"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, May 11, 2009

தமிழ் இனத் தலைவர் கலைஞர் -- ஒரு குழந்தை

இன உணர்வு என்பது ஒருவகைத் தாய்மை உணர்வு. தான் பெற்ற பிள்ளை குடிகாரனாய், திருடனாய்,தறுதலையாய் எப்படி இருந்தாலும் எப்படி ஒரு தாய் தன் பிள்ளை மீது மாறாத பாசம் வைத்திருக்கிறாளோ அதைப் போன்ற உணர்வே ஓர் இனத்திற்குள் ஒருவருக்கொருவர் கொள்ளவேண்டியதே இன உணர்வு.

தன் இனத்தான் முட்டாளாய் இருந்தாலும், துரோகியாய் மாறினாலும், ஏழையாய் இருந்தாலும், எதிரியுடன் சேர்ந்து கொண்டாலும் அவன் மீது வெறுப்புக் கொள்ளாமல் அவன் உயர்வுக்காக எண்ணுவதும், எழுதுவதும், அதற்கேற்றபடி செயல்படுவதும் இன உணர்வு உள்ளவர்களுடைய கடமை. அப்படித்தான் நம் முன்னோர்கள் உழைத்திருக்கிறார்கள்.

தமிழர்கள் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் பிரிந்து கிடப்பது உண்மைதான். அதை ஒரு பலவீனமாய்க் கருதவேண்டிய தேவை இல்லை.
ஏனெனில் ஆடு, மாடுகள்தான் மந்தை மந்தையாய்ச் சேர்ந்திருக்கும். சிங்கங்கள் தனித்தனியாய்ப் பிரிந்துதான் இருக்கும். அதில் தவறேதுமில்லை. ஆனால் தேவை ஏற்படும்போது எல்லா வேற்றுமைகளையும் தூக்கி எறிந்து விட்டு ஒன்று சேரும் ‘துப்பு’ வேண்டும். அதை மட்டும் பராமரித்தாலே போதும். நம்மை யாரும் வீழ்த்த முடியாது.

நன்றி: விநோதமான வினாக்கள்,கவனகரின் விடிவுதரும் விடைகள்

*************************************************************************************

இனி எமது பார்வையில் ...

மனிதனை மனிதன் துன்புறுத்தாமல், வாழும் உரிமையில் குறுக்கிடாமல் இருப்பது உண்மையான மனிதத்தன்மை. தெய்வத்தன்மை என்றே சொல்லலாம்.

அதிலிருந்து ஒருபடி ஆராய்ச்சிக்காக (வேறு வழி இல்லாமல்) கீழ்இறங்கி பார்த்தால் இராஜபட்சே சிங்கள இனம் அதனால் அவர் தன் இனத்தை காக்க தமிழனின் மீது தாக்குதல் நடத்துவதாக எடுத்துக்கொள்ளலாம்.

அன்னை சோனியா வேறு இனம், வேறு நாடு அதனால் அவரையும் கூட தமிழனுக்கு பதவியை அதிகாரத்தை வைத்துக்கொண்டு எந்த உதவியையும் செய்யாததையும் புரிந்துகொள்ளலாம்.

ஆனால் தமிழினத்தலைவர் என அழைக்கப்படும் கலைஞரோ தனது பதவியை வைத்து ஈழத்தமிழருக்கு எதுவுமே செய்யவில்லை. இலங்கைஅரசுக்கு உதவியாக செயல்படும் இந்திய அரசுக்கு துணை நிற்பதைத்தவிர.

குறைந்தபட்சம் எதுவுமே செய்யமுடியவில்லை என்றால் காங்கிரசுக்கு மத்தியில் அளித்துவந்த ஆதரவை விலக்கி இருக்கலாம்.

இங்கே ஆட்சி கவிழ்ந்தாலும், அதையே முதலீடாக வைத்து பின் அனுதாப அலையிலாவது மீண்டும் ஆட்சிக்கு வந்து கம்பெனியை உலகத்தின் முதல் பணக்கார (குடும்ப) கம்பெனியாக கொண்டுவந்திருக்கலாம்.

எப்படியும் 2011 ஆட்சி இல்லை. தெரிந்தும் கம்பெனியை படுபாதளத்தில் வீழ்த்துகிறார்.சரி, பதவி விலகினால் இலங்கைதமிழர் பிரச்சினை தீருமா?

தீராது. குறைந்தபட்சம் நமது எதிர்ப்பை பதிவு செய்யலாம். (நல்ல மதிப்பும் புகழும் கிடைத்திருக்கும்.) எதிர்கால கம்பெனியின் நலனுக்கும் உதவும்.

போட்டிக் கம்பெனியினரைப் பற்றி இவருக்கு ஏன் அக்கறை?

அவர்கள் வந்து பிரச்சினையை தீர்த்தால் என்ன? தீர்க்காவிட்டால் என்ன? அவர்களாலும் முடியாது, என்னாலும் முடியாது அதனால் நானே நாற்காலியில் கடைசிவரை இருந்துவிடுகிறேன் என குழந்தைத்தனமாக பிடிவாதம் பிடிப்பது எதற்கு? இதுவரை சம்பாதித்த பணம் போதவில்லையா?

போட்டிக்கம்பெனியினர்க்கு ஒரு வாய்ப்பை கொடுத்தால் என்ன? ஒன்று பிரச்சினையை தீர்க்கட்டும். அல்லது அவர்கள் கம்பெனியும் வளரட்டும்.

அதில் என்ன தவறு? ஓ. சம்பாதித்ததை காப்பற்றவேண்டிய கடமையை மறந்துவிட்டேன்.

குடும்பத்தலைவரின் சொத்து பணமானலும் சரி, வினையானலும் சரி
பிள்ளைகளுக்கு சேரும். பாவம் அனுபவித்துத் தானே ஆகவேண்டும்.

8 comments:

  1. Well, Even if Prabakaran is caught or killed, the desire for Tamil Eelam would never die. Why should LTTE try to protect them by using innocent people as their shield? A true strategist would somehow convince the Sri Lankan government that they would surrender just for the sake of protecting Tamil people from the clutches of atrocities of war provided LTTE are given amnesty by the Govt. Just bombing and bullet-pumping alone are not worth of becoming a true leader or chief commander of a war-group. Let them study more on these lines.
    Regarding Tamil Nadu, it is better to forget about the talks given by Karunanidhi, Jayalalitha,Ramadas or Vaiko. They are 'modimastan's trying to sell 'thayathu's to those idiotic tamil people by causing mesmarising talks. It is their 'business'. Forget them. Sri Lankan Tamils are more intelligent, patriotic and visionaries. Please try to protect them. Congress would never ever come forward to save LTTE. Already LTTE took the wrong decision of blowing Rajiv Gandhi. Don't you ever try to learn social psychology? Whether it is good or bad, if a leader has a strong mass-media followers, you must take multi-strategic approaches to make such leader not likeable by the mass. Instead of doing this you blew him up. Hence you would receive no support from Central Govt.
    Please become a cunning strategist and save and protect innocent Sri Lankan Tamils.

    ReplyDelete
  2. // தேவை ஏற்படும்போது எல்லா வேற்றுமைகளையும் தூக்கி எறிந்து விட்டு ஒன்று சேரும் ‘துப்பு’ வேண்டும். அதை மட்டும் பராமரித்தாலே போதும். நம்மை யாரும் வீழ்த்த முடியாது //

    இது ஓரளவு நம்ம கிட்ட இருக்கதானே செய்யுது.

    ReplyDelete
  3. பார்ப்போம்,இந்தத் தேர்தலில்தான் தமிழக மக்களின் ஈழத்தைப் பற்றிய உணர்வு தெரியும்.

    ReplyDelete
  4. ELIYAVAN , விஷ்ணு, Dr.SK,

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  5. \\ஷண்முகப்ரியன் said...

    பார்ப்போம்,இந்தத் தேர்தலில்தான் தமிழக மக்களின் ஈழத்தைப் பற்றிய உணர்வு தெரியும்.\\

    கிராமத்து மக்களிடையே இது குறித்த விழிப்புணர்வு
    ஏற்பட்டிருக்குமா என்பது சந்தேகமே.

    படித்த நகர மக்களிடம் துருப்புச் சீட்டு இருக்கிறது
    பார்ப்போம். பெரிய தாக்கம் இருக்காது என்றே நினைக்கிறேன்.

    ReplyDelete
  6. பதிவை பதிந்து தகவல் பகிர்ந்ததற்க்கு நன்றி!
    பணம் மட்டும் அல்ல, பாவமும் பிள்ளைகளுக்குத்தான்!!

    ReplyDelete
  7. கலையரசன் தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)