கவனகர் முழக்கம்.மே-2002
உண்மை தான் நண்பரே.....
ReplyDeleteமுற்றிலும் உண்மை - எடுத்து எறிய வேண்டும்
ReplyDeleteஇயலுமா முயலலாமே
நல்வாழ்த்துகள் சிவசு
என்ன எழுதுவது என்று தெரியவில்லை
ReplyDeleteஇவ்வளவு பொறுமையாக படித்துப்பார்த்து, அந்த ஒவ்வொரு இடுகைக்கும்
பின்னூட்டமிட்டு,,,
வலையுலகம் எனக்குத்தந்த பரிசாக தங்களை கருதுகிறேன்.
அவ்வப்போது ஏன் எழுத வேண்டும் என்ற கேள்வி எனக்குள் எழும்போதெல்லாம்
தங்களைப் போன்றவர்களின் பின்னூட்டங்களே தொடர்ந்து எழுத உற்சாகமூட்டகிறது
அன்பின் சீனா அவர்களே
நன்றி, நன்றி, நன்றி
வாழ்த்துகளுடன்