"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, July 28, 2009

அருட்காப்பு


நண்பர் திரு.முக்கோணம் அவர்கள் எழுதியுள்ள சொற்களின் சக்தி இடுகையை படித்தவுடன் அதன் தொடர்ச்சியாக அதில் உள்ள நுட்பத்தை, வேதாத்திரி மகான் விளக்கிய வண்ணம் கொடுக்க விரும்பினேன். இதோ ஏன் அருட்காப்பு தேவை என்பதன் விளக்கம்.

அருட்காப்பு:

”எல்லாம் வல்ல அருட்பேராற்றல் இரவும் பகலும், எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும், வழி நடத்துவதாகவும் அமைவதாக..”



வெளி உலகில் ஒரே புழுதிமயம்,புகைமயம்,புழுக்கம், இதனால் நம் உடல் ஒழுங்கு பாதிப்படைகிறது. அந்த பாதிப்பால் நம் மன அமைதி கெடுகிறது. மனஇறுக்கம் (TENSION) அதிகமாகிறது.

நாம் இருக்கும் அறைக்குள் தூசி நுழையாமல், புகை வராமல், புழுக்கம் இல்லாமல் குளிர்வசதி (AIR CONDITION) செய்து கொண்டால் இந்தத் தொல்லைகளிலிருந்து நம்மளவில் விடுதலை பெறுகிறோம்.

அதேபோல் சமுதாய அமைப்பில் உள்ள சீர்கேடுகளால் பாதிக்கப்பெற்ற மக்கள், இறுகிய முகத்துடன், குழப்பமான எண்ணங்களுடன், தன்னைச் சுற்றியுள்ளவர்கள் மீது எரிச்சலுடன், பொறாமையுடன், புழுக்கத்துடன் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். அவர்களுடைய எதிர்மறை எண்ண அலைகளின் தாக்குதலால் (THOUGHT POLUTION) நம்மை அறியாமலே நாம் மனப்பாதிப்பை அடைகிறோம்.

அந்தப்
பாதிப்பிலிருந்து நம்மளவில் நாம் விடுதலை பெறவேண்டியேஅருட்காப்புஎன்னும் AIR CONDITION மனவளக்கலை பயின்றவர்கள் ஒவ்வொருவரும் தன்னைச் சுற்றி போட்டுக் கொள்ளவேண்டும் என நான் சொல்லி வருகிறேன்.

அதே வேளையில் நம் செய்தியை உணராத, சமுதாயத்தின் மற்ற சகோதரர்கள் மத்தியில் உள்ள புழுதி,புகை,புழுக்கம் முதலிய புறக்குற்ற்ங்களையும், பொறாமை, சினம், குழப்பம் போன்ற அகக் குற்றங்களையும் நீக்கும் முயற்சியாக வாழ்த்து, தியானம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

நகரம், நாடு எனத் தொடங்கி, முடிவில் உலகமே அருட்காப்பு பெற்ற அமைதி உலகமாக மாற வேண்டும் என்பதுதான் எம் இலட்சியம்.

வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !.

நன்றி-- வேதாத்திரி மகான்

18 comments:

  1. மற்றொமொரு வெண்தாடி சித்தரின் பொன் மொழிகள்.

    வாழ்க !

    ReplyDelete
  2. வாழ்க வையகம்!!!! வாழ்க வளமுடன்!!!!

    ☼ வெயிலான்.

    ReplyDelete
  3. திரு.கோவி.கண்ணன்,திரு.வெயிலான் ரமேஷ் தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மகிழ்ச்சியும், வாழ்த்துக்களும்...

    ReplyDelete
  4. வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !

    ReplyDelete
  5. வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !
    வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !
    வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !
    வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !
    வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !

    ReplyDelete
  6. ”எல்லாம் வல்ல அருட்பேராற்றல் இரவும் பகலும், எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும், வழி நடத்துவதாகவும் அமைவதாக..”

    ReplyDelete
  7. உங்க தயவால இன்னிக்கும் ஒரு முறை நான் சொல்லிட்டேன்! நன்றி!

    ReplyDelete
  8. "எல்லாம் வல்ல அருட்பேராற்றல் இரவும் பகலும், எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும், வழி நடத்துவதாகவும் அமைவதாக..”

    ReplyDelete
  9. \\ஸ்வாமி ஓம்கார் said...

    வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !\\

    அப்படியே ஆகட்டும்...

    ReplyDelete
  10. \\நாமக்கல் சிபி said...

    உங்க தயவால இன்னிக்கும் ஒரு முறை நான் சொல்லிட்டேன்! நன்றி!\\

    இறையருளால்....:)))

    ReplyDelete
  11. \\coolzkarthi said...

    "எல்லாம் வல்ல அருட்பேராற்றல் இரவும் பகலும், எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும், வழி நடத்துவதாகவும் அமைவதாக..”\\

    நன்றிகள் கார்த்தி...

    ReplyDelete
  12. அருட்தந்தையின் விளக்கத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி இனிய நண்பரே..!

    //நகரம், நாடு எனத் தொடங்கி, முடிவில் உலகமே அருட்காப்பு பெற்ற அமைதி உலகமாக மாற வேண்டும் என்பதுதான் எம் இலட்சியம்.//

    அருட் தந்தை கூறுவது போல் உலக மக்கள் அனைவரும் யாருக்கும் தீங்கு நினைக்காமல் எப்போதும் நல்ல எண்ணங்களையே எண்ணி வந்தால் இவ்வுலகம் எத்தகைய இனிமையான அமைதி பூங்காவாக இருக்கும்..! நினைத்து பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது..

    வாழ்க வையகம்..வாழ்க வளமுடன்..!

    ReplyDelete
  13. வாழ்க்கையில் பின் பற்ற வேண்டிய விசயம்.

    ReplyDelete
  14. முக்கோணம், அக்பர் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. \\ஷண்முகப்ரியன் said...

    அருமை,சிவா.\\

    கருத்துக்கும் வருகைக்கும் நன்றி திரு.ஷண்முகப்ரியன் அவர்களே

    ReplyDelete
  16. ”எல்லாம் வல்ல அருட்பேராற்றல் இரவும் பகலும், எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும், வழி நடத்துவதாகவும் அமைவதாக..”

    வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !.


    கையால் ஒரு தடவை எழுதியும் வாயல் ஒரு தடவை சொல்லியும் இன்று கடமையைச் செய்து விட்டேன்

    நல்வாழ்த்துகள் சிவா

    ReplyDelete
  17. changed my life... I also blessed people to make them friends... worked out...

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)