திருப்பூரில் பனியன் தொழிலில் பலதரப்பட்ட வேலைகளை செய்துதான் பனியனை உருவாக்குகிறோம்.
அப்படி போனவாரத்தில் ஒருநாள் பனியனுக்கு தேவையான லேபிள்களை மொத்தமாக வாங்கிவந்து தொழிற்சாலைக்கு எடுத்துக்கொண்டு போய்க்கொண்டிருந்தேன்.
போகும் வழியில் என் வீடு அமைந்துள்ளதால் மதிய உணவை முடித்துக் கொண்டு செல்லும் உத்தேசத்துடன் வீட்டுக்கு வந்தேன்.
பல்வேறு தொழில்ரீதியான சிந்தனைகளுடன், மதிய உணவு முடிந்தவுடன் வேறு சில வேலைகளுக்காக மீண்டும் டவுனுக்கு சென்று திரும்பியவன், அந்த லேபிள் பார்சலை மறந்துவிட்டு சென்று விட்டேன். கம்பெனிக்கு சென்றபின் தான் ஞாபகம் வந்தது. அது உடனே தேவைப்பட்டது.
வீட்டுக்கு போன் பண்ணினேன். போனை எடுத்த அவுங்களிடம் (மனைவி) ”ஏம்மா, லேபிள் பார்சலை எடுக்க நாந்தான் எடுக்க மறந்திட்டேன். நீயாவது ஞாபகப்படுத்தி இருக்கலாம் இல்லையா?. இனிமேலாவது சற்று விவரமா இரு” என்று சொல்லிவிட்டு நான்கு கி.மீ திரும்ப வந்து எடுத்து சென்றேன்.
அதற்கு அடுத்த நாள் மீண்டும் பல்வேறு துணிகள், price tag, போன்ற பலவற்றையும் வாங்கி மதிய உணவுக்கு வந்த நான், அவை அவசரமாக தேவைப்படாததாலும், வேறு ஒரு பிரிண்டிங் பட்டறைக்கு போக வேண்டிய காரணத்தினால் அவைகளை வைத்துவிட்டு கிளம்பினேன்.
பைக்கை ஸ்டார்ட் செய்த தருணத்தில் அனைத்து பொருள்களுடன் அவுங்க வந்து நிற்க, ”இப்ப நான் இதையெல்லாம் எடுத்துட்டு வரச் சொன்னேனா? சொன்னால் மட்டும் செய்தாப்போதும்” என்று சற்றே அதிகாரத் தோரணையுடன் சொல்லிவிட்டு கிளம்பினேன். அவுங்க அமைதியாக திரும்ப உள்ளே செல்ல எனக்கு உரைத்தது.
ஆமா, ’நேற்று நான் எதா இருந்தாலும் மறக்காம ஞாபகமாக எடுத்துக் கொடு’ என்று சொன்னதால் தான் அவர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். அதை நான் சரியாக உணராமல் பேசிவிட்டதை உணர்ந்தேன். சரி இனிமேல் இதுபோன்ற தவறுகள் என்னிடத்தில் ஏற்படாது என உறுதிகொண்டேன்.
நிகழ்காலத்தில் இல்லாததால் முதலில் லேபிளை மறந்து சென்றேன்.
நிகழ்காலத்தில் இல்லாததால் அவுங்க எடுத்தவந்த காரணத்தை உணராமல் வார்த்தைகளை விட்டுவிட்டேன்.
(நம்மோடு வாழ்க்கை துணையாக வாழ்வது என்ன சாதரண விசயமா என்ன ?!?!?!)
அன்றாட வாழ்வில் இது போன்ற நிகழ்வுகளை அடையாளம் கண்டு சரி செய்தாலே போதும் , வாழ்வில் இனிமை பெருகும். நீங்கள் எல்லாம் எப்படி ????
நாங்களும், உங்கள மாதிரிதான்
ReplyDeleteதப்பு செஞ்சிட்டுதான் , திருந்துவோம்!
நன்று.. பகிற்ந்ததற்க்கு!!
//நிகழ்காலத்தில் இல்லாததால் முதலில் லேபிளை மறந்து சென்றேன்.
ReplyDeleteநிகழ்காலத்தில் இல்லாததால் அவுங்க எடுத்தவந்த காரணத்தை உணராமல் வார்த்தைகளை விட்டுவிட்டேன்.
(நம்மோடு வாழ்க்கை துணையாக வாழ்வது என்ன சாதரண விசயமா என்ன ?!?!?!)
//
ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க... அடுத்தவங்களோட உணர்வ புரிஞ்சுகறது ரொம்ப முக்கியம்... நம்ம ஊரு உடுமலை தான்..
நம்ம ஊரு "பாட்டுபஸ்"ஸ பத்தி ஒரு பதிவு எழுதியிருக்கேன்.. நேரம் இருந்தா நம்ம பக்கத்துக்கும் வந்துட்டுப் போங்க..
www.senthilinpakkangal.blogspot.com
என்ன தலைப்பை மாற்றி விட்டீர்கள்,சிவா! ஒரு கணம் தடுமாறி விட்டேன்.
ReplyDeleteliving in the present என்பது சாத்தியமானால் ?!
கலையரசன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDeleteநாம் திருந்துவதை எழுதினால்தான், இன்னொரு நாளைக்கு மாறாமல் இருக்க மனசாட்சி வலியுறுத்தும்
செந்தில்வேலவா.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDeleteபாட்டுக்கேட்க பஸ்க்கு வருகிறேன்
//ஷண்முகப்ரியன் said...
ReplyDeleteஎன்ன தலைப்பை மாற்றி விட்டீர்கள்,சிவா! ஒரு கணம் தடுமாறி விட்டேன்.
living in the present என்பது சாத்தியமானால் ?!//
மாற்றம் என்பதே நிரந்தரம். தங்களுக்கு தெரிந்ததே.
முடிந்தவரை முயல்வோம். நாளை எதுவும் நடக்கலாம்.
நிகழ்காலத்தில் இருந்து பார்த்தால் மனம் மிகத் தெளிவாக இருக்கிறது. ஆனால் அதை தக்க வைத்துக்கொள்வதுதான்...!!!!???
முயற்சிப்போம் முயற்சியற்று இருப்பதற்கு
அடுத்தவரிடம் நாம் எதிர்பார்க்கும் விஷயங்களை அடுத்தவரும் நம்மிடம் எதிர்பார்ப்பார்கள் என்பதை உணர்ந்து கொண்டால் நிகழ்காலத்தில் மட்டுமல்ல எதிர்காலத்திலும் நிறைய சாதிக்கலாம்.
ReplyDeleteவலைப்பூவிற்கு வந்திருந்து வாசித்து வாழ்த்தியமைக்கு நன்றி...
கட்டபொம்மன் http://kattapomman.blogspot.com
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDeleteவிபரமாக இருக்கச் சொன்ன எனக்கு விபரம் போதவில்லை என்பதை உணர்ந்தேன், பதிந்தேன்
வாழ்த்துக்கள்
வாழ்த்துகள்!
ReplyDeleteஉங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.
உங்கள் வருகைக்கு நன்றி,
அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.
நன்றி
தமிழ்ர்ஸ்
அருமையான சிந்தனை..வாழ்த்துக்கள்..
ReplyDeleteநாம் நமது மனதின் எஜமானனாகும் வரை மனம் நிகழ்காலத்தில் நிற்பதில்லை:
http://mukkonam.blogspot.com/2009/05/blog-post_13.html
முக்கோணம் தங்களின் கருத்து, மிகச் சரியான கருத்து
ReplyDeleteஉண்மை தான் சகா.. இங்கு நீங்கள் சொன்னதை அப்படியே அவரிடமும் சொல்லிவிட்டீர்களா.. அப்படி சொல்லி இருந்தால் வாழ்த்துக்கள் (உங்களின் மனதிற்கு)..
ReplyDeleteசுரேஷ் குமார்
ReplyDeleteகருத்துக்கு நன்றி
உடனே சொல்லவில்லை, பொறுமையாக அன்போடு மாலையில் வெளிப்படுத்தினேன்.
//(நம்மோடு வாழ்க்கை துணையாக வாழ்வது என்ன சாதரண விசயமா என்ன ?!?!?!)//
ReplyDeleteஅது !
நின்னா குத்தம் உட்கார்ந்தால் குத்தம் ! டிபிகல் இந்தியன் ஹஸ்பெண்ட்
:)
உண்மைதான் கோவியாரே இதை நாம் வருங்கால சந்ததியினருக்கு தரக்கூடாது என்பதே என் எண்ணம்
ReplyDelete