"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, June 29, 2009

திருப்பூர் பதிவர் சந்திப்பு 14.06.2009

திருப்பூர் பதிவர் சந்திப்பு கடந்த 14.06.2009 நடைபெற்று கொண்டிருந்தபோது சிறு காலதாமதத்திற்கு பின்னரே நான் கலந்து கொள்ள முடிந்தது.,

‘நிகழ்காலத்தில்’ என என்னை அறிமுகப் படுத்திக் கொண்டபோது., சற்றே யார் என புரியாமல் இருந்த நண்பர்கள் ’அறிவே தெய்வம்’ என்றவுடன் சிரிப்புடன் இயல்பான நிலைக்கு வந்தார்கள்.,

வெயிலான் பரிசல் தலைமையில் நடந்த பதிவர் சந்திப்பு குறித்து ஏற்கனவே பரிசல் எழுதி விட்டதால் படங்கள் இங்கே




(ஈரவெங்காயம், நிகழ்காலத்தில், செந்தில்நாதன்,செல்வம், பரிசல், வெயிலான்,சிறப்பு விருந்தினர் வடகரைவேலன், க்ர்பால்)

அது என்னவோ திருப்பூரில் உள்ள பதிவர்களின் உள்ளூர் சந்திப்பு என்பதால் உரையாடல் பல தலைப்புகளுக்கு சென்றும் மீண்டும் தொழில் பற்றியதாகவே அமைந்துவிட்டது.

தொழிலின் தன்மை, அதன் காரணமாய் முதலாளிகளின் நடவடிக்கைகள், தொழிலாளிகளின் நடவடிக்கைகள் , அதன் காரணமாய் அமையும் தாமதமாக சரக்கு அனுப்புதல், மற்ற தொழில்களுக்கும், திருப்பூரின் தொழில் தன்மைக்கும் உள்ள வேறுபாடுகள் என வடகரை வேலன் அண்ணாச்சியும், ராமனும் நன்கு அலசினர்.

கடைசியாக கிர்பால் அவர்களின் கேமாராவினால் புகைப்படம் எடுக்கப்பட்டது.

இடம்,தேநீர்,வடை,போண்டா அனைத்தும் ராமன் அவர்கள் ஏற்பாடு. அதற்கு நன்றிகள் பல.





நான், நடுவில் நண்பர் வெயிலான் , வலதுபுறம் இருப்பது ராமன்

11 comments:

  1. நன்றியும், வாழ்த்தும் திரு கோவி.கண்ணன் அவர்களுக்கு.,

    ReplyDelete
  2. நான் கொஞ்சம் முன்னாடியே கிளம்பிட்டேன், தப்புதான். அதுக்காக என்னை இப்படி ஆட்டத்தில சேர்க்கா விட்டிங்கன்னா என்ன அர்த்தம்?
    "ஏதோ வந்தான், போனான்" அப்புடி இப்புடின்னு ஏதாவது எழுதியிருக்கனுமா வேண்டாமா? சொல்லுங்க?
    அடுத்தமுறை கவனிச்சிக்கிறேன்.:-)

    ReplyDelete
  3. ஏன் இப்பிடி ஒரு தலைப்பு, மற்றும் கடைசி வரி?

    வேறுயாரும் கேலி பண்ணக்கூடாதெனவா?

    சரியில்லை சார் மாத்துங்க.

    நடவடிக்கையால் தான் மரியாதை,

    ReplyDelete
  4. எங்க கடலையூர் செல்வம் கையில என்ன கட்டு?

    சென்னை பதிவரா இருந்த வரைக்கும் நல்லா பார்த்துக்கிட்டமே?

    ReplyDelete
  5. அண்ணன் முரளி கண்ணன் அவர்களே! கடலையூர் செல்வம் எங்கள் கண்காணிப்பில் இல்லாதபொழுது தனியாக சென்று நடுரோட்டில் புதையல் எடுத்து விட்டார். அடுத்தமுறை இதுபோல நடக்காது என்பதற்கு உறுதிகூறுகிறேன்.
    இப்படிக்கு திருப்பூர் பதிவர்கள் சார்பாக முரளி

    ReplyDelete
  6. முரளிகுமார் பத்மநாபன்

    அடுத்தமுறை நீங்க முழுநேரமும் கலந்துக்குங்க,
    அப்புறம் பார்க்கலாம்.:)

    ReplyDelete
  7. \\அப்பாவி முரு said...

    ஏன் இப்பிடி ஒரு தலைப்பு, மற்றும் கடைசி வரி?

    வேறுயாரும் கேலி பண்ணக்கூடாதெனவா?

    சரியில்லை சார் மாத்துங்க.

    நடவடிக்கையால் தான் மரியாதை,\\

    உரிமையோடு தன் கருத்தை வெளிப்படுத்திய
    நண்பர் அப்பாவி முரு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. \\தனியாக சென்று நடுரோட்டில் புதையல் எடுத்து விட்டார். அடுத்தமுறை இதுபோல நடக்காது என்பதற்கு உறுதிகூறுகிறேன்\\

    அப்போ அடுத்த முறை புதையல் எடுக்க முடியாதா :)

    ReplyDelete
  9. 14ம் தேதி சந்திப்பை 29ந்தேதி போட்டிருக்கீங்களேண்ணே!

    சிறியோனோக்கும் உங்கள் பக்கப்பட்டையில் சுட்டி கொடுத்து கெளரவப்படுத்தியிருக்கீங்க.

    நன்றி சிவாண்ணே!

    ReplyDelete
  10. 14.06.2008 ஆ - 2009 ஆ - எப்போப்பா நடந்திச்சி திருப்பூர்ல பதிவர் சந்திப்பு

    நலலாத்தான் நடத்தி இருக்கீங்க

    ReplyDelete
  11. 14.06.2008 ஆ - 2009 ஆ - எப்போப்பா நடந்திச்சி திருப்பூர்ல பதிவர் சந்திப்பு//

    தலைப்பு சரியா, ஆனா உள்ளே தவறு, சுட்டிக்காட்டியமைக்கு மிகவும் நன்றி, திருத்தி விட்டேன்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)