தவம் என்பது
சரீரத்தால் செய்யப்படுவது,
வாக்கால் செய்யப்படுவது,
மனதால் செய்யப்படுவது
என்று மூவகைப்படும்.
பெரியோர்களுக்கும், குருக்களுக்கும்
செய்யும் சேவை, உடல்சுத்தம்,
ஒழுக்கம், பிரம்மச்சரியம், உயிர்களுக்கு
இம்சை உண்டாக்காமை (அஹிம்சை)
ஆகியன சரீரத்தால் செய்யப்படும் தவம்.
நல்ல நூல்கள் படிப்பது,
பிறரை துன்புறுத்தாமல் பேசுவது,
வாய்மை, பிறருக்கு சந்தோஷம்,
நலன் தரும் இனிய சொல் ஆகியன
நாவினால் செய்யப்படும் வாக்குத்தவம்.
உள்ளத்தில் அமைதி, அன்பு நிறைந்த
உள்ளம், மனதின் மவுன நிலை, தன்னடக்கம்
என்ற புலனடக்கம், ஆணவத்தை அகற்றி அடங்குதல்,
கருத்துத் தூய்மை இவை மனதால் செய்யும் தவம்.
நன்றி: ஞானப்புதையல்.- முனைவர் எம்.இராமலிங்கன், பூர்ணா பதிப்பகம்
இதை உங்களின் சிந்தனையோடு இணைத்துப் பாருங்கள்.
வாழ்வின் பல படிநிலைகளையும் முழுமையாக தவநிலையாக வாழச் சொல்கிறது.
அதில் ஓர் ஓரத்தில் ஒரு பகுதியாய் வருவது பெரியோர்களுக்கும், குருக்களுக்கும் செய்யும் சேவை,
தற்கால நடைமுறையில் பாருங்கள். பொதுவாக சமய ஆன்மீகப் பெரியவர்களுக்கு சேவை செய்வது மட்டுமே முழுஆன்மீகமாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
அது மட்டுமல்ல நாத்திக நண்பர்களும் கீதை உருவாக்கப் பட்ட நோக்கமே பார்ப்பனர்களுக்கு அடிவருடத்தான் என்ற கருத்தையே உயர்த்திப் பிடிக்கின்றனர். மற்ற விசயங்களுக்கு முக்கியத்துவம் எதுவும் தருவதில்லை.
சரியாக புரிந்து கொள்ளாமல் பின்பற்றுவதாலும், அல்லது புரிய வைப்பவரை அடையாளம் காண இயலாதாலும், ஆன்மீகத்தில் ஈடுபடுவோர் இந்நிலையில் இருக்க வேண்டியதாகிறது.
காலஓட்டத்தில் நிலைத்துள்ள அனைத்துமத நூல்களும் சரியான செய்தியையே கொடுத்துள்ளன. ஆனால் அதை பின்பற்றுவோரும், எதிர்ப்போரும் சரியான முழுமையான பார்வை பார்ப்பதே இல்லை.
இதனால் மதமோதல்கள், என் மதமே பெரிது என்ற உண்ர்வு,எனநம் மன அமைதியை நாமே குலைத்துக்கொண்டு சிரமப்படுகிறோம்.
எதையும் சரியாக உணர முற்படுவோம். நிம்மதியாய் நிகழ்காலத்தில் இருப்போம்.
// காலஓட்டத்தில் நிலைத்துள்ள அனைத்துமத நூல்களும் சரியான செய்தியையே கொடுத்துள்ளன. ஆனால் அதை பின்பற்றுவோரும், எதிர்ப்போரும் சரியான முழுமையான பார்வை பார்ப்பதே இல்லை. //
ReplyDeleteநெத்தியடி.
ரொம்ப நாள் கழிச்சு பிளாக்ஸ் படிக்க வரேன் சிவா சார்.பிளாக் பேர மாத்திட்டிங்க போல. கோவி. கண்ணன் உங்களை தொடர் பதிவுக்கு அழைச்சுட்டாரு போல, வேகமா உங்க பதிலை போடுங்க சார் படிக்க ஆர்வமா இருக்கேன்.
//சரீரத்தால் செய்யப்படுவது,
ReplyDeleteவாக்கால் செய்யப்படுவது,
மனதால் செய்யப்படுவது
//
உதவி செய்வதற்கும் பொருந்தும் வரிகள் !
சிந்தனைக்கு நல்ல வேலை, நன்றி!
ReplyDeleteவிஷ்ணு.
ReplyDeleteஅனேகமாக இன்று இரவு பதில் தொடர்பதிவு இட்டுவிட முயற்சிக்கிறேன்’
//உதவி செய்வதற்கும் பொருந்தும் வரிகள் !//
ReplyDelete//சரீரத்தால் செய்யப்படுவது,
வாக்கால் செய்யப்படுவது,
மனதால் செய்யப்படுவது
//
நல்ல சிந்தனை. இதனுடன் தானத்திற்கும் பொருத்திப்
பார்க்கலாம்.
//பழமைபேசி said...
ReplyDeleteசிந்தனைக்கு நல்ல வேலை, நன்றி!//
தங்களினின் வழிதான்.,
வாழ்த்துக்கள்
வித்தியாசமான பதிவு. நன்றாக இருக்கிறது.
ReplyDelete"இதனால் மதமோதல்கள், என் மதமே பெரிது என்ற உண்ர்வு,எனநம் மன அமைதியை நாமே குலைத்துக்கொண்டு சிரமப்படுகிறோம்." நிஜ வாரத்தைகள்
முதல் வருகைக்கும் கருத்தக்கும் நன்றி நண்பர் முருகானந்தம் அவர்களே.
ReplyDelete