"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, May 5, 2009

வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம்

இறையுணர்வு பெற்றவர்கள் இதுவரையில் தெளிவாக மொழி வழியிலும், பயிற்சி வழியிலும் கொடுத்துள்ள உண்மை விளக்கம் என்னவென்றால்,’சுத்தவெளியாகிய இறைநிலையே முடிவான அருட்பேராற்றலான தெய்வமாகும்’ என்பதாகும்.

சுத்தவெளியானது (1) வற்றாயிருப்பு, (2)பேராற்றல், (3)பேரறிவு, (4)காலம் என்கின்ற நான்கு வளங்களை உடையதாக இருக்கிறது.

வற்றாயிருப்பு

சுத்தவெளியாகிய பெருவெளியில் இருந்து அணு முதலாக அண்டங்கள் மற்றும் உயிரினங்கள் எவ்வளவு தோன்றினாலும் சுத்தவெளியோ, அதனுடைய ஆற்றலோ எந்த அளவிலும் குறைவுபடாது. இந்த உண்மையை விளக்குகின்ற வார்த்தைதான் வற்றாயிருப்பு ஆகும்

பேராற்றல்

பலகோடி சூரியக் குடும்பங்களை உடைய இந்த பேரியக்க மண்டலத்தில் உலவுகின்ற அனைத்தையும் இதே சுத்தவெளிதான் தாங்கிக் கொண்டு இருக்கிறது. இதனால் சுத்தவெளியை பேராற்றல் என்று கூறுகிறோம்.

பேரறிவு

எந்தப் பொருளிலும், எந்த இயக்கத்திலும் இதே சுத்தவெளிதான் ஊடுருவி நிறைந்து ஒழுங்காற்றலாக, செயல் புரிந்து வருகிறது. இந்த ஒழுங்காற்றல்தான் அறிவு என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு தோற்றத்திலும்,உருவ அமைப்பு,குணங்கள் மற்றும் காலத்தால் காலம் என்ற அதிர்வால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் அனைத்தும் நிகழ்கின்றன. இதனால் சுத்தவெளியானது பேரறிவு என்று விளக்கப்படுகிறது.

காலம்

சுத்தவெளியானது தன்னிறுக்க அழுத்தமாக உள்ளதால், அது தன்னைத்தானே விட்டுவிட்டு அழுத்தும்போது, அதுவே நுண்ணதிர்வாகச் செயல்புரிகிறது. இந்த நுண்ணதிர்வு என்ற காலத்தின் நுண்ணிய அலகானது கண்சிமிட்டும் நேரம்போல மிகக் குறைவானதாகும். இந்த
அதிர்வு இறைநிலையில் அடங்கி இருப்பதனால் எல்லாப் பொருள்களுக்கும் தோற்றம், வளர்ச்சி, முடிவு என்ற செயல்கள் உண்டாகின்றன. இதனால் இறையாற்றலை காலம் என்று சொல்கிறோம்.

ஆகவே இறையாற்றல் என்ற பெருவெளி வற்றாயிருப்பாக இருக்கிறது. பேராற்றலாக இருக்கிறது. பேரறிவாக இருக்கிறது. அதுவே காலமாகவும் இருக்கிறது.


இறைநிலை


வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம் எனும்
வளம் நான்கும் ஒன்றிணைந்த பெருவெளியே தெய்வமாம்
வற்றாத இந்நான்கும் விண்முதல் ஐம்பூதங்கள்
வான்கோள்கள், உலகம், உயிரினம் ஓரறிவு முதல் ஆறாம்
வற்றாது பெருகிவரும் வளர்ச்சியே பரிணாமம்
வந்தவை அனைத்திலும் சீரியக்கம் இயல்பூக்கம்
வற்றாது பெருகும் பேரண்டத்தில் உயிர்வகையில்
வழுவாத செயல்விளைவு நீதியே கூர்தலறம் உண்மை,உண்மை

ஞானக்களஞ்சியம் பாடல் 1666

நன்றி ஆன்மீக விளக்கு தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

9 comments:

  1. மிக பெரிய இறைநிலை விளக்கத்தை எளிதாக எடுத்து சொல்லியுள்ளார் அருட் தந்தை அவர்கள். நன்றி.

    ReplyDelete
  2. தான் உணர்ந்ததை, நமக்கு தந்து இருக்கிறார்.

    நாமும் உணர்ந்து தெளிவோம்.

    கருத்துக்கு நன்றி முக்கோணம் அவர்களே

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. சுத்தவெளியாகிய பெருவெளியில் இருந்து அணு முதலாக அண்டங்கள் மற்றும் உயிரினங்கள் எவ்வளவு தோன்றினாலும் சுத்தவெளியோ, அதனுடைய ஆற்றலோ எந்த அளவிலும் குறைவுபடாது. இந்த உண்மையை விளக்குகின்ற வார்த்தைதான் வற்றாயிருப்பு ஆகும்//

    வெட்ட வெளி வேறு,பொருட்கள் வேறு என்பது உண்மையல்ல என்பதுதான் ஈன்ஸ்டினின் ஒப்புமைக் கொள்கை.வெளி இல்லையேல் பொருட்களும் இல்லை.பொருட்கள் இல்லையேல் வெளியும் இல்லை.இரண்டும் ஒரு சேரத் தோன்றுபவை.
    அதனால் வற்றாயிருப்பு என்பது நமது எண்ண்மே.இதனை விளக்க முடியுமா,நண்பரே?

    ReplyDelete
  4. //வெட்ட வெளி வேறு,பொருட்கள் வேறு என்பது உண்மையல்ல என்பதுதான் ஈன்ஸ்டினின் ஒப்புமைக் கொள்கை.வெளி இல்லையேல் பொருட்களும் இல்லை.பொருட்கள் இல்லையேல் வெளியும் இல்லை.இரண்டும் ஒரு சேரத் தோன்றுபவை.//

    இரண்டல்ல ஒன்றுதான்.

    வெளியே அனைத்தும்.

    வற்றாயிருப்பு என்பது வெளியின் தன்மையை குறிக்கும் குறிச்சொல்.(பிரபஞ்ச வெடிப்பு தத்துவச் சாயலுடன்) மேலும் மேலும் விரிந்து கொண்டே இருப்பது. அதிலிருந்தே அதாகவே அனைத்தையும் இயல்பூக்கமாக தோற்றுவித்துக் கொண்டே இருப்பது.

    அத்வைதம் தான் நண்பரே.

    வாய்ப்பு அமையும்போது அது எப்படி நம்மோடு, அறிவியலையும் மெய்ஞானத்தையும் இணைக்கிறது
    என்பதை கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்க மனதில் எண்ணத்தை போட்டு வைத்துள்ளேன்.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. அறிவே தெய்வமான வரலாறு !. science of God and God Particle - https://www.youtube.com/watch?v=80fhAl_Su24

    ReplyDelete
  7. https://www.youtube.com/watch?v=80fhAl_Su24

    ReplyDelete
  8. வற்றாயிருப்பு
    போல் மனித மனமும் தொடர்ந்து இயங்கி கொண்டிருக்கும்
    மனமும் பேராற்றல் கொண்டது
    அதுவே பேரரறிவு தன்மை
    கொண்டது
    அது கூட காலமும் இணைந்தால்
    தான் மனித மனம் இயங்கும்
    அறிவை இணைக்கும் இறை நிலையோடு

    ReplyDelete
  9. வாழ்க வளமுடன்

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)